திருஞானசம்பந்தர் :
இயற்பெயர் – ஆளுடைய பிள்ளை
பெற்றோர் – சிவபாத இருதயர், பகவதி அம்மையார்.
ஊர் – சீர்காழி
தேவாரத்தின் முதல் நூலைப் பாடியவர். பன்னிரு திருமுறைகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறை இவர் பாடியவை.
சிறு வயதில் மூன்று வயதுவரை பேசாதிருந்தார். உமையம்மை கொடுத்த ஞானப்பாலை உண்ணும்போது தோடுடைய செவியன் எனும் முதல் பாடலைப் பாடினார்.
திருநாவுக்கரசர் :
இயற்பெயர் – மருள்நீக்கியார்
சிறப்புப் பெயர்கள் – திருநாவுக்கரசர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர்
பெற்றோர் – புகழனார், மாதினியார்.
தமக்கை – திலகவதியார்
பிறந்த ஊர் – திருவாமூர்
இவர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.சுந்தரர் :
பிறந்த ஊர் – திருநாவலூர்
பெற்றோர் – சடையனார், இசைஞானியார்.
இயற்பெயர் – நம்பியாரூரர்
சிறப்புப் பெயர்கள் – வன்தொண்டர், தம்பிரான் தோழர்.
இவருடைய பாடல்கள் ஏழாம் திருமுறையாகப் பன்னிரு திருமுறைகளுள் வைக்கப் பட்டுள்ளன.
பாடநூல் வினாக்கள்
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
குடமுழாஉடுக்கைமத்தளம்வீணை
கித்தார் அல்லது கிட்டார் :
இது அதிர்கம்பிகள் கொண்ட ஒரு , நரம்பு இசைக்கருவி ஆகும். கித்தார் மிகவும் பிரபலமான இசைக்கருவி. இதில் உள்ள வெவ்வேறான தடிமன் கொண்ட நரம்புகளை மீட்டுவதன் மூலம் இசை பிறக்கும். பொதுவான கித்தார் ஆறு தந்திகள் உடையது. அடித்தொனிக் கித்தார்கள் நான்கு தந்திகளைக் கொண்டவை.
பியானோ – கின்னரப்பெட்டி :
பியானோ என்பது வதிப்பலகையால் வாசிக்கப்படும் இசைக்கருவி. பெரிதாக மேற்கத்திய இசையில் தனித்து வாசிப்பதற்கும் அறையிசையில் வாசிப்பதற்கும், துணைக் கருவியாக வாசிப்பதற்குமே பயன்படுத்தப்படுகிறது.தபேலா (கைம்முரசு இணை) :
இது இந்துஸ்தானி இசையில் மிக முக்கியமான தாள வாத்தியம். தற்போது தென்னிந்தியாவில் பக்திப் பாடல், மெல்லிசைப் பாடல், பஜனைப் பாடல் ஆகியவற்றில் கைம்முரசு இணை பக்கவாத்தியமாக வாசிக்கப்படுகிறது.
தொகைநிலைத் தொடர் :
(i) ஆற்றல் உடையது – வேற்றுமைத்தொகை
(ii) சுடுமண் – வினைத்தொகை
(iii) சிற்றூர் – பண்புத்தொகை
(iv) வெற்றிலை பாக்கு – உம்மைத்தொகை
(v) மலர்விழி – உவமைத்தொகை
(vi) மலர்விழி வந்தாள் – அன்மொழித்தொகை
தொகாநிலைத் தொடர் :
(i) கல்லூரி மாணவி மலர்விழி – எழுவாய்த் தொடர்
(ii) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! – விளித்தொடர்
(iii) என்கிறார் அடியார்க்கு நல்லார் – வினைமுற்றுத் தொடர்
(iv) கட்டிய – பெயரெச்சத் தொடர்
(v) தோன்றிக் கிளைத்தன – வினையெச்சத் தொடர்
(vi) தொடர்பைக் காட்டும் – வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
(vii) மற்றொன்று – இடைச்சொல் தொடர்
(viii) மாநிலம் – உரிச்சொல் தொடர்
(ix) ஓடி ஓடி – அடுக்குத் தொடர்
இ) வேழங்கள்
இ) கனகம் + சுனை
இ) முழவதிர
ஆ) அலந்தவர்க்கு
அ) இகழ்வாரை
ஈ) நிறை
இ) பாடு + அறிந்து
ஆ) முறையெனப்படுவது
இ) பனையோலைகள்
ஆ) வனைதல்
ஈ) மட்டும் + அல்ல
அ) கயிற்றுக்கட்டில்
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. முழுவதும் – தொழிலாளி நாள் முழுவதும் உழைப்பார்.
2. மட்டுமல்லாமல் – புயல் காற்று வீசியதில் செடிகொடிகள் மட்டுமல்லாமல் மரங்களும் வீழ்ந்தன.
3. அழகுக்காக – முகத்தின் அழகுக்காக இயற்கைக் களிம்புகளை மட்டும் பயன்படுத்தலாம்.
4. முன்பெல்லாம் – மாணவர்களுக்கு முன்பெல்லாம் ஓடியாடி விளையாடுவதற்கு நேரம் இருந்தது.
அ) வேற்றுமைத்தொகை
ஆ) பண்பு
புல்லாங்குழல் மற்றும் முழவு ஆகியவற்றைத் தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக் கருவிகளாகச் சுந்தரர் கூறுகின்றார்.
(i) பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
(ii) அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
(i) நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
(ii) பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் ஆகும்.
கைவினைக் கலைகள் :
(i) மண்பாண்டங்கள் செய்தல்.
(ii) மூங்கில் கொண்டு பொருள்கள் செய்தல்.
(iii) பனையோலையில் பொருள்கள் செய்தல்.
(iv) பிரம்பினால் பொருள்கள் செய்தல்.
(v) மண் பொம்மைகள் செய்தல்.
(vi) – மரபொம்மைகள் செய்தல்.
(vii) காகிதப் பொம்மைகள் செய்தல்.
(viii) தஞ்சாவூர்த்தட்டு செய்தல்.
(ix) சந்தன மாலையும், ஏலக்காய் மாலையும் செய்தல்.
(x) மாட்டுக்கொம்பு, சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்களை உருவாக்குதல்
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் :
(i) குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை
(ii) பொம்மைகள்
(iii) பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான்
(iv) பெரிய கூடை
(v) சுளகு
(vi) விசிறி
(vii) தொப்பி
(vii) ஓலைப்பாய்
இச்செயலை இந்த வகையால் இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
எதையும் நன்கு ஆராய்ந்து ஒரு பக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.
ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும். இதுவே அரசன் தண்டிக்கும் முறை ஆகும்.
கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.
பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
பள்ளி ஆண்டுவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனை பரிந்துரைத்தனர். தலைமை ஆசிரியர் செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான். ஆனால் இது கலைக்குழுவிற்கான தலைவர் பதவி. நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரே இதற்குத் தகுதியானவர். எனவே என்னுடைய தேர்வு கலையரசன்’ என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த தேர்வு’ என்று மகிழ்ந்தனர்.
1. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.
2. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
2. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
தெரிந்து வினையாடல்
1. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
தெளிவுரை : செயலாற்றும் திறன் உடையவரையும் செய்ய வேண்டிய செயலையும் செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து அச்செயலை நிறைவேற்ற வேண்டும்.
2. இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
தெளிவுரை : இச்செயலை இந்த வகையால் இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
செங்கோன்மை
3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
தெளிவுரை : எதையும் நன்கு ஆராய்ந்து ஒரு பக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.
4. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
தெளிவுரை : உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பற்றும்.
வெருவந்த செய்யாமை
5. தக்காங்கு நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
தெளிவுரை : ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.6. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
தெளிவுரை : நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.
சொல்வன்மை
7. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவாதம் சொல்.
தெளிவுரை : கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொற்றலாