Class 8 Tamil · Chapter 4

Samacheer Class 8 Tamil - இயல் 4

44 textbook Q&A44 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 4 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 7சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 12குறுவினா 6சிறுவினா 14சிந்தனை வினா 3நெடுவினா 1மதிப்பீடு 1
Your Progress - Chapter 40% complete
1கற்பவை கற்றபின்7 questions
Q.1கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.v
Answer:

(i) அறிய அறியக் கெடுவார் உண்டா ?
(ii) இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
(iii) கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை
(iv) கல்லாதவரே கண்ணில்லாதவர்.
(v) கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

Q.2கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம்பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.v
Answer:

அறிவுடையார் தாமே உணர்வர்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு. – காரியாசான்

Q.3பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.v
Answer:

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

Q.1அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டுக.v
Answer:

(i), அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
(ii) அறிய அறியக் கெடுவார் உண்டா ?
(iii) அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
(iv) அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
(v) அற்ப அறிவு அல்லற் கிடம்.

Q.1பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.v
Answer:

Q.1திருக்குறள் கருத்துகளை உணர்த்தும் கதைகளை அறிந்து வந்து வகுப்பில் பகிர்க.v
Answer:

குறள் :
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
உணர்த்தும் கதை :
“சின்னச்சாமி… யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க… யாராய் இருக்கும்…. மாட்டு வண்டியை ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார்.
“தெரியலப்பா…”
“இறங்கி யாருன்னு பாரு…”
“வாட்ட சாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார்.
“ஐயா… நீங்க…”
“வெளியூருப்பா… வண்டி நின்னு போச்சு….!”
“அப்படியா…. வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க மழை வர்ற மாதிரியிருக்கு ஊரு ரொம்ப தூரம்… வேற வண்டியும் வராது…”
அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியில் இருந்தோம்… சிறிது தூரம் போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு… நாங்க வீட்டுக்குப் போயிட்டோம்.
இரவுல தூங்கப் போறப்ப…. அப்பா சொன்னார். தம்பி… அந்த சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு… வேற யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில… கட்டுப் போட்டுக்கிட்டு இருந்தாங்க…. பாவம் படிச்சவரா இருக்காரு… சூழ்நிலை புரியாம… வரமாட்டேன்னு சொன்னாரு, இப்ப வேதனைப்படுகிறாரே…

Q.1பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வேற்றுமை உருபுகளை எடுத்து எழுதி வகைப்படுத்துக.v
Answer:

அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி எனப்படும். மனிதர்களது வாழ்வில் உடலோம்பலுடன் அறிவோம்பலும் நிகழ்ந்துவரல் வேண்டும். அறிவோம்பலுக்குக் கல்வி தேவை. அக்கல்விப்பயிற்சிக்கு உரிய பருவம் இளமை என்பதை விளக்க வேண்டியதில்லை. இது பற்றியே இளமையில் கல் என்னும் முதுமொழி பிறந்தது.

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.12 questions
Q.1கற்றவருக்கு அழகு தருவது ………………. அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) கல்விv
Answer:

ஈ) கல்வி

Q.2‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….. அ) கலன் + லல்லால் ஆ) கலம் + அல்லால் இ) கலன் + அல்லால் ஈ) கலன் + னல்லால்v
Answer:

இ) கலன் + அல்லால்சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. அழகு – பெண்களுக்கு அணிகலன்களை விட புன்னகையே அழகு தரும்.
2. கற்றவர் – கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும்.
3. அணிகலன் – ஐம்பெருங்காப்பியங்கள் தமிழன்னைக்கு அணிகலன்களாகத் திகழ்கின்றன.

