Class 8 Tamil · Chapter 8

Samacheer Class 8 Tamil - இயல் 8

57 textbook Q&A57 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 8 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 6சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 22குறுவினா 10சிந்தனை வினா 3சிறுவினா 14நெடுவினா 1மதிப்பீடு 1
Your Progress - Chapter 80% complete
1கற்பவை கற்றபின்6 questions
Q.1பிறர் துன்பம் கண்டு வருந்தி அவர்களுக்குத் தொண்டு செய்த சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.v
Answer:

1. வள்ளலார்
2. புத்தர்
3. விவேகானந்தர்
4. அன்னை தெரசா
5. திரு.வி.க.
6. பண்டித ரமாபாய்
7. நாராயண குரு
8. ரமணமகரிஷி
9. குருநானக்

Q.1கண்ணி வகையில் பாடப்பட்ட வேறு பாடல்களைத் தொகுத்து எழுதுக.v
Answer:

(i) தாயுமானவர் பாடல் – பராபரக் கண்ணி :
முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே!
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே
வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால்
தாக்காதே தாக்குந் தனியே பராபரமே
பார்த்த இட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு
வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே.
அன்பைப் பெருக்கி என தாருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
(ii) தமிழ்விடு தூது :
தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியே என் முத்தமிழே – புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்
குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ – திறம்எல்லாம்
வந்து என்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே.

Q.1சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்ட சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.v
Answer:

சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்டவர்கள் :
1. மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
2. எஸ். தர்மாம்பாள்
3. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
4. ஈ.வே.ரா. பெரியார்
5. பாரதியார்
6. நிவேதிதா தேவி
7. பாரதிதாசன்.
8. அம்பேத்கர்
தெரிந்து தெளிவோம்
(i) அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் : போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பாலவாகடம்.
(ii) என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள். – தந்தை பெரியார்
(iii) அயோத்திதாசர் எழுதிய நூல்கள்: புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா முதலியன. திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.
(iv) சென்னைதாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சிமையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Q.1வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த யாரேனும் ஒருவரைப் பற்றிய செய்தியை அறிந்து மகத் வந்து வகுப்பறையில் பகிர்க.v
Answer:

வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர் ஜி.டி.நாயுடு.
ஜி.டி.நாயுடு கோவை மாவட்டத்தில் கலங்கல் என்ற சிற்றூரில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிறந்து ஓராண்டுக்குள் அன்னையை இழந்தார். நான்கு வயதுச் சிறுவனாக இருக்கும் போதே மிகுந்த சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் கொண்டவராக விளங்கியவர், தன் மாமனுடைய பாதுகாப்பில் வளர்ந்தார்.
திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளியில் செய்த குறும்புத்தனத்திற்காக இவரது மாமன் இவரைத் தந்தையிடமே சேர்ப்பித்தார். தந்தை கோபால் சுவாமி ஒரு 3 விவசாயி. மகனைத் தனது தோட்டத்திலேயே காவல்காரனாக இருக்கச் செய்தார்.
ஜி.டி. நாயுடு ஒவ்வொரு நாளும் தமிழ் நூல்களைப் படித்து கல்வியறிவைப் பெற்றார். இளமைப்பருவம் அடைந்தபோது ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட துண்டுக் காகிதம் ஒன்று அவருக்குக் கிடைத்தது. ஆங்கிலம் படிக்கத் தெரியாததால் ஆங்கிலம் அறிந்தவரிடம் காட்டினார். அது வலி நிவாரண தைலப்புட்டியின் விளம்பரம் என்பதை அறிந்தார். அமெரிக்கக் கம்பெனியின் தயாரிப்பான அந்த மருந்தை வரவழைத்து வெற்றிகரமாக விற்பனை செய்தார். கடிகாரம், ஹார்மோனியப் பெட்டி மற்றும் சில சில்லறைப் பொருள்களையும் தருவித்து விற்பனை செய்தார்.
ஒருநாள் கலங்கல் கிராமத்தில் லங்காஷியர் என்ற வெள்ளைக்காரத் துரையிடம் இருந்து மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கி அதன் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டார். ஸ்டென்ஸ் துரை என்பவர் இவருக்குப் பேருந்து ஒன்றை வழங்கி சொந்தமாகத் தொழில் செய்ய ஊக்குவித்தார். முதன்முதலில் ஒரு பஸ்சை பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் ஓட்டியவர் இவரே. தன்னுடைய கம்பெனிக்கு , ‘யுனைடெட் மோட்டார் சர்விஸ்’ என்று பெயர் சூட்டினார்.
வெளிநாடுகளுக்குச் சென்றார். பல தொழிற்சாலைகளைப் பார்வையிட்டு அதன் நுட்பங்களை அறிந்தார் ஜி.டி. நாயுடு.
தெரிந்து தெளிவோம்
மாகாணி, வீசம் போன்றவை அக்காலத்தில் வழக்கிலிருந்த அளவைப்பெயர்களாகும். அணா, சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணயப்பெயர்கள் ஆகும். பதினாறு அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய். அதனால்தான் இன்றும் பேச்சுவழக்கில் அரை ரூபாயை எட்டணா என்றும் கால் ரூபாயை நாலணா என்றும் கூறுகின்றனர்.

