Ch 1இயல் 1
5-Mark Questions
இன்பத்தமிழ் என்ற பாடலை இனிய ஓசையுடன் பாடுக.
கீழ்க்காணும் பாடலைக் குரலேற்ற இறக்கத்துடன் இனிமையாகப் பாடச் செய்தல். தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழை அமுது, நிலவு, மணம் என்று பெயரிட்டு அழைப்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
தமிழை அமுது, நிலவு, மணம் என்று பெயரிட்டு அழைப்பது ஏன் என்பது குறித்து கலத்துரையாடுதல். மாணவன் 1 : வணக்கம் ! கவிஞர்கள் தமிழை அமுது, நிலவு, மணம் என்று அழைக்கிறார்கள். அதைப் பற்றி உனக்குத் தெரியுமா? மாணவன் 2 : தெரியும். அமுதம் என்பது வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவுப் பொருள் ஆகும். அது மிகவும் சுவை உடையது என்றும் அதனை உண்பதினால் தேவர்கள் சாகா வரம் பெற்றுள்ளார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையுள்ள உணவை நாம் உண்ணும்போது தேவாமிர்தமாக இனிக்கிறது என்றும் நாம் கூறுவோம். …
2-Mark Questions
தமிழுக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயர்களைப் பட்டியலிடுக.
மாணவர்கள் தமிழுக்குச் சூட்டப்படும் பெயர்களை அறிந்து எழுதுதல். தேன்தமிழ், செந்தமிழ், இனிமைத் தமிழ், இளமைத் தமிழ், முத்தமிழ்… முதல் பருவம்
இக்கடிதத்திற்கு நீங்கள் விரும்பும் வகையில் வேறொரு தலைப்பிடுக.
இக்கதைக்கு நான் விரும்பும் தலைப்பு “எண்ணம் ஈடேறியது.”
உங்கள் பெயர் மற்றும் உங்கள் நண்பர்களது பெயர்களுக்கான மாத்திரை அளவை கண்டுபிடி.
எ. கா. கபிலர் – 1 + 1 + 1 + 1/2 = 3 1/2 மாணவர்களைத் தமிழ் எழுத்துகளின் மாத்திரை அளவை அறிந்து கொள்ளச் செய்தல்.
Ch 2இயல் 2
5-Mark Questions
‘வளர்பிறையும் தேய்பிறையும்’ என்னும் தலைப்பில் பேசுக.
மாணவர்கள் வளர்பிறையும், தேய்பிறையும் பற்றி அறிந்து கொள்ளச் செய்தல். அவையோர்க்கு வணக்கம்! நான் வளர்பிறை, தேய்பிறை பற்றிப் பேசப் போகிறேன். வானில் நட்சத்திரக் கூட்டங்கள், நிலா, சூரியன், வியாழன், புதன், செவ்வாய் போன்ற பல கோள்களும் உள்ளன. கோள்கள் அனைத்தும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றைச் சூரியக் குடும்பம் என்பர். நிலவானது அமாவாசை தினத்தன்று வானில் தெரியாது. பௌர்ணமி தினத்தன்று முழுநிலவாகக் காட்சியளிக்கும். அமாவாசைக்குப் பிறகு நிலவானது கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து முழுநிலவாகும். இவ்வாறு வளர்வதை வளர்பிறை என்போம். …
பாடலை ஓசைநயத்துடன் படித்து மகிழ்க.
காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும் – அங்குத் தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் – அந்தக் காணி நிலத்திடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் – அங்குக் கேணி அருகினிலே – தென்னைமரம் கீற்றும் இளநீரும் பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும் – நல்ல முத்துச் சுடர் போலே – நிலாவொளி முன்பு வரவேணும் – அங்கு கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதில் படவேணும் – என்றன் சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம் தென்றல் வரவேணும். – பாரதியார்
2-Mark Questions
நீங்கள் விரும்பும் இயற்கைப் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
காணி என்பது நில அளவைக் குறிக்கும் சொல். இதுபோல நிலத்தை அளக்கப் பயன்படும் சொற்களைப் பட்டியலிடுக.