Q.1என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் …………………. இன்றி வாழ்ந்தார். அ) சோம்பல் ஆ) அகம்பாவம் இ) வருத்தம் ஈ) வெகுளிv
Answer:

ஆ) அகம்பாவம்

Q.2‘கோயிலப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………… அ), கோ + அப்பா ஆ) கோயில் + லப்பா இ) கோயில் + அப்பா ஈ) கோ + இல்லப்பாv
Answer:

இ) கோயில் + அப்பா

Q.3பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………… அ) பகைவென்றாலும் ஆ) பகைவனென்றாலும் இ) பகைவன்வென்றாலும் ஈ) பகைவனின்றாலும்v
Answer:

ஆ) பகைவனென்றாலும்

Q.2கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ………….. அ) இளமை ஆ) முதுமை இ) நேர்மை ஈ) வாய்மைv
Answer:

அ) இளமை

Q.3இன்றைய கல்வி …………………… நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. அ) வீட்டில் ஆ) நாட்டில் இ) பள்ளியில் ஈ) தொழிலில்v
Answer:

ஈ) தொழிலில்
நிரப்புக
1. கவப்பில் …………. உண்டென்பது இயற்கை நுட்பம்.
2. புற உலக ஆராய்ச்சிக்கு …………… கொழுகொம்பு போன்றது.
3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ……………. இன்பம் ஆகும்.
1. வளர்ச்சி
2. அறிவியல்
3. காவியபொருத்துக
1. இயற்கை ஓவியம் – சிந்தாமணி
2. இயற்கைத் தவம் – பெரியபுராணம்
3. இயற்கைப் பரிணாமம் — பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு – கம்பராமாயணம்
1. இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு
2.. இயற்கைத் தவம் – சிந்தாமணி
3. இயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம்
4. இயற்கை அன்பு – பெரிய புராணம்

Q.1பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது …………………… ஆகும். அ) எழுவாய் ஆ) செயப்படுபொருள் இ) பயனிலை ஈ) வேற்றுமைv
Answer:

ஈ) வேற்றுமை

Q.2எட்டாம் வேற்றுமை …………………… வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது. அ) எழுவாய் ஆ) செயப்படுபொருள் இ) விளி ஈ) பயனிலைv
Answer:

இ) விளி

Q.3உடனிகழ்ச்சிப் பொருளில் ……………….. வேற்றுமை வரும். அ) மூன்றாம் ஆ) நான்காம் இ) ஐந்தாம் ஈ) ஆறாம்v
Answer:

அ) மூன்றாம்

Q.4‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ……………………… வேற்றுமை பயின்று வந்துள்ளது. அ) இரண்டாம் ஆ) மூன்றாம் இ) ஆறாம் ஈ) ‘ஏழாம்v
Answer:

ஆ) மூன்றாம்

Q.5‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ……………….. பொருளைக் குறிக்கிறது. அ) ஆக்கல் ஆ) அழித்தல் இ) கொடை ஈ) அடைதல்v
Answer:

அ) ஆக்கல்
பொருத்துக
1. மூன்றாம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
2. நான்காம் வேற்றுமை – பாரியினது தேர்.
3. ஐந்தாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்.
4. ஆறாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.
1. மூன்றாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்.
2. நான்காம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
3. ஐந்தாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.
4. ஆறாம் வேற்றுமை – பாரியினது தேர்

3குறுவினா6 questions
Q.1யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?v
Answer:

கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அவருக்கு அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் தேவையில்லை.

Q.1யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?v
Answer:

பிறரை மன்னிக்கத் தெரிந்தவரின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.

Q.2பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?v
Answer:

பகைவர்களிடம் நாம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

Q.1இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?v
Answer:

இன்றைய கல்வியின் நிலை :
(i) இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது.
(ii) குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
(iii) நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகும் என்று இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுகிறார்.

Q.2தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?v
Answer:

நாம் தமிழ் மக்கள். நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு. அதுவே இயற்கை முறை. முதலில் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும். தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

Q.3திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.v
Answer:

இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி.

