Practice Question Papers · with Answers

Samacheer Kalvi Class 7 Tamil Practice Question Papers

Download free Samacheer Kalvi Class 7 Tamil practice question papers with full answer keys. These are original Brain Grain model papers — built from our verified question bank to the real exam blueprint (sections, marks and solutions) — perfect for board revision and model tests.

Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 1
Class: 7Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ………………… அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்[1]
2.தமிழரின் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ………………… அ) கலம் ஆ) வங்கம் இ) நாவாய் ஈ) ஓடம்[1]
3.வாழை, கன்றை …………………. அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ) தந்தது[1]
4.வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ………………… செய்வர். அ) அறுவடை ஆ) உழவு இ) நடவு ஈ) விற்பனை[1]
5.இளங்கோவடிகள் …………………. மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார். அ) இமய ஆ) கொல்லி இ) பொதிகை ஈ) விந்திய[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.பிறருடன் பேசும் போது நீங்கள் பயன்படுத்தும் இன்சொற்களைத் தொகுத்துக் கூறுக.[2]
7.பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக.[2]
8.கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?[2]
9.இரட்டைக்கிளவி என்பது யாது ? சான்று தருக.[2]
10.ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள், அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்தெழுதுங்கள்.[2]
11.பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள தொழில் பெயர்களைக் கண்டறிந்து தொகுக்க.[2]
12.உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதுக.[2]
13.சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.[2]
14.வட்டாரமொழி எனப்படுவது யாது?[2]
15.காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?[2]
16.பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?[2]
17.கடலும், கலங்கரை விளக்கமும் – ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுக.[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.[5]
19.உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதி வருக.[5]
20.கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி அ) சுக்கான் ஆ) நங்கூரம் இ) கண்டை ஈ) சமுக்கு[5]
🔑 Show Answer Key — Set 1
  1. 1. அ) இயற்சொல்
  2. 2. ஈ) ஓடம்
  3. 3. அ) ஈன்றது
  4. 4. அ) அறுவடை
  5. 5. இ) பொதிகை
  6. 6. வாழ்க வளமுடன், வணக்கம், நலமா, அன்புடையவரே, சகோதரரே, நன்று, அருமை, இனிமை, பாராட்டு, வாழ்த்துகள், வெற்றி உமதே, முயற்சி திருவினையாக்கும் ஆகியன பிறருடன் பேசும் போது நான் பயன்படுத்தும் இன்சொற்கள்.
  7. 7. பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் மதுரக்கி ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள் திருமங்கை ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பாணாழ்வார் குலசேகர ஆழ்வார்.
  8. 8. கல்வி அறிவு இல்லாதவர்கள் விலங்குகள் என்று வள்ளுவர் கூறுகின்றார்.
  9. 9. இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி ஆகும். சான்று : விறுவிறு, மளமள.
  10. 10. எண்ணுப்பெயர்கள் : ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. குற்றியலுகரச் சொற்கள் : ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து.
  11. 11. பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தொழில் பெயர்கள்: வேட்டைக்குச் செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்.
  12. 12. பலாமரம் நெடுநெடுனு வளர்ந்த மரம், நேர்த்தியான பலாமரம் முக்கனியில் இராண்டாம் கனி தரு மரம் பெரும்பழம் சுமந்ததால் உன்மேனி இளைத்ததோ? பழுமரத்தை நாடி பரவசமாய் பறவை வரும் கொடுக்க குறையாத அமுதசுரபி மரம் பலாமரம்
  13. 13. (refer textbook)
  14. 14. இடத்திற்கு இடம் பேச்சுமொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.
  15. 15. காட்டுப்பூக்களுக்குக் கார்த்திகை விளக்கை உவமையாகக்கவிஞர் சுரதாகுறிப்பிடுகிறார்.
  16. 16. மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கான நோக்கமாகும்.
  17. 17. (refer textbook)
  18. 18. 1. வீட்டுக்கு வீடு வாசற் படி. 2. வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார். 3. அடிச்சு வளக்காத புள்ளயும் ஒடிச்சு வளக்காத முருங்கையும் உருப்படாது. 4. எறச்ச கிணறு ஊறும். 5. நாய் வித்த காசு கொலக்கவா செய்யும். 6. ஊராரு புள்ளய ஊட்டி வளத்தா தன்புள்ள தன்னால வளரும். 7. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. 8. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். 9. காணி சோம்பல் , கோடி கேடு. 10. மானேண்ணா புள்ளி கொறயுமா? மயிலேண்ணா எறகு உதிறுமா?
