Class 6 Tamil · Chapter 1

Samacheer Class 6 Tamil - இயல் 1

54 textbook Q&A54 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 1 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 10சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 20குறுவினா 5சிறுவினா 5சிந்தனை வினா 4மதிப்பீடு 10
Your Progress - Chapter 10% complete
1கற்பவை கற்றபின்10 questions
Q.1இன்பத்தமிழ் என்ற பாடலை இனிய ஓசையுடன் பாடுக.v
Answer:

கீழ்க்காணும் பாடலைக் குரலேற்ற இறக்கத்துடன் இனிமையாகப் பாடச் செய்தல்.
தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !

Q.2தமிழை அமுது, நிலவு, மணம் என்று பெயரிட்டு அழைப்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.v
Answer:

தமிழை அமுது, நிலவு, மணம் என்று பெயரிட்டு அழைப்பது ஏன் என்பது குறித்து
கலத்துரையாடுதல்.
மாணவன் 1 : வணக்கம் ! கவிஞர்கள் தமிழை அமுது, நிலவு, மணம் என்று அழைக்கிறார்கள். அதைப் பற்றி உனக்குத் தெரியுமா?
மாணவன் 2 : தெரியும். அமுதம் என்பது வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவுப் பொருள் ஆகும். அது மிகவும் சுவை உடையது என்றும் அதனை உண்பதினால் தேவர்கள் சாகா வரம் பெற்றுள்ளார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையுள்ள உணவை நாம் உண்ணும்போது தேவாமிர்தமாக இனிக்கிறது என்றும் நாம் கூறுவோம். அதைப்போல் கவிஞர்களும் தமிழ் இனிமையானது என்ற பொருளிலும், இறவாநிலையில் உள்ளது என்ற பொருளிலும் தமிழை அமுது எனக் கூறுகிறார்கள்.
மாணவன் 3 : ஆமாம், ஆமாம் அதேபோல்தான் நிலவு என்று அழைப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. நிலவானது குளிர்ச்சி பொருந்தியது. அதுமட்டுமின்றி உலகின் இருளைப் போக்கி வெளிச்சத்தைத் தருகிறது. தமிழ் தண்மையானது குளிர்ச்சி) என்பதாலும் மக்களின் அறியாமை என்ற இருளைப் போக்கி ஒளியைத் தருவதாலும் தமிழை நிலவு என்று அழைக்கிறார்கள்.
மாணவன் 4 : சரியாகச் சொன்னாய். மணம் என்று கூறுவதற்கும் ஒரு காரணம். உண்டு. அது என்னவெனில் பூக்களின் மணம், காற்றில் கலந்து எல்லாவிடங்களிலும் பரவுகிறது. அதேபோல் நம் தமிழ்மொழியும் – மாநிலம் கடந்து, நாடு கடந்து ஏன் உலகமெங்கும் தன் நறுமணத்தைப் பரப்பியுள்ளது. எனவேதான் தமிழை மணம் என்ற பெயரிட்டு அழைத்துள்ளனர்.

Q.3தமிழுக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயர்களைப் பட்டியலிடுக.v
Answer:

மாணவர்கள் தமிழுக்குச் சூட்டப்படும் பெயர்களை அறிந்து எழுதுதல்.
தேன்தமிழ், செந்தமிழ், இனிமைத் தமிழ், இளமைத் தமிழ், முத்தமிழ்…
முதல் பருவம்

Q.4தமிழ்க் கவிதைகள், பாடல்களைப் படித்து மகிழ்க.v
Answer:

கீழ்க்காணும் பாடலைக் குரலேற்ற இரக்கத்துடன் இனிமையாகப் பாடச் செய்தல். தென்றலுக்கு நன்றி!
கழுகொடு நெடிய தென்னை
கமழ்கின்ற சந்தனங்கள்
சமைக்கின்ற பொதிகை அன்னை
உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்!
தமிழ் எனக் ககத்தும், தக்க
தென்றல் நீ புறத்தும் இன்பம்
அமைவுறச் செய்வதை நான்
கனவிலும் மறவேன் அன்றோ ?