4சிறுவினா14 questions
Q.1நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.v
Answer:

நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகள் :
(i) ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை.
(ii) அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.
(iii) ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை

Q.1புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?v
Answer:

புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகள் :
(i) கத்தியைக் கூர்மையாக்குவதைத் தவிர்த்து விட்டு அறிவைச் கூர்மையாக்க வேண்டும்.
(ii) கோபம் நம் கண்ணை மறைத்துவிடும். அப்போது அறிவுடன் செயல்பட்டு சரியான முடிவெடுக்க வேண்டும்.
(iii) நம்மை அழிக்க நினைக்கும் பகைவர்களிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
(iv) பிறருடைய குறைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களின் உள்ளம் மாணிக்கக் கோயிலைப் போன்றது. இதை மறந்தவர்களின் வாழ்வு அடையாளம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
(v) நாம் செருக்கின்றி வாழ வேண்டும். செருக்குடன் வாழ்வதால் நமக்கு எந்த லாபமும் இல்லை என்பதை எண்ணிப் பார்த்தால் நம் வாழ்வு தெளிவாகும். இவையே புத்தியைத் தீட்டி வாழவேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவனவாகும்.

Q.2அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?v
Answer:

(i) உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது ‘அறிவியல்’ என்னும் அறிவுக்கலை.
(ii) உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றினியல், கோளியக்கம், கணிதம், அகத்திணை முதலியன வேண்டும். இந்நாளில் இவைகளைப் பற்றிய பொது அறிவாதல் பெற்றே தீரல் வேண்டும்.
(iii) புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது. நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதிபெறல் அரிது.
(iv) இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை. ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும்.

Q.3உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?v
Answer:

(i) ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
எ.கா. தாயொடு குழந்தை சென்றது,
அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.
(ii) இருவர் சேர்ந்து செய்கின்ற செயலைக் குறிப்பிடும் போது ஒடு, ஓடு என்ற சொற்களைப் பயன்படுத்துவர். இதுவே உடனிகழ்ச்சிப் பொருள் ஆகும்.
மொழியை ஆள்வோம்
கேட்க

Q.1கல்வியே அழியாச் செல்வம்v
Answer:

அனைவருக்கும் வணக்கம்!
நான் கல்வியே அழியாச் செல்வம் என்ற தலைப்பில் பேசவிருக்கிறேன். கல்வி இன்றைய மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அத்தகைய கல்வியைக் கற்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற நிலையில் உள்ளது.
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்று பாரதிதாசன் பெண்களின் கல்வி பற்றிக் கூறுகிறார்.
‘கற்றவரைக் கண்ணுடையார்’ என்றும் கல்லாதவரை முகத்தில் இரண்டு புண்ணுடையவர்’ என்றும் இடித்துரைக்கிறார் வள்ளுவர். கற்றோர்க்கு அணிகலன் கல்வியே; கற்றோரே கண்ணுடையவர். ‘கற்றோரே தேவர் எனப் போற்றப்படத்தக்கவர்; கற்றோரே மேலானவர் என்பதை உணர வேண்டும்கல்வி கற்றவன் நல்ல ஆளுமையைப் பெறுகிறான். எல்லா நாட்டுக்கும் சொந்தக்காரன் ஆகிறான். எல்லா மக்களுக்கும் உறவினராகிறான். அறியாமை இருளைப் போக்கி தெளிவுபெறுகிறான். உலகே போற்றும் உயர்வு பெறுகிறான். இக்கூற்றுகளுக்கே எத்தனையோ சான்றோர்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
கல்வியைக் கள்வரால் திருட இயலாது, வெந்தணலில் வேகாது, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லாது, அள்ள அள்ளக் குறையாது.
மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு. கல்லாதது உலகளவு’ என்று கூறப்படுகிறது.
“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு”
மணற்பாங்கான நிலத்தில் இறைக்க இறைக்க நீர் சுரக்கும். அதுபோல அறிவானது கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்கும். இக்கல்வியை இளமையில் கற்றுத் தெளிய வேண்டும். இளமைப் பருவம் படிப்பதற்கே உரியது. இளவயதில் கற்கும் கல்வியானது பசு மரத்தணி போலவும்’, ‘கல்மேல் எழுத்து போலவும் அழியாமல் இருக்கும்.
சொல்லக் கேட்டு எழுதுக
தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த ஒரு நூல்; தமிழுக்கு வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் ஒரு நூல்; தன் தோற்றத்தால் தமிழ்நாட்டுக்கு உலகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள். திருக்குறள் பற்றிப் பேசாத புலவர் இலர்; எழுதாத அறிஞர், எழுத்தாளர் இலர். பள்ளிப் பருவத்திலும் திருக்குறள் படிக்கப்படுகின்றது. பருவம் வளரவளர அதுவும் நுட்பமாகக் கற்கப்படுகின்றது. திருக்குறளுக்குரிய சிறப்பே அதுதான். அஃது எல்லாப் பருவத்தாருக்கும் வேண்டிய விழுமிய நூல். எனவே திருக்குறளில்லாத வீடும் இருக்கக்கூடாது. திருக்குறள் படிக்காத தமிழரும் இருக்கக் கூடாது.
கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.அறிந்து பயன்படுத்துவோம்
நிறுத்தக்குறிகள்
காற்புள்ளி(,) :
1. பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.
(எ.கா.) குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.
2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.) அன்புள்ள நண்பா ,
3. வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.
(எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.
4. மேற்கொள் குறிகளுக்கு (“) முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து, “நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.
5. முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும்.
(எ.கா.) ச. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.
அரைப்புள்ளி (;):
1. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) கரிகாலன் கங்கை வரை படையெடுத்துச் சென்றான் ; கனக விசயருடன் போரிட்டான்.
2. உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) நல்லவன் வாழ்வான் ; தீயவன் தாழ்வான்.
முக்காற்புள்ளி ( :’):
சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற் புள்ளி வரும். (எ.கா.) முத்தமிழ் : இயல், இசை , நாடகம்.
முற்றுப்புள்ளி (.):
1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
2. சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) திரு. வி. க., மா.க.அ., ஊ.ஒ.ந.நி. பள்ளி
3. பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) நெ. து. சுந்தரவடிவேலு
வினாக்குறி ( ? ) :
வினாப் பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக் குறி இட வேண்டும். (எ.கா.) சேக்கிழார் எழுதிய நூல் எது?
வியப்புக்குறி (!):
மகிழ்ச்சி, வியப்பு, அச்சம் அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
(எ.கா.) தமிழின் இனிமை தான் என்னே ! வியப்பு
பாம்பு! பாம்பு! – அச்சம்
அந்தோ ! இயற்கை அழிகிறதே! – அவலம்
ஒற்றை மேற்கோள் குறி (‘ ‘):
தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும் போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும் போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.
(எ.கா.) ‘நல்ல ‘ என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
கூட்டத்தின் தலைவர், அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை’ என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்.இரட்டை மேற்கோள் குறி (” “) :
நேர் கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.
(எ.கால திரு.வி.க. மாணவர்களிடம், “தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்று கூறினார் .
பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

Q.2திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டதுv
Answer:

திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

Q.3தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானதுv
Answer:

தமிழ்மொழி செம்மையானது; வலிமையானது; இளமையானது.

Q.4கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்v
Answer:

கபிலன் தன் தந்தையிடம், “இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.

Q.1நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலைகொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம் மாவட்ட நூலகம் கிளை நூலகம் ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்v
Answer:

நூல் பல கல்’ என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலைகொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும்.
நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். “எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்” என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்; அறிவு வளம் பெறுவோம்.
கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

Q.1எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி மாபெரும் புத்தகக் கா நடத்தப்படுகிறது?v
Answer:

உலகப் புத்தக நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

Q.2புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?v
Answer:

இராயப்பேட்டை, YMCA மைதானம்.

