Practice Question Papers · with Answers

Samacheer Kalvi Class 6 Tamil Practice Question Papers

Download free Samacheer Kalvi Class 6 Tamil practice question papers with full answer keys. These are original Brain Grain model papers — built from our verified question bank to the real exam blueprint (sections, marks and solutions) — perfect for board revision and model tests.

Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 1
Class: 6Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………. அ) முத்துசுடர் ஆ) முச்சுடர் இ) முத்துடர் ஈ) முத்துச்சுடர்[1]
2.இனிய …………….. இன்னாத கூறல் கனியிருப்பக் ……………… கவர்ந் தற்று.[1]
3.உள்ளத்தில் …………….. இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். அ) மகிழ்ச்சி ஆ) மன்னிப்பு இ) துணிவு ஈ) குற்றம்[1]
4.தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் …………… சுருங்கிவிட்டது. அ) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்று[1]
5.ஆராயும் அறிவு உடையவர்கள் ………………. சொற்களைப் பேசமாட்டார். அ) உயர்வான ஆ) விலையற்ற இ) பயன்தராத ஈ) பயன்உடைய[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?[2]
7.கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதில் இடம் பெற்றுள்ள இடுகுறி, காரணப் பெயர்களை அறிந்து எழுதுக. நீர் வற்றிப்போன குளத்தில் செந்தாமரை, ஆம்பல், கொட்டி, நெய்தல் முதலான கொடிகளும் வாடியிருந்தன. நீர் நிரம்பி இருந்தவரை ஊர் மக்களும், விலங்குகளும் மரங்கொத்தி போன்ற பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த குளம் அது. காலை நேரம் சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. இப்போது அக்குளத்தைக் கண்டு கொள்வார் யாருமில்லை[2]
8.இக்கடிதத்திற்கு நீங்கள் விரும்பும் வகையில் வேறொரு தலைப்பிடுக.[2]
9.நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?[2]
10.போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?[2]
11.எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?[2]
12.இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) இடம் + மெல்லாம் ஆ) இடம் + எல்லாம் இ) இட + எல்லாம் ஈ) இட + மெல்லாம்[2]
13.எந்திரமனிதனின் பயன்களை விளக்குக.[2]
14.இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?[2]
15.தமிழுக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயர்களைப் பட்டியலிடுக.[2]
16.மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?[2]
17.பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பாலை + யெல்லாம் ஆ) பாலை + எல்லாம் இ) பாலை + எலாம் ஈ) பா + எல்லாம்[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.[5]
19.உங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகள் யாவை?[5]
20.காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.[5]
🔑 Show Answer Key — Set 1
  1. 1. ஈ) முத்துச்சுடர்
  2. 2. உளவாக, காய்க்
  3. 3. ஈ) குற்றம் இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
  4. 4. (விடை: இ) வானம்)
  5. 5. இ) பயன்தராத
  6. 6. பழத்தின் இயல்பு கொடுப்பது; வேரின் இயல்பு பெறுவது.
  7. 7. இடுகுறிப் பெயர் : (i) குளம் (ii) ஆம்ப ல் (iii) கொட்டி (iv) நெய்தல் (v) சூரியன் காரணப் பெயர் : (i) மரங்கொத்தி (ii) செந்தாமரை
  8. 8. இக்கதைக்கு நான் விரும்பும் தலைப்பு “எண்ணம் ஈடேறியது.”
  9. 9. மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ்ந்தால், அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறலாம்.
  10. 10. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
  11. 11. எறும்பு தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுகிறது. .
  12. 12. ஆ) இடம் + எல்லாம்
  13. 13. எந்திர மனிதனின் பயன்கள் : (i) தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்தல். (ii) மருத்துவத்துறையில் நோயின் அறிகுறிகளைக் கண்டறிதல். (iii) சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்தல்.
  14. 14. விண்ணில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை – 9 அவை: 1. செவ்வாய், 2. புதன், 3. வியாழன், 4. வெள்ளி, 5. சனி, 6. பூமி, 7. யுரேனஸ், 8. நெப்டியூன், 9. புளூட்டோ .
  15. 15. மாணவர்கள் தமிழுக்குச் சூட்டப்படும் பெயர்களை அறிந்து எழுதுதல். தேன்தமிழ், செந்தமிழ், இனிமைத் தமிழ், இளமைத் தமிழ், முத்தமிழ்… முதல் பருவம்
  16. 16. மணிமேகலை மன்னரிடம் வேண்டியது : (i) சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும். (ii) சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.