Q.1தமிழ்க்கும்மி பாடலை இசையோடு பாடி மகிழ்க.v
Answer:

தமிழ்க்கும்மி பாடலை இசை நயத்தோடு பாடச் செய்தல்
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் — அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்
மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
மேதினி வாழவழி காட்டிருக்கும்! பெருஞ்சித்திரனார்

Q.1மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ் என்பது பற்றிக் கலந்துரையாடுக.v
Answer:

மாணவர்களைக் கால மாற்றத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ்மொழி பற்றிப் பேசச் செய்தல்.
மாணவன் 1 : வணக்கம். நம் தமிழ்மொழியானது காலத்திற்கேற்றார்போல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை . ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல இலக்கியங்கள் தோன்றிக் கொண்டே தான் உள்ளன. தமிழ் மொழியில் உள்ள இலக்கிய இலக்கண வளங்களால்தான் அழியா நிலை பெற்றுள்ளது எனலாம்.
மாணவன் 2 : அதுமட்டுமா? ஒலியாகத் திரிந்து சித்திரமாய் மாறி பல மொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப்பல எடுத்தும் காலம் பல கடந்து கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டும் ஓலைச்சுவடிகளில் வரையப்பட்டும் தற்போது காகிதங்களில் மிளிர்ந்து கொண்டும் உள்ளது நம்தாய் மொழியாம் தமிழ். இது காலச்சூழல் மாற்றங்களுக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் சிறப்பு பெற்றது.
மாணவன் 1 : பிறமொழிகள் தங்கள் தொன்மை மாறாமலும் அவை இருந்த இடத்திலிருந்து இறங்கி வராமலும் காலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளாமலும் இருந்ததால் வழக்கொழிந்துவிட்டன. ஆனால் நம் தமிழானது கற்றவர் கல்லாதவர் என அனைவருடைய நாவிலும் நடனமாடுகிறது. இதனால் அழியாப் புகழுடன் விளங்குகிறது. கன்னித்தமிழாய் இருப்பதோடல்லாமல் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் விளங்குகிறது.
மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். தமிழ் மேடைத் தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்று வெவ்வேறு உருவத்தில் தன்னை வளைத்துக் கொடுக்கும் தன்மையால்தான் இன்றும் வளர்ந்து கொண்டே வருகிறது.
மாணவன் 1 : இன்றைய நடைமுறைக்கு ஏற்ப ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்மொழியானது தனியாக வளர்க்கப்படவில்லை. பக்தி இலக்கியக் காலத்தில் பக்திப் பாடல்கள், சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசப்பக்திப் பாடல்கள் என மக்கள் மனதில் வளர்ந்து செழுமை பெற்றுள்ளது.
மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். இவ்வாறு வளரும் தமிழ்மொழியானது இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து செல்லும் வகையில் புதிய கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டு தமிழ்மொழி தன்னை நாள்தோறும் புதுப்பித்துக் கொண்டே வருகிறது. தமிழ் இணையம், முகநூல், புலனம், குரல் தேடல், தேடுபொறி, செயலி, தொடுதிரை முதலிய சொற்களை உருவாக்குகிறது.
மாண்வன் 1 : அதுமட்டுமா? சமூக ஊடங்களிலும் பயன்படத்தக்க திறன் கொண்ட புது மொழியாகவும் தமிழ் திகழ்ந்து வருகிறது எனலாம். தமிழ் மூத்த மொழியாக மட்டுமின்றி இனிமை, எளிமை, சீர்மை, வளமை, இளமை மிக்க வளர்மொழியாகவும் நாளும் சிறந்து விளங்கும் புதுமொழியாகவும் திகழ்கிறது. தற்போது தமிழ்மொழி அறிவியல் தமிழ், கணினித் தமிழ், மாற்றங்களுக்கு ஏற்றவாறு மேலும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப சரியான சொற்கள் தமிழில் புகுந்து தொடர்ந்து இன்றும் இயங்கி வருகின்றது.