Q.3புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?v
Answer:

ஏப்ரல் 13 முதல் 23 முடிய 11 நாள்கள் நடைபெறுகிறது.

Q.4புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?v
Answer:

நுழைவுக் கட்டணம் இல்லை . அனுமதி இலவசம்.

Q.5புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?v
Answer:

நூல்களுக்கான விலையில் 10 சதவீத கழிவு.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
நூலகம்
முன்னுரை – நூலகத்தின் தேவை – வகைகள் – நூலகத்திலுள்ளவை – படிக்கும் முறை – முடிவுரை.
முன்னுரை:
கல்வி கரையில, கற்பவர் நாள் சில’ என்பர் சான்றோர். கற்க கசடற என்று வள்ளுவரும் கூறியுள்ளார். அவ்வாறு கற்பதற்குத் துணைபுரிபவை நூல்கள். அந்நூல்கள் உள்ள இடம் நூலகம். சான்றோர்கள் பலரையும், பேச்சாளர்கள் பலரையும் உருவாக்கிய நூலகம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நூலகத்தின் தேவை :
பாடப் புத்தகத்தை மட்டும் படித்து அறிவு பெற்றால் போதும் என்றில்லாமல் உலக அறிவை வளர்த்துக் கொள்ளலாம். வாழ்வியலுக்கான நற்பண்புகளை நூல்களின் கருத்து வழியே வலுப்படுத்திக் கொள்ளலாம். பலதுறை சார்ந்த நூல்களைக் கற்றுத் தெளிவு பெறலாம்.
பேச்சாளர்கள் பலரின் கருத்துகளையும், சாதனையாளர்களின் சாதனைகளையும் படித்து அறியலாம். அவற்றை நமக்கு முன்மாதிரியாக நினைத்து நாமும் நம்மைப் பண்படுத்திக் கொள்ளலாம். ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றலாம். இக்காரணங்களுக்காக நூலகம் தேவைப்படுகிறது.
நூலகத்தின் வகைகள் :
பள்ளி நூலகம், பொது நூலகம், ஆராய்ச்சி நூலகம், சிறப்பு நூலகம், தேசிய நூலகம் எனப் பல வகைகளில் நூலகம் உள்ளது. இவை மட்டுமன்றி பொது நூலகத்தின் கீழ் மாநில மைய நூலகம், மாவட்ட நூலகம், வட்டார நூலகம், பகுதி நேர நூலகம், நடமாடும் நூலகம் போன்றவையும் மக்களுக்கு உதவுகின்றன.
நூலகத்திலுள்ளவை :
நூலகத்தில் கதை, கட்டுரை போன்ற இயல்களில் நூல்கள் நிரம்பியிருக்கும். சிறுகதை, நாவல், கவிதை, கல்வி, பொருளியல், வரலாறு, மருத்துவம், ஆன்மிகம், உளவியல், பொறியியல், பயன்படு கலைகள் போன்ற தலைப்புகளில் துறைசார்ந்த நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மேலும், நாளேடுகள், பருவ இதழ்கள் நூலகத்தில் படிக்கக் கிடைக்கும்.
படிக்கும் முறை :
நூலகத்தில் சத்தம் போட்டுப் படிக்கக்கூடாது. நூல்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். நூல்களில் எவ்விதக் குறிப்பையும், கிறுக்குதலையும் செய்யக்கூடாது. படிக்க விரும்பும் நூல்களை நூல்களின் அனுமதி பெற்று எடுத்துப் படிக்க வேண்டும். படித்து முடித்துவிட்டு நூலகரிடம் கொடுக்க வேண்டும். நூல்களைச் சேதப்படுத்தாமல் படிக்க வேண்டும். நூலக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
முடிவுரை :
நம் சான்றோர்கள் கூறியபடி வீட்டிற்கொரு நூலகம் அமைத்து பயன்பெறுவோம். நல்ல நூல்களை நாளும் கற்று, நல்லறிவு பெறுவோம். வருங்கால சமுதாயம் அறியாமை என்ற இருள் நீங்கி கல்வி என்ற ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற முயல்வோம்.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக. எழுத்துகளை முறைப்படுத்திக் கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.
1. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர்
2. கேடில் விழுச்செல்வம் ……………..
3. குமர குருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று
4. ‘கலன்’ என்னும் சொல்லின் பொருள்.
5. ஏட்டுக்கல்வியுடன் …………….. கல்வியும் பயில வேண்டும்.
6. திரு.வி.க. எழுதிய நூல்களுள் ஒன்று.
7. மா + பழம் என்பது ……………. விவகாரம்.நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்….
1. நாள்தோறும் ஒரு திருக்குறள் கற்பேன்.
2. அனைவரிடமும் அன்பு கொண்டு வாழ்வேன்.
கலைச்சொல் அறிவோம்
1. நிறுத்தக்குறி – Punctuation
2. அணிகலன் – Ornament
3. திறமை – Talent
4. மொழிபெயர்ப்பு – Translation
5. விழிப்புணர்வு – Awareness
6. சீர்திருத்தம் – Reform

