Class 6 Tamil · Chapter 9

Samacheer Class 6 Tamil - இயல் 9

42 textbook Q&A42 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 9 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 8சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக . 11குறுவினா 8சிறுவினா 4சிந்தனை வினா 11
Your Progress - Chapter 90% complete
1கற்பவை கற்றபின்8 questions
Q.1நீங்கள் மிகவும் விரும்பும் தாவரங்கள், பறவைகள், விலங்குகளின் பெயர்களைப் பட்டியலிடுக.v
Solution

(i) விரும்பும் தாவரங்கள் : மல்லிகைக் கொடி, ரோசாச் செடி, மருதாணி, முருங்கை மரம், வாழை மரம், தென்னை மரம், ஆலமரம், தூதுவளை, பிரண்டை .
(ii) விரும்பும் பறவைகள் : காகம், சிட்டுக்குருவி, குயில், குருவி, தேன்சிட்டு, புறா, காடை, தூக்கணாங்குருவி, மரங்கொத்திப் பறவை, கொக்கு, நாரை
(iii) விரும்பும் விலங்குகள் : நாய், பூனை, பசு, ஆடு, யானை, குதிரை, காளை மாடு, புள்ளிமான், முயல்.

Answer:

Q.2உங்களைப்போல் பிறரையும் நேசியுங்கள் – என்னும் தலைப்பில் பேசுக.v
Solution

‘தன்னைப் போல் பிறரை நினை’ என்பது எவ்வளவு கருத்தாழம் பொருந்தியது? 9 இத்தொடர் கூறுவதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்தோமேயானால் நாடு நலம் பெறும். நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ அவ்வாறு மற்றவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
இன்னா செய்தார்க்கும் இனியவற்றையே செய்ய வேண்டும் என்பது வள்ளுவம். ‘பகைவனுக்கருள்வாய் என் நெஞ்சே’ என்கிறார் பாரதிதாசன். ‘உன்னை வருந்தியவரையும் a நேசி’ என்று இயேசு கிறித்து கூறியுள்ளார். இவற்றையெல்லாம் நம் மனதில் நிறுத்தி , அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் . வள்ளலார். அதனாலன்றோ அவர் சத்திய தருமச் சாலையை ஏற்படுத்தினார்.
ஒரு சிறுகதையைப் பார்க்கலாம். கடுமையான கோடைக்காலத்தில் ஒரு குரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தார். உடனிருந்த சீடன் குருவிற்கு விசிறிவிட்டான். குருவும் நன்றாக உறங்கினார். சீடன் சிறிது நேரத்திற்குப் பிறகு களைத்துப் போனான். அப்படியே அவனும் உறங்கி விட்டான். குரு விழித்தெழுந்தபோது சீடனுக்கு வியர்த்திருந்ததைப் பார்த்தார். அவர் சீடனுக்கு விசிறினார். குளிர்ந்த காற்று பட்டதும் சீடன் சட்டென்று எழுந்து பார்த்தான். குரு தனக்கு விசிறி விடுவதைப் பார்த்துப் பதற்றமுற்றான்.
“குருவே என்ன செயல் செய்கிறீர்கள்? நீங்கள் எனக்கு விசிறி விடுவதா?” என்று கேட்டான். “அமைதியாய் இரு; பதற்றப்படாதே! நீயும் என்னைப் போல் ஓர் உயிர்தான். எனக்கு வியர்த்தபோது நீ விசிறினாய், உனக்கு வியர்த்தபோது நான் விசிறினேன். இதில் எவ்வித மரியாதைக் குறையும் இல்லை” என்று பொறுமையுடனும் அடக்கத்துடனும் கூறினார். தன்னைப்போல் பிறரை நேசிப்பதனைப் பற்றி சீடன் உணர்ந்தான்.
பிறர் நம்மை மதிக்க வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பது நம் அனைவரின் விருப்பம். பிறரிடம் நாம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பிறரை நேசிப்போம், அன்பால் இணைவோம்.

Q.1நாளிதழ்களில் வந்துள்ள மனிதநேயம் பற்றிய செய்திகளைச் சேகரித்துக் கூறுக.v
Solution