Q.2தமிழ் பேசத்தெரியாத குடும்பத்தினர் உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளனர் அவர்களுக்கு நீங்கள் கற்றுத் தர விரும்பும் பத்துத் தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.v
Answer:

மாணவர்கள் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்களைக் கற்றுத் தருதல்.
தமிழ்சொற்கள் :
1. வணக்கம்
2. வாருங்கள்
3. அமருங்கள்
4. சாப்பிடுங்கள்
5. எப்படி இருக்கிறீர்கள்?
6. உங்கள் பெயர் என்ன?
7. தண்ணீ ர்
8. நன்றி
9. பொறுத்துக்கொள்ளுங்கள்
10. வாழ்க வளர்க

Q.1இக்கடிதத்திற்கு நீங்கள் விரும்பும் வகையில் வேறொரு தலைப்பிடுக.v
Answer:

இக்கதைக்கு நான் விரும்பும் தலைப்பு “எண்ணம் ஈடேறியது.”

Q.2உங்கள் எதிர்காலக் கனவு குறித்து ஒரு கடிதம் எழுதுக.v
Answer:

மாணவர்களை தமிழில் ‘உங்கள் எதிர்கால கனவு’ குறித்து ஒரு கடிதம் எழுதச் செய்தல்.
இடம் : செஞ்சி,
நாள் : 05-06-2019.
அன்புள்ள அத்தை,
நான் இங்கு நலமாக இருக்கிறேன். நீங்கள் அங்கு நலமாக உள்ளீர்களா? உங்களின் அறிவுரையின் படியும் வழிகாட்டுதலின்படியும் நான் இன்று அறிவியல் துறையில் சிறந்து விளங்குகின்றேன்.
என் எதிர்காலக் கனவு நனவாவதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன். என் உயர்வும் உழைப்பும் நாட்டை உயர்த்துவதாக இருக்கும். என் இலட்சியப் பாதை மிகவும் சிறப்பானதாக அமையும். பத்துப் பேரோடு பதினொன்றாவது நபராக நான் இருக்கமாட்டேன். என் கடமையை உயிரென மேற்கொண்டு சாதனை புரிவேன்.
என்னுடைய அறிவியல் ஆய்வு மற்ற வல்லரசு நாடுகளுடன் போட்டியிடுவதாக இருக்காது. நம் நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் விவசாயத்திற்கு உதவும் வகையில் இருக்கும் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள், அக்கிராமங்களின் முதுகெலும்பு இளைஞர்கள், அவர்களுள் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களைக் கூட்டி விழிப்புணர்வூட்டி வேளாண்துறை மேம்படச் செய்வேன்.
மழைநீரைச் சேமிக்கவும், புதிய விவசாய உத்திகளைப் பயன்படுத்தி குறைந்த நாட்களில் மகத்தான விளைச்சலை உருவாக்குவேன். வேளாண் பணிக்கான புதிய எந்திரங்களைக் கண்டறிவேன். அவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்படையாதபடிப் பார்த்துக் கொள்வேன்.நம்நாடுவறுமை, பஞ்சம், பிணிபோக்கி செழுமை, வளமை, பொருளாதார முன்னேற்றம் .. தொழில்வளம் கொழிக்க அறிவியலின் வழி நின்று பாடுபடுவேன். மேலும் வேறென்ன 6 செய்யலாம் என்பதை நீங்கள் அவ்வப்போது கூறுங்கள்.
இப்படிக்கு
தங்கள் அன்புக்குரிய,
ச. விஷ்ணு
உறைமேல் முகவரி :
திரு. அ. கதிர் அவர்கள்,
எண். 7, பிள்ளையார் கோயில் தெரு.
பரனூர், சென்னை – 600 060.

Q.1உங்கள் பெயர் மற்றும் உங்கள் நண்பர்களது பெயர்களுக்கான மாத்திரை அளவை கண்டுபிடி.v
Answer:

எ. கா. கபிலர் – 1 + 1 + 1 + 1/2 = 3 1/2
மாணவர்களைத் தமிழ் எழுத்துகளின் மாத்திரை அளவை அறிந்து கொள்ளச் செய்தல்.