5சிந்தனை வினா3 questions
Q.1கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.v
Answer:

(i) அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்கும்.
(ii) அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பயனையும் பெறலாம்.
(iii) கவலையின்றி வாழத் துணைபுரியும்.
(iv) கல்வி கற்பதனால் வாழ்க்கையில் எதிர்ப்படும் இடர்களை விரட்ட முடியும்.
(v) கல்வியால் நாட்டில் நன்னெறி படரும்.
(vi) கல்வியால் மக்கள் மாண்புறுவர்.

Q.1உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?v
Answer:

(i) என் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் நான் என் பொறுமையால் அவரை வெல்வேன்.
(ii) அன்போடு பழகுவேன்.
(iii) வெறுப்பதற்கான காரணம் அறிந்து அதைச் சரி செய்வேன்.
(iv) அவருடைய மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவேன்.
(v) விட்டுக் கொடுத்துப் பழகும் என்னுடைய செயல்பாட்டை அறிந்து அவர் தன்னை மாற்றிக் கொள்ளும்படிச் செய்வேன்.

Q.1திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?v
Answer:

(i) நான் கற்க விரும்புவது இசைக்கல்வி.
(ii) இசைக்கு மயங்காதவர் எவருமில்லை . இறைவனிடம் நாம் பேசுவது இசைமொழியில்தான்.
(iii) ஆழ்வார்களும் நாயன்மார்களும் தங்களுடைய பாடல்களை இசைத்தே இறைவனை மகிழ்வித்துள்ளனர். இசையானது, கவலை என்ற நோயைத் தீர்க்கும் மருந்தாகும். எனவே நான் இசைக்கல்வியைக் கற்க விரும்புகிறேன்.

6நெடுவினா1 questions
Q.1காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.v
Answer:

காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகள் :
(i) வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று. அதைத் தலையாயது என்றும் கூறலாம்.
(ii) நாம் தமிழர்கள். நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமேல் நாம் தமிழ் இலக்கியங்களுக்கிடையே அன்றோ செல்ல வேண்டும்.
(iii) தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரிய புராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்.
(iv) இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.
(v) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ ? தமிழ்க் காப்பியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்.