  19. 19. எங்கள் ஈரோட்டில் பெரியார் – அண்ணா நினைவகம், தொல்லாய்வுக் கூடம், பவானி சாகர் அணை, கொடிவேரி அணை, மிகப்பெரிய ஜவுளிச் சந்தை ஆகியவை உள்ளன. தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்திய அனைத்துப்பொருட்களும் நூல்களும் புகைப்படங்களும் நினைவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பழமையைப் பறைசாற்றும் கல்வெட்டுகள், தொல்பொருட்கள் பாதுகாப்பிடமாக வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள தொல்லாய்வுக் கூடத்தில் உள்ளன. பழமைமிக்க நீர்த்தேக்கம் பவானிசாகர்.
  20. 20. அ) சுக்கான் கோடிட்ட இடங்களை நிரப்புக. 1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் ……………… என அழைக்கப்படும். 2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது …………………… 3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ……………….. எனக்குறிக்கப்படும். 1. தொகுதி 2. நங்கூரம் 3. கண்ணடை பொருத்துக. 1. எரா – திசைகாட்டும் கருவி 2. பருமல் – அடிமரம் 3. மீகாமன் – குறுக்கு மரம் 4. காந்த ஊசி – கப்பலைச் செலுத்துபவர் 1. எரா – அடிமரம் 2. பருமல் – குறுக்கு மரம் 3. மீகாமன் – கப்பலைச் செலுத்துபவர் 4. காந்த ஊசி – திசைகாட்டும் கருவி தொடர்களில் அமைத்து எழுது. 1. நீரோட்டம் – ஆழ்துளைக்கிணறு அமைக்கும் முன்னர் நீரோட்டம் பார்ப்பர். 2. காற்றின் திசை – கப்பலைக் காற்றின் திசைக்கேற்ப செலுத்துவர். 3. வானியல் அறிவு – தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர். 4. ஏற்றுமதி – பண்டைய காலத்தில் கடல்வணிகம் மூலம் ஏற்றுமதி நடைபெற்றது.
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 2
Class: 7Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.‘கேடில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….. அ) கேடி + இல்லை ஆ) கே + இல்லை இ) கேள்வி + இல்லை ஈ) கேடு + இல்லை[1]
2.பாஞ்சாலங்குறிச்சியில் ……………… நாயை விரட்டிடும். அ) முயல் ஆ) நரி இ) பரி ஈ) புலி[1]
3.‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………… அ) துயின்று + இருந்தார் ஆ) துயில் + இருந்தார் இ) துயின்றி + இருந்தார் ஈ) துயின் + இருந்தார்[1]
4.தமிழின் கிளைமொழிகளில் ஒன்று ………………… அ) உருது ஆ) இந்தி இ) தெலுங்கு ஈ) ஆங்கிலம்[1]
5.‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………… அ) குரல் + யாகும் ஆ) குரல் + ஆகும் இ) குர + லாகும் ஈ) குர + ஆகும்[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.[2]
7.கல்விச்செல்வம் குறித்த நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.[2]
8.கல்வி தொடர்பான பாடல் வரிகளைத் தொகுத்து எழுதுக. (எ.கா.) கல்வி கரையில, கற்பவர் நாள் சில.[2]
9.உங்களுக்கு பிடித்த கவிதை ஒன்றைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.[2]
10.பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றின் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக.[2]
11.கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?[2]
12.சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.[2]
13.பொய்கையாழ்வாரும்பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?[2]
14.உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?[2]
15.குற்றியலிகரம் என்றால் என்ன?[2]
16.பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?[2]
17.இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?[5]
19.இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………. அ) இவையில்லாது ஆ) இவை இல்லாது இ) இவயில்லாது ஈ) இவஇல்லாது[5]
20.‘இன்பத்தமிழ்க் கல்வி’ – பாடலின் மையக்கருத்தை நும் சொந்த நடையில் எழுதுக.[5]
🔑 Show Answer Key — Set 2
  1. 1. ஈ) கேடு + இல்லை
  2. 2. அ) முயல்
  3. 3. அ) துயின்று + இருந்தார்
  4. 4. இ) தெலுங்கு
  5. 5. ஆ) குரல் + ஆகும்
  6. 6. புள்ளிமான் சருகுமான் மிளாமான் வெளிமான்
  7. 7. கல்வியைப் பொருள் போலக் குவித்து வைத்தாலும் பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்குக் கொடுத்ததலும் குறையாது. அரசராலும் கவர முடியாது.ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கவேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது.
  8. 8. இளமையில் கல். கேடில் விழுச்செல்வம் கல்வி. கற்க கசடற. ஓதுவது ஒழியேல்! கல்விக்கு அழகு கசடற மொழிதல் உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக் கடலின் பெருமை கடவார்.
  9. 9. வாழ்க்கை “பெட்டி படுக்கைகளை சுமந்தபடி ஒரு பிரயாணம் எப்போது சுமைகளை இறக்கி வைக்கிறோமோ அப்போது சுற்றி இருப்பவர்கள் நம்மைச் சுமக்க தொடங்குகிறார்கள்”. – மு. மேத்தா
  10. 10. (refer textbook)
  11. 11. கடல் ஆய்வு செய்பவர்கள் மீனவர்கள் கப்பற் படை வீரர்கள் கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்
  12. 12. சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள் : தோணி ஓடம் படகு பணை மிதவை தெப்பம் கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள் : கலம் வங்கம் நாவாய்
  13. 13. பொய்கையாழ்வார் அகல்விளக்காகப் பூமியையும், பூதத்தாழ்வார் அகல்விளக்காக அன்பையும் உருவகப்படுத்துகின்றனர்.
  14. 14. நாற்றுப் பறிக்கும்போது உழவர்கள் வயல் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர்.
  15. 15. முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும். மொழியை ஆழ்வோம் கேட்க
  16. 16. பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.
  17. 17. “பூமித் தாயே! பசுமை போர்த்தியவளே! நீலக் கடலாய் அலங்கரித்தவளே! கதிரவன் காட்சியில் …. பொன் தகடானவளே! உன்னரும் வளத்தால் இன்னுயிர்கள் வாழ்கின்றனவே!”
  18. 18. (i) ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு, உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது. (ii) தரத்தைக் காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது, உதவி செய்தல் எதற்காக? தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும் கூட உதவி செய்யலாமே! (iii) சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒருவகையில் வாணிகம் போலத்தான். அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைந்து, உதவி செய்தவதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.
  19. 19. அ) இவையில்லாது பொருத்துக. 1. சாந்தம் – சிறப்பு 2. மகத்துவம் – உலகம் 3. தாரணி – கருணை 4. இரக்கம் – அமைதி 1. சாந்தம் – அமைதி 2. மகத்துவம் – சிறப்பு 3. தாரணி – உலகம் 4. இரக்கம் – கருணை
  20. 20. பாரதிதாசன் கவிதை எழுத ஏட்டினை எடுத்தார். வானம் தன்னைக் கவிதையாக எழுதும்படிக் கூறியது. நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம் ஆகியன அவரைக் கவர்ந்து தங்களைக் கவிதை எழுதும்படி அவரிடம் வேண்டியது.மயில் போன்ற பெண்கள் அன்பைக் கவிதையாக எழுதும்படிக் கூறினர். தென்றல், மயில், அன்னம், கதிரவன். வீரர்கள் ஆகியனவும் அவரிடம் கவிதை எழுத வேண்டின.ஆனால் துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அதனை நீங்க இன்பத்தமிழ்க் கல்வி கற்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பம் நீங்கும். மனதில் தூய்மை உண்டாகும். வீரம் வரும்.