நிலத்தை அளக்கப் பயன்படும் சொற்கள் : சென்ட், ஏக்கர், ஹெக்டேர், ஏர்ஸ், மர, குழி, வேலி.
உங்கள் பகுதியில் காணப்படும் பறவைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
1. காகம் 2. சிட்டுக்குருவி 3. குயில் 4. மைனா 5. இட்டைவால் குருவி 6. கொக்கு 7. நாரை 8. பருந்து 9. கழுகு 10. மயில் 11. மரங்கொத்தி 12. பச்சைக் கிளி
Ch 3இயல் 3
5-Mark Questions
அறிவியல் ஆத்திசூடி’ பகுதியில் உங்களுக்குப் பிடித்த அடியை எழுதி அதன் காரணத்தைக் கூறுக.
அறிவியல் ஆத்திசூடி பகுதியில் எனக்குப் பிடித்த அடிகள் : 1. ஈடுபாட்டுடன் அணுகு 2. ஏன் என்று கேள் ஈடுபாட்டுடன் அணுகு : நாம் செய்யும் செயல்களை ஈடுபாட்டுடன் செய்தால் மட்டும் தான் சிறப்பாகச் செய்ய இயலும். எனவே ஒரு செயலைச் செய்வதற்கு ஈடுபாடு மிகவும் இன்றியமையாததாகும். ஏன் என்று கேள் : யார் எதைச் சொன்னாலும் கண்மூடித்தனமாகச் செம்மறியாட்டுக் கூட்டம் போல் எச்செயலையும் செய்யக்கூடாது. எதற்காகச் செய்கிறோம் என்பதை அறிந்து செய்ய வேண்டும்.
அறிவியல் சிந்தனையைத் தூண்டும் முழக்கத் தொடர்கள் ஐந்து உருவாக்குக. எ.கா. அறிவியலை வளர்ப்போம்! உலகை வெல்வோம்!
அறிவியல் சிந்தனையைத் தூண்டும் முழக்கங்கள் இயற்கையை அழிக்காமலே ! அறிவியலாய்வு செய்வோம்! அவசியத்திற்குப் பயன்படுத்துவோம்! நன்மைக்கு வழிகாட்டுவோம்! அளவுடன் அனுபவிப்போம்! தீமையை விட்டொழிப்போம்! அணு ஆராய்ச்சி செய்வோம்! அமைதியைக் காப்போம்! மருத்துவத்தில் புதுமை காண்போம்! நோய் நொடியின்றி வாழ்வோம்!
2-Mark Questions
உங்களைக் கவர்ந்த அறிவியல் சாதனங்கள் நான்கினை எழுதுக.
துணி துவைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், கைப்பேசி, வானொலி, மின்விசிறி, விமானம், கணினி, மின் அடுப்பு, இயந்திர மனிதன்.
ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்துகள் வரிசையில் மொழிமுதல் எழுத்துகளாக அமைபவை எவை? அவ்வெழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களை அகராதியைப் பார்த்து எழுதுக.
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது அனுபவம்.
Ch 4இயல் 4
5-Mark Questions
கல்வியே அழியாச் செல்வம் என்னும் தலைப்பில் பேசுக.
வணக்கம்! கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை. கல்வியை யாராலும் அழிக்க முடியாத செல்வமாகும். இளமையில் கல்’ என்பதை உணர்ந்திருக்க வேண்டும். இளம்வயதில் படிப்பது நம் மனதில் அப்படியே பசுமரத்தாணி போல் பதிந்துவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கல்விதான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. அறியாமை எனும் இருட்டைக் கல்வி எனும் ஒளிதான் போக்குகிறது. நல்ல புத்தகங்கள் அறிவு கண்ணைத் திறக்கும் ஒரு திறவுகோல். கல்வி ஒருவனை மட்டும் மேம்படுத்தாது. அவனைச் சார்ந்தவர்களையும், சமுதாயத்தையும், ஏன் நாட்டையுமே அது உயர்த்த உதவும். …
கல்வி பற்றிய பழமொழிகள் அல்லது பாடல் அடிகள் எவையேனும் இரண்டனைப் பெரியோர்களிடம் கேட்டு எழுதி வருக.