  17. 17. ஆ) பாலை + எல்லாம்
  18. 18. அடிஎதுகை : கொ ட் டுங்கடி – எ ட் டு ஊ ழி – ஆ ழி பொ ய் – மெ ய் சீர் எதுகை : எ ட் டுங்கடி – எ ட் டிடவே ஆழி – அ ழி யாமலே
  19. 19. (i) சித்த மருத்துவம் (ii) ஓமியோபதி (iii) ஆயுர்வேதம் (iv) யுனானி (v) அலோபதி (vi) அக்குபஞ்சர்நூல் வெளி ‘தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்’ என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதிஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவறைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். சொல்லும் பொருளும் 1. இயன்றவரை – முடிந்தவரை 2. ஒருமித்து – ஒன்றுபட்டு 3. ஔடதம் – மருந்து
  20. 20. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வு : (i) காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். (ii) செல்லும் வழியில், வயலில் வேலை செய்யும் உழவர்களைக் கண்டார். அவர்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருந்தனர். (iii) அப்போது, காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். (iv) பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார். (v) அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார். அந்த எளிமைத் திருக்கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார்.
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 2
Class: 6Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……….. அ) போகி + பண்டிகை ஆ) போ + பண்டிகை இ) போகு + பண்டிகை ஈ) போகிப் + பண்டிகை[1]
2.கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………… அ) கைமர்த்தி ஆ) கைஅமர்த்தி இ) கையமர்த்தி ஈ) கையைமர்த்தி[1]
3.உடல் நோய்க்கு ……….. தேவை அ) ஔடதம் ஆ) இனிப்பு இ) உணவு ஈ) உடை[1]
4.பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………… அ) பாட்டிருக்கும் ஆ) பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ) பாடியிருக்கும்[1]
5.பிற உயிர்களின் …………….. க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும். அ) மகிழ்வை ஆ) செல்வத்தை இ) துன்பத்தை ஈ) பகையை[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.[2]
7.நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?[2]
8.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.[2]
9.சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?[2]
10.நீங்கள் விரும்பும் இயற்கைப் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.[2]
11.காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் அ) கோவை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ) சிதம்பரம்[2]
12.பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை இசையோடு பாடுக.[2]
13.தமிழறிஞர்களின் வானொலி, தொலைக்காட்சி உரைகளைக் கேட்டு மகிழ்க.[2]
14.வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?[2]
15.தமிழ்மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?[2]
16.இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்களை எடுத்து எழுதுக.[2]
17.ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினான்?[5]
19.‘ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி இல்லை ‘ என்னும் தலைப்பில் பேசுக.[5]
20.நாளிதழ்களில் வந்துள்ள மனிதநேயம் பற்றிய செய்திகளைச் சேகரித்துக் கூறுக.[5]
🔑 Show Answer Key — Set 2
  1. 1. அ) போகி + பண்டிகை
  2. 2. இ) கையமர்த்தி
  3. 3. அ) ஔடதம்
  4. 4. (விடை: அ) பாட்டிருக்கும்)
  5. 5. இ) துன்பத்தை
  6. 6. தெளிவுரை : தம்மைவிடத் தம் பிள்ளைகள் அறிவுடையோர் என்றால் மக்களுக்கு அதுதான் மகிழ்ச்சி. விளக்கவுரை : தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து.. உயிர்களுக்கு எல்லாம் மிகுந்த இன்பத்தைத் தரக்கூடியது ஆகும்.
  7. 7. நாளைய மனிதன் விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்கு சென்று வருவதற்கான விண்வெளிப் பாதைகளையும் அமைத்திடுவான்.
  8. 8. தெளிவுரை : அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். ஆதிபகவனே உலகுக்குத் தொடக்கம். விளக்கவுரை : தமிழ் எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அதுபோல இந்த உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. வான் சிறப்பு
  9. 9. சிலப்பதிகாரக் காப்பியம் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது.
  10. 10. (refer textbook)
  11. 11. ஆ) மதுரை
  12. 12. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை மாணவர்கள் தாங்களாகவே இசையோடு பாடி மகிழ்ந்திடுங்கள்.