‘கஜா’ புயல் பாதித்த மக்களுக்கு ஜெகத்ரட்சகனின் ரேலா மருத்துவமனை உதவி டாக்டர்கள் மூலம் மருந்து வினியோகம், சென்னை , நவ.-26-2018.
முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனின் டாக்டர் ரேலா மருத்துவமனை தேசிய கல்லீரல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 25பேர் கொண்ட மருத்துவக்குழு ‘கஜா’ புயல் நிவாரண மருத்துவச் சேவைக்காக கடந்த 22ந்தேதி சென்னையில் இருந்து நாகை மாவட்டம் சென்றனர். 23-ந்தேதி தலைஞாயிறு, புஷ்பவனம் மற்றும் வெள்ளைப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 700 பேருக்குச் சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது.
24-ந்தேதி தீவுக் கிராமமான வண்டல் கிராமத்துக்குப் படகு மூலம் சென்று 600 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு உள்ளது. 25-ந்தேதி அரவேற்காடு பகுதிகளில் நடந்த மருத்துவ முகாமில் சுமார் 450 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல் டாக்டர் ரேலா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதநேயத்தோடு செய்த இச்சேவையை அங்குள்ள மக்கள் பாராட்டினர்.
பட்டுக்கோட்டை அருகே மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய வாலிபர்கள், பட்டுக்கோட்டை, நவ.-1-2018.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரை காசி விசுவநாதர் கோவில் முன்பு கடந்த பல நாட்களாக சின்னப்பொண்ணு வயது 65) என்ற மூதாட்டி பிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் அந்த மூதாட்டி தனது கை, கால்கள் கழுவுவதற்காக அங்குள்ள கோவில் குளத்தில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர், குளத்திற்குள் தவறி விழுந்தார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கரையில் போட்டனர்.
அப்போது அங்கு வந்த பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த விக்னேஷ்(23) ஹானஸ்ட்ராஜ்(26) ஆகிய இருவரும் அந்த மூதாட்டியை மீட்டு, மோட்டார் சைக்கிளில் ஏற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றால் அந்த மூதாட்டி உயிர் பிழைத்தார். இதற்குக் காரணமான வாலிபர்களைப் பொதுமக்கள் பாராட்டினர்.

Q.2எவரேனும் ஒருவருக்கு நீங்கள் உதவி செய்த அனுபவத்தைக் கூறுக.v
Solution

அப்பா என்னிடம் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் “அன்னை ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களுக்கு ஒருநாள் உணவுக்கு பணம் கொடுக்கலாம். அதுமட்டும் இல்லாமல் அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டால் அங்கே இருக்கிறவங்களுக்கு ஆறுதலாக இருக்கும்” என்றேன். அப்பாவும் சரி என்று சம்மதித்தார். நாங்களும் அவ்வில்லத்திற்குச் சென்று உதவிகளைச் செய்தோம். இந்நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக உள்ளது.

Q.3ஒற்றுமையாக வாழும் பண்பே சிறந்தது என்பது பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுக.v
Solution

எழில் : ஜெயஸ்ரீ. வணக்கம், நலமாக இருக்கிறாயா?
ஜெயஸ்ரீ : நான் நலம், நீ எப்படி இருக்கிறாய்?
எழில் : நானும் நலமாகவே இருக்கிறேன்.
ஜெயஸ்ரீ : நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
எழில் : பண்பாக இருக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ : எப்படி?
எழில் : எல்லோரையும் மதிக்க வேண்டும். யாரையும் குறை கூறக்கூடாது. மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ : அப்புறம்!
எழில் : ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ : அதுமட்டுமல்ல எழில், ஒருவருக்கொருவர் அன்பு, பாசம் காட்ட வேண்டும்.
எழில் : ஆமாம்! சரியாகச் சொன்னாய்.
ஜெயஸ்ரீ : பண்பை வெளிப்படுத்தினால் நாம் எப்போதும் ஒற்றுமையாக வாழலாம்.
எழில் : ஒற்றுமையாக வாழ்வோம் வா!

Q.1“முடிவில் ஒரு தொடக்கம்” உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பகிர்க.v
Solution

ஹிதேந்திரனின் உண்மைக்கதையைப் படித்தபோது என் மனம் வருந்தியது. இக்கதையைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் கூறி என் மனக்காயத்தைப் போக்கினேன். இதுபோல் எவருக்கும் நேரக்கூடாது என்று இறைவனிடம் வேண்டினேன். உடல் உறுப்பு தானம் அளிப்பதனைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

Q.2முதலுதவி பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவற்றுள் சிலவற்றையேனும் அறிந்து கொள்க.v
Solution

(i) பாம்பு கடித்தல் : பாம்பு கடிக்கப்பட்டவரை சமதரையில் படுக்க வைக்க வேண்டும். கடித்த இடத்தில் துணியைக் கட்டவும் விஷம் உடலில் ஏறாமல் இருக்கும். துணியைச் சுற்றும்போது மேலிருந்து கீழாகச் சுற்ற வேண்டும்.
(ii) மின்சாரம் தாக்கினால் : மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து அகற்ற வேண்டும். மின்சாரம் பாய்ந்தவரை அவசரப்பட்டுத் தொடக்கூடாது.
(iii) குழந்தைகளுக்கு அடிப்பட்டால் செய்ய வேண்டியவை : பனிக்கட்டியை அடிப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். அடிப்பட்ட இடத்தில் அட்டையை இரு பக்கமும் வைத்துக் கட்ட வேண்டும்
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

Q.1பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக. ஆறு சக்கரம் நூறு வண்டி அழகான ரயிலு வண்டி மாடு கன்னு இல்லாமத்தான் மாயமாத்தான் ஓடுது உப்புப் பாரம் ஏத்தும் வண்டி உப்பிலிப் பாளையம் போகும் வண்டி.v
Solution

இயல்பு நவிற்சி அணி.