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.20 questions
Q.1ஏற்றத் தாழ்வற்ற …………….. அமைய வேண்டும். அ) சமூகம் ஆ) நாடு இ) வீடு ஈ) தெருv
Answer:

(விடை: அ) சமூகம்)

Q.2நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ………….. ஆக இருக்கும். அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதிv
Answer:

(விடை : ஈ) அசதி)

Q.3நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………… அ) நிலயென்று ஆ) நிலவென்று இ) நிலவன்று ஈ) நிலவுஎன்றுv
Answer:

(விடை: ஆ) நிலவென்று)

Q.4தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……. அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள் இ) தமிழுங்கள் ஈ) தமிழ் எங்கள்v
Answer:

[விடை: ஆ) தமிழெங்கள்)

Q.5‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………… அ) அமுது + தென்று ஆ) அமுது + என்று இ) அமுது + ஒன்று ஈ) அமு + தென்றுv
Answer:

(விடை: ஆ) அமுது + என்ற)

Q.6‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………. அ) செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை + பயிர் ஈ) செம்பு + பயிர்v
Answer:

(விடை: அ) செம்மை + பயிர்)
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக
அ) விளைவுக்கு – பால்
ஆ) அறிவுக்கு – வேல்
இ) இளமைக்கு – நீர்
ஈ) புலவர்க்கு – தோள்
விடை:
அ) விளைவுக்கு – நீர்
ஆ) வாழ்வுக்கு – ஊர்
இ) இளமைக்கு – பால்
ஈ) புலவர்க்கு – வேல்
ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக
(எ.கா.) பேர் –நேர்
விடை :
பேர் – நேர் அமுதென்று – நிலவென்று
பேர் – நீர் உயிருக்கு – விளைவுக்கு
பேர் – ஊர் இளமைக்கு – புலவர்க்கு
பால் – வேல் தமிழுக்கு – வாழ்வுக்கு
வான் – தேன் உயர்வுக்கு – அசதிக்கு
தோள்- வாள் அறிவுக்கு – கவிதைக்கு

Q.1தாய் மொழியில் படித்தால் …………. அடையலாம். அ) பன்மை ஆ) மேன்மை இ) பொறுமை ஈ) சிறுமைv
Answer:

(விடை: ஆ) மேன்மை)

Q.2தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் …………… சுருங்கிவிட்டது. அ) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்றுv
Answer:

(விடை: இ) வானம்)

Q.3‘செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………. அ) செந் + தமிழ் ஆ) செம் + தமிழ் இ) சென்மை + தமிழ் ஈ) செம்மை + தமிழ்v
Answer:

(விடை: ஈ) செம்மை + தமிழ்)

Q.4பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………….. அ) பொய் + அகற்றும் ஆ) பொய் + கற்றும் இ) பொய்ய + கற்றும் ஈ) பொய் + யகற்றும்v
Answer:

(விடை: அ) பொய் + அகற்றும்)

Q.5பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………… அ) பாட்டிருக்கும் ஆ) பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ) பாடியிருக்கும்v
Answer:

(விடை: அ) பாட்டிருக்கும்)

Q.6எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………… அ) எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ) எட்டுதிசை ஈ) எட்டிஇசைv
Answer:

(விடை: அ) எட்டுத்திசை)
நயம் உணர்ந்து எழுதுக

Q.1பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்துv
Answer:

சீர்மோனை :
கொ ட்டுங்கடி – கோ தையரே
எ ட்டுத்திசை – எ ட்டிடவே
ஊ ழி – ஊ ற்று
ஆ ழிப் – அ ழியாமல்
பொ ய் – பூ ண்டவரின்
மெ ய்புகட்டும் – மே தினி

Q.2பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.v
Answer:

அடிஎதுகை :
கொ ட் டுங்கடி – எ ட் டு
ஊ ழி – ஆ ழி
பொ ய் – மெ ய்
சீர் எதுகை :
எ ட் டுங்கடி – எ ட் டிடவே
ஆழி – அ ழி யாமலே

Q.3பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.v
Answer:

இயைபு :
கொட் டுங்கடி – கொட் டுங்கடி ,
கொண்ட துவாம் – நின்ற துவாம் ,
பாட்டி ருக்கும் – காட்டி ருக்கும் .

Q.1‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ……………….. அ) புதுமை ஆ) பழமை இ) பெருமை ஈ) சீர்மைv
Answer:

(விடை: ஆ) பழமை)

Q.3‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………. அ) சீர் + இளமை ஆ) சீர்மை + இளமை இ) சீரி + இளமை ஈ) சீற் + இளமைv
Answer:

(விடை: ஆ) சீர்மை + இளமை) .

