எங்கள் வீட்டில் வளர்க்கும் உயிரினங்கள் :
(i) எங்கள் வீடு வயல்கள் சூழ்ந்த கிராமத்தில் உள்ளது. என் வீட்டில் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை ஆகிய உயிரினங்கள் வளர்க்கப்படுகின்றன. நாங்கள் நாய், பூனை ஆகியவற்றைக் கட்டிப்போட மாட்டோம்.
(ii) அவற்றைச் சுதந்திரமாக விளையாட விடுவோம். நாய்க்கும் பூனைக்கும் ஆகாது என்று கூறுவார்கள். ஆனால் எங்கள் வீட்டில் இவையிரண்டும் சேர்ந்தே விளையாடும்.
(iii) அதேபோல் ஆடு, மாடுகளையும் எங்கள் வீட்டில் ஒருவராகத்தான் பார்த்துக் கொள்வோம். நேரத்திற்கு உணவளித்தல், தண்ணீர் கொடுத்தல், போன்றவற்றை
மனமுவந்து அன்போடு செய்வோம்.
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தை வகுப்பில் மாணவர்கள் தாங்களாகவே அதில் வரும் கதாபாத்திரங்களில் வேடமிட்டு நடித்துக் காட்ட வேண்டும்.
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தின் கதை வடிவம் :
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை, எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள், பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்கள் இடையே பொய்கைகள் என மனதை மயக்கும் காட்சிகள் கொண்ட மணிபல்லவத்தீவிற்குக் கொண்டுவந்து சேர்த்தது. அந்த மணிபல்லவத் தீவையும் அதிலுள்ள புத்தபீடிகையையும் காவல் செய்து வரும் தீவதிலகை மணிமேகலையைச் சந்திக்கிறாள். மேலும், அவள் மணிமேகலையிடம் ”பெருமை மிக்கவர்கள் மட்டுமே இத்தீவிற்கு வந்து இந்தப் புத்த பீடிகையை வணங்க முடியும். நீ அந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறாய். இன்னும் நீ அறிய வேண்டியது ஒன்று உண்டு என்று கூறினாள்.
மணிமேகலை “அஃது என்ன அம்மா?” என்று வினவினாள். இந்தத் தீவில் பூக்கள் நிறைந்து இருக்கும் பொய்கை ஒன்று உள்ளது. “இப்பொய்கை பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் கோமுகி என்று பெயர் பெற்றது. வைகாசித் திங்கள் முழுநிலவு நாளில் அப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும். அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம். அந்தப் பாத்திரம் தோன்றும் வைகாசி முழுநிலவு நாள் இன்றுதான்.” என்று தீவதிலகை மணிமேகலையிடம் கூறினாள்.
இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போதே பொய்கையின் நீருக்கு மேல் அப்பாத்திரம் தோன்றியது. மணிமேகலை அதனை வணங்கிக் கையில் எடுத்தாள். தீவதிலகை, மணிமேகலையிடம் “மணிமேகலையே! உயிர்களின் பசிபோக்கும் அமுதசுரபியை நீ பெற்றுள்ளாய். இனி இவ்வுலக உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கி உயர்வு பெறுவாயாக!” என்று கூறினாள்.
மணிமேகலை தீவதிலகையை வணங்கி அமுதசுரபியுடன் விடைபெற்று பூம்புகாருக்குத் திரும்பினாள். ஆதிரையிடம் உணவு பெறச் சென்றாள்.
ஆதிரையின் வீட்டு வாயிலில் அமுதசுரபியுடன் நின்றாள். ஆதிரை மணிமேகலையைப் பார்த்து “யார் நீங்கள்?” என்றாள். மணிமேகலை, “இவ்வூரில் வாழ்ந்த கோவலன், மாதவி ஆகியோரின் மகள் நான். உங்களின் சிறப்பை அறிந்து இப்பாத்திரத்தில் உணவு பெற வந்தேன்” என்று கூறினாள்.
ஆதிரை “ஓ! நீங்கள் தான் மணிமேகலையா? உங்கள் பெற்றோரைப் பற்றி அறிவேன். உங்களை இன்று தான் காண்கிறேன். இஃது என்ன பாத்திரம்? மிகவும் அழகாக இருக்கிறதே!” என்றாள். மணிமேகலை “இது அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கும் ‘அமுதசுரபி’” என்றும், தனக்கு இப்பாத்திரம் கிடைத்த வரலாற்றையும் கூறினாள்.
அமுதசுரபியின் சிறப்பை அறிந்த ஆதிரை “இதைக் கொண்டு என்னசெய்வீர்கள் என்று கேட்டாள். அதற்கு மணிமேகலை அன்பிற்குரிய ஆதிரையே, ஏழை மக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம். உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன். அதனால் இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் வழங்கப் போகின்றேன் என்று கூறினாள்.
அதனைக் கேட்ட ஆதிரை, “உங்கள் அறம் செழிக்கட்டும். மக்களின் பசிநோய் ஒழியட்டும். இதோ இப்போதே அமுதசுரபியில் நான் உணவை இடுகிறேன்” என்று கூறிவிட்டு உணவிட்டாள். மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர் ஆகியோருக்கு உணவு அளித்தாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிட்டாள்.மணிமேகலை உணவிட்டதும் அப்பாத்திரத்தில் இருந்த உணர்வு குறையவேயில்லை என்பதை மன்னரிடம் சிறைக்காவலர் தெரிவித்தனர். மன்னன் வியப்புடன் “அப்படியா? அப்பெண்ணை அழைத்து வா” என்று ஆணையிட்டார்.
மணிமேகலை மன்னரைச் சந்தித்தாள். அப்பாத்திரத்தைப் பற்றி மன்னர் வினவினார். மணிமேகலை அமுதசுரபி கிடைத்த வரலாற்றைக் கூறினாள். மன்னர், “மாதவம் செய்தவளே! இந்த உலக மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பாங்குடைய அறத்தைச் செய்கிறாய். நான் உனக்குச் செய்ய வேண்டிய உதவி ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்.
மணிமேகலை “சிறையில் உள்ளவர்கள் திருந்தி வாழ வழி காண வேண்டும். சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டுவன, எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா?” என்று கூறினாள். மன்னரும் உன் வேண்டுகோள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த ஆணையிடுகிறேன். நீ வாழ்க! உன் அறம் வளர்க! என்று கூறினார்.
மாணவன் 2 : மாரி ஏழ்மையில் வாழும் ஒரு தொழிலாளி. அவரிடம் செல்வம் இல்லையென்றாலும் நேர்மை இருந்தது. அதனால் அவர் அவ்வாறு நினைத்தார்.
மாணவன் 1 : அந்தக் காலணியை வைத்து அவர் பெரும் பணம் சம்பாதித்து உள்ளார். அதேபோல் சம்பாதித்துக் கொண்டு நிம்மதியாக இருந்திருக்கலாமே?
மாணவன் 2 : பிறர் பொருளைத் தான் வைத்திருக்கக்கூடாது என்று எண்ணி, அந்தக் காலணிக்கு உரியவர் சிறுமி எனவும், குழந்தையின் மனம் வருந்தும் எனக்கூட எண்ணியிருக்கலாம்.
மாணவன் 1 : அதுவும் சரிதான். சிறுமி வளர்ந்து விட்டால் அந்தக் காலணி அவளுக்குப் பொருந்தாது. பிறகு அது வீணாகவே இருக்கும் எண்ணி இருப்பார்.
மாணவன் 2 : மாரி மனசாட்சிக்குப் பயந்தும், பிறர் பொருளைத் தாம் வைத்திருக்கக்கூடாது என்றும் அந்தக் காலணியை வைத்துப் பெரும்பொருள் ஈட்டியதாலும் அவருடைய மனம் வருந்தியது. விசித்திரக் காலணியாய் இருந்ததால்தான் அவர் திரும்ப அச்சிறுமியிடம் ஒப்படைக்க எண்ணினார்.
இடுகுறிப் பெயர் :
(i) குளம்
(ii) ஆம்ப ல்
(iii) கொட்டி
(iv) நெய்தல்
(v) சூரியன்
காரணப் பெயர் :
(i) மரங்கொத்தி
(ii) செந்தாமரை
அ) தம்முயிர்
அ) இன்புற்றிருக்க
ஆ) தான் +என்று
இ) மகிழ்ச்சி
இ) மணிபல்லவத் தீவு
ஆ) ஆதிரை
சொற்றொடரில் அமைத்து எழுதுக
அ) செடிகொடிகள் – செடிகொடிகள் வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
ஆ) முழுநிலவு நாள் – முழுநிலவு நாள் பௌர்ணமி என்று அழைக்கப்படும்.