Q.1எழுத்து இலக்கணத்தின்படியும் யாப்பு இலக்கணத்தின்படியும் எழுத்துகளின் வகைகளை வேறுபடுத்தி ஓர் அட்டவணை உருவாக்குக.v
Answer:

எழுத்து இலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை :யாப்பு இலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை :

Q.2வெண்பாக்களால் அமைந்த நூல்களின் பெயர்களைத் திரட்டுக.v
Answer:

வெண்பாக்களால் அமைந்த நூல்கள் :
1. திருக்குறள்
2. நாலடியார்
3. முத்தொள்ளாயிரம்
4. நளவெண்பா
5. நீதிவெண்பா
6. மூதுரை
7. நல்வழி
8. நான்மணிக்கடிகை
9. இனியவை நாற்பத
10. இன்னா நாற்பது
11. திரிகடுகம்
12. ஆசாரக்கோவை
13. பழமொழி
14. சிறுபஞ்சமூலம்

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.22 questions
Q.1அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ……………… க் கண்டு அஞ்சமாட்டார்கள். அ) புலனை ஆ) அறனை இ) நமனை ஈ) பலனைv
Answer:

இ) நமனை

Q.2ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும். அ) குலம் ஆ) குளம் இ) குணம் ஈ) குடம்v
Answer:

அ) குலம்

Q.3‘நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………… அ) நம் + இல்லை ஆ) நமது + இல்லை இ) நமன் + நில்லை ஈ) நமன் + இல்லைv
Answer:

ஈ) நமன் + இல்லை

Q.4நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………… அ) நம்பரங்கு ஆ) நம்மார்க்கு இ) நம்பர்க்கங்கு ஈ) நம்பங்குv
Answer:

இ) நம்பர்க்கங்கு

Q.1மனிதர்கள் தம் ……………. தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும். அ) ஐந்திணைகளை ஆ) அறுசுவைகளை இ) நாற்றிசைகளை ஈ) ஐம்பொறிகளைv
Answer:

ஈ) ஐம்பொறிகளை

Q.2ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் …………….. அ) பகர்ந்த னர் ஆ) நுகர்ந்த னர் இ) சிறந்தனர் ஈ) துறந்தனர்v
Answer:

அ) பகர்ந்த னர்

Q.3‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………. அ) ஆனந்த + வெள்ளம் ஆ) ஆனந்தன் + வெள்ளம் இ) ஆனந்தம் + வெள்ளம் ஈ) ஆனந்தர் + வெள்ளம்v
Answer:

இ) ஆனந்தம் + வெள்ளம்

Q.4உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….. அ) உள்ளேயிருக்கும் ஆ) உள்ளிருக்கும் இ) உளிருக்கும் ஈ) உளருக்கும்v
Answer:

ஆ) உள்ளிருக்கும்

Q.1அயோத்திதாசர் …………….. சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். அ) தமிழக ஆ) இந்திய இ) தென்னிந்திய ஈ) ஆசியv
Answer:

இ) தென்னிந்திய

Q.2அயோத்திதாசர் நடத்திய இதழ் …………….. அ) ஒருபைசாத் தமிழன் ஆ) காலணாத் தமிழன் இ) அரைப்பைசாத் தமிழன் ஈ) அரையணாத் தமிழன்v
Answer:

அ) ஒருபைசாத் தமிழன்

Q.3கல்வியோடு …………. கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து. அ) சிலம்பமும் ஆ) கைத்தொழிலும் இ) கணிப்பொறியும் ஈ) போர்த்தொழிலும்v
Answer:

ஆ) கைத்தொழிலும்

Q.4அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ………… அ) ஆழ்ந்த படிப்பு ஆ) வெளிநாட்டுப்பயணம் இ) இதழியல் பட்டறிவு ஈ) மொழிப்புலமைv
Answer:

அ) ஆழ்ந்த படிப்பு

Q.5மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ……………. அ) வானம் ஆ) கடல் இ) மழை ஈ) கதிரவன்v
Answer:

இ) மழை

Q.1அசை ………………. வகைப்படும். அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்துv
Answer:

அ) இரண்டு

Q.2விடும் என்பது ……………… சீர். அ) நேரசை ஆ) நிரையசை இ) மூவசை ஈ) நாலசைv
Answer:

ஆ) நிரையசை

Q.3அடி ……………….. வகைப்படும். அ) இரண்டு ஆ) நான்கு இ) எட்டு ஈ) ஐந்துv
Answer:

ஈ) ஐந்து

Q.4முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ……………………. அ) எதுகை ஆ) இயைபு இ) அந்தாதி ஈ) மோனைv
Answer:

ஈ) மோனை)
பொருத்துக விடைகள்
1. வெண்பா – துள்ளல் ஓசை
2. ஆசிரியப்பா – செப்பலோசை
3. கலிப்பா – தூங்கலோசை
4. வஞ்சிப்பா – அகவலோசை
1. வெண்பா – செப்பலோசை
2. ஆசிரியப்பா – அகவலோசை
3. கலிப்பா – துள்ளல் ஓசை
4. வஞ்சிப்பா – தூங்கலோசை

Q.1ஆண்மையின் கூர்மை …………….. அ) வறியவருக்கு உதவுதல் ஆ) பகைவருக்கு உதவுதல் இ) நண்பனுக்கு உதவுதல் ஈ) உறவினருக்கு உதவுதல்v
Answer:

ஆ) பகைவருக்கு உதவுதல்

Q.2வறுமை வந்த காலத்தில் …………….. குறையாமல் வாழ வேண்டும். அ) இன்ப ம் ஆ) தூக்கம் இ) ஊக்கம் ஈ) ஏக்கம்v
Answer:

இ) ஊக்கம்

Q.3‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….. அ) பெரிய + செல்வம் ஆ) பெருஞ் + செல்வம் இ) பெரு + செல்வம் ஈ) பெருமை + செல்வம்v
Answer:

ஈ) பெருமை + செல்வம்

Q.4‘ஊராண்மை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………. அ) ஊர் + ஆண்மை ஆ) ஊராண் + மை இ) ஊ + ஆண்மை ஈ) ஊரு + ஆண்மைv
Answer:

அ) ஊர் + ஆண்மை

Q.5திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………….. அ) திரிந்தது அற்று ஆ) திரிந்தற்று இ) திரிந்துற்று ஈ) திரிவுற்றுv
Answer:

ஆ) திரிந்தற்ற
பொருத்துக
1. இன்பம் தருவது – நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
2. நட்பு என்பது – குன்றிமணியளவு தவறு
3. பெருமையை அழிப்பது – செல்வம் மிகுந்த காலம்
4. பணிவு கொள்ளும் காலம் – சிரித்து மகிழ மட்டுமன்று
5. பயனின்றி அழிவது – பண்புடையவர் நட்பு
1. இன்பம் தருவது – பண்புடையவர் நட்பு
2. நட்பு என்பது – சிரித்து மகிழ மட்டுமன்று
3. பெருமையை அழிப்பது – குன்றிமணியளவு தவறு
4. பணிவு கொள்ளும் காலம் – செல்வம் மிகுந்த காலம்
5. பயனின்றி அழிவது – நற்பண்பில்லாதவன் வெற்ற பெருஞ்செல்வம்

3குறுவினா10 questions
Q.1யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?v
Answer:

மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை .

Q.2மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்யவேண்டியது யாது?v
Answer:

உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின், “மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர், “உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே” என்ற இக்கருத்துகளை மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைவிட வேறு நல்வழி இல்லை என்று நினைத்து ஈடேற வேண்டும்.

Q.1உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?v
Answer:

உண்மை அறிவனை உணர்ந்தோர் உள்ளத்தில் இறைவன் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றான்.

Q.2மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?v
Answer:

இறைவனின் திருவடிகளின் மேல் பற்று வைக்காமல், பணத்தின் மீது ஆசை வைப்பது மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைகிறது.