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 3
Class: 7Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.‘கரைந்துண்ணும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….. அ) கரைந்து + இன்னும் ஆ) கரை + துண்ணும் இ) கரைந்து + உண்ணும் ஈ) கரை + உண்ணும்[1]
2.பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ……………. அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்[1]
3.ஊர்வலத்தின் முன்னால் ………….. அசைந்து வந்தது. அ) தோரணம் ஆ) வானரம் இ) வாரணம் ஈ) சந்தனம்[1]
4.சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ………………. அ) ஐகாகரக்குறுக்கம் ஆ) ஔகாகரக்குறுக்கம் இ) மகரக்குறுக்கம் ஈ) ஆய்தக்குறுக்கம்[1]
5.‘நீருலையில்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………. அ) நீரு + உலையில் ஆ) நீர் + இலையில் இ) நீர் + உலையில் ஈ) நீரு + இலையில்[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.மொழின் இருவடிவங்கள் யாவை?[2]
7.உருவக அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?[2]
8.பேசும் போது சிலநேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவது உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்த வழக்குச் சொற்களையும் எழுதுக.[2]
9.பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நீங்கள் எவற்றை எல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்?[2]
10.சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?[2]
11.‘பெருங்கடல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பெரு + கடல் ஆ) பெருமை + கடல் இ) பெரிய + கடல் ஈ) பெருங் + கடல்[2]
12.அன்றாடப் பேச்சு வழக்கில் இடம்பெறும் அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றைத் தொகுக்க.[2]
13.பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?[2]
14.இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது. அ) இன்று ஆகி ஆ) இன்றி ஆகி இ) இன்றாகி ஈ) இன்றாஆகி[2]
15.கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களை க் கூறுக.[2]
16.தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.[2]
17.கல்விச்செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்? – சிந்தித்து எழுதுக.[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.நீங்கள் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றி வகுப்பறையில் பேசுக.[5]
19.கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?[5]
20.முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப்பயணம் – கடல்வழிப்பயணம் – வான்வழிவழிப் பயணம் – முடிவுரை[5]
🔑 Show Answer Key — Set 3
  1. 1. இ) கரைந்து + உண்ணும்
  2. 2. ஆ) திரிசொல்
  3. 3. இ) வாரணம்
  4. 4. ஆ) ஔகாகரக்குறுக்கம்
  5. 5. இ) நீர் + உலையில்
  6. 6. பேச்சுமொழி எழுத்துமொழி
  7. 7. மொழியை ஆள்வோம் பேசுக.
  8. 8. (எ.கா) சொல்லு – சொல், நில்லு – நில், வந்தியா – வந்தாயா?, சாப்டியா – சாப்பிட்டாயா?
  9. 9. நான் அறிவு, தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு, ஊக்கம், கல்வி, உயிர், உண்மை ஆகியற்றையெல்லாம் விளக்காக உருவகப்படுத்துவேன்.
  10. 10. ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை முதல் – 1 1/2 மாத்திரை இடை – 1 மாத்திரை கடை – 1 மாத்திரை
  11. 11. ஆ) பெருமை + கடல்
  12. 12. (refer textbook)
  13. 13. பாஞ்சாலங்குறிச்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகளெல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்ததாகவும் இருக்கும்.
  14. 14. இ) இன்றாகி
  15. 15. எரா பருமல் வங்கு கூம்பு பாய்மரம் சுக்கான் நங்கூரம் – போன்றவை கப்பல் உறுப்புகள் ஆகும்.
  16. 16. எளிதில் பொருள் விளங்கி நன்கு பாடப்புரிதல் ஏற்படும். பழந்தமிழ் கலை, பண்பாடு, மரபு ஆகியன காக்கப்படும். தொன்மையையும் வரலாற்றையும் நன்கு உணரலாம். விழுமிய தமிழ்ச்சிந்தனைகளை அறியலாம்.
  17. 17. நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது. திருடர்களால் கல்வியைத் திருடமுடியாது. கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் குறையாது. – எனவே, பிற செல்வங்கள் அழியும். ஆனால் கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.
