Class 8 Tamil · Chapter 2

Samacheer Class 8 Tamil - இயல் 2

62 textbook Q&A62 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 2 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 7சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 22குறுவினா 14சிறுவினா 14சிந்தனை வினா 3நெடுவினா 1மதிப்பீடு 1
Your Progress - Chapter 20% complete
1கற்பவை கற்றபின்7 questions
Q.1மலை, அருவி, ஓடை, மரங்கள். வயல்கள் இடம் பெறுமாறு ஓர் இயற்கைக் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.v
Answer:

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Q.1மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி எழுதுக.v
Answer:

சூறாவளி :
சூறாவளி என்பது கடலில் ஏற்படுகின்ற குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அல்லது குறைந்த அழுத்த மண்டலமாகும். புயலின் மத்தியில் குறைந்த அழுத்தமும் அதனைச் சுற்றி அதிக அழுத்தமும் உருவாகியிருந்தாலோ, புயலின் மத்தியில் அதிக 15 அழுத்தமும் அதனைச் சுற்றிலும் குறைந்த அழுத்தமும் உருவாகியிருந்தாலோ சூறாவளி உண்டாகும். இது கடற்பகுதியிலிருந்து நிலப்பகுதியைக் கடக்கும்.
சுனாமி :
கடலுக்கு அடியில் ஏற்படுகின்ற நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால், திடீரென கடல்நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்து கரையைச் சேர்ந்து அங்கே பேரழிவுகளை ஏற்படுத்தும். இதனைக் கடற்கோள் என்றும் ஆழிப் பேரலை என்றும் கூறுவர்.
பூகம்பம் : –
இதனைப் பூமி அதிர்ச்சி அல்லது நிலநடுக்கம் என்று கூறுவர். நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும்.

Q.2இயற்கைச் சீற்றங்கள் பற்றிய புகைப்படங்களை நாளேடுகளிலிருந்து திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.v
Answer:

Q.1நில வளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்து எழுதுக.v
Answer:

நிலவளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகள் :
(i) நம்மைச் சுற்றியுள்ள இடங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
(ii) காடுகள், மலைகள் அழிக்கப்படக்கூடாது.
(iii) வனவிலங்குகள், பறவைகளைப் பாதுகாத்தல்.
(iv) உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளதால் அவை அனைத்தையும் பாதுகாத்தல்.
(v) நீர்நிலைகளை கோடைக்காலத்தில் தூரெடுத்து வைத்து மழைக் காலத்தில் நீரைத் தேக்கி வைத்தல். அதன் மூலம் நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்த்தல்.
(vi) நம் தேவைக்கு மரங்களை வெட்டினாலும் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல்.
(vii) நதிப்படுகைகளில் மரங்களை நடுதல்.
(viii) இயற்கை முறை வேளாண்மையை மேற்கொள்ளுதல்.

Q.2தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்த படத்தொகுப்பு உருவாக்குக.v
Answer:

Q.1‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.v
Answer:

இடம் : குறிஞ்சி புதர்
கதாபாத்திரங்கள் : வெட்டுக்கிளி, சருகுமான்
(குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அங்கு வந்த கூரன் என்ற சருகுமானிடம் வெட்டுக்கிளி பேசியது…)
காட்சி – 1
வெட்டுக்கிளி :
“என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்கும் வேகமாக ஓடுகிறாய்?”
சருகுமான் :
காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்பொழுது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. நான் எங்காவது ஒளிய வேண்டும். எனக்குச் சோர்வாக வேறு இருக்கிறது. பல மணி நேரமாக ஓடி ஓடிக் களைத்துப் போய்விட்டேன்.
(சிறுத்தை துரத்திக் கொண்டு வருவதால் கூரன் மரக்கிளைக்கு அடியில் ஒளிந்து கொண்டு வெட்டுக்கிளியை எச்சரித்தது.)
சருகுமான் : வெட்டுக்கிளியே! நீ வளவளவென்று பேசக்கூடிய ஆள். பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே. அது என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கிவிடும்.
காட்சி – 2
(பித்தக்கண்ணு சத்தமில்லாமல் மரக்கிளைக்கு அருகில் வந்து சேர்ந்தது.)
பித்தக்கண்ணு : கூரன் இங்கு வந்தாளா? அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?
(வெட்டுக்கிளி பதில் கூறவில்லை . ஆனால் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது. பித்தக்கண்ணு வெட்டுக்கிளியின் செய்கையால் கூரன் ஒளிந்திருந்த மரத்தடிப் பக்கம் சென்று மோப்பமிட்டது. மோப்பம் பிடித்தபடி சுற்றி வந்தது. அதற்குக் கூரனின் உடல்வாடை தெரியவில்லை . முதல் நாள் இரவு அந்த மரத்தடியில் தங்கியிருந்த புனுகுப்பூனையின் துர்நாற்றமே எட்டியது. எனவே அது அந்த இடத்தைவிட்டு வேறு பக்கம் சென்றது. கூரன் : (தன்னைக் காட்டிக் கொடுக்க எண்ணிய வெட்டுக்கிளியை மிரட்ட வேண்டும் என்று எண்ணியபடி வெளியே வந்தது.)
கூரன் :
முட்டாள்! பித்தக்கண்ணு முன் அப்படிக் குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திணித்துத் திங்காமல் விட்டது அதிசயம்தான். இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்.(சொல்லிக் கொண்டே கூரன் தன் கூர்மையான பாதங்களை மண்ணின் மீது அழுத்தி எகிறிக் குதித்தது. குறிஞ்சிப்புதர் ஆடியதில் வெட்டுக்கிளி கீழே விழப்போனது. கூரன் காட்டுக்குள் ஓடியது. அன்றிலிருந்து வெட்டுக்கிளி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறது.)

Q.1‘வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.v
Answer:

(எ.கா) அவன் வாழ்க. (ஆண்பால்)
(i) அவள் வாழ்க. (பெண்பால்)
(ii) மக்கள் வாழ்க. (பலர்பால்)
(iii) அது வாழ்க. (ஒன்றன்பால்)
(iv) ‘அவை வாழ்க. (பலவின்பால்)
(எ.கா) நாம் வாழ்க. (தன்மை )
(i) நீங்கள் வாழ்க. (முன்னிலை)
(ii) அவர்கள் வாழ்க. (படர்க்கை)

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.22 questions
Q.1பள்ளிக்குச் சென்று கல்வி ……………… சிறப்பு அ) பயிலுதல் ஆ) பார்த்தல் இ) கேட்டல் ஈ) பாடுதல்v
Answer:

அ) பயிலுதல்

Q.2செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ………… அ) கடல் ஆ) ஓடை இ) குளம் ஈ) கிணறுv
Answer:

ஆ) ஓடை

Q.3‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………. அ) நன் + செய் ஆ) நன்று + செய் இ) நன்மை + செய் ஈ) நல் + செய்v
Answer:

இ) நன்மை + செய்

Q.4‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………. அ) நீளு + உழைப்பு ஆ) நீண் + உழைப்பு இ) நீள் + உழைப்பு ஈ) நீள் + உழைப்புv
Answer:

ஈ) நீள் + உழைப்பு

Q.5சீருக்கு +ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………. அ) சீருக்கு ஏற்ப ஆ) சீருக்கேற்ப இ) சீர்க்கேற்ப ஈ) சீருகேற்பv
Answer:

ஆ) சீருக்கேற்ப

Q.6ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………… அ) ஓடைஆட ஆ) ஓடையாட இ) ஓடையோட ஈ) ஓடைவாடv
Answer:

ஆ) ஓடையாட

Q.1வானில் கரு ………… தோன்றினால் மழை பொழியும் என்பர். அ) முகில் ஆ) துகில் இ) வெயில் ஈ) கயல்v
Answer:

அ) முகில்

Q.2முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ………………..யும் ஓட்டிவிடும். அ) பாலனை ஆ) காலனை இ) ஆற்றலை ஈ) நலத்தைv
Answer:

ஆ) காலனை

Q.3‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……….. அ) விழுந்த + அங்கே ஆ) விழுந்த + ஆங்கே இ) விழுந்தது + அங்கே ஈ) விழுந்தது + ஆங்கேv
Answer:

ஈ) விழுந்தது + ஆங்கே

Q.4‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………… அ) செ + திறந்த ஆ) செத்து + திறந்த இ) செ + இறந்த ஈ) செத்த + இறந்தv
Answer:

ஈ) செத்த + இறந்த

Q.5பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………… அ) பருத்தி எல்லாம் ஆ) பருத்தியெல்லாம் இ) பருத்தெல்லாம் ஈ) பருத்திதெல்லாம்v
Answer:

ஆ) பருத்தியெல்லாம்

Q.1செவ்விந்தியர்கள் நிலத்தைத் ………………….. மதிக்கின்ற னர். அ) தாயாக ஆ) தந்தையாக இ) தெய்வமாக ஈ) தூய்மையாகv
Answer:

அ) தாயாக

Q.2‘இன்னோசை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………… அ) இன் + ஓசை ஆ) இனி + ஓசை இ) இனிமை + ஓசை ஈ) இன் + னோசைv
Answer:

இ) இனிமை + ஓசை

Q.3பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….. அ) பால் ஊறும் ஆ) பாலூறும் இ) பால்லூறும் ஈ) பாஊறும்v
Answer:

ஆ) பாலூறும்
தொடரில் அமைத்து எழுதுக
1. வேடிக்கை – விபத்து நேரிட்டால் வேடிக்கை பார்க்காமல் உதவி செய்ய வேண்டும்.
2. உடன்பிறந்தார் – உற்றார், உறவினர், உடன்பிறந்தார் , நண்பர் என அனைவருடனும் பாகுபாடின்றி அன்புடன் பழக வேண்டும்.

Q.1மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று ……………….. அ) மாடு ஆ) வயல் இ) புல் ஈ) மேய்ந்த துv
Answer:

ஈ) மேய்ந்தது

Q.2பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று …………………. அ) படித்தான் ஆ) நடக்கிறான் இ) உண்பான் ஈ) ஓடாதுv
Answer:

அ) படித்தான்

Q.3பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ………… அ) செல்க ஆ) ஓடு இ) வாழ்க ஈ) வாழியv
Answer:

அ) செல்க

Q.1புகழாலும் பழியாலும் அறியப்படுவது ………………… அ) அடக்கமுடைமை ஆ) நாணுடைமை இ) நடுவுநிலைமை ஈ) பொருளுடைமைv
Answer:

இ) நடுவுநிலைமை

Q.2பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ……………. அ) வலிமையற்றவர் ஆ) கல்லாதவர் இ) ஒழுக்கமற்றவர் ஈ) அன்பில்லாதவர்v
Answer:

ஆ) கல்லாதவர்

Q.3‘வல்லுருவம்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………. அ) வல் + உருவம் ஆ) வன்மை + உருவம் இ) வல்ல + உருவம் ஈ) வல்லு + உருவம்v
Answer:

ஆ) வன்மை + உருவம்

Q.4நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல் ……………. அ) நெடுநேர் ஆ) நெடுத்தேர் இ) நெடுந்தேர் ஈ) நெடுமைதேர்v
Answer:

இ) நெடுந்தேர்

Q.5‘வருமுன்னர்’ – எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ………………. அ) எடுத்துக்காட்டு உவமை அணி ஆ) தற்குறிப்பேற்ற அணி இ) உவமை அணி ஈ) உருவக அணிv
Answer:

இ) உவமை அணி

3குறுவினா14 questions
Q.1ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?v
Answer:

ஓடை கற்களில் உருண்டும், தவழ்ந்தும், நெளிந்தும், சலசல என்ற ஒலி எழுப்பியபடி ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்.

Q.2ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்?v
Answer:

ஓடை எழுப்பும் ஒலிக்கு சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழங்கும் முழவையொலியை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்.

Q.1கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?v
Answer:

கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது : கடலில் விரைந்து வந்த கப்பல் எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்த து.

Q.2புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?v
Answer:

புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு : தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

Q.3கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?v
Answer:

கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி : சித்தர்கள் வாழும் கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

Q.1விலை கொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?v
Answer:

விலைகொடுத்து வாங்க இயலாதவை : காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் யாருக்கும் சொந்தமானவை அல்ல. எனவே இவற்றை விலை கொடுத்து வாங்க இயலாது.