Q.1அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?v
Answer:

அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் :
(i) நல்ல சிந்தனை
(ii) சிறப்பான செயல்
(iii) உயர்வான பேச்சு
(iv) உவப்பான எழுத்து
(v) பாராட்டத்தக்க உழைப்பு

Q.2ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வாறு இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?v
Answer:

ஒரு சிறந்த வழிகாட்டி :
‘ஒரு சிறந்த வழிகாட்டி மக்களுள் மாமனிதராக, அறிவாற்றல் பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும்’ என்று அயோத்திதாசர் கூறுகிறார்.

Q.3திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?v
Answer:

திராவிட மகாஜன சங்கம் சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் பராமரித்தல், குடிகளின் பாதுகாப்புக்குக் காவல்துறையினரை நியமித்தல், பொது மருத்துவமனைகள் அமைத்தல், சிற்றூர்கள் தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காகப் போராடியது.

Q.2நண்பர்களின் இயல்பை அளந்து காட்டும் அளவுகோல் எது?v
Answer:

நமக்கு வரும் துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.

Q.3இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?v
Answer:

இவ்வுலகம் பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இயங்குகிறது.

Q.4நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?v
Answer:

நட்பு சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியதன்று. நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.
படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
படைச்செருக்கு
1. கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
தெளிவுரை : காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும். (பெரிய முயற்சியே பெருமை தரும்).
அணி : பிறிதுமொழிதல் அணி
2. பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு.
தெளிவுரை : பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்று கூறுவர். பகைவருக்கும் துன்பம் வரும்போது, உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
நட்பு
3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
தெளிவுரை : நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோலப் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.
அணி : உவமை அணி
4. நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.
தெளிவுரை : நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று; நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.
நட்பு ஆராய்தல்
5. ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
தெளிவுரை : மீண்டும், மீண்டும் ஆராய்ந்து பாராமல் ஒருவனுடன் கொண்ட நட்பு தாம் சாகும் அளவுக்குத் துன்பம் தரும்.6. கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
தெளிவுரை : நமக்கு வரும் துன்பத்தினாலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.
மானம்
7. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
தெளிவுரை : செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்து கொள்ளவேண்டும். வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும்.
8. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
தெளிவுரை : மலையளவு பெருமை உடையவராக இருந்தாலும் குன்றிமணியளவு தவறு செய்தால் அவரது பெருமை அழிந்து விடும்.
9. பண்புடைமை பண்புடையார்ப் பட்டு உண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
தெளிவுரை : பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் இயங்குகிறது; இல்லாவிட்டால் மண்ணுக்குள் புதைந்து அழிந்திருக்கும்.
10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம் தீமை யால்திரிந்து அற்று.
தெளிவுரை : தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி
அழியும். : உவமையணி.நூல் வெளி
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

4சிந்தனை வினா3 questions
Q.1அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்?v
Answer:

அன்றாட வாழ்வில் நாம் பிறருக்குச் செய்யும் உதவிகள் :
மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறருக்கு உதவி செய்யும் போது பயனை எதிர்பார்க்காமல் உதவி செய்ய வேண்டும். நாம் வெளியில் செல்லும் போது நம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது தேவையா என்று கேட்டு அவர்களின் தேவையை நிறைவேற்றலாம்.
வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அவர்கள் கூறும் சிறு வேலைகளைச் செய்து அவர்களின் வேலைச் சுமையைக் குறைக்கலாம். பள்ளியில் உடன் பயிலும் மாணவர்களுக்குப் புத்தகம், குறிப்பேடு, எழுதுகோல் போன்றவை தேவையேற்படின் கொடுத்து உதவலாம். பள்ளிக் கட்டணம் கட்ட இயலாத மாணவர்கள் இருந்தால் பெற்றோரிடம் கேட்டு பணம் கட்டலாம்.படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்யலாம். சாலைகளில் நடந்து செல்லும்போது, மாற்றுத் திறனாளிகளைக் கண்டால், அவர்களுக்கு உதவலாம். இவ்வாறு நம்மைச் சுற்றியுள்ளவர்களின் சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றலாம்.