Q.4சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……. அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம் இ) சிலம்புதிகாரம் ஈ) சில பதிகாரம்v
Answer:

(விடை: ஆ) சிலப்பதிகாரம்)

Q.6“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்…………. அ) கண்ண தாசன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன்v
Answer:

(விடை: ஆ) பாரதியார்)

Q.7‘மா’ என்னும் சொல்லின் பொருள் ……….. அ) மாடம் ஆ) வானம் இ) விலங்கு ஈ) அம்மாv
Answer:

[விடை: இ) விலங்கு)
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது …………… [விடை : மொழி]
2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் …………… [விடை : தொல்காப்பியம்]
3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ………. அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். [விடை: எண்களின்]
சொற்களைத் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக
1. தனிச்சிறப்பு ………………………………..
விடை : திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது அதனின் தனிச்சிறப்பு ஆகும்.
2. நாள்தோறும் …………………………….
விடை : நாம் நாள்தோறும் நல்ல பழக்கவழக்கத்தைக் கடைபிடிப்பது நல்லது.

3குறுவினா5 questions
Q.1பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?v
Answer:

அமுதம், நிலவு, மணம்.

Q.2நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?v
Answer:

தேன், தங்கம், கரும்பு, சந்தனம், அமுதசுரபி, நவமணிகள் போன்றவற்றோடு தமிழை ஒப்பிடுவேன்.

Q.1தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?v
Answer:

தமிழ் மொழியின் செயல்கள் :
(i) பொய்மை அகற்றும், மனதில் உள்ள அறியாமை என்ற இருளை நீக்கும்.
(ii) அன்பு உடையவருக்கு இன்பம் தரும். பாடல்கள் நிறைந்த மொழி. உயிர் போன்ற உண்மையைக் கற்பித்து அறத்தின் உயர்வை உணர்த்தும். இவ்வுலக மக்கள்
வாழ்வதற்கு வழிகாட்டும்.

Q.2செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?v
Answer:

செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.

Q.2நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.v
Answer:

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, யசோதர காப்பியம், சூளாமணி, நாககுமார காவியம், உதயகுமார காவியம், நீலகேசி.

4சிறுவினா5 questions
Q.1இன்பத் தமிழ் – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.v
Answer:

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

Q.1கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன ?v
Answer:

(i) நம் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி, அறிவைப் பெருக்கும் விதமாகப் பல சிறந்த நூல்களைப் பெற்றுள்ள மொழி.
(ii) இப்புகழ் பெற்ற மொழி இயற்கை மாற்றங்களான கடல் சீற்றங்களினாலும் கால மாற்றங்களினாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும். இந்த உலகம் சிறந்து வாழ வழிகாட்டும் மொழி.

Q.2தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துகொண்டவற்றை உம் சொந்த நடையில் தருக.v
Answer:

(i) நம் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி, அறிவைப் பெருக்கும் விதமாகப் பல சிறந்த நூல்களைப் பெற்றுள்ள மொழி.
(ii) இப்புகழ் பெற்ற மொழி இயற்கை மாற்றங்களான கடல் சீற்றங்களினாலும் கால மாற்றங்களினாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும்.

Q.2தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.v
Answer:

தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம்:
(i) ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை ஆகியவை ஒருங்கே அமைந்த இலக்கியங்கள் பலவற்றைக் கொண்டது தமிழ்மொழி.
(ii) பன்மொழி கற்ற கவிஞராகிய பாரதியார், தமிழ் மொழியின் இனிமையை
”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடுகிறார்.

Q.3தமிழ் மொழியின் சிறப்பைக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.v
Answer:

(i) உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை ஒரு சில மொழிகளே! தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.
(ii) தமிழ் இலக்கியங்கள் ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை.
(iii) தமிழ் மொழி பேசவும், படிக்கவும், எழுதவும் உகந்த மொழி. தமிழ் எழுத்துகளின் ஒலிப்பு முறை மிக எளிமையானது. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
(iv) இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைக் கொண்ட மொழியாகும். தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ்மொழியின் சிறப்பாகும்.