Q.2நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?v
Answer:

நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு : செவ்விந்தியர்கள் நிலத்தைத் தாயாகக் கருதுகிறார்கள். தாய் சேய் உறவு.

Q.3எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?v
Answer:

(i) எருமைகள் கொல்லப்படுவது,
(ii) எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தல்,
(iii) தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருதல் ஆகியனவற்றைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.

Q.1சான்றோர்க்கு அழகாவது எது?v
Answer:

தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

Q.2பழியின்றி வாழும் வழியாக திருக்குறள் கூறுவது யாது?v
Answer:

தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

Q.3‘புலித் தோல் போர்த்திய பசு’ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?v
Answer:

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.
திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக

Q.1தக்கார் தகவிலரெ என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.v
Answer:

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

Q.2தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.v
Answer:

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க
இடங்கண்ட பின்அல் லது.
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. வலியில் நிலைமையான் வல்லுருவம் ……………
புலியின்தோல் ……… மேய்ந் தற்று.
2. விலங்கொடு …………. அனையர் ……………….
கற்றாரோடு ஏனை யவர்.
1. பெற்றம், போர்த்து
2. மக்கள், இலங்குநூல்
சீர்களை முறைப்படுத்தி எழுதுக

Q.1யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.v
Answer:

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.
படங்களுக்கு பொருத்தமான திருக்குறளை எழுதுக1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.2. கடல்ஓடா கால்வல் நெடுந்நேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து.

4சிறுவினா14 questions
Q.1ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?v
Answer:

(i) நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.
(ii) அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
(iii) கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.
(iv) குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
(v) நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது

Q.1புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?v
Answer:

புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள்:
(i) வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
(ii) அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.
(iii) தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

Q.2கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?v
Answer:

கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் : திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.

Q.1நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.v
Answer:

(i) “ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை.
(ii) இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்கள்.
(iii) இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள்.
(iv) இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.
(v) இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீ ரன்று; எமது மூதாதையரின் குருதியாகும்” இவ்வாறு சியாட்டல் கூறுகிறார்.

Q.2எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?v
Answer:

சியாட்டல் கூறும் ஒரே குடும்பம் :
(i) “இந்தப் பூமி எமது மக்களுக்குத் தாயாகும். அதனால் இப்பூமியை எமது மக்கள் எப்பொழுது மறப்பதேயில்லை.
(ii) நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியது.
(iii) இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.
(iv) மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்” என்று சியாட்டல் கூறுகிறார்.

Q.3வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?v
Answer:

வியங்கோள் வினைமுற்று விகுதிகள் : க, இய, இயர், அல்.

Q.4ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?v
Answer:

மொழியை ஆள்வோம்
கேட்க :

Q.1இயற்கை என்னும் தலைப்பில் அமைந்த புதுக்கவிதைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.v
Answer:

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

Q.1காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)v
Answer:

ஆ! காட்டின் அழகுதான் என்னே !

Q.2ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித் தொடராக மாற்றுக.)v
Answer:

பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.

Q.3அதிகாலையில் துயில் எழுதுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)v
Answer:

அதிகாலையில் துயில் எழு.

Q.4முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித் தொடராக மாற்றுக.)v
Answer:

முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.

Q.5காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)v
Answer:

காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?
கடிதம் எழுதுக

Q.1விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.v
Answer:

25, கம்பர் தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி – 2.
19-5-2019.
அன்புள்ள நண்பனுக்கு,
உன் அன்புத் தோழன் ராம் எழுதுவது. நலம். நலமறிய ஆவல். உன் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, தம்பியை விசாரித்ததாகக் கூறவும்.
சென்ற வாரம் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதாகவும் அடுத்து மாநில அளவில் நடக்கப் போகும் விளையாட்டுப் போட்டிகளுக்கு நீ பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தித்தாளில் படித்தேன். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ந்தனர்.
உனக்கு விளையாடுவதில் ஆர்வம் மிகுதி என நானறிவேன். அதன் பயனாய் நீ உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளாய். இவ்வெற்றி உன் படிப்பிற்கான முழு செலவையும் அரசாங்கத்தை ஏற்க வைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.
உன்னுடைய இப்பயணம் மேலும் மேலும் வெற்றிப் பயணமாய்த் தொடர வேண்டும். முயற்சியைக் கைவிடாதே! வாழ்த்துகள்.
இப்படிக்கு
உன் அன்புத் தோழன்
ராம். அ.
உறைமேல் முகவரி
பெறுநர் அஞ்சல் தலை
ம.மாதேஷ்,
த/பெ. மணி,
எண் – 30, பாரி தெரு,
சென்னை – 20.
மொழியோடு விளையாடு
உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக
1. நடக்கிறது – நட
2. போனான் – போ
3. சென்றனர் – செல்
4. உறங்கினாள் – உறங்கு
5. வாழிய – வாழ்
6. பேசினாள் – பேசு
7. வருக – வா
8. தருகின்றனர் – தா
9. பயின்றாள் – பயில்
10. கேட்டார் – கேள்நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்…
1. நீர்நிலைகளைத் தூய்மையாக வைக்க உதவுவேன்.
2. மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
கலைச்சொல் அறிவோம்
1. பழங்குடியினர் – Tribes
2. சமவெளி – Plain
3. பள்ளத்தாக்கு – Valley
4. புதர் – Thicket
5. மலைமுகடு – Ridge
6. வெட்டுக்கிளி – Locust
7. சிறுத்தை – Leopard
8. மொட்டு – Bud

5சிந்தனை வினா3 questions
Q.1வள்ளைப்பாட்டு என்பது நெல்குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?v
Answer:

(i) ஏற்றப்பாடல் – ஏற்றத்தின் மூலம் நீர் இறைக்கும்போது பாடப்படும்.
(ii) ஏர்ப்பாடல் – வயலில் மாடுகளைப் பூட்டி ஏர் உழும்போது பாடப்படும்.
(iii) நடவுப் பாடல் – வயலில் நாற்று நடும்போது பாடப்படும்.
(iv) களை எடுப்புப் பாடல் – பயிர்களின் இடையே உள்ள வேண்டாத புல் பூண்டுகளைக் களைந்து எடுக்கும்போது பாடப்படும்.
(v) அறுவடைப் பாடல் – நெல் முற்றியவுடன் அறுவடை செய்யும் போது பாடப்படும்.
(vi) போராடிப் பாடல் – நெற்கதிர்களை உதிர்த்து எடுப்பதற்கு போரடிப்பார்கள். அப்போது பாடப்படும்.இவையனைத்தும் உழவர்கள் பாடும் பாடல்கள் ஆகும். இதேபோல் மீனவர் பாடல், வண்டிக்காரன் பாடல், சுண்ணாம்பு இடிப்போர் பாடல், படகுக்காரன் பாடல், உப்பளத் தொழிலாளர் பாடல் எனப் பல வகையான தொழில் பாடல்கள் உள்ளன.

Q.1இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?v
Answer:

இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
புயல், மழை :
ஏரிக்கரை மற்றும் ஆற்றோரச் சாலைகளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்; மரங்களின் கீழே நிற்பதைத் தவிர்க்க வேண்டும். சாக்கடை நீர் வடிகால்கள், வாய்க்கால்கள் போன்றவற்றை அடைப்பில்லாமல் சீர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கழிவுநீர்த் தொட்டிகள் எப்போதும் மூடிய நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும்.
சாலையில் மின்கம்பிகள் விழுந்திருந்தால் அவற்றைத் தொடக்கூடாது. மின்சாதனங்கள், எரிவாயுப் பொருள்கள் பழுதுபட்டிருந்தால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தற்போது மின்சார வாரியமே புயல், மழை என்றால் மின்சாரத்தைத் துண்டித்து விடுகின்றனர். புயலின்போது வெளியில் செல்லாமல் இருப்பது சாலச் சிறந்தது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வாகனங்களில் செல்லலாம்.
வெள்ளப் பெருக்கென்றால் வேடிக்கை பார்க்கச் செல்வதைத் தவிர்க்கலாம். இடி மின்னலின்போது மரத்தின்கீழ் நிற்கக் கூடாது. செல்பேசி, வீட்டுச்சாவி, தீப்பெட்டி மெழுகுவர்த்தி, தண்ணீர்ப் புட்டிகள் முதலிய அவசியமான பொருள்களை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும். முதலுதவி பெட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் இருப்பது அவசியம். அவசர உதவிக்கான தொலைபேசி எண்களை அனைவரும் அறிந்திருத்தல் அவசியம்.
நிலநடுக்கம் :
நிலநடுக்கத்தின் போது அடுக்ககங்களில் இருப்பவர்கள் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து வெட்ட வெளியில் நிற்கலாம். மரங்கள், மின்கம்பங்கள் இல்லாத இடமாகப் பார்த்து நிற்க வேண்டும். பாலங்களைக் கடக்கக்கூடாது.