Q.1ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் யாவை?v
Answer:

ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் :
(i) தன்னிலும் தகுதி முதலானவற்றில் குறைந்தவர்கள் என்றாலும் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
(ii) இன்சொல் மட்டுமே பேசி மகிழ வேண்டும்.
(iii) பிறருக்கு உண்டாகும் துன்பங்களைத் தம் துன்பமாக எண்ணி, இரக்கப்பட்டு, தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும்.
(iv) நம் உடல் உழைப்பால் பிறருக்கு உதவ வேண்டும்.
(v) ஒருவரது நாக்கு பிறரைத் தூற்றவும், போற்றவும் செய்யும். நாவினால் சுட்ட வடு ஆறாது என்பதால், பிறர் மனம் புண்படாதபடி பேசுவதே பெரிய நற்பண்பாகும்.
(vi) நமது கண்கள் நல்ல நூல்களைப் படிக்கவும், நல்ல காட்சிகளை (திரைப்படம், தொலைக்காட்சி காணவும் செய்ய வேண்டும். மனதிற்கு தீங்கு விளைவிக்கும் காட்சிகளை, நூல்களை பார்க்க, படிக்கக் கூடாது.
(vii) கோபமின்றி வாழ்தல் போன்றவை நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் ஆகும்.

Q.1ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள் யாவை?v
Answer:

ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள்:
(i) அரசாங்கம் கூறும் சட்டத்திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிதல்.
(ii) சண்டை சச்சரவுகள் இன்றி வாழ்தல், ஒற்றுமையைப் பேணுதல்.
(iii) பொது இடங்களைச் சரியான முறையில் பயன்படுத்துதல்.
(iv) சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்களான மரங்களை வெட்டுதல், நெகிழியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்தல்.
(v) நமது தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை அடுத்த தலைமுறையினருக்கு அறிவுறுத்தல் .
(vi) பெரியோரை மதித்தல், இறை வழிபாடு போன்றவற்றை கடைப்பிடித்தல் ஆகிய உயர்பண்புகள் அடிப்படைப் பண்புகளாகும்.

5சிறுவினா14 questions
Q.1குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?v
Answer:

குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன :
(i) “மேலான பொருளே! தம் தீய எண்ணங்களை அடியோடு அழித்தவர்கள் பி மனத்துள்ளே எழுந்தருளி இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே! உன் a திருவடிகளின்மேல் பற்று வைக்காமல் பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.
(ii) நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய்.(iii) மேலான பொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரிய செயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள் செய்வாயாக!” என்று குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுகிறார்.

Q.1அயோத்திதாசரின் இதழ்ப்பணி பற்றி எழுதுக.v
Answer:

அயோத்திதாசரின் இதழ்ப்பணி :
(i) அயோத்திதாசர் 1907ஆம் ஆண்டு சென்னையில் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.
(ii) ஓர் ஆண்டிற்குப்பின் அவ்விதழின் பெயரைத் “தமிழன்” என மாற்றினார்.
(iii) உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இவ்விதழின் நோக்கம் என்று அயோத்திதாசர் குறிப்பிட்டார்.
(iv) இவர் ‘தமிழன் இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.
(v) இவர் தமது நூல்கள் மூலமாகவும் தமது சீர்திருத்தச் சிந்தனைகளை வெளியிட்டார்.

Q.2அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?v
Answer:

அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் :
(i) விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று.
(ii) அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையவேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.
(iii) “சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது;
(iv) மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமையவேண்டும்.
(v) மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது” என்று ஆணித்தரமாகக் கூறினார் அயோத்திதாசர்.

Q.4பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?v
Answer:

பா நான்கு வகைப்படும்: அவை
(i) வெண்பா
(ii) ஆசிரியப்பா
(iii) கலிப்பா
(iv) வஞ்சிப்பாமொழியை ஆள்வோம்
கேட்க

Q.1அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் கதைகளைப் பெரியோர்களிடம் கேட்டு மகிழ்க.v
Answer:

மாணவர்கள் தாங்களாகவே அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் கதைகளைப் பெரியோர்களிடம் கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
மக்கள் பணியே மகத்தான பணி!
அவையோர்க்கு வணக்கம் ! நான் மக்கள் பணியே மகத்தான பணி என்னும் தலைப்பில் பேச வந்துள்ளேன்.
தன்னையொத்த ஒரு மனிதன் பசித்திருக்கும் போது கடவுளுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாக ஒருவர் அளித்தால், அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன் தருவதில்லை. ஆனால் நடமாடும் கோயிலான பசித்த ஒரு மனிதனுக்கு ஒன்று கொடுத்தால், அது இறைவனுக்கும் சென்று சேரும் என்று திருமூலர் ‘படமாடக் கோயில் என்ற பாடல் மூலம் கூறுவதே இத்தலைப்பிற்குப் பொருத்தமாகும்.
இறைவன் எப்போதும் தன் அடியவர்களிடத்தில் இது வேண்டும் அது வேண்டும் என்று எப்போதும் கேட்பதில்லை. ஆனால் சில பெருஞ்செல்வந்தர்கள், சில தொழிலதிபர்கள் தங்கள் அலுவலகத்திலோ தொழிற்சாலைகளிலோ பணிபுரிபவர்களுக்குப் போதுமான ஊதியத்தைக் கூட கொடுப்பதில்லை.
அவசரத் தேவைக்கு என்று கேட்பவருக்கு கடனாகக்கூட கொடுத்து உதவமாட்டார்கள். இ ஆனால் கோவில் உண்டியலிலும் பூசாரியின் தட்டிலும் பணத்தைத் தாராளமாகக் கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுடைய செல்வாக்கை காட்டுகின்றனர்.
இதனால் கடவுள் மகிழ்வாரா என்று கேட்டால் நிச்சயமாக மகிழமாட்டார். இறைவனை வழிபடுவதற்கு இந்த ஆடம்பரம் தேவையில்லை. பூ வைத்து இறைவனைத் தூய மனத்தோடு வழிபட்டாலே, இறையருள் கிட்டும். இதனை ஒவ்வொரு செல்வந்தரும் உணர வேண்டும்.
இறைவன் ஐம்பூதங்களை உருவாக்கியவர் மற்றும் அந்த ஐம்பூதங்களாகவும் விளங்குபவர் அப்படிப்பட்ட இறைவனுக்குச் செய்யும் பூசைகளை ஆடம்பரப்படுத்தாமல் – அல்லது விளம்பரப்படுத்தாமல் இருப்பது நல்லது. அதற்கு ஆகும் செலவினை , ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம். அதனால் இறைவனை மகிழ்விக்கலாம்.
“எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல், பணம், புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன்தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும் போது, அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான்” என்று விவேகானந்தர் கூறுகிறார்.
இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’ என்பது போல உலக உயிர்கள் அனைத்திலும் இருக்கிறார். இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து, நம்மைச் சுற்றியுள்ளவர்களைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சிறு உதவியைச் செய்தாலும் அவர்கள் மகிழ்வர். அந்த மகிழ்ச்சி இறைவனைப் போய்ச் சேரும்.
தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் நம் வாழ்வின் தவம் என்று உணர வேண்டும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பதே சிறந்த அறம் என எண்ணி வாழ வேண்டும். இவற்றையுணர்ந்து நாம் ஏழை எளியோருக்கு உதவி செய்து அவர்களின் சிரிப்பில் இறைவனை காண்போம்.
நன்றி!
சொல்லக் கேட்டு எழுதுக
ஒரு நாட்டின் தலைவன் வீரம், விடாமுயற்சி, ஈகை, ஆராய்ந்து அறியும் ஆற்றல் ஆகியவற்றைப் பெற்றவனாக விளங்குதல் வேண்டும். அவன் அறம் அல்லாதவற்றை நீக்கி, அறத்தை நிலைநிறுத்த வேண்டும். தான் குற்றம் செய்யுமிடத்து நாணி, தன் தகுதியை நிலைநிறுத்த வேண்டும்.
குற்றம் கண்டவிடத்துத் தானே நேரில் சென்று ஆராய்ந்து, நெறிமுறை தவறாது நீதி வழங்குதல் வேண்டும். இவ்வாறு விளங்கும் தலைவனை மக்கள், துன்பம் போக்கும் இறை என்றும், இருளை அகற்றும் ஒளி என்றும் கொண்டாடுவர் என்று அயோத்திதாசர் கூறுகிறார்.
இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக.

Q.1மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை.v
Answer:

மழை நன்கு பெய்ததால் எங்களால் விளையாட முடியவில்லை.

Q.2எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும்.v
Answer:

எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.

Q.3திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.v
Answer:

திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.

Q.4அறநெறிகளைக்கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.v
Answer:

அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்கவும் அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றவும் வேண்டும்.

