Class 6 Tamil · Chapter 7

Samacheer Class 6 Tamil - இயல் 7

31 textbook Q&A31 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 7 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 5சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 7நயம் அறிக 1குறுவினா 5சிறுவினா 3சிந்தனை வினா 9மதிப்பீடு 1
Your Progress - Chapter 70% complete
1கற்பவை கற்றபின்5 questions
Q.1பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை இசையோடு பாடுக.v
Answer:

பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை மாணவர்கள் தாங்களாகவே இசையோடு பாடி மகிழ்ந்திடுங்கள்.

Q.1காந்தியடிகளின் பொன்மொழிகளைத் திரட்டுக.v
Answer:

காந்தியடிகளின் பொன்மொழிகள் :
(i) எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உய்த்திருக்கிறது.
(ii) நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; நீ செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.
(iii) அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை.
(iv) எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை.
(v) பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு.
(vi) பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம்.
(vii) குணநலனும், புனிதத்தன்மையுமே பெண்ணின் உண்மையான ஆபரணம்.
(viii) சாதுவான வழியில், உன்னால் உலகத்தையும் அசைக்க முடியும்.
(ix) உடலின் வீரத்தைவிட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது.
(x) எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை.
(xi) தோல்வி மனச்சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது.

Q.2காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் பெயர்களைத் தொகுக்க.v
Answer:

காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்கள் :
(i) கத்தியின்றி இரத்தமின்றி கண்டனப் போராட்டம்
(ii) வரிகொடா இயக்கம்
(iii) ஒத்துழையாமை இயக்கம்
(iv) உண்ணாவிரதம்
(v) உப்பு சத்தியாகிரகம்
(vi) சட்டமறுப்பு இயக்கம்
(vii) தனியாள் அறப்போராட்டம்
(viii) வெள்ளையனே வெளியேறு.

Q.1பின்வரும் தொடர்களில் உள்ள நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக. 1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர். 2. நாள்தோறும் திருக்குறளைப் படி. 3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர். 4. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக. மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.v
Answer:

1. வளவன், பேருந்து – பெயர்ச்சொல்
2. திருக்குறள் – பெயர்ச்சொல்
3. படி – வினைச்சொல்
4. மாநகர், சாலச்சிறந்தது – உரிச்சொல்
5. தீண்டல், இன்பம் – இடைச்சொல்

Q.2செய்தித்தாளில் விளையாட்டுச் செய்தி ஒன்றைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள நால்வகைச் சொற்களை எழுதுக.v
Answer:

இந்தியா-இலங்கை இடையிலான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் யுவராஜ்சிங்கிற்கு 3 முன்பாக இறங்கி 91 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்த தோனியின் செயல் சாலச் சிறந்த ஆட்டம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
விடை:
1. இந்தியா, இலங்கை, யுவராஜ் சிங், தோனி – பெயர்ச்சொல்
2. அடித்தது, செயல் – வினைச்சொல்
3. இடையிலான – இடைச்சொல்
4. சாலச் சிறந்த – உரிச்சொல்

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.7 questions
Q.1தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் அ) திருவாசகம் ஆ) திருக்குறள் இ) திரிகடுகம் ஈ) திருப்பாவைv
Answer:

ஆ) திருக்குறள்

Q.2காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் அ) காவிரிக்கரை ஆ) வைகைக்கரை இ) கங்கைக்கரை ஈ) யமுனைக்கரைv
Answer:

அ) காவிரிக்கரை

Q.3கலைக்கூடமாகக் காட்சி தருவது அ) சிற்பக்கூடம் ஆ) ஓவியக்கூடம் இ) பள்ளிக்கூடம் ஈ) சிறைக்கூடம்v
Answer:

அ) சிற்பக்கூடம்

Q.4நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) நூல் + ஆடை ஆ) நூலா + டை இ) நூல் + லாடை ஈ) நூலா + ஆடv
Answer:

அ) நூல் + ஆடை

Q.5எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) எதிரலிக்க ஆ) எதிர்ஒலிக்க இ) எதிரொலிக்க ஈ) எதிர்ரொலிக்கv
Answer:

இ) எதிரொலிக்க

Q.1காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் அ) கோவை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ) சிதம்பரம்v
Answer:

ஆ) மதுரை

Q.2காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்? அ) நாமக்கல் கவிஞர் ஆ) திரு.வி.க இ) உ.வே.சா. ஈ) பாரதியார்v
Answer:

இ) உ.வே.சா
பொருத்துக
1. இலக்கிய மாநாடு – பாரதியார்
2. தமிழ்நாட்டுக் கவிஞர் – சென்னை
3. குற்றாலம் – ஜி.யு.போப்
4. தமிழ்க் கையேடு – அருவி
1. இலக்கிய மாநாடு – சென்னை
2. தமிழ்நாட்டுக் கவிஞர் – பாரதியார்
3. குற்றாலம் – அருவி
4. தமிழ்க் கையேடு – ஜி.யு.போப்
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. ஆலோசனை – நாம் எச்செயலைச் செய்தாலும் பெரியவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு செய்ய வேண்டும்.
2. பாதுகாக்க – நம் நாட்டைப் பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
3. மாற்றம் – பருவமழை பொய்த்ததால் பூமியின் தட்பவெப்பநிலை மாற்றம் அடைகிறது.
4. ஆடம்பரம் – நாம் ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்த்து எளிமையாக வாழவேண்டும்.

3நயம் அறிக1 questions
Q.1பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.v
Answer:

எதுகை :
மெ ய் களை – மெ ய் யுணர்வு
அ ன் னை – அ ன் னிய
மோனை :
பு துமை – பூ மி
தெ ய்வ – தே சம்
மெ ய்களை – மெ ய்யுணர்வு
கா ளி – கா விரி
க ம்பனின் – க ங்கை
க ன்னி – கா ஷ்மீர்
பு ல்வெளி – பு ன்னகை
க ல்லை – க ட்டி
அ ன்னை – அ ன்னிய – அ ண்ணல் – அ றத்தின்

4குறுவினா5 questions
Q.1தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.v
Answer:

தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்கள் :
(i) திருவள்ளுவர்
(ii) காளிதாசர்
(iii) கம்ப ர்.

Q.2இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.v
Answer:

இந்தியாவின் மேற்குத் திசையில் தோன்றுகின்ற நதிகள் அனைத்தும் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.

Q.1காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை ?v
Answer:

காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் நுழையாததற்குக் காரணம் :
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி இல்லை என்பதால் காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்லவில்லை.

Q.2காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.v
Answer:

1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும்
ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்.

Q.3பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம்?v
Answer:

பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொற்களை இடைச்சொல் என்கிறோம்.
எ.கா. தம்பிக்கு – கு
திருக்குறளை – ஐ

5சிறுவினா3 questions
Q.1நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.v
Answer:

நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை :
(i) இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் மன்னர்கள் என்றும் நாட்டைத் தாங்கும் தூண்கள் என்றும் கூறிக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? போதாது. அதனை மெய்ப்படுத்த மாணவ சமுதாயம் முன்வர வேண்டும்.
(ii) ஆம் இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான் உள்ளது. மாண்+ அவன் = மாணவன். மாண் என்றால் பெருமை. அதனால்தான் மாண்+அவர்கள் என்று இந்தப் பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மாணவர்களின் ஊக்கத்தில் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது.
(iii) மண்ணைக் குழைத்தால்தான் நாம் விரும்பிய வண்ணம் மட்பாண்டங்கள் செய்யவியலும். கல்லை உளியால் செதுக்கினால்தான் அழகான சிலை உருவாகும். அவற்றை போல மாணவர்ளைச் செம்மைப்படுத்தினால்தான் நம் நாடு வளரும்.(iv) பூகோளப் பாடத்தில் இந்திய வரைபடம் வரையும் போது எந்த மாநிலங்களில் எந்தெந்த நதிகள் பாய்கின்றன? அவற்றிலிருந்து பிரியும் கிளை நதிகள் யாவை? அவற்றால் பயனடையும் நிலப்பரப்பு அளவு யாது? நம் நாட்டில் விளையும் பயிர்கள் யாவை? போன்ற விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். மாணவப் பருவத்தில் இவற்றையெல்லாம் அறிந்தால்தான் எதிர்காலத்தில் நாட்டைப் பற்றிய விழிப்புணர்வு அவனிடத்தில் தோன்றும்.
(v) ஒவ்வொரு மாணவனும், படித்த இளைஞனும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் முதலில் தன்னுடைய குடும்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதற்குப் பாடுபட வேண்டும். நாட்டை நல்வழிப்படுத்தவும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தவும் மாணவர்களின் மகத்தான பொறுப்பே முதலிடத்தில் உள்ளது.
(vi) படித்துவிட்டோம், வேலைக்குப் போகிறோம், வருவாயைப் பெற்றோரிடம் கொடுத்தோம் என்று இல்லாமல் பெற்றோருக்கு உதவுதல், வீட்டு வேலைகளைச் செய்தல், கிராமப்புற இளைஞர்கள் காலை, மாலை வேளைகளில் வயலுக்குச் சென்று தந்தைக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்யலாம். ஒவ்வொரு மாணவனும் இதைக் கடைப்பிடித்தால் நாடு கண்டிப்பாக முன்னேறும்.
(vii) மனிதநேயம் வளர மாணவர்கள் பாடுபடுதல் அவசியம். சமூகத் தொண்டுகளில் பெயருக்காகவும், புகழுக்காகவும் இல்லாமல் ஆர்வத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் செயல்பட வேண்டும். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

Q.1காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.v
Answer:

காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வு :
(i) காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார்.
(ii) செல்லும் வழியில், வயலில் வேலை செய்யும் உழவர்களைக் கண்டார். அவர்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருந்தனர்.
(iii) அப்போது, காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
(iv) பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார்.
(v) அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார். அந்த எளிமைத் திருக்கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார்.

Q.2காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.v
Answer:

(i) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
(ii) ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
(iii) திருக்குறள் அவரைக் கவர்ந்த நூல்.
(iv) 1937 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார்.
(v) உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்து, “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார். இந்நிகழ்வுகளே காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன.

6சிந்தனை வினா9 questions
Q.1காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?v
Answer:

காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகள் :
(i) உண்மை பேசுதல்
(ii) நேர்மை
(iii) இன்னா செய்யாமை
(iv) பிறர் துன்பம் தீர்க்கும் திறம்
(v) அகிம்சை வழிப் போராட்டம்
(vi) ஆடம்பரத்தை எதிர்த்து எளிமையைப் போற்றியமை
(vii) தீண்டாமையை எதிர்த்தமை
(viii) ஒற்றுமையைப் போற்றியமை.

Q.1தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவரின் வரலாற்றைக் கேட்க.v
Answer:

“மறை. திருநாவுக்கரசு’ அவர்களின் வாழ்க்கை வரலாறு :
(i) மறை. திருநாவுக்கரசு தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் மகன் ஆவார். இவர் தம் தந்தையின் விருப்பப்படியும், எண்ணப்படியும் திருவையாற்றில் தமிழ்க் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார்.
(ii) சென்னை நுங்கம்பாக்கம் நகராண்மை உயர்நிலைப் பள்ளியிலும், திருநெல் வேலியில் குலசேகரன் பட்டினம் திருவள்ளுவர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 1952 முதல் 1967 வரை தமிழ் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். 1967இல் பணி ஓய்வு பெற்றார்:
(iii) 1937-ல் இந்திமொழி கட்டாயமாக்கப்பட்டது. அதனை எதிர்த்து தமிழகத்தில் பெரும் போராட்டம் ஏற்பட்டது. அதில் கலந்து கொண்டு 1938இல் சிறைப்பட்டார். பெரியார், அண்ணாதுரை ஆகியோருடன் சிறையில் இருந்தவர். இவருடைய மனைவி ஞானம்மாள் தம் ஐந்து வயது குழந்தையுடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
(iv) மறை திருநாவுக்கரசு ஒரு காந்தியவாதி. காந்தியடிகள் தொடங்கிய அறப்போராட்டத்தில் அரசை எதிர்த்து மேடைகளில் பேசினார். திரு.வி.க.வுடன் தமிழகம் முழுக்கப் பயணம் செய்து இந்திய விடுதலைக்காக உரிமைக்குரல் கொடுத்தார். 1941 சனவரி முப்பது முதல் ஓராண்டு சிறையில் இருந்தார்.
(v) சிவநெறி, நாயன்மார்களின் வரலாறு பற்றி சொற்பொழிவுகள் செய்துள்ளார். யாழ்ப்பாணம், கொழும்பு, மலேசியா, பர்மா ஆகிய நாடுகளுக்குச் சென்று சமயச் சொற்பொழிவாற்றி உள்ளார். சேக்கிழார் திருப்பணிக் கழகத்தைத் தொடங்கியவர்.
(vi) மறைமலையடிகள் வரலாறு, நீலாம்பிகை வரலாறு பெரிய புராண ஆய்வுரை போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
கீழ்க்காணும் தலைப்புகளில் ஒரு நிமிடம் பேசுக
1. பாரதியார்
2. காந்தியடிகள்
3. வேலுநாச்சியார்
1. பாரதியார்
(i) பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்திதான் என்ற பெயர்களுக்கெல்லாம் சொந்தக்காரர் சுப்பிரமணிய பாரதியார், எட்டயபுரத்தில் 1882ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பதினோராம் நாள் சின்னச்சாமி – இலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
(ii) பாரதியார் ஒரு கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர், பத்திரிக்கையாசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்த வர்.
(iii) தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 15 வயதில் தனது அத்தையுடன் காசிக்குச் சென்றார். இந்துக் கலாசாலையில் சமஸ்கிருதம், இந்தி மொழிகளும் கற்றார். பன்மொழி படித்து, வேத உபநிடதங்கள் படித்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமைப் பெற்றார். தம் தாய்மொழியாம் தமிழின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். பன்மொழிப் புலமை பெற்ற பாரதியார், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” எனப் பாடியுள்ளார்.
(iv) தன்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைப்பட்டவர். தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தைத் தணிக்க 1905ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார். பாரதியாருக்கு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கல்கத்தாவில் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிக்க தேவியைச் சந்தித்தார். அவரைத் தம் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.
(v) இந்தியா என்னும் வார ஏட்டையும், பால பாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார்.(vi) பாரதியார் மொழி, இனம், நாடு, சமுதாயம் என்னும் அனைத்துத் துறைகளையும் விடுதலை விழிகளாகப் பார்த்தார். அவருடைய பேச்சு, மூச்சு, செயல் அனைத்துமே விடுதலையாகவும் அதைச் சார்ந்த சமுதாய விடுதலையாகவும் அமைந்தது.
2. காந்தியடிகள்
(i) இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் காந்தியடிகள். இவர் ‘மகாத்மா காந்தி’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.
(ii) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார். பெற்றோர் காபாகாந்தி-புத்திலிபாய் ஆவர்.
(iii) காந்தி பள்ளிப் பருவத்திலேயே நேர்மையாளராகத் திகழ்ந்தார். அவர் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். வாய்மையாளராய் விளங்கினார். ‘சிரவண பிதுர்பத்தி என்னும் நூலைப் படித்தார். பெற்றோரை மதிக்கும் குணம் பெற்றார். பதினெட்டு வயதில் இங்கிலாந்து சென்றார். வழக்கறிஞர் கல்வியை முடித்துத் திரும்பினார்.