Answer:

இயல்பு நவிற்சி அணி.

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .11 questions
Q.1புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் அ) ஜீவ ஜோதி ஆ) ஆசிய ஜோதி இ) நவ ஜோதி ஈ) ஜீவன் ஜோதிv
Solution

ஆ) ஆசிய ஜோதி

Answer:

ஆ) ஆசிய ஜோதி

Q.2நேர்மையான வாழ்வை வாழ்பவர் அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர் ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர் இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர் ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்v
Solution

அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

Answer:

அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

Q.3ஒருவர் செய்யக் கூடாதது அ) நல்வினை ஆ) தீவினை இ) பிறவினை ஈ) தன்வினைv
Solution

ஆ) தீவினை
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.1 ஆசிய ஜோதி

Answer:

ஆ) தீவினை
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.1 ஆசிய ஜோதி

Q.4எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) எளிது + தாகும் ஆ) எளி + தாகும் இ) எளிது + ஆகும் ஈ) எளிதா + ஆகும்v
Solution

இ) எளிது + ஆகும்

Answer:

இ) எளிது + ஆகும்

Q.5பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பாலை + யெல்லாம் ஆ) பாலை + எல்லாம் இ) பாலை + எலாம் ஈ) பா + எல்லாம்v
Solution

ஆ) பாலை + எல்லாம்

Answer:

ஆ) பாலை + எல்லாம்

Q.6இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) இன்உயிர் ஆ) இனிய உயிர் இ) இன்னுயிர் ஈ) இனிமைஉயிர்v
Solution

இ) இன்னுயிர்

Answer:

இ) இன்னுயிர்

Q.7மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) மலை எலாம் ஆ) மலையெலாம் இ) மலையெல்லாம் ஈ) மலை எல்லாம்v
Solution

ஆ) மலையெலாம்

Answer:

ஆ) மலையெலாம்

Q.1எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் அ) மனித வாழ்க்கை ஆ) மனித உரிமை இ) மனித நேயம் ஈ) மனித உடைமைv
Solution

இ) மனித நேயம்

Answer:

இ) மனித நேயம்

Q.2தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் …………….. காட்டியவர் வள்ளலார். அ) கோபம் ஆ) வெறுப்பு இ) கவலை ஈ) அன்புv
Solution

ஈ) அன்பு
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.2 மனிதநேயம்

Answer:

ஈ) அன்பு
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.2 மனிதநேயம்

Q.3அன்னை தெரசாவிற்கு ………….. க்கான நோபல் பரிசு’ கிடைத்தது அ) பொருளாதாரம் ஆ) இயற்பியல் இ) மருத்துவம் ஈ) அமைதிv
Solution

ஈ) அமைதி

Answer:

ஈ) அமைதி

Q.4கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் அ) குழந்தைகளைப் பாதுகாப்போம் ஆ) குழந்தைகளை நேசிப்போம் இ) குழந்தைகளை வளர்ப்போம் ஈ) குழந்தைகள் உதவி மையம்v
Solution

அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்
பொருத்துக
1. வள்ளலார் – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி – பசிப்பிணி போக்கியவர்
3. அன்னை தெரசா – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
1. வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
3. அன்னை தெரசா – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மனிதநேயம் – காந்தியடிகள், மனிதநேயமே சிறந்தது என்று கூறியுள்ளார்.
2. உரிமை – நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை உரிமையுடனும் மகிழ்வுடனும் வாழ வேண்டும்.
3. அமைதி – அமைதியான சூழலில்தான் நம் சிந்தனை புத்துணர்ச்சி பெறும்.
4. அன்புசெய்தல் – அனைத்து உயிர்களிடத்திலும் நாம் அன்பு செய்தல் வேண்டும்.

3குறுவினா8 questions
Q.1அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?v
Solution

அரசனாலும் செய்ய முடியாத செயல் :
இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது அரசனாலும் செய்ய முடியாத செயல்.

Q.2எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?v
Solution

எறும்பு தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுகிறது. .

Answer:

எறும்பு தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுகிறது. .

Q.4உலகம் முழுமையையும் எப்போது ஆளமுடியும்?v
Solution

நேர்மையான, இரக்க மனம் கொண்டிருக்கும் ஒருவராலேயே இந்தப் பரந்த உலகத்தை ஆள முடியும்.