  18. 18. வணக்கம். நான் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றிப் பேசுகின்றேன். சித்தன்னவாசல் ஓவியங்களையும் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. சித்தன்னவாசல் ஓவியங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவையாக, உண்மையான காட்சிகள் போல காட்சி அளிக்கின்றன. ஓவியங்களா உயிருள்ள பொருளா என்று வியக்கும் வகையில் உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக் கல்சிற்பங்கள் அருமையானது. பஞ்சபாண்டவர் ரதம், நந்தி ஆகியன கலை நயத்துடனும் நவீன வேலைப்பாடுகள் அமைந்து காணப்படுகின்றது. நம் கலையறிவுக்குச் சான்றாக இது உள்ளது. அனைவரும் அதனைக் கண்டு களிப்போம். நன்றி. கவிதையை நிறைவு செய்க. வானும் நிலவும் அழகு வயலும் பயிரும் அழகு கடலும் அலையும் அழகு காற்றும் குளிரும் அழகு. படம் உணர்த்தும் கருத்தை ஐந்து வரிகளில் எழுதுக.ஒன்று கூடுவோம் நாம் ஒன்று கூடுவோம் பச்சை மரங்களைக் காப்போம் பசுமையை நேசிப்போம்! சுவாசிப்போம்! இனியொரு விதி செய்வோம் இயற்கையைப் போற்றவே! கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒரு தொடரில் முதல் மற்றும் இறுதிச்சொல்லாகக் கொண்டு சொற்றொடர் உருவாக்குக. (ஓவியக்கலை, இசை, கட்டடக்கலை, வண்ணங்கள்) (எ.கா.) : ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. நுண்கலைகளுள் ஒன்று ஓவியக்கலை . 1. இசை க்கு மயங்காத உயிர்கள் இல்லை . எங்கும் தமிழ் இசை 2. கட்டடக்கலையில் தமிழர் சிறந்திருந்தனர். சிறந்த கலை கட்டடக்கலை . 3. வண்ணங்கள் தீட்டி ஓவியம் வரைவோம். மயில் தோகையில் எண்ணற்ற வண்ணங்கள் . இடைச்சொல் ‘ஐ’ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. தலைப்பு : எங்கள் ஊர் முன்னுரை – அமைவிடம் – பெயர்க்காரணம் – தொழில்கள் – சிறப்பு மிகு இடங்கள் – திருவிழாக்கள் – மக்கள் ஒற்றுமை – முடிவுரை முன்னுரை : அழகான நகரம், அமைதியான நகரம் எங்கள் ஈரோடு ஆகும். எண்ணற்ற வளங்கள் பொங்கும் இடம் ஈரோடு. மனிதநேயம் தவழும் நகர் எங்கள் ஈரோடு. அச்சிறப்புமிகு நகர் பற்றிக் காண்போம்.அமைவிடம் : கரூர், சேலம், கோவை ஆகியற்றுக் கிடையே ஈரோடு நகர் அமைந்துள்ளது. காடுகளும் வயல்களும் சூழ்ந்து நடுவினில் இயற்கை அழகு தவழும் வண்ணம் ஈரோடு அமைந்துள்ளது. காவிரி ஆறு பாயும் புண்ணிய பூமி ஈரோடு ஆகும். பெயர்க்காரணம் : இரண்டு ஓடைகள் ஓடுவதால் ஈரோடை எனப்பெயர் பெற்றது. இதுவே காலப்போக்கில் மருவி ஈரோடு என்று ஆனது. பிரம்மா ஐந்தாவது தலையைத் துண்டித்த போது அந்த மண்டையோடு சிவபெருமானோடு ஒட்டிக்கொண்டு பிரம்ம தோசம் பிடித்தது. அவர் தோசம் போக இந்தியா முழுவதும் நீராடினார். ஈரோட்டில் வந்து நீராடிய போது மண்டை ஓடு மூன்றாகப் பிரிந்து மூன்று இடத்தில் விழுந்தது. ஈர் (இறுதி) ஓடு விழுந்த இடம் ஈரோடு ஆயிற்று என்பர். தொழில்கள் : வேளாண்மை, கைத்தறி, ஜமக்காளம், ஆடை ஆயத்தம் ஆகிய தொழில்கள் ஈரோட்டில் சிறந்து விளங்கிவருகின்றது. சிறப்புமிகு இடங்கள் : பெரியார் – அண்ணா நினைவகம், திண்டல் முருகன் கோயில், பிரப் தேவாலயம், பள்ளிபாளையம் தர்கா, பண்ணாரி அம்மன் கோவில், வ.உ.சி.பூங்கா ஆகியன ஈரேட்டில் சிறப்புமிகு இடங்கள் ஆகும். திருவிழாக்கள் : மாரியம்மன், பண்ணாரி அம்மன், பாரியூர் அம்மன், அறச்சாலை அம்மன் ஆகிய கோயில்களின் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். திரளான பக்தர்கள் இதில் – கலந்து கொள்வர். மக்கள் ஒற்றுமை : இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய சமயங்கள் எங்கள் நகரில் இருந்த போதும் மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல ஒற்றுமையாகவே இருந்துவருகின்றோம். ஒரே பகுதியில் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் ஆகிய மூன்றும் அமைந்து எங்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றது. முடிவுரை : நம் நகரின் அருமை பெருமைகளை அறிந்து, நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.மொழியோடு விளையாடு கீழ்க்காணும் புதிரைப்படித்து விடையைக் கண்டறிக.
  19. 19. கல்வி ஓர் ஒளிவிளக்கு. இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாதவீடு. விளக்கில்லாதவீட்டில் யார்குடியிருப்பார்கள்? வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள்.