(iv) தென் ஆப்பிரிக்கா சென்றார். டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்டதும், இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, வெள்ளையர் இல்லை என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும் அவருடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
(v) தென் ஆப்பிரிக்காவில் கருப்பின மக்கள் மற்றும் அங்கு குடியேறிய இந்திய மக்கள் படும் இன்னல்கள் அவரை மாற்றியது. தென் ஆப்பிரிக்காவில் போராடிய போது தில்லையாடி வள்ளியம்மை இவருக்கு அறிமுகமானார்.
(vi) காந்தியடிகள் பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அவ்வாறு வந்தபோது – புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் 5 இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். இந்திய மக்கள் போதிய உடைகள் இல்லாமல் இருப்பதைப் பற்றிச் சிந்தித்தார். அதனால் ஏற்பட்ட மாற்றமே காந்தியடிகளின் எளிமைத் திருக்கோலம் ஆகும்.
(vii) விடுதலை பெறுவதற்காக அவர் கண்ட புதுவழி அறவழி. ‘கத்தியின்றி இரத்தமின்றி’ புதிய அகிம்சை வழியில் போராடினார். ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், தனியாள் அறப்போராட்டம் எனப் பல வழிகளில் விடுதலைக்குப் போராடி விடுதலை பெற்றுத் தந்தார்.
(viii) அறவழி (அகிம்சை) என்றால் காந்தியடிகளே நம் நினைவிற்கு வருவார். அப்படிப்பட்ட ஒரு தலைவர் நாதுராம் கோட்சே என்ற கொடியவனால் 1948, சனவரி 30ஆம் நாள் கொல்லப்பட்டார். பாரதத் தாய்க்காகத் தன் இன்னுயிரையும் தந்து அனைவரின் மனதிலும் வாழ்கிறார்.
3. வேலுநாச்சியார்
(i) ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி வேலு நாச்சியார்.
(ii) இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து. சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி. 1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகளாகத் தோன்றியவர்தான் வேலுநாச்சியார். இவர் ஆண்களைப் போல வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி முதல் அனைத்துப் பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் சிவகங்கையை ஆண்ட மன்னரான முத்துவடுகநாதரை மணந்து கொண்டார்.
(iii) ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின் மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில், மன்னர் முத்துவடுகநாதர் வீர மரணமடைந்தார். வேலுநாச்சியார், மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்து, ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்துக் கலந்து பேசினார். அவருக்கு உதவ விரும்பிய ஐதர்அலி ஐயாயிரம் படைவீரர்களை அவருடன் அனுப்பினார்.
(iv) மருது சகோதரர்களுடன் வீரர்படைக்குத் தலைமையேற்றுச் சென்ற வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். ஒரு விஜயதசமி நாளில் இப்போர் நடந்தது. அப்போரில், கணவரைக் கொன்றவர்களை வென்று 1780ஆம் ஆண்டில் சிவகங்கையை மீட்டார்.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

Q.1சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியர் யார்?v
Answer:

சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியர் வ.உ.சிதம்பரனார்.

Q.2வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?v
Answer:

வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

Q.4வ.உ.சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?v
Answer:

வ.உ.சி. அவர்களின் பன்முகத்தன்மை :
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர்.

Q.1ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.v
Answer:

ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

Q.2ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்த து ஒருநாள்.v
Answer:

ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

Q.3அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.v
Answer:

அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

Q.4அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.v
Answer:

அது நகரத்திற்குச் செல்லும் சாலை.

7மதிப்பீடு1 questions
Q.G1சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை வட்டமிடுக. 1. அ) படித்தாள் ஆ) ஐ இ) மற்று ஈ) கு 2. அ) மதுரை ஆ) கால் இ) சித்திரை ஈ) ஓடினான் 3. அ) சென்ற ஆ) வந்த இ) சித்திரை ஈ) நடந்த 4. அ) மாநாடு ஆ) ஐ இ) உம் ஈ) மற்றுv
Answer:

1. அ) படித்தாள்)
2. ஈ) ஓடினான்
3. இ) சித்திரை)
4. அ) மாநாடு