Q.1யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?v
Solution

மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

Q.2வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?v
Solution

வள்ளலார் மக்களின் பசிப்பிணியை நீக்க தம் பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார். இவரின் மனிதநேயச் செயல் வடலூரில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Q.3அன்னை தெரசா கண்ணீர் விடக் காரணம் யாது?v
Solution

(i) சாலையோரத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரை அன்னை தெரசா பார்த்தார். தன் முகத்தைத் துணியால் மூடியபடியும், ஒரு கையில் பூனைக் குட்டியையும் வைத்திருந்தாள். அம்மூதாட்டியின் கைகளில் விரல்கள் இல்லை.
(ii) மனம் கலங்கியவராய் அம்மூதாட்டியைத் தொட்டுத் தூக்கினார். “சாலை ஓரத்தில் படுத்திருப்பது ஏன்?” எனக் கேட்டார்.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.2 மனிதநேயம்
(iii) “என்னைத் தொடாதீர்கள், என் நோய் உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும். என் உறவினர்களே என்னை வெறுத்து விலக்கிவிட்டனர். என்னுடன் பேசுவதில்லை. என்னைக் கண்டாலே விலகி ஓடுகின்றனர். இந்தப் பூனை மட்டுமே என்னுடன் இருக்கிறது” என அழுதார் மூதாட்டி. இதைக்கேட்ட அன்னை தெரசா கண்ணீர் விட்டார்.

Q.1உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் யாது?v
Solution

உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் இயல்பு நவிற்சியணி.

Answer:

உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் இயல்பு நவிற்சியணி.

Q.2உயர்வு நவிற்சி அணி என்பது யாது?v
Solution

ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

4சிறுவினா4 questions
Q.1எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் யாவை?v
Solution

எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் :
(i) தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள்.
(ii) இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி
செய்யுங்கள்.

Q.1கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு யாது?v
Solution

கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக் கால நிகழ்வு:
(i) இவர் சிறுவயதில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது சாலையோரத்தில் ஒரு சிறுவனைக் காண்பார். அவன் தன் தந்தையுடன் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருப்பான். ஏன் அந்தச் சிறுவன் தன்னைப் போல் பள்ளிக்கு வரவில்லை என்ற கேள்வி அவர் உள்ளத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது.
(ii) தன் ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் இக்கேள்வியைக் கேட்டார். “பணம் இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு வரவில்லை. வீட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யப் பணம் வேண்டும். எனவே அவன் பணம் ஈட்ட வேலை பார்க்கிறான்.” என்ற பதில் கிடைத்தது. அந்தப் பதில் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது.
(iii) அவருடைய மனிதநேயம் பிற்காலத்தில் அவரைப் பள்ளி செல்லாத குழந்தைகள் மேல் பரிவு கொள்ள வைத்தது. இந்த இளமைக்கால நிகழ்வு கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்தது.

Q.1“முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.v
Solution

‘முடிவில் ஒரு தொடக்கம்’ என்ற தலைப்பின் காரணம் :
(i) உலகில் தோன்றுகின்ற எல்லாவற்றிற்கும் மறைவு என்பது உண்டு. தாவரங்கள்கூட தன் அழிவினால் நமக்கு நன்மையைத் தருகின்ற மரங்களை வெட்டுகிறோம். அதன் வேர் முதல் நுனி வரை நாம் பயன்படுத்துகிறோம்.
(ii) ஆனால் மனிதர்கள் இறந்தால் எதற்கும் பயன்படுவதில்லை . இதற்கு மாறாக இப்பாடத்தில் ஹிதேந்திரனின் இறப்பு ஒரு சிறுமியின் வாழ்வைக் காப்பாற்றியுள்ளது.
(iii) ஹிதேந்திரனின் இறப்பு ஒரு முடிவாகும். அச்சிறுமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தைப் பொருந்தியதால் அந்த இதயம் உயிர்பெற்று தன் இயக்கத்தைத் தொடங்குகிறது.
(iv) ஹிதேந்திரனின் உடலில் நின்றுபோன இதயத்தின் செயல்பாடு அச்சிறுமியின் உடலில் தொடங்கிற்று. எனவே முடிவில் ஒரு தொடக்கம் என்ற தலைப்பு சரியாகப் பொருந்துகிறது.