  13. 13. தமிழறிஞர்களின் வானொலி, தொலைக்காட்சியில் ஆற்றிய உரைகளைக் கேட்டு மகிழ்தல். மாணவர்கள் இச்செயல்பாட்டினைத் தாங்களே செய்து பார்க்க வேண்டும்.
  14. 14. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
  15. 15. பொய்மை அகற்றி மனதில் உள்ள அறியாமையை அகற்றும் அன்புடைய பலரின் இன்பம் நிறைந்த மொழி, உயிர்போன்ற உண்மையை ஊட்டி உயர்ந்த அறத்தைத் தந்து, இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழியாக தமிழ்மொழி விளங்குகிறது.
  16. 16. இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்கள் : அவனுடைய, அங்கு, இங்கு, இம்மலர், அம்மலர், இந்த, அந்த
  17. 17. ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
  18. 18. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை உருவாக்கின விதம் : (i) தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான். (ii) தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான். (iii) ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். (iv) முல்லை , மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்தினான். இதனால் நாகரிக மனிதன் ஆனான்.
  19. 19. வணக்கம்! ‘ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி இல்லை’ என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன். ஏட்டுக் கல்வி மாணவர்களை ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்குச் செல்வதற்கான சோதனைப் பணிதான். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களால் தனியாக ஓரிடத்திற்குச் செல்லவியலாது. சக மாணவர்களுடன் பழகுவதற்குக்கூடத் தெரியாது. பொது இடங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெரியாது. பூட்டிய வீட்டைத் திறப்பதற்கு ஒரு திறவுகோல் எவ்வாறு பயன்படுகிறதோ அதே போன்று வாழ்க்கை என்ற வீட்டைத் திறப்பதற்கு ஏட்டுக்கல்வி பயன்படுகிறது. ஒருவன் படித்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆவதற்கு மட்டும் கல்வி உறுதுணையாக இருக்கக் கூடாது. அவன் கற்ற கல்வி சமூக சிந்தனையை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்க்கும் அனுபவக் கல்விதான் தேவை.ஏட்டுக் கல்வியில் முதலிடம் பெற்ற மாணவன் வேலைக்குச் செல்ல வேண்டுமெனில் பல நேர்முகத் தேர்வுகளைச் சந்திக்கிறான். அவ்வாறு சந்திக்கும்போது அவனுக்குத் தேவை தகவல் பரிமாறும் திறன் (Communication Skill). அவனிடம் அத்திறன் இல்லையெனில் சுராவின் – தமிழ் உரைநூல் 1 6 ஆம் வகுப்பு ) இரண்டாம் பருவம் அவனுக்கு வேலை கிடைக்காது. அதனால் அதற்கென்று தனி வகுப்பு செல்கிறான். மாணவர்களின் திறமையைச் சோதிக்கும் தேர்வுகள் (aptitude test) இதற்கென்று தனிவகுப்புகள் செல்ல வேண்டியுள்ளது. அவன் படித்தக் கல்வியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை . அறுபது சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவன் பெரிய அலுவலங்களில் மிக எளிமையாகச் செல்கிறான். இவற்றால் நாம் அறிவது ஏட்டுக்கல்வியால் மட்டும் மாணவர்கள் முழுமையான கல்வியைப் பெறவியலாது.