5சிந்தனை வினா4 questions
Q.1வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது?v
Answer:

(i) வேல் கூர்மையான ஆயுதம் அதைப்போல தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள் கூர்மையான கருத்துகளைக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்துகிறது.
(ii) ஆகவே தமிழ், வேலுடன் ஒப்பிடப்படுகிறது. அதேபோல் கத்தியின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது என்ற பழமொழியும் இதனையே விளக்கும்.

Q.1தமிழ்மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?v
Answer:

பொய்மை அகற்றி மனதில் உள்ள அறியாமையை அகற்றும் அன்புடைய பலரின் இன்பம் நிறைந்த மொழி, உயிர்போன்ற உண்மையை ஊட்டி உயர்ந்த அறத்தைத் தந்து, இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழியாக தமிழ்மொழி விளங்குகிறது.

Q.1தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?v
Answer:

தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியமொழி :
(i) தமிழ் எழுத்துகள் வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், குவித்தல் ஆகிய மூன்று எளிய இயக்கங்களால் உயிர் ஒலிகள் பன்னிரண்டையும் எளிமையாக ஒலிக்க . இயலும்.
(ii) நாக்கு, உதடு, பல், அண்ண ம் ஆகிய பேச்சுறுப்புகளின் உதவியால் காற்றை அடைத்தும் வெளியேற்றியும் மெய்யொலிகளை ஒலிக்க இயலும்.
(iii) உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் ஒலிகள். உயிர், மெய் ஆகியவற்றின் அடிப்படை ஒலிப்பு முறைகளை அறிந்தால் 216 உயிர்மெய் எழுத்துகளையும் எளிதாகக் கற்கலாம். எழுத்துகளைக் கூட்டி ஒலித்தால் தமிழ் படித்தல் இயல்பாக நிகழும்.
(iv) தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிமையானது இடப்புறமிருந்து வலப்புறமாகச் சுழித்து எழுதுவது குழந்தைகளின் இயல்பு. இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன. இதன் மூலம் தமிழ்மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பதை அறியலாம்.

Q.2தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.v
Answer:

தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய வடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள் போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள், கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.
தற்போது அறிவியல் தமிழ், கணினித் தமிழ் என்று மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. எனவே தமிழ்மொழி வளர்மொழி என்பதை உணர்கிறேன்.

6மதிப்பீடு10 questions
Q.1இன்சுவையின் எண்ணம் நிறைவேறக் காரணங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?v
Answer:

(i) இன்சுவை, தான் எடுத்த செயலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். அவளுடைய அத்தை கூறிய அறிவுரைகளைச் சிரமேற்கொண்டு
பின்பற்றினாள்.
(ii) நூலகம் சென்று பல நூல்களைப் படித்து சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொண்டாள். தன்னுடைய வாழ்வில் அதனை மேற்கொண்டாள்.
(iii) விடாமுயற்சியும், உழைப்பும் மனிதனை உயர்த்தும் என்பதற்கு இன்சுவை சான்றாகத் திகழ்ந்தாள்.

Q.3கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கடிதத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதனை விளக்குக.v
Answer:

கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கதைக்குப் பொருந்தும் விதம் :
(i) எண்ணங்கள் நேரானால் செயல்களும் நேராகும். வெற்றியும் நம் கைவசமாகும். இக்கதையில் வரும் இன்சுவை சிறுவயதிலேயே அறிவியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதைத் தன் விருப்பமாகக் கொண்டுள்ளாள்.
(ii) அவள் தமிழ்வழியில் படிப்பதால் தன் இலக்கை அடைய முடியுமா என அச்சமுற்றாள். இன்சுவையின் அத்தை பல சாதனையாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மேலும் பண்டைத் தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.
(iii) நூலகம் சென்று சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்வது இன்சுவையின் சிந்தனைக்கு வளம் சேர்க்கும், அறிவியல் மனப்பான்மை பெருகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
(iv) இதனைச் சிரமேற்கொண்டு இன்சுவை, ஊக்கத்துடனும் விடாமுயற்சியுடனும் படித்து சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் ஆராய்ச்சியாளர் பணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள்.
(v) இன்சுவையின் கடும் உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் ஆர்வத்துடனும் படித்தனால் தன் இலக்கை அடைந்தாள். அவளுடைய கனவும் பலித்தது.