Q.2இக்கதைக்குப் பொருத்தமாக மற்றொரு தலைப்பு இடுக.v
Solution

தொடரும் இயக்கம்.
Posted in Class 6 on June 20, 2024 June 20, 2024
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Facebook
Twitter
Instagram
Pinterest
Copyright © 2026 Samacheer Kalvi

5சிந்தனை வினா11 questions
Q.1பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?v
Solution

பறவைகளும் விலங்குகளும் சுதந்திரமாக வாழ நாம் செய்ய வேண்டுவன : சுற்றுச்சூழல் என்பது இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று. இது பறவை, தாவரம், விலங்கு மட்டுமின்றி மனிதனையும் சார்ந்ததாகும். பறவைகள், விலங்குகள் மனித வாழ்க்கையோடு ஒன்றியது. ஒன்றையொன்று சார்ந்து இருப்பவை. அப்படிப்பட்ட பறவைகள், விலங்குகள் வாழ நாம் வழி வகை செய்ய வேண்டும்.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.1 ஆசிய ஜோதி
(i) இவற்றின் வாழ்விடங்களான காடுகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். சனில்
(ii) பறவைகளைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்காமல் அவற்றைச் சிறகடித்து வானில் பறக்கவிட வேண்டும்.
(iii) பறவை, விலங்குகளை வேட்டையாடக் கூடாது.
(iv) விலையுயர்ந்த பட்டுப்புடவைக்காகப் பல பட்டுப் புழுக்களை அழிக்கிறோம். அவற்றைச் செய்யக் கூடாது.
(v) வீட்டு விலங்குகளிடம் அன்பாகப் பழக வேண்டும்.
(vi) சிறு தெய்வங்களுக்குக் காவு கொடுப்பதற்காக ஆடு, கோழி, சேவல் போன்றவை அழிக்கப்படுகிறது. அதனைத் தடுக்க வேண்டும்.
(vii) வண்டி இழுக்கப் பயன்படுத்தும் குதிரை, காளைமாடு ஆகியவற்றிற்குச் சரியான தீவனங்கள், நீர் போன்ற உணவுப் பொருட்களைக் கொடுக்க வேண்டும்.
(viii) பறவைகளைப் பாதுகாக்க மொட்டை மாடிகளில் நீர் வைத்தல், தானியங்களைப் போட்டு வைத்தல், போன்றவற்றைச் செய்யலாம்.

Q.1அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக.v
Solution

அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றி வேறு ஒரு நிகழ்வு :
ஒருநாள் அன்னை தெரசா வீட்டின் வாசற்படியில் நோயால் ஒரு பெண் மயங்கிக் கிடந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், கால தாமதத்தால் அந்தப் பெண் இறக்க நேரிட்டாள். இந்தக் கோர சம்பவத்தால் அன்னை தெரசா “சிறிய அளவில் மருத்துவமனை” ஆரம்பிப்பது என முடிவு செய்தார்.

Q.3ஹிதேந்திரனின் உண்மைக் கதையைப் படித்தபின் நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி யாது?v
Solution

ஹிதேந்திரனின் உண்மைக் கதையைப் படித்தபின் நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி என் இறப்புக்குப் பின் என்னுடைய உடல் உறுப்புகள் பிறருக்கு உதவும்படி செய்வதற்கு முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அவற்றைச் செய்வேன். என் நண்பர் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

Q.1நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த இடம் ஒன்றினை இயல்பு நவிற்சியாகவும் உயர்வு நவிற்சியாகவும் விவரிக்க.v
Solution

இயல்பு நவிற்சி : கன்னியாகுமரி தமிழ்நாட்டின் ஓர் முக்கிய ஊராகும். இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. இது ஒரு சுற்றுலாத் தலம். இங்கு விவேகானந்தர், காமராசர், காந்தியடிகள் ஆகியோருக்கு நினைவு மண்டபம் உள்ளது. 133 அடி திருவள்ளுவர் சிலை உள்ளது. இங்கு மகாத்மா காந்தியின் சாம்பல்(அஸ்தி கரைக்கப்பட்டது.
உயர்வு நவிற்சி :
(i) கன்னியாகுமரி இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஊராகும். இங்கு மட்டும்தான் வங்காள விரிகுடா கடலும், அரபிக்கடலும், இந்திய பெருங்கடலும் சங்கமிக்கிறது.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்
(ii) இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும்.
(iii) இங்கு உலகப் புகழ்பெற்ற விவேகானந்தர் நினைவு மண்டபம் பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும். அந்தளவிற்கு அழகாக இருக்கிறது. வானை முட்டும் அளவிற்கு 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
(iv) இங்குதான் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் சாம்பல் (அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுக்கும், காமராசருக்கும் புகழ்பெற்ற நினைவு மண்டபங்கள் உள்ளது. இவை எல்லாம் கன்னியாகுமரியின் பெருமை ஆகும்.
மொழியை ஆள்வோம்
பேசுக :

Q.1உங்கள் மீது அதிகம் அன்பு செலுத்துபவர்கள் யார்? நீங்கள் யார்யார் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள்? காரணம் கூறுக.v
Solution