7மதிப்பீடு1 questions
Q.1திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.v
Answer:

முன்னுரை :
குறள் வழிக் கதை மூலம் மாணவன் ஒருவன் நடந்து கொண்ட விதமும் ஊராரின் எண்ணங்களும் ஆசிரியரின் நல்ல முடிவு பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.
ஆசிரியரின் வேட்டி :
ஆசிரியர் ஒருநாள் தனது வேட்டியைத் துவைத்து கொடிக்கயிற்றில் காயப் போட்டுவிட்டுப் பள்ளிக்குச் சென்றார். பிறகு வந்து பார்த்தபோது வேட்டியைக் காணவில்லை. ஊராரில் சிலர் சிகாமணிதான் எடுத்திருப்பார் என்று சந்தேகத்துடனும் சிலர் உறுதியுடனும் கூறினர். சிகாமணியின் தந்தையும் பிறர் பொருளை எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர். அதனால் அவரது பழக்கம் இவரைத் தொற்றிக் கொண்டது என்றனர்.
வகுப்பறையில் ஆசிரியர் :
ஆசிரியருக்கு வேட்டியின் மர்மம் விளங்கவில்லை. அன்று வகுப்பறையில் பண்புடைமை’ என்ற அதிகாரத்திலுள்ள குறட்பாவை நடத்தத் தொடங்கினார். ‘ஆன்ற குடிபிறத்தல்’ என்ற தொடருக்குப் பொருள் கூறும்போது வகுப்பிலிருந்த சிகாமணியின் மகன் சகாதேவன் ஆசிரியரை கூர்ந்து நோக்கினான். ஆசிரியரும் அவனை அடிக்கடி பார்த்தார்.
குறள்வழி அறிவுரை :
“ஆன்ற குடிப்பிறத்தல்’ என்றால் சிறந்த குடி உன்னிடமிருந்து தொடங்கட்டும். அப்பன் திருடனாயிருக்கலாம். மகன் நல்லவனாக இருப்பான். அவங்க அப்பனைச் சொல், திருடன்தான்! அவன் பையனைச் சொல்லாதே, அவன் மிக நல்லவன் என்று உலகோர் பேசுவர். அதுபோல் கெட்டப்பழக்கங்கள் தந்தையுடன் செல்லட்டும். உன்னிலிருந்து நல்ல புதிய குடி உதிக்கட்டும்” என்றார். மேலும் “ஒழுக்கம் இல்லாத பரம்பரையில் நீ வந்திருந்தாலும் ஒழுக்கத்தின் உறைவிடமாக நீ இருக்கவேண்டும்” என்று கூறினார்.
உணவு இடைவேளை :
உணவு இடைவேளையில் ஆசிரியர் வீட்டிற்குச் சென்றார். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்ற மாணவன் சகாதேவன் கொடுக்கச் சொன்னதாக வேட்டியைக் கொடுத்தான். பிறகு ‘வேட்டியைச் சிகாமணிதான் எடுத்தார் என்றும் தானே ஆசிரியரிடம் கொடுப்பதற்கு வெட்கப்படுவதாகவும், சகாதேவன் கூறியதாகக் கூறினான்.உண்மை அறிந்த ஊரார் :
சிகாமணிதான் திருடன் என அறிந்ததும் ஊரார் அவரைத் தண்டிக்கத் தொடங்கினர். ஆசிரியர் தடுத்துவிட்டார். சிகாமணியைத் தண்டித்தால் அவன் அவனுடைய மகனான சகாதேவனைத் தண்டிப்பான். அதனை சகாதேவன் நேர்மைக்குக் கிடைத்த பலனாகக் கருதி வருந்துவான்” என்று தடுத்தமைக்குக் காரணம் கூறினார்.
மறுத்த ஊரார் :
“அவனைவிடக்கூடாது சார்!” என்று கடைசிவரை ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் ஆசிரியர் இறுதியில் “நீங்கள் தண்டனைதான் கொடுக்க வேண்டுமெனில், நான் என் வேட்டியே திருடு போகவில்லை என்று கூறுவேன்” என்றார்.
முடிவுரை :
ஒருவிதமாக ஊரார் ஆசிரியரின் கருத்தைப் புரிந்து கொண்டனர். சிகாமணி, சகாதேவன், ஆசிரியர் மூவரும் தப்பித்தனர்.