Q.5குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்.v
Answer:

குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
அறிந்து பயன்படுத்துவோம்
பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
விபத்தில்லா வாகனப் பயணம்
சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.
சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில் இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல வேண்டும்.
சாலைச்சந்திப்பில் நுழையும் போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழிவிட வேண்டும்.
எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.
வினாக்கள்

Q.1விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?v
Answer:

சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

Q.2கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?v
Answer:

தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகிய வாகனங்களுக்குக் கண்டிப்பாக . வழிவிட வேண்டும்.

Q.3சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?v
Answer:

சாலைச் சந்திப்புகளில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் தர வேண்டும்.

Q.5வாகனம் செலுத்தும் முறையை எழுதுக.v
Answer:

(i) ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.
(ii) சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகிய இடங்களில் வேகத்தைக் குறைத்து அங்கு இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் வாகனத்தை ஓட்ட வேண்டும்.
(iii) எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அறத்தால் வருவதே இன்பம்
கடிதம் எழுதுக.
புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
25, பிள்ளையார் கோயில் தெரு,
செங்கல்பட்டு ,
20-11-2020
அன்புள்ள மாமாவுக்கு ,
செழியன் எழுதும் கடிதம், நான் இங்கு நலமாக இருக்கிறேன். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி மற்றும் அண்ணன் அனைவரும் நலமாக இருக்கிறோம். அங்கு நீங்களும் அத்தையும் நலமாக இருக்கிறீர்களா?
நீங்கள் எப்பொழுது ஊருக்கு வருவீர்கள்? உங்களைப் பார்த்து நீண்ட நாட்களாயிற்று. பார்க்க வேண்டும் போல் உள்ளது. நான் இந்த ஆண்டு நடந்த எல்லாத் தேர்வுகளிலும் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். விளையாட்டுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்றுள்ளேன். என்னை என் பள்ளி ஆசிரியர்களும், வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டினர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
எனக்கு நான்கு நூல்கள் தேவைப்படுகின்றன. இங்குள்ள கடைகளில் கிடைக்கவில்லை. பொதுக்கட்டுரை புத்தகம், திருக்குறள் புத்தகம் (எளிமையான உரையுடன்), ஐம்பெருங்காப்பியங்கள் (கதைச் சுருக்கம்) கணினி தொடர்பான ஒரு புத்தகம் ஆகிய நூல்களை வாங்கி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
செழியன்
உறைமேல் முகவரி
அஞ்சல் தலை
திரு. கா.மாறன்,
எண்.65, சன்னதி தெரு,
கும்பகோணம்.
மொழியோடு விளையாடு
படத்தைப் பார்த்து எழுதுக.நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்…
1. அறக்கருத்துகளைப் படித்து, வாழ்வில் பின்பற்றுவேன்.
2. அறவாழ்வு வாழ்ந்த சான்றோர்களைப் பற்றி அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. தொண்டு – Charity
2. ஞானி – Saint
3. தத்துவம் – Philosophy
4. நேர்மை – Integrity
5. பகுத்தறிவு – Rational
6. சீர்திருத்தம் – Reform

6நெடுவினா1 questions
Q.1வாழும்முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.v
Answer:

வாழும் முறை :
(i) மக்கள் வாழவேண்டிய முறை பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் சிறப்பானவையாகும்.
(ii) மக்கள் அனைவரும் அன்புகொண்டு வாழவேண்டும்; கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்விலிருந்து நீக்கி வாழவேண்டும்.
(iii) பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது. மேலும் மதியை அழிக்கும் போதைப் பொருள்களைக் கையாலும் தொடுதல் கூடாது.
(iv) ஒரு குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் நிறைந்தால் அக்குடும்பம் வாழும் ஊர் முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும்.
(v) ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத் திகழும்.
(vi) இத்தகைய நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும் என்பவை அயோத்திதாசர் கருத்துகள் ஆகும்.
சமத்துவம் :
(i) அயோத்திதாசர், மக்கள் அனைவரும் சம உரிமை பெற்றுச் சமத்துவமாக வாழ வேண்டும் என்று விரும்பினார்.
(ii) கல்வி, வேளாண்மை, காவல்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.
(iii) ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றிலும் எல்லா வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
(iv) இவற்றில் இந்து, பௌத்தர், கிறித்துவர், இசுலாமியர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் போன்ற அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் அயோத்திதாசர்.