(i) ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். (ii) ஓதுவது ஒழியேல். (iii) அறிவுடையாரை அரசனும் விரும்புவான். (iv) இளமையில் கல்வி, கல் மேல் எழுத்து. (v) எண் இல்லாதவர் கண் இல்லாதவர். எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர். (vi) ஓதார்க்கு இல்லை. உணர்வோடு ஒழுக்கம். (vii) கல்வி அழகே அழகு. (viii) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. (ix) கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
2-Mark Questions
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடலை இசையுடன் பாடி மகிழ்க்.
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம் நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே.
தங்கப் பாப்பா வந்தாளே! சிங்கப் பொம்மை தந்தாளே! பஞ்சு போன்ற கையாலே! பண்டம் கொண்டு வந்தாளே! பந்தல் முன்பு நின்றாளே! கம்பம் சுற்றி வந்தாளே! தென்றல் காற்றும் வந்ததே! தெவிட்டா இன்பம் தந்ததே! இப்பாடலில் இடம் பெற்றுள்ள இன எழுத்துச் சொற்களை எடுத்து எழுதுக.
தங்க, சிங்க, பஞ்சு, பண்டம், பந்தல், கம்பம், தென்றல், வந்தாளே, நின்றாளே, வந்ததே, தந்ததே.
இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) இடம் + மெல்லாம் ஆ) இடம் + எல்லாம் இ) இட + எல்லாம் ஈ) இட + மெல்லாம்
ஆ) இடம் + எல்லாம்
Ch 5இயல் 5
5-Mark Questions
நாம் எந்தெந்த வகையில் பிறருக்கு உதவலாம் என்பது குறித்து நண்பர்களுடன் கலந்துரையாடுக.
மாணவன் 1 : என்னடா இங்கு தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறாய்? மாணவன் 2 : என்னவென்று சொல்வது. இன்று என் அம்மா என்னை நன்றாகத் திட்டிவிட்டார்கள். அதனால் காலையில் சிற்றுண்டியே வேண்டாம் எனக் கூறிவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்து என்னைச் சமாதானப்படுத்திவிட்டு 3 அறிவுரையும் கூறினார். மாணவன் 1 : பிறகென்ன? அதுதான் சமாதானப்படுத்தி விட்டார்களே? மாணவன் 2 : அதெல்லாம் சரிதான். அறிவுரை கூறினார்கள். அப்போது ‘பிறருக்கு 5 உதவியாய் இல்லை என்றாலும் உபத்திரமாக இருக்காதே’ என்று கூறினார். அதைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டு உள்ளேன். எவ்வாறு பிறருக்கு உதவலாம் என எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டே உள்ளேன். …
“கூடா நட்புக் கேடாய் முடியும்” என்னும் கருத்து அமைந்த கதை ஒன்று கூறுக.
வந்தவாசி கிராமத்தில் வசிக்கும் திவ்யா ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளுக்கு ஒரு தீய பழக்கமுடைய தோழி இருப்பதை அறிந்த திவ்யாவின் தாய், ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும் எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என முடிவெடுத்தார். ஒருநாள் அவர் திவ்யாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு பெரிய பெட்டியில் நிறைய மாம்பழங்கள் இருந்தன. அந்த பழங்களைக் கண்ட திவ்யாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப்போனவளிடம் தாய் தடுத்தார். அவற்றுள் நல்ல பழங்களாகத் தேர்ந்தெடுத்து இரண்டு கூடைகளில் வைக்கும்படி கூறினாள். …
2-Mark Questions
இந்தப் பாடலில் கூறப்படும் கருத்துகளுக்குப் பொருத்தமான திருக்குறள் அதிகாரங்களின் தலைப்புகளைப் பட்டியலிடுக.
(i) செய்ந்நன்றியறிதல் (ii) பொறையுடைமை (iii) இனியவை கூறல் (iv) இன்னா செய்யாமை (v) கல்வி (vi) ஒப்புரவு அறிதல் (vii) அறிவுடைமை (vii) நட்பு.
உங்கள் பகுதியில் பேசப்படும் பழமொழிகளைத் தொகுக்க.