இ) அமுதசுரபி – அமுதசுரபி அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
ஈ) நல்ல றம் – இல்லறம் சிறக்க ஒவ்வொருவரும் நல்லறச் செயல்களைச் செய்ய
ஆ) மண்
ஆ) வளையல்
ஆ) வாழை
ஆ) ஈகை
இ) துன்பத்தை
ஈ) குற்றம்
இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்கள் :
எதுகை :
தம் உயிர்போல் – செம்மையருக்கு
அன்பர்பணி – இன்பநிலை
எல்லாரும் – அல்லாமல்
மோனை :
அன்பர்பணி – இன்பநிலை, தம்உயிர்போல் – தண்டருள்
எல்லாரும் – அல்லாமல், இன்புற்று – இருக்க
அல்லாமல் – அறியேன்
(i) அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
(ii) அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராகத் தன்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
(iii) எல்லாரும் இன்பமாக வாழவேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்கமாட்டேன்.
சிந்தனைவினா
மணிபல்லவத்தீவில் எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள் இருந்தன. பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்கள், இடையே பொய்கைகள் ஆகியன இருந்தன. மனதை மயக்கும் காட்சிகளைத் தந்தது.
பழத்தின் இயல்பு கொடுப்பது; வேரின் இயல்பு பெறுவது.
அமுதசுரபியில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனைப் பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது :
(i) சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும்.
(ii) சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை
(i) பொருட்பெயர்
(ii) இடப்பெயர்
(iii) காலப்பெயர்
(iv) சினைப்பெயர்
(v) குணப்பெயர்
(vi) தொழிற்பெயர்
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதி இட்டு வழங்கிய பெயர் காரணப்பெயர் ஆகும். (எ.கா.) நாற்காலி, கரும்பலகை.
இல்லாதவர்க்குத் தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை அகும்.
பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க
நிறைமதி அவளுடைய தோழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.
1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
2. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
கலைச்சொல் அறிவோம்
1. அறக்கட்டளை – Trust
2. தன்னார்வலர் – Volunteer
3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
4. சாரண சாரணியர் – Scouts & Guides
5. சமூக சேவகர் – Social Worker
நல்லவர் என்னும் பெயர் பெற நாம் செய்ய வேண்டுவன :
வீட்டில் :
(i) பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடத்தல்.
(ii) பெரியோரை மதித்தல்.
(iii) வீட்டில் உள்ள தாத்தா பாட்டியிடம் மரியாதையுடன் பேசுதல், அவர்கள் கூறுவதைக் கேட்டல், அவர்களுடன் அன்புடன் பழகுதல்.
(iv) வீட்டில் அப்பா அம்மாவிற்குச் சிறுசிறு வேலைகள் செய்தல்.
பள்ளியில் :
(i) ஆசிரியர்கள் கூறும் வீட்டுப் பாடங்களை முடித்து வருதல்.
(ii) வகுப்பில் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனித்தல்.
(iii) மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல். அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தல்.
(iv) சக மாணவர்களுடன் சண்டையிடாமல் அன்புடன் பழகுதல். பிறர் குறைகளைக் கூறாமல் நிறைகளை மட்டும் கூறுதல்.
பொது இடங்களில் :
(i) நாம் செல்கின்ற வழியில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் உதவி செய்தல் (சாலையைக் கடப்பது, அவர்கள் செல்கின்ற இடத்திற்கு வழி கூறுதல்…… போன்றவை)
(ii) விபத்து நேரிட்டால் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல் போன்றவற்றைச் செய்கின்றவர்கள் நல்லவர் என்ற பெயர் பெறுவார்கள்.
அறச்செயல்கள் :
(i) உயர்ந்த நற்குணங்களுடன் எல்லோரிடத்திலும் அன்புடன் பழகுதல்.
(ii) அனைத்து உயிர்களிடத்திலும் கருணையுடன் இருத்தல்.
(iii) நல்லவர்களிடம் கொள்ளும் நட்பு.
(iv) அறநூல்களில் கூறப்பட்ட ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
(v) எளியோருக்கு ஈதல்.
(vi) எளியோரையும் நல்ல முறையில் உபசரித்தல்.
(vii) ஐம்புலன்களையும் அடக்கி நல்வழியில் செலுத்துதல்.
(vii) ஏழைகளுக்குத் தகுந்த உதவி செய்தல், உணவளித்தல், உவகையுடன் தானமளித்தல்.