Q.1நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?v
Answer:

நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நான் கருதுவன :
(i) நிலங்களை மண் அரிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக நிறைய மரங்களை வளர்த்தல்.
(ii) ஏரி, குளம், போன்ற நீராதாரங்களைத் தூர்வாரச் செய்து மழைக் காலங்களில் நீரைச் சேமித்தல் மற்றும் அதிகளவில் அணைகளைக் கட்டுதல்.
(iii) ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர்த் தொட்டித் திட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றச் செய்வேன்.
(iv) நம் நாட்டின் மண்வளத்திற்கேற்ற புதிய வேளாண்மையைப் பரிந்துரை செய்தல். இயற்கை வேளாண் திட்டத்தை கட்டாயப்படுத்துதல்.
(v) நெகிழியைப் பயன்படுத்தாமல் தவிர்த்தல்.
(vi) வீட்டு விலங்குகள், வனவிலங்குகள் அழியாமல் பாதுகாத்தல்.
(vii) செல்பேசி கோபுரங்கள் இல்லாமல் செல்பேசியை இயங்கச் செய்தல்.
(viii) சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.

6நெடுவினா1 questions
Q.1தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.v
Answer:

முன்னுரை :
தாய்மொழி, தாய்நாடு மீது அனைவருக்கும் பற்று இருக்கும். அதன்படி செவ்விந்தியர்கள் தாய்மண் மீது வைத்துள்ள பற்றினைப் பற்றிய சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவரான சியாட்டல் கூறுவதைப் பார்ப்போம்.
ஒரே குடும்பம் :
காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் அனைவருக்கும் பொதுவானவை. இப்பூமியில் உள்ள ஒவ்வொரு ஊசியிலையும் அனைத்துக் கடற்கரைகளும் கருமரங்களில் தவழும் பனித்துளிகளும் இன்னிசை எழுப்பும் பூச்சி வகைகளும் இவர்களுக்குப் புனிதமானவை. இந்தப் பூமி. எமது மக்களுக்குத் தாயாகும். இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள், மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள். மலைமுகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்.
நீர்நிலைகள் :
“ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை. இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்கள். இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர். இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீ ரன்று; எமது மூதாதையரின் குருதியாகும்.”
தாய் தந்தை :
இந்தப் பூமியை விலை கொடுத்து வாங்குபவர்கள் அயலவர்கள். இப்பூமி அவர்களின் உடன்பிறந்தார் அன்று. பகைவரே. இதனை வாங்குபவர்கள் வாங்கிய பின் இந்நிலத்தைவிட்டுச் சென்றுவிடுவார்கள். மண்ணை மறந்துவிடுவார்கள். இப்பூமியைப் பாலைவனமாக்கிவிடுவார்கள். ஆனால் செவ்விந்தியர்கள் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதுவார்கள்.