(i) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. (ii) குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். (iii) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். (iv) கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. (v) வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….. அ) அறிவுடைமை ஆ) அறிவுஉடைமை இ) அறியுடைமை ஈ) அறி உடைமை
அ) அறிவுடைமை
Ch 6இயல் 6
5-Mark Questions
கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……….. அ) கலம்ஏ றி ஆ) கலமறி இ) கலன் ஏறி ஈ) கலமேறி
ஈ) கலமேறி சொற்றொடரில் அமைத்து எழுதுக அ) மாநிலம் – என் நண்பன் ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளான். ஆ) கடல் – கடல் பரந்து விரிந்துள்ளதால் அதற்குப் பரவை என்று பெயர். இ) பண்டங்கள் – தின்பண்டங்களை வீணாக்கக்கூடாது.
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) அடிக்குமலை ஆ) அடிக்கும் அலை இ) அடிக்கிலை ஈ) அடியலை
அ) அடிக்குமலை பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக அ) விடிவெள்ளி – 1. பஞ்சுமெத்தை ஆ) மணல் – 2. ஊஞ்சல் இ) புயல் – 3. போர்வை ஈ) பனிமூட்டம் – 4. விளக்கு அ) 4 ஆ) 1 இ) 2 ஈ) 3
2-Mark Questions
கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) கதிர்ச் + சுடர் ஆ) கதிரின் + சுடர் இ) கதிரவன் + சுடர் ஈ) கதிர் + சுடர்
ஈ) கதிர் + சுடர்
மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) மூச்சு + அடக்கி ஆ) மூச் + அடக்கி இ) மூச் + சடக்கி ஈ) மூச்சை + அடக்கி
அ) மூச்சு + அடக்கி
பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) பெருமைவனம் ஆ) பெருவானம் இ) பெருமானம் ஈ) பேர்வானம்
ஆ) பெருவானம்
Ch 7இயல் 7
5-Mark Questions
காந்தியடிகளின் பொன்மொழிகளைத் திரட்டுக.
காந்தியடிகளின் பொன்மொழிகள் : (i) எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உய்த்திருக்கிறது. (ii) நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; நீ செய்கிறாய் என்பதுதான் முக்கியம். (iii) அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை. (iv) எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை. (v) பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு. (vi) பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம். (vii) குணநலனும், புனிதத்தன்மையுமே பெண்ணின் உண்மையான ஆபரணம். (viii) சாதுவான வழியில், உன்னால் உலகத்தையும் அசைக்க முடியும். …
காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் பெயர்களைத் தொகுக்க.
காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்கள் : (i) கத்தியின்றி இரத்தமின்றி கண்டனப் போராட்டம் (ii) வரிகொடா இயக்கம் (iii) ஒத்துழையாமை இயக்கம் (iv) உண்ணாவிரதம் (v) உப்பு சத்தியாகிரகம் (vi) சட்டமறுப்பு இயக்கம் (vii) தனியாள் அறப்போராட்டம் (viii) வெள்ளையனே வெளியேறு.
2-Mark Questions
பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை இசையோடு பாடுக.
பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை மாணவர்கள் தாங்களாகவே இசையோடு பாடி மகிழ்ந்திடுங்கள்.
பின்வரும் தொடர்களில் உள்ள நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக. 1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர். 2. நாள்தோறும் திருக்குறளைப் படி. 3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர். 4. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக. மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
1. வளவன், பேருந்து – பெயர்ச்சொல் 2. திருக்குறள் – பெயர்ச்சொல் 3. படி – வினைச்சொல் 4. மாநகர், சாலச்சிறந்தது – உரிச்சொல் 5. தீண்டல், இன்பம் – இடைச்சொல்
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் அ) திருவாசகம் ஆ) திருக்குறள் இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை
ஆ) திருக்குறள்
Ch 8இயல் 8
5-Mark Questions
உங்கள் வீட்டில் வளர்க்கும் உயிரினங்கள் பற்றிக் கூறுக.