  20. 20. முன்னுரை : பயணம் என்பது சங்ககாலம் முதல் நிகழ்ந்து வருகின்றது. நடைபயணமாகத் தொடங்கிய பயணத் தோற்றம் அறிவியல் வளர்ச்சியால் இன்று பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. பயண நேரம் இன்று மிகவும் சுருங்கிவிட்டது. பயணத்தின் தேவை : மனிதன் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காவும், பண்டமாற்று முறைக்காகவும், பொருட்களைவாங்கவும் விற்கவும் சந்தைப்படுத்தவும். தம் உறவினர் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொள்வதற்கும், மருத்துவத் தேவைக்காகவும் பயணத்தின் தேவை ஏற்பட்டது. பயணத்தின் தன்மைக் கேற்ப தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம், வான்வழிவழிப் பயணம் என வகைப்படுத்தப்பட்டது. தரை வழிப்பயணம் : பழங்காலம் முதல் தரைவழிப்பயணமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நடைபயணமாகவே ஆரம்ப கால கட்டத்தில் பயணம் மேற்கொள்ளப்பட்டது.மாட்டு வண்டி, குதிரை வண்டியின் மூலம் நடைபெற்ற தரைவழிப் பயணம். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக மிதிவண்டி, மகிழ்வுந்து, பேருந்து, சரக்குந்து, தொடர்வண்டி ஆகியவை மூலம் தரைவழிப்பயணம் விரைவாக மேற்கொள்ளப்பட்டது. கடல்வழிப்பயணம் : கப்பல் போன்றவற்றில் கடல்வழியாகச் செல்லும் பயணம் கடல்வழிப்பயணம் ஆகும். கடலின் அழகைக் கண்டு மகிழவும், கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. தீவுகள் மற்றும் வெகு தொலைவு நாடுகளுக்குப் பொருட்களை அனுப்பவும் , அயல் நாடுகளுக்கு வணிகம் செய்யவும் கடல்வழிப்பயணம் பயன்பட்டது. வான் வழிப்பயணம் : விமானம் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வான்வழியில் பயணம் மேற்கொள்வது வான்வழிப்பயணம் ஆகும். தரை மற்றும் கப்பல் வழி பயணங்களைவிடச் சிறந்தது வான்வழிப்பயணம். பல நாட்கள் செல்ல வேண்டிய பயணத்தை ஒருசில மணி நேரங்களிலேயே செல்லலாம். அதிவிரைவுக்கு ஏற்றது வான்வழிப் பயணம்.முடிவுரை : பயணம் செய்வதில் பாதுகாப்பான முறைகளை அறிந்து பயன்படுவது பயணிகளாகிய நம் கடமையாகும். பயணத்தில் வீண் விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும். (“பயணத்தில் தேவை கவனம்”) மொழியோடு விளையாடு குறுக்கெழுத்துப் புதிர் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்.இடமிருந்து வலம் 1. அச்சான் – தந்தை 2. விஞ்ஞானம் – அறிவியல் 4. பரீட்சை – தேர்வு 10. லட்சியம் – இலக்கு வலமிருந்து இடம் 6. அபாயம் – இடர் 8. தேகம் – உடல் 13. சரித்திரம் – வரலாறு 14. சத்தம் – ஒலி மேலிருந்து கீழ் 1. அதிபர் – தலைவர் 3. ஆச்சரியம் – வியப்பு 7. ஆரம்பம் – தொடக்கம் 12. சதம் – நூறு கீழிருந்து மேல் 5. ஆதி – முதல் 9. உத்தரவு – கட்டளை 11. தினம் -நாள் 15. சந்தோசம் – மகிழ்ச்சி குறிப்புகளைக் கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக.நிற்க அதற்குத் தக.. கலைச்சொல் அறிவோம் 1. கலங்கரை விளக்கம் – Light house 2. பெருங்கடல் – Ocean 3. கப்பல் தொழில் நுட்பம் – Marine technology 4. கடல்வாழ் உயிரினம் – Marine creature 5. நீர் மூழ்கிக் கப்பல் – Submarine 6. துறைமுகம் – Harbour 7. புயல் – Storm 8. மாலுமி – Sailor 9. நங்கூரம் – Anchor 10. கப்பல் தளம் – Shipyard

📄 About official papers

Class 7 does not have a public board examination, so there are no official board question papers for this class. The papers above are Brain Grain practice papers built to the standard exam pattern — ideal for unit tests, monthly tests and revision.

Practise more — your way

Every paper above is generated from the same 23,000+ verified Brain Grain question bank.