  20. 20. ‘கஜா’ புயல் பாதித்த மக்களுக்கு ஜெகத்ரட்சகனின் ரேலா மருத்துவமனை உதவி டாக்டர்கள் மூலம் மருந்து வினியோகம், சென்னை , நவ.-26-2018. முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனின் டாக்டர் ரேலா மருத்துவமனை தேசிய கல்லீரல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 25பேர் கொண்ட மருத்துவக்குழு ‘கஜா’ புயல் நிவாரண மருத்துவச் சேவைக்காக கடந்த 22ந்தேதி சென்னையில் இருந்து நாகை மாவட்டம் சென்றனர். 23-ந்தேதி தலைஞாயிறு, புஷ்பவனம் மற்றும் வெள்ளைப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 700 பேருக்குச் சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது. 24-ந்தேதி தீவுக் கிராமமான வண்டல் கிராமத்துக்குப் படகு மூலம் சென்று 600 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு உள்ளது. 25-ந்தேதி அரவேற்காடு பகுதிகளில் நடந்த மருத்துவ முகாமில் சுமார் 450 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். மேற்கண்ட தகவல் டாக்டர் ரேலா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதநேயத்தோடு செய்த இச்சேவையை அங்குள்ள மக்கள் பாராட்டினர். பட்டுக்கோட்டை அருகே மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய வாலிபர்கள், பட்டுக்கோட்டை, நவ.-1-2018. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரை காசி விசுவநாதர் கோவில் முன்பு கடந்த பல நாட்களாக சின்னப்பொண்ணு வயது 65) என்ற மூதாட்டி பிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் அந்த மூதாட்டி தனது கை, கால்கள் கழுவுவதற்காக அங்குள்ள கோவில் குளத்தில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர், குளத்திற்குள் தவறி விழுந்தார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கரையில் போட்டனர். அப்போது அங்கு வந்த பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த விக்னேஷ்(23) ஹானஸ்ட்ராஜ்(26) ஆகிய இருவரும் அந்த மூதாட்டியை மீட்டு, மோட்டார் சைக்கிளில் ஏற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றால் அந்த மூதாட்டி உயிர் பிழைத்தார். இதற்குக் காரணமான வாலிபர்களைப் பொதுமக்கள் பாராட்டினர்.
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 3
Class: 6Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………. அ) கண் + அறி ஆ) கண்டு + அறி இ) கண்ட + அறி ஈ) கண் + டறி[1]
2.பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………. அ) பொங்கலன்று ஆ) பொங்கல் அன்று இ) பொங்கலென்று ஈ) பொங்கஅன்று[1]
3.கதிர் முற்றியதும் …………………. செய்வர் அ) அறுவடை ஆ) உரமிடுதல் இ) நடவு ஈ) களையெடுத்தல்[1]
4.தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………. அ) தம்முயிர் ஆ) தமதுயிர் இ) தம்உயிர் ஈ) தம்முஉயிர்[1]
5.தாய் மொழியில் படித்தால் …………. அடையலாம். அ) பன்மை ஆ) மேன்மை இ) பொறுமை ஈ) சிறுமை[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக. அ) வயல் ஆ) வாழை இ) மீன்கொத்தி ஈ) பறவை[2]
7.வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) வண்ண ம் + படங்கள் ஆ) வண்ண ப் + படங்கள் இ) வண்ண + படங்கள் ஈ) வண்ண மான + படங்கள்[2]
8.இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?[2]
9.இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) இன்உயிர் ஆ) இனிய உயிர் இ) இன்னுயிர் ஈ) இனிமைஉயிர்[2]
10.உங்கள் பெயர் மற்றும் உங்கள் நண்பர்களது பெயர்களுக்கான மாத்திரை அளவை கண்டுபிடி.[2]
11.கலைகளுள் ஒன்று சிற்பக்கலை. இது போன்ற பிற கலைகளின் பெயர்களை எழுதுக.[2]
12.துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது?[2]
13.உங்கள் பகுதியில் பேசப்படும் பழமொழிகளைத் தொகுக்க.[2]
14.யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?[2]
15.மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) மூச்சு + அடக்கி ஆ) மூச் + அடக்கி இ) மூச் + சடக்கி ஈ) மூச்சை + அடக்கி[2]
16.செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.[2]
17.இடுகுறிப்பெயரை வட்டமிடுக. அ) பறவை ஆ) மண் இ) முக்காலி ஈ) மரங்கொத்தி[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்களை எழுதுக (எ.கா.) ஆம்[5]
19.உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.[5]
20.தமிழை அமுது, நிலவு, மணம் என்று பெயரிட்டு அழைப்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.[5]
🔑 Show Answer Key — Set 3
  1. 1. ஆ) கண்டு + அறி
  2. 2. அ) பொங்கலன்ற
  3. 3. அ) அறுவடை
  4. 4. அ) தம்முயிர்
  5. 5. (விடை: ஆ) மேன்மை)
  6. 6. ஆ) வாழை
  7. 7. அ) வண்ண ம்+ படங்கள்
  8. 8. சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு.
  9. 9. இ) இன்னுயிர்
  10. 10. எ. கா. கபிலர் – 1 + 1 + 1 + 1/2 = 3 1/2 மாணவர்களைத் தமிழ் எழுத்துகளின் மாத்திரை அளவை அறிந்து கொள்ளச் செய்தல்.