எங்கள் வீட்டில் வளர்க்கும் உயிரினங்கள் : (i) எங்கள் வீடு வயல்கள் சூழ்ந்த கிராமத்தில் உள்ளது. என் வீட்டில் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை ஆகிய உயிரினங்கள் வளர்க்கப்படுகின்றன. நாங்கள் நாய், பூனை ஆகியவற்றைக் கட்டிப்போட மாட்டோம். (ii) அவற்றைச் சுதந்திரமாக விளையாட விடுவோம். நாய்க்கும் பூனைக்கும் ஆகாது என்று கூறுவார்கள். ஆனால் எங்கள் வீட்டில் இவையிரண்டும் சேர்ந்தே விளையாடும். (iii) அதேபோல் ஆடு, மாடுகளையும் எங்கள் வீட்டில் ஒருவராகத்தான் பார்த்துக் கொள்வோம். நேரத்திற்கு உணவளித்தல், தண்ணீர் கொடுத்தல், போன்றவற்றை மனமுவந்து அன்போடு செய்வோம்.
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தைக் கதை வடிவில் சுருக்கி எழுதுக.
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தின் கதை வடிவம் : மணிமேகலா தெய்வம் மணிமேகலையை, எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள், பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்கள் இடையே பொய்கைகள் என மனதை மயக்கும் காட்சிகள் கொண்ட மணிபல்லவத்தீவிற்குக் கொண்டுவந்து சேர்த்தது. அந்த மணிபல்லவத் தீவையும் அதிலுள்ள புத்தபீடிகையையும் காவல் செய்து வரும் தீவதிலகை மணிமேகலையைச் சந்திக்கிறாள். மேலும், அவள் மணிமேகலையிடம் ”பெருமை மிக்கவர்கள் மட்டுமே இத்தீவிற்கு வந்து இந்தப் புத்த பீடிகையை வணங்க முடியும். நீ அந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறாய். இன்னும் நீ அறிய வேண்டியது ஒன்று உண்டு என்று கூறினாள். …
2-Mark Questions
பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தை வகுப்பில் நடித்துக் காட்டுக.
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தை வகுப்பில் மாணவர்கள் தாங்களாகவே அதில் வரும் கதாபாத்திரங்களில் வேடமிட்டு நடித்துக் காட்ட வேண்டும்.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதில் இடம் பெற்றுள்ள இடுகுறி, காரணப் பெயர்களை அறிந்து எழுதுக. நீர் வற்றிப்போன குளத்தில் செந்தாமரை, ஆம்பல், கொட்டி, நெய்தல் முதலான கொடிகளும் வாடியிருந்தன. நீர் நிரம்பி இருந்தவரை ஊர் மக்களும், விலங்குகளும் மரங்கொத்தி போன்ற பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த குளம் அது. காலை நேரம் சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. இப்போது அக்குளத்தைக் கண்டு கொள்வார் யாருமில்லை
இடுகுறிப் பெயர் : (i) குளம் (ii) ஆம்ப ல் (iii) கொட்டி (iv) நெய்தல் (v) சூரியன் காரணப் பெயர் : (i) மரங்கொத்தி (ii) செந்தாமரை
இடுகுறிப்பெயரை வட்டமிடுக. அ) பறவை ஆ) மண் இ) முக்காலி ஈ) மரங்கொத்தி
ஆ) மண்
Ch 9இயல் 9
5-Mark Questions
நீங்கள் மிகவும் விரும்பும் தாவரங்கள், பறவைகள், விலங்குகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
(i) விரும்பும் தாவரங்கள் : மல்லிகைக் கொடி, ரோசாச் செடி, மருதாணி, முருங்கை மரம், வாழை மரம், தென்னை மரம், ஆலமரம், தூதுவளை, பிரண்டை . (ii) விரும்பும் பறவைகள் : காகம், சிட்டுக்குருவி, குயில், குருவி, தேன்சிட்டு, புறா, காடை, தூக்கணாங்குருவி, மரங்கொத்திப் பறவை, கொக்கு, நாரை (iii) விரும்பும் விலங்குகள் : நாய், பூனை, பசு, ஆடு, யானை, குதிரை, காளை மாடு, புள்ளிமான், முயல்.