(i) என் மீது அதிகம் அன்பு செலுத்துபவர் என் அம்மா.
(ii) அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா என என் உறவினர்கள் அனைவர் மீதும் அன்பு வைத்திருக்கிறேன்.
காரணம் :
நான் ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழ்கின்றேன். எனக்கு நினைவு தெரியும் போதிலிருந்தே என் வீட்டில், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா என அனைவரும் இருக்கின்றனர். என் நல்லது கெட்டது இவற்றில் எதுவானாலும் என்னோடு
சேர்ந்து மகிழவும் செய்வர் வருந்தவும் செய்வர். எனக்கு நேர்வதை அவர்களுக்கு நேர்ந்ததாக உணர்வர்.
எனக்கு ஏதாவது தேவை என்றால் நான் யாரிடம் வேண்டுமானாலும் கேட்பேன். என் தேவைகள் உடனே பூர்த்தியாகும். அதுமட்டுமின்றி என் வயதில் உள்ள மாமா, அத்தை பிள்ளைகள், பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் அனைவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகுவோம். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

Q.2நீங்கள் ஒருவருக்குப் பரிசு கொடுக்க விரும்பினால் யாருக்குக் கொடுப்பீர்கள்? என்ன கொடுப்பீர்கள்? எதற்காகக் கொடுப்பீர்கள்?v
Solution

(i) என் நண்பனுக்குப் பரிசு கொடுப்பேன்.
(ii) புத்த கம்.
(iii) எனக்கும் என் நண்பனுக்கும் புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். மற்றப் பரிசுகள் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும். ஆனால் புத்தகம் அறிவுப் பொருளாக இருக்கும். புத்தகத்தைப் படித்து அதனால் பெறுகின்ற அறிவை எக்காலத்திலும் மறக்கவியலாது. எனவே, புத்தகத்தை மட்டுமே பரிசாகத் தருவேன்.

Q.3பின்வரும் தலைப்புகளுள் ஒன்று பற்றி மூன்று மணித்துளிகள் பேசுக. அ) பொதுநலம் ஆ) சமூகத்தொண்டுv
Solution