  11. 11. கலைகளின் பெயர்கள் : ஓவியக்கலை, நடனக்கலை, நாடகக் கலை, இசைக்கலை, கட்டடக்கலை, . கவிதைக்கலை, ஒப்பனைக்கலை, தையற்கலை, நீச்சல்கலை இவை போன்ற அறுபத்து நான்கு கலைகள் உள்ளன.
  12. 12. துருவப் பகுதிகளில் நிகழும் தட்ப வெப்ப நிலை, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல. எனவே அப்பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு எந்திர மனிதர்களை அனுப்புகிறார்கள்.
  13. 13. (i) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. (ii) குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். (iii) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். (iv) கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. (v) வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
  14. 14. மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
  15. 15. அ) மூச்சு + அடக்கி
  16. 16. தெளிவுரை : முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்; முடியாத என்பவர் சிறியோர். விளக்கவுரை : மனிதனுக்குச் செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர்களாகும். செய்வதற்கரிய செயல்களைச் செய்ய இயலாதவர்கள் எல்லாம் சிறியோர்கள் என்பர். மக்கட்பேறு
  17. 17. ஆ) மண்
  18. 18. முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்கள் : ஆம் ஆள், ஆல், ஆண், ஆன், ஆய், ஆர் உன், உண்,ஊழ், ஊண், ஊன், ஊர் என், எண், எள், ஏன், ஏர், ஏண், ஏம், ஏல் ஈர், ஓர்
  19. 19. (i) பால் வியாபாரம் (ii) காய்கறி அங்காடி (iii) செய்தித்தாள் விற்பனையாளர் (iv) தேநீர் அங்காடி (v) பல்பொருள் விற்பனையாளர் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக (மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)
  20. 20. தமிழை அமுது, நிலவு, மணம் என்று பெயரிட்டு அழைப்பது ஏன் என்பது குறித்து கலத்துரையாடுதல். மாணவன் 1 : வணக்கம் ! கவிஞர்கள் தமிழை அமுது, நிலவு, மணம் என்று அழைக்கிறார்கள். அதைப் பற்றி உனக்குத் தெரியுமா? மாணவன் 2 : தெரியும். அமுதம் என்பது வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவுப் பொருள் ஆகும். அது மிகவும் சுவை உடையது என்றும் அதனை உண்பதினால் தேவர்கள் சாகா வரம் பெற்றுள்ளார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையுள்ள உணவை நாம் உண்ணும்போது தேவாமிர்தமாக இனிக்கிறது என்றும் நாம் கூறுவோம். அதைப்போல் கவிஞர்களும் தமிழ் இனிமையானது என்ற பொருளிலும், இறவாநிலையில் உள்ளது என்ற பொருளிலும் தமிழை அமுது எனக் கூறுகிறார்கள். மாணவன் 3 : ஆமாம், ஆமாம் அதேபோல்தான் நிலவு என்று அழைப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. நிலவானது குளிர்ச்சி பொருந்தியது. அதுமட்டுமின்றி உலகின் இருளைப் போக்கி வெளிச்சத்தைத் தருகிறது. தமிழ் தண்மையானது குளிர்ச்சி) என்பதாலும் மக்களின் அறியாமை என்ற இருளைப் போக்கி ஒளியைத் தருவதாலும் தமிழை நிலவு என்று அழைக்கிறார்கள். மாணவன் 4 : சரியாகச் சொன்னாய். மணம் என்று கூறுவதற்கும் ஒரு காரணம். உண்டு. அது என்னவெனில் பூக்களின் மணம், காற்றில் கலந்து எல்லாவிடங்களிலும் பரவுகிறது. அதேபோல் நம் தமிழ்மொழியும் – மாநிலம் கடந்து, நாடு கடந்து ஏன் உலகமெங்கும் தன் நறுமணத்தைப் பரப்பியுள்ளது. எனவேதான் தமிழை மணம் என்ற பெயரிட்டு அழைத்துள்ளனர்.

📄 About official papers

Class 6 does not have a public board examination, so there are no official board question papers for this class. The papers above are Brain Grain practice papers built to the standard exam pattern — ideal for unit tests, monthly tests and revision.

Practise more — your way

Every paper above is generated from the same 23,000+ verified Brain Grain question bank.