உங்களைப்போல் பிறரையும் நேசியுங்கள் – என்னும் தலைப்பில் பேசுக.
‘தன்னைப் போல் பிறரை நினை’ என்பது எவ்வளவு கருத்தாழம் பொருந்தியது? 9 இத்தொடர் கூறுவதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்தோமேயானால் நாடு நலம் பெறும். நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ அவ்வாறு மற்றவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டும். இன்னா செய்தார்க்கும் இனியவற்றையே செய்ய வேண்டும் என்பது வள்ளுவம். ‘பகைவனுக்கருள்வாய் என் நெஞ்சே’ என்கிறார் பாரதிதாசன். ‘உன்னை வருந்தியவரையும் a நேசி’ என்று இயேசு கிறித்து கூறியுள்ளார். இவற்றையெல்லாம் நம் மனதில் நிறுத்தி , அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் . வள்ளலார். அதனாலன்றோ அவர் சத்திய தருமச் சாலையை ஏற்படுத்தினார். …
2-Mark Questions
“முடிவில் ஒரு தொடக்கம்” உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பகிர்க.
ஹிதேந்திரனின் உண்மைக்கதையைப் படித்தபோது என் மனம் வருந்தியது. இக்கதையைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் கூறி என் மனக்காயத்தைப் போக்கினேன். இதுபோல் எவருக்கும் நேரக்கூடாது என்று இறைவனிடம் வேண்டினேன். உடல் உறுப்பு தானம் அளிப்பதனைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக. ஆறு சக்கரம் நூறு வண்டி அழகான ரயிலு வண்டி மாடு கன்னு இல்லாமத்தான் மாயமாத்தான் ஓடுது உப்புப் பாரம் ஏத்தும் வண்டி உப்பிலிப் பாளையம் போகும் வண்டி.
இயல்பு நவிற்சி அணி.
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் அ) ஜீவ ஜோதி ஆ) ஆசிய ஜோதி இ) நவ ஜோதி ஈ) ஜீவன் ஜோதி
ஆ) ஆசிய ஜோதி
Frequently asked questions
- இன்பத்தமிழ் என்ற பாடலை இனிய ஓசையுடன் பாடுக.
- கீழ்க்காணும் பாடலைக் குரலேற்ற இறக்கத்துடன் இனிமையாகப் பாடச் செய்தல். தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
- தமிழை அமுது, நிலவு, மணம் என்று பெயரிட்டு அழைப்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
- தமிழை அமுது, நிலவு, மணம் என்று பெயரிட்டு அழைப்பது ஏன் என்பது குறித்து கலத்துரையாடுதல். மாணவன் 1 : வணக்கம் ! கவிஞர்கள் தமிழை அமுது, நிலவு, மணம் என்று அழைக்கிறார்கள். அதைப் பற்றி உனக்குத் தெரியுமா? மாணவன் 2 : தெரியும். அமுதம் என்பது வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவுப் பொருள் ஆகும். அது மிகவும் சுவை உடையது என்றும் அதனை உண்பதினால் தேவர்கள் சாகா வரம் பெற்றுள்ளார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையுள்ள உணவை நாம் உண்ணும்போது தேவாமிர்தமாக இனிக்கிறது என்றும் நாம் கூறுவோம். …
- தமிழுக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயர்களைப் பட்டியலிடுக.
- மாணவர்கள் தமிழுக்குச் சூட்டப்படும் பெயர்களை அறிந்து எழுதுதல். தேன்தமிழ், செந்தமிழ், இனிமைத் தமிழ், இளமைத் தமிழ், முத்தமிழ்… முதல் பருவம்
- இக்கடிதத்திற்கு நீங்கள் விரும்பும் வகையில் வேறொரு தலைப்பிடுக.
- இக்கதைக்கு நான் விரும்பும் தலைப்பு “எண்ணம் ஈடேறியது.”
These important questions are selected from the Samacheer Kalvi Class 6 Tamil textbook book-back exercises to help you revise the most useful questions. Mark weightage (5/2/1) follows the usual exam pattern and may vary by exam — always check your latest syllabus and question pattern. Open each chapter for the complete set of questions and answers.