அ) பொதுநலம்:
சுயநலமற்ற நலமே பொதுநலம். சுயநலம் என்பது நம்முடன் பிறந்தது. அதனை யாரும் நமக்குக் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. அது நம் உணர்வோடு கூடியதாக இருக்கும். நமக்கு நம் வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துப் பழகும் வழக்கம் இருந்தாலே பொதுநலம் வளரும். தன்னலமற்றவராய் வாழ்ந்து இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். அவர்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தங்கள் சுக துக்கங்களுக்கு இடம் கொடாமல் பிறர் நலனை மட்டுமே கருதி வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகும்.
பொதுநலம் நாடுபவர்கள் சுயநலமற்றவர்களாகத்தான் இருப்பார்கள் என்று கூறவியலாது. ஏனெனில் அவர்களிடம் பத்து சதவிகிதமாவாது சுயநலம் இருக்கும். வள்ளுவர். “குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்” என்று கூறியுள்ளார். ஒருவருடைய குணத்தை ஆராயும் போது அவற்றுள் எக்குணம் மேலோங்கி இருக்கின்றதோ அதனை வைத்து அவர் மதிப்பிடப்படுவார்.
அதுபோல்தான் சுயநலமும், பொதுநலமும், சுயநலக்காரர்கள் நூறு சதவிகிதம் சுயநலத்துடன் இருப்பர். பொதுநலக்காரர்கள் பெரும்பான்மை பொதுநலமும், சிறுபான்மை சுயநலமும் உடையவர்களாக இருப்பர். நாணயத்திற்கு இருபக்கம் போன்றதது தான் இச்சுயநலமும் பொதுநலமும்.
தன்னம்பிக்கை எவரிடம் அதிகமாகக் காணப்படுகிறதோ அவரிடம் பொதுநலம் அதிகமாகக் காணப்படும். சமுதாயத்திற்குச் செய்யப்படுகின்ற உதவியே பொதுநலம். பொதுநலம் என்பது பிறரைப் பார்த்து வருவது. பிறர் சொல்லித் தெரிவது. உணர்வோடு தொடர்புடையதாக இருக்கும். மற்றவர்களுக்கு நாம் செய்கின்ற சேவைகள், உதவிகள் எல்லாமே பொதுநலமாகும். கண்தானம், இரத்ததானம், உறுப்புதானம் : என இவையெல்லாமே பொதுநலம்தான். மனிதநேயம் எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கே பொதுநலம் மலர்கிறது.
பொதுநலம் என்பது சுயநலமற்றது. சாதி மதம் பாராதது, ஏழை எளியவர் எனக் கருதாது. பிறருக்காக உழைப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது, பிறரை அரவணைப்பது, ஏழைக் குழந்தைகளைக் கொஞ்சுதல் அவர்களுக்குத் தேவையானவற்றை அளிப்பது இவையெல்லாம் பொதுநலம்தான். பொதுநலம் உடையவரிடம் இருக்க வேண்டியது இனிமை, எளிமை, பொறுமை, பொதுமை ஆகிய பண்புகளாகும். இப்பண்புகளில் சிறந்தவர்கள் நோய்நொடிகளற்று நிம்மதியாக வாழ்வார்கள்.
‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர் பெருமான். அவரன்றோ பொதுநலத்தின் முன்னோடி. ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’ என்பதைப் போல் பொதுநலம் அமைய வேண்டும். பொது நலத்தில் நம் உலகத்திற்கே முன்னோடியாக வாழ்பவர்கள் விவசாயிகள்தான். உலகமே அவர்களின் உழைப்பில்தான் வாழ்கிறது என்றால் அது மிகையாகாது.
அவசர சிகிச்சைக்கான ஊர்தி பொதுநலம் கருதியே இயங்குகிறது. பொதுநலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்பதால் சுயநலச் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாது. பொதுநலம் காப்பவர்கள் சூரியன், சந்திரன் போன்றும் காற்றும் மழையும் போன்று அனைவருக்கும் பொதுவாக இருந்து செயலாற்ற வேண்டும்.
ஆ) சமூகத் தொண்டு :
பல குடும்பங்கள் சேர்ந்தது சமூகம், சமுதாயம் என அழைக்கப்படுகிறது. அந்த சமுதாயம் மேம்படவும், மக்களின் வாழ்வு மேம்படவும், பலரும் முயல்கின்றனர். குழு அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் தொண்டு செய்கின்றனர். அவ்வாறு மக்களுக்குச் செய்யும் தொண்டு மகேசனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணி செயலாற்றுகிறார்கள். நாம் செய்யும் செயல்களை நம் கடமை என எண்ணிச் செயல்படவேண்டும்.
“உயிர் இனங்களுக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டாகும். நடமாடும் கடவுளர்களாகிய மக்களுக்கு ஒன்றைச் செய்தால் அது கோயிலில் உள்ளவர்க்குச் செய்யும் தொண்டாகும்” என்பது திருமூலரின் கருத்து. இவ்வாறு மக்களினத்திற்குச் செய்யும் தொண்டே மகத்தானது.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்
தற்போது வளர்ந்து வரும். இணையச் செயல்பாடுகளால் சமூகத்தொண்டு செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. புலனம் குழு, முகநூல் போன்றவற்றின் மூலம் பல சேவைகளைச் செய்யவியலும். தற்போதுள்ள தேவைகள் என்று சிந்தித்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழிப் பொருட்கள் பயன்பாடுகளைத் தவிர்த்தல், ஏரி, குளங்கள் தூர் வாருதல், காடுகள் அழிப்பதைத் தடுத்தல், விவசாய நிலங்களை விற்காமல் பார்த்துக் கொள்ளுதல், ஆங்காங்கு மரக்கன்றுகள் நடுதல் போன்றவையாகும். இளைஞர்கள் இவற்றைச் சரிசெய்வதற்கு அரசு உதவியோடும், பொதுமக்கள் துணையோடும் செயலாற்ற வேண்டும்.
கல்வி, சுகாதாரம், விவசாயம் இவையனைத்தும் மக்களின் அவசிய தேவைகள் ஆகும். இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். வழி இல்லாத ஊருக்கு வழி அமைத்தல், ஊரைத் தூய்மை செய்தல், தூய்மை பற்றி மக்களுக்கு எடுத்துத் கூறுதல், உடல் நலத்துடன் வாழ்வதற்குரிய வழிகளை எடுத்துக் கூறுதல், விழாக் காலங்களில் கூட்டத்தை நெறிப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். எப்பொழுதும் எவ்வுதவியும் செய்வதற்குத் தயாராய் இருக்க வேண்டும்.
சமூகத் தொண்டினை ஈடுபாட்டுடன் செய்து வந்தால் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமும் சிறந்து விளங்கும். துன்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். திறந்த மனமும் அளவற்ற ஆற்றலும் உள்ளவர்களாய் எதையும் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் எதிர்கொண்டு செயலாற்ற வேண்டும். உன்னத இலட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்து தொண்டாற்ற வேண்டும். நாட்டைப் பாதுகாப்போம். உயர்த்துவோம்.
அகர வரிசைப்படுத்துக
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 1
1. அன்பு
2. ஆடு
3. இரக்கம்
4. ஈதல்
5. உயிர்
6. ஊக்கம்
7. எளிமை
8. ஏது
9. ஐந்து
10. ஒழுக்கம்
11. ஓசை
12. ஔ வை
கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதை எழுதுக
அ) அன்பு
ஆ) நட்பு
இ) உதவி
அ) அன்பு :
கேட்டுப் பெறுவதல்ல அன்பு
கேட்காமலே பெறுதல் சிறப்பு
அன்பு பேச்சில் மட்டும்
போதுமா? செயலில் வேண்டாமா?
பகையைப் போக்கிடும் அன்பு
வெற்றியைத் தந்திடும் அன்பு
கண்களில் அன்பைக் காட்டு
கண்முன் கடவுளே நிற்பார்.
ஆ) நட்பு :
காயத்திற்கு மருந்தாகும்
அழியாச் சுவடாகும்
தவற்றைச் சுட்டிக்காட்டும்
குறைகளைத் திருத்தும்
தனிமையை இனிமையாக்கும்
சோர்வில் உற்சாகமூட்டும்
நீயில்லையேல் நான்
மழைக் கானா நிலமாய்
வாடி வருந்துவேன்.
இ) உதவி :
கல்லாதார்க்குக் கல்வியைக் கொடு
இல்லாதார்க்குப் பொருளைக் கொடு
கைகொடுக்கும் கையாய் இருந்திடு
கார்மேகத்தைப் போல் இருந்திடு
உயர்ந்தோர் தாழ்ந்தோர் பார்க்காதே
உதவி செய்வதில் தயங்காதே
பிறர்க்கு விதைக்கும் விதையைத்தான் – நீ
அறுவடை செய்வாய் மறவாதே!
பத்தியைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க
அரசர் ஒருவர் தன் மக்களிடம் ‘அமைதி’ என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் ஓவியமாக வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். அரசர் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். அழகிய மலையின் அடிவாரத்தில் ஓர் ஏரி இருப்பது போல் ஓவியம் ஒன்று இருந்தது.
அது மிகவும் சிறப்பாக இருந்தது. பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களின் ஓவியம் ஒன்று இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியைத் தங்களுக்குத் தோன்றியபடி ஓவியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். ஓர் ஓவியத்தில் ஒரு மலைமேல் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் படம் வரையப்பட்டிருந்தது. அதிலேயே இடியோடு மழை கொட்டிக் கொண்டு இருந்தது. சற்று உற்றுப் பார்த்தால் அருவியின் கீழே இருந்த மரம் ஒன்றில் பறவைக் கூட்டில் பறவை ஒன்று தனது குஞ்சுகளோடு இருந்தது.
“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?” என்று அரசர் கேட்டார். அந்த ஓவியர் வந்தார். “இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?” என்றார் அரசர். அதற்கு ஓவியர் “மன்னா பிரச்சினையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி” என்றார்.