Q.1கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக.v
Answer:

1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் ………….
(விடை: அது]
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் …………………..
[விடை : தீ]
3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் ……..
[விடை: அஃது]
மொழியை ஆள்வோம்
கேட்டும் பார்த்தும் உணர்க :

Q.1இனிய தமிழ் பாடல்களைக் கேட்டு மகிழ்க.v
Answer:

கீழ்க்காணும் பாடலைக் குரலேற்ற இறக்கத்துடன் இனிமையாகப் பாடச் சொல்லி கேட்டு மகிழ்தல்.
மனதில் உறுதி வேண்டும்.
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்.
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்.
கைவசமாவது விரைவில் வேண்டும்.
தனமும் இன்பமும் வேண்டும்.
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்.
காரியத்தில் உறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்.
மண் பயனுற வேண்டும்.
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

Q.2தமிழறிஞர்களின் வானொலி, தொலைக்காட்சி உரைகளைக் கேட்டு மகிழ்க.v
Answer:

தமிழறிஞர்களின் வானொலி, தொலைக்காட்சியில் ஆற்றிய உரைகளைக் கேட்டு மகிழ்தல். மாணவர்கள் இச்செயல்பாட்டினைத் தாங்களே செய்து பார்க்க வேண்டும்.

Q.3கீழ்க்காணும் தலைப்புகளில் ஒரு நிமிடம் பேசுக 1. தமிழ் இனிது 2. தமிழ் எளிது 3. தமிழ் புதிதுv
Answer:

1. தமிழ் இனிது :
அனைவருக்கும் வணக்கம்! நம் தாய்மொழியாம் தமிழின் இனிமை, எளிமை, புதுமை பற்றிப் பார்ப்போமா! நம் தாய்மொழியாம் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பெயரிட்டபோதே அதன் சிறப்புகளை அனைவரும் அறிவர். இது தனித்து இயங்கும் மொழி, செம்மையான மொழி எனச் சிறப்பிக்கலாம்.
தமிழ் என்றால் அழகு, தமிழ் என்றால் இனிமை. அதனால்தான் இதனைத் தேன்தமிழ், தீந்தமிழ் முதலான சொற்களால் அழைக்கின்றனர். தமிழ் என்ற சொல்லைத் தம்-இழ் எனப் பிரித்தோமேயானால் தம்மிடத்தில் ‘ழ்’ ழைக் கொண்ட மொழி எனப் பொருள் கொள்ளலாம். தமிழில் மூன்று இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும்.
“தேனொக்கும் தமிழே! நீ கனி, நான்கிளி
வேறென்ன வேண்டும் இனி?”
“செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!”
இப்பாடல் வரிகள் தமிழின் இனிமையைப் பறைசாற்றும்2. தமிழ் எளிது :
தமிழ் இனிய தமிழ் என்பதோடு எளிய தமிழ் எனவும் கூறப்படுகிறது. தமிழ் மொழியானது பேசவும் படிக்கவும் மிகவும் எளிதானது. இந்தச் சிறப்பு உலகில் எந்த மொழிக்கும் இல்லாதது. தமிழ் மொழியானது எழுதுவதற்கும் படிப்பதற்கும் எளிமையான மொழி. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் ஒலிகள். உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் போதும்.
எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழும். தமிழ்மொழியை எழுதும் முறையும் எளிதானது. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன. தமிழ் எழுத்துகள் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு இவற்றின் முயற்சியால் மட்டுமே ஒலிப்பதாக இருக்கும். தமிழ் மிகவும் மென்மையாக ஒலிக்கக்கூடிய மெல்லோசை மொழியாகவே உள்ளதால் எழுதவும் பேசவும் படிக்கவும் எளிமையானதாக உள்ளது.
3. தமிழ் புதிது :
தமிழ் மொழி என்றென்றும் புதிதாக உள்ளது. அதற்குக் காரணம் இன்று வளர்ந்து வரும் அறிவியல், கணினி ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய கலைச் சொற்கள் உருவாகிக் கொண்டே உள்ளன. அறிவியல் தமிழ், கணினித் தமிழ் என்று சொல்லும் அளவிற்கு அவற்றின் கலைச் சொற்கள் பெருகியுள்ளன. சமூக ஊடகங்களான செய்தித்தாள், தொலைக்காட்சி ஆகியவற்றிலும் பயன்படத்தக்க மொழியாகவும் தமிழ்மொழி விளங்குகிறது. இதிலிருந்து தமிழ் இனிது, எளிது, புதிது என்பதை அறியலாம்.
சொல்லக் கேட்டு எழுதுக
ஆசிரியர் சொற்களைச் சொல்லக்கேட்டு மாணவர்கள் எழுதுதல்.
1. இன்பத்தமிழ்
2. சுப்புரத்தினம்
3. பாவேந்தர்
4. செந்தமிழ்
5. உயிரினங்கள்
6. தொல்காப்பியம்
7. பன்னிரண்டு
8. அஃறிணை
9. ஆராய்ச்சியாளர்
10. கருவூலங்கள்
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக )
விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல் ஆரோக்கியமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது. –
Questions.
1. பழமொழியின் சிறப்பு …………….. சொல்வது
அ) விரிவாகச்
ஆ) சுருங்கச்
இ) பழமையைச்
ஈ) பல மொழிகளில்
2. நோயற்ற வாழ்வைத் தருவது ………….
3. உடல் ஆரோக்கியமே ………………… அடிப்படை.
4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
Answers:
1. (விடை: ஆ) சுருங்கச்)
2. (விடை: சுத்தம்)
3. (விடை: உழைப்புக்கு)
4. (விடை: உணவு, உடை. உறைவிடம்)
5. (விடை: சுத்தம்)
பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக

Q.2பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னார்கள்.v
Answer:

பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.
ஆய்ந்தறிக

Q.1பெயரில் தலைப்பெழுத்தைப் பலவகையாக எழுதுகின்றோம். S. இனியன், எஸ். இனியன், ச. இனியன் -இவற்றுள் சரியானது எது? ஏன்?v
Answer:

ச. இனியன்.
பெயரும் பெயரின் தலைப்பெழுத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும்.
பெயரைத் தமிழிலும் பெயரின் தலைப்பெழுத்தை ஆங்கிலத்திலும் எழுதுவது தவறு.
கடிதம் எழுதுக
விடுப்பு விண்ணப்பம்
அனுப்புநர்
அ.பூங்கோதை
ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு,
அரசினர் உயர்நிலைப் பள்ளி
அண்ணாநகர், சென்னை -40.
பெறுநர்
வகுப்பாசிரியர் அவர்கள்
ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு,
அரசினர் உயர்நிலைப் பள்ளி
அண்ணாநகர், சென்னை -40.
மதிப்பிற்குரிய ஐயா/ அம்மா,
வணக்கம், எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாள்கள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். .
நன்றி!
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள மாணவி,
அ.பூங்கோதை
இடம் : முகப்பேர்
நாள் : 18.06.2018
பெற்றோர் கையொப்பம்
அருணாச்சலம்.
மொழியோடு விளையாடு
திரட்டுக :

Q.1கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.v
Answer:

(எ.கா.) கரும்பு – கரு, கம்பு
கவிதை – கவி, விதை, கதை, தை
பதிற்றுப்பத்து – பதி, பத்து, பற்று
பரிபாடல் – பரி, பாடல், பா, பால், பாரி

Q.1அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உவகை, அன்பு அ – _____ தருவது தமிழ் ஆ – _______ தருவது தமிழ் இ – _______ தருவது தமிழ் ஈ – ________இல்லாதது தமிழ் உ – ________ தருவது தமிழ் ஊ – ________ தருவது தமிழ் எ – __________வேண்டும் தமிழ் ஏ – _________ தருவது தமிழ்v
Answer:

அன்பு தருவது தமிழ்
ஆற்றல் தருவது தமிழ்
இன்பம் தருவது தமிழ்
ஈடு இல்லாதது தமிழ்
உவகை தருவது தமிழ்
ஊக்கம் தருவது தமிழ்
என்றும் வேண்டும் தமிழ்
ஏற்றம் தருவது தமிழ்
கட்டங்களில் மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்க