7மதிப்பீடு1 questions
Q.1மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.v
Answer:

நான் ஒருஸ்டோரில் குமாஸ்தாவாக நாற்பத்தைந்து ஆண்டுகளாகப் பணிபுரிகின்றேன். கடையில் வரவு செலவு வளர்ந்தது. அதேபோல் எனக்குக் கவலையும் வளர்ந்தது. குத்து ‘விளக்கடியில் கணக்கு பார்த்த நான் இப்போது மின்சார விளக்கில் கணக்கு பார்க்கிறேன்.தினமும் ஆற்றில் குளியல், நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம் என நான் வேலைக்குச் செல்லும் காட்சி பழுதுபடாத இயந்திரத்தை நினைவுபடுத்தும். நான் சாதுவாக இருப்பேன். என்னைப் பாதுகாத்துக் கொள்ள உண்மை , நாணயம் முதலிய பழக்கங்களை உறுதியாக மேற்கொள்வேன்.
இவ்வாறு இருந்த என் மனதில் ஆசை துளிர்விட்டது. மாடு கன்று வாங்க வேண்டும், அடகு வைத்த நிலத்தைத் திருப்ப வேண்டும், ஒரு மீனாட்சி ஸ்டோர் வைத்து இஷ்டப்படி ஆட வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. அதுமட்டுமா? கொழும்புக்குப் போய்விட்டு ஆடம்பரமாகத் திரும்ப வேண்டும், எதிரே வருபவர்கள் அண்ணாச்சி சௌக்கியமா? என்று கேட்க வேண்டும் !
தினசரி பணப்புழக்கம் என் கையில்தான். ராத்திரியோடு ராத்தியாகக் கம்பி நீட்டிவிடலாம் என்று எண்ணினேன். சுப்புவின் கணக்கு பற்றிச் சிந்தித்தேன். ராமையாவின் பேரேட்டைத் திருப்பிக் கூட்டலாம் என்றால் என் மனம் கணக்கில் லயிக்கவில்லை.
பெட்டிச் சொருகை இழுத்து செம்பு, நிக்கல், வெள்ளி என்று பாராமல் மடமடவென்று எண்ணினேன். நாற்பதும், சில்லறையும் இருந்தது. எனது மடியில் எடுத்துக் கட்டிக் கொண்டேன். விளக்கை அணைத்தேன். கதவைப் பூட்டினேன். ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றேன். பத்தேகால் அணாவைக் கொடுத்து டிக்கெட் வாங்கினேன். தூத்துக்குடி இரயிலில் சன்னலோரத்தில் உட்கார்ந்தேன்.
அங்கு வந்த என் நண்பரான ரயில்வே போலீஸ் கலியாண சுந்தரம் “ஏது இந்த ராத்திரியில்” என்றார். நான் அவரைப் பார்க்கவில்லை. அவருடைய காக்கி உடையைத்தான் பார்த்தேன். “தூத்துக்குடி வரை” என்று வாய் என்னையறியாமல் கூறியது.
எனக்கு நாக்கு வறண்டது. கண்கள் சுழன்றன. சோடா குடித்தேன். கண்ணை மூடினேன். கலியாணசுந்தரம் பார்த்துவிட்டான் ! நாளைக்கு என் குட்டு வெளிப்பட்டுப் போகும் எனத் தோன்றியது. ரெயிலை விட்டு இறங்கினேன் . நேராக ஸ்டோருக்குச் சென்றேன். எடுத்த சில்லறையைப் பெட்டிக்குள் வைத்தேன். என் கணக்கில் பதினொன்றே காலணா என்று எழுதினேன்.
ஸ்டோரை மூடிவிட்டுப் புறப்பட்டேன். முதலாளி வீட்டிற்குச் சென்றேன். அவர் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டார். “இல்லே, சோலி இருந்தது. எம்பத்துலே இன்னிக்கி பதினொண்ணே காலணா எழுதியிருக்கேன்,” என்றேன். நாவறண்டு போனது. கண்ணை மூடிக்கொண்டு உறங்கிய முதலாளியைச் சற்று நேரம் பார்த்துவிட்டு மெதுவாக நடந்தேன்.ஆசிரியர் குறிப்பு
சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். சில திரைப்படங்களுக்குக் கதை, உரையாடலும் எழுதியுள்ளார்.கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒருநாள் கழிந்தது போன்றன இவரது சிறுகதைகளுள் புகழ்பெற்றவை. மணிக்கொடி இதழில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.