Q.1அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?v
Solution

அமைதி என்றவுடன் என் மனதில் தோன்றுவது “தேவையற்ற பேச்சைத் தவிர்த்து, அவசிய வேலைகளை மட்டும் செய்து பிறரைத் துன்புறுத்தாமல் இருப்பதே அமைதி”. மற்றும் அமைதி என்றால் தியானம் நினைவிற்கு வரும். அன்னை தெரசா நினைவிற்கு வருவார்.

Q.2இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது?v
Solution

பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி என்று இக்கதையில் கூறப்படுகிறது.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

Answer:

பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி என்று இக்கதையில் கூறப்படுகிறது.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

Q.3நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?v
Solution

ஓர் அழகான பெரிய கோவில், அங்குள்ள கருவறை, மண்டபம், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி வாங்கிப் போடுவது போன்ற காட்சி. இக்காட்சியை ஓவியமாக வரைந்து இருப்பேன்.

Q.4இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.v
Solution

எங்கே அமைதி?
மொழியோடு விளையாடு
கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 2
இவை போன்று மூன்று காலங்களையும் காட்டும் சொற்றொடர்களை அமைக்க.
1. நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது.
2. இன்று எங்கள் ஊரில் மழை பெய்கிறது.
3. நாளை எங்கள் ஊரில் மழை பெய்யும்.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 3
1. நேற்று என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுத்தார்.
2. இன்று என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுக்கிறார்.
3. நாளை என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுப்பார்.
கட்டங்களில் மறைந்துள்ள அணிகலன்களின் பெயர்களை எழுதுக
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 4
எ.கா. கம்ம ல்
அணிகலன்களின் பெயர்கள் :
1. கம்மல்
2. கடுக்கன்
3. சூளாமணி
4. மோதிரம்
5. சிலம்பு
6. வளையல்
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்
1. நான் எல்லாரிடமும் அன்பு காட்டுவேன்.
2. உறுப்பு தானத்தின் இன்றியமையாமையை எனக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துச் சொல்வேன்.
3. பிறருக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வேன்.
4. பிற உயிர்களைத் துன்புறுத்த மாட்டேன்.
5. எப்போதும் மனிதநேயத்துடன் நடந்து கொள்வேன்.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்
கலைச்சொல் அறிவோம்
1. மனிதநேயம் – Humanity
2. கருணை – Mercy
4. நோபல் பரிசு – Nobel Prize
3. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – Transplantation
5. சரக்குந்து – Lorry