7மதிப்பீடு1 questions
Q.1‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக.v
Answer:

முன்னுரை :
தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமது முன்னோர்களின் வாழ்வை வருங்காலத் தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது என்று எண்ணினர். எனவே காடுகள், செடிகொடிகள், விலங்குகள் தொடர்பான கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கு சொல்லிய கதைகளுள் ஒன்றைப் பற்றிப் பார்ப்போம்.
குறிஞ்சிப்புதர் :
நடுக்காட்டில் ஓடும் ஓடையையுடைய பள்ளத்தாக்கில் பெரிய மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அதன்மீது பச்சைப்பாசி படர்ந்திருந்தது. பூச்சி புழுக்கள், நத்தைகள் அந்த மரத்தை மொய்த்துக் கொண்டிருக்கும். காட்டு விலங்குகள் நீர் அருந்த அந்த ஓடைக்கு வரும். தாகம் தணிந்ததும் சிறு விலங்குகள் பக்கத்திலுள்ள அடர்ந்த குறிஞ்சிப் புதரில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.
வெட்டுக்கிளியும் சருகுமானும் (கூரனும்) :
குறிஞ்சிப் புதரில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஒரு வாயாடி வெட்டுக்கிளி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதால் அடிக்கடி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும். கூரன் என்ற சருகுமான் சிறிய பிராணி, கூச்சப்படும் விலங்கு. அதனால் வெட்டுக்கிளி பயப்படவில்லை. கூரன் குறிஞ்சிப் புதர் அருகே இளைப்பாற வந்தது.
கூடி ஒளிந்த கூரன் :
கூரனைப் பார்த்த வெட்டுக்கிளி, “இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தாய்? ஏன் இங்கும் அங்கும் வேகமாய் ஓடுகிறாய்?” என்று கேட்டது. கூரன், “காட்டின் அந்தக்கோடியில் இருந்தேன். உன்னிடம் பேச நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்துகிறது” என்று கூறிவிட்டு அம்மரத்தடியில் ஒளிந்து கொண்டது. வெட்டுக்கிளியிடம் நீ “பித்தக்கண்ணுவிடம் நான் இங்கு இருப்பதைச் சொல்லிவிடாதே. என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கிவிடும்…” என்றது. பித்தக்கண்ணு என்பது பெரிய, மஞ்சள் நிற கண்களை உடைய சிறுத்தையாகும்.
வெட்டுக்கிளியின் செயல் :
பித்தக்கண்ணுவைப் பக்கத்தில் பார்ப்பது வெட்டுக்கிளிக்கு இதுதான் முதல்முறை. உற்சாக மிகுதியால் பதில் சொல்ல எண்ணிய பொழுது கூரனுக்கு அளித்திருந்த வாக்குறுதி நினைவுக்கு வந்தால் வாயை மூடிக் கொண்டது. ஆனால் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.
பித்தக்கண்ணுவின் ஏமாற்றம் :
வெட்டுக்கிளியின் ஆட்டத்திற்கான பொருளை உணர்ந்த பித்தக்கண்ணு, கூரன் , பதுங்கிக் கிடந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. நல்ல வேளையாக முதல்நாள் இரவுதான் அந்த மரத்தடியில் புனுகுப் பூனை ஒன்று தங்கியிருந்தது. அது தங்கிய இடம் மிகவும் நாறும். அதனால் கூரனின் உடல்வாடை பித்தக்கண்ணுவின் மூக்குக்கு எட்டவில்லை. மாறாக புனுகுப்பூனையின் துர்நாற்றமே எட்டியது. பித்தக்கண்ணு சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கிடைக்காததால் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
கூரனின் மிரட்டல் :
கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்த வெட்டுக்கிளிக்குப் பாடம் கற்பிக்க எண்ணியது. “முட்டாள்! பித்தக்கண்ணு முன் அப்படிக் குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திணித்துத் திங்காமல் விட்டது அதிசயம்தான்” என்று கத்தியது. “இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கி விடுவேன்” என்று வெட்டுக்கிளியைக் கூரன் மிரட்டிக் கொண்டே தனது கூர்மையான பாதங்களை மண்ணின் மீது அழுத்தி எகிறிக் குதித்தது. தன் கோபப் பார்வையை வீசிவிட்டுக் காட்டுக்குள் ஓடியது.முடிவுரை :
அன்றிலிருந்து வெட்டுக்கிளி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறது. இதனால்தான் இன்றும்கூட வெட்டுக்கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. ஆனாலும் அவை எந்தத் திசையை நோக்கியும் குதிப்பதில்லை.