(ix) பணிவுடன் நடந்து கொள்ளுதல்.
(x) எந்நிலையிலும் உண்மையைப் போற்றுதல்.
(xi) பசித்தோர்க்கு உணவளித்தல்.
(xii) தீய வழியில் செல்லாமல் இருத்தல்.
மாரிக்குக் கிடைத்தது போன்ற காலணி எனக்குக் கிடைத்தால் மாரியைப் போலவே நானும் பலர் அணிவதற்கு அக்காலணியைக் கொடுத்திருப்பேன். அவரைப் போலவே பணம் வசூலித்திருப்பேன். ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவுவேன். கல்வி கற்க வசதியில்லாதவர்களுக்குப் பணம் கொடுத்து உதவுவேன். ஆதரவற்றவர்களுக்கு உதவி புரிவேன்.
இடுகுறிப்பெயர் – பெயர்க்காரணம் : நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்டு வழங்கியவை இடுகுறிப்பெயர்கள் ஆகும். இவ்வகைப் பெயர்களுக்குக் காரணம் அறிய இயலாது. இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.
(i) இடுகுறிப் பொதுப்பெயர் : காரணம் ஏதுமின்றி, பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கப்படுவதால் இடுகுறிப் பொதுப்பெயராயிற்று.
(எ.கா.) மரம், பழம்
(ii) இடுகுறிச் சிறப்புப்பெயர் : காரணம் ஏதுமின்றி, சிறப்புத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கப்படுவதால் இடுகுறிச் சிறப்புப் பெயராயிற்று.
(எ.கா.) தென்னை , வாழை
காரணப்பெயர் – பெயர்க்காரணம் : நம் முன்னோர்கள் காரணம் கருதி ஒரு பொருளுக்குப் பெயர் இட்டதனால் காரணப் பெயராயிற்று. இவை ஒரு காரணத்தின் அடிப்படையில் வழங்கிய பெயர்களாக இருக்கும். காரணப் பெயர் இரண்டு வகைப்படும். (எ.கா) நாற்காலி, கரும்பலகை.
(i) காரணப் பொதுப்பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பதால் காரணப் பொதுப்பெயர் என்று பெயர் பெறும். (எ.கா.) பறவை, அணி.
(ii) காரணச் சிறப்புப்பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பதால் காரணச் சிறப்புப் பெயர் என்று பெயர் பெறும். (எ.கா.) வளையல், மரங்கொத்தி.
மொழியை ஆள்வோம்
பேசுக
அவையோர்க்கு வணக்கம். நான் தொண்டு நிறுவனங்கள் பற்றிப் பேசவிருக்கிறேன்… இந்நிறுவனங்கள் சமூகத்தில் நிலவும் இன்னல்களைத் தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டவை ஆகும். மக்களுக்குப் பல வகைகளில் இவை உதவி புரிகின்றன.
முதலில் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் பற்றிக் கூறுகிறேன். இது இந்திய அரசினால் நிறுவப்பட்ட சேவையாகும். இச்சேவை பாலர் கல்வி மற்றும் முதன்மையான சுகாதார பராமரிப்பு போன்றவற்றை ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வழங்குகிறது. இச்சேவை அங்கன்வாடி மையங்கள் மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இச்சேவை 1975 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. நோய்த்தடுப்பு, கூடுதல் ஊட்டச்சத்து, சுகாதார சோதனை, பரிந்துரை சேவைகள், முன்பள்ளி அல்லாத முறையான கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தகவல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதுபோன்று தனியார் சேவை நிறுவனங்களும் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் தொடங்குவதற்கு உதவி செய்கின்றன. மூக்குக் கண்ணாடி வழங்குதல், பெண்களுக்கான சுயதொழில் உதவி, கல்விக்கான உதவி, நலிவுற்றோருக்கான தற்செயல் நிவாரணம் அளித்தல் போன்ற சேவைகளை வழங்குகின்றன. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் இலவச மருத்துவ முகாம், இலவச கண் பரிசோதனை இரத்ததான முகாம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி ஏழை எளியோருக்கு உதவுகின்றன.எங்கள் பகுதியில் உள்ள சமூக நிறுவனம் மரம் நடுவிழா, நிழற்குடை அமைப்பு, போன்றவற்றைச் செவ்வனே செய்து வருகின்றன. உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல நன்மை தரும் அறச்செயல்களைச் செய்து இந்நிறுவனங்கள் மக்களுக்கு உதவிகள் புரிகின்றன.
குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுக
குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுதல் :
முகிலன் ஒருமுறை வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது நாய்க்குட்டி ஒன்று கத்தும் சத்தம் கேட்டது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தான். சாலையோரத்தில் இருந்த குழிக்குள் நாய்க்குட்டி ஒன்று விழுந்து கிடந்தது. மேலே ஏறுவதற்கு இயலாததால் கத்திக் கொண்டிருந்தது. முகிலன் அப்பள்ளத்தில் இறங்கி அந்நாய்க்குட்டியைத் தூக்கினான்.
அதற்கு முதலுதவி செய்தான். அதற்குக் கொஞ்சம் பால் ஊற்றினான். அந்நாய்க்குட்டி பாலைக் குடித்துவிட்டு சோர்வில் தூங்கியது. கொஞ்ச நேரத்தில் கண் விழித்துப் பார்த்தது. முகிலனைப் பார்த்து வாலாட்டியது. இக்கதையின் மூலம் உயிர்களிடத்தும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதை உணரலாம்.
அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக
1. கருணை
2. அச்சம்
3. ஆசை
அகராதி :
1. கருணை – இரக்கம்
2. அச்சம் – பயம்
3. ஆசை – விருப்பம்
கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக
அகரவரிசை :
1. ஆசிரியர்
2. ஓணான்
3. கிளி
4. தேனி
5. தையல்
6. பழம்
7. பூனை
8. மனிதன்
9. மாணவன்
10. மான்
11. வௌவால்.
பின்வரும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களை எடுத்து எழுதுக
(i) கைகள் – சினைப்பெயர்
(ii) சான்றோர் – பொருட்பெயர்
அடைதல் – தொழிற்பெயர்.
நீதிநூல் – பொருட்பெயர்
மேலோர் – பொருட்பெயர்.
பின்வரும் பாடலைப் படித்து, அடிக்கோடிட்ட சொல் எவ்வகைப் பெயர் என்பதை எழுதுக
1. விடியலில் துயில் எழுந்தேன். – விடியல் – காலப்பெயர்
2. இறைவனைக் கை தொழுதேன். – கை – சினைப்பெயர்
3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன் – மதுரை – இடப்பெயர்
4. புத்தகம் வாங்கி வந்தேன். – புத்தகம் – பொருட்பெயர்
5. கற்றலைத் தொடர்வோம் இனி. – கற்றல் – தொழிற்பெயர்
6. நன்மைகள் பெருகும் நனி. – நன்மைகள் – பண்புப்பெயர்
மொழியோடு விளையாடு
கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க.1. தீதும் நன்றும் பிறர்தர வாரா.
2. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
3. வாய்மையே வெல்லும்.
சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்
1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
4. அமுதசுரபியைப் பெற்றாள்.
5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
2. அமுதசுரபியைப் பெற்றாள்.
3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக
1. அரம் – அறம்
அரம் – கூர்மையான கருவி – இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவதற்கு அரம் பயன்படும்.
அறம் – தர்மம் – பழந்தமிழர்கள் அறச்செயல்களில் சிறந்து விளங்கினர்.
2. மனம் – மணம்
மனம் – உள்ளம் – பிறருக்கு உதவி செய்வதற்கு மனம் வேண்டும்.
மணம் – வாசனை – மல்லிகை மணம் மிக்க மலர்.
இருபொருள் தருக
(எ.கா) ஆறு
ஆறு – நதி
ஆறு – எண்
1. திங்கள்
திங்கள் – கிழமை, மாதம், நிலவு
2. ஓடு
ஓடு – ஓடுதல், வீட்டின் கூரையாகப் பயன்படுவது3. நகை
நகை – அணிகலன், புன்னகை
புதிர்ச் சொல் கண்டுபிடி
அறம்.
கட்டத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக மாலையில்1. மாலையில் விளையாடுவோம்.
2. பிறருக்கு உதவி புரிவோம்.
3. பெரியோரை வணங்குவோம்.
4. நூல்பல கற்போம்.
5. உடற்பயிற்சி செய்வோம்.
6. அதிகாலையில் எழுவோம்.
செயல் திட்டம்
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்
1. உணவை வீணாக்க மாட்டேன்.
2. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
3. பயணம் செய்யும் போது தேவைப்படுவோருக்கு எழுந்து இடம் தருவேன்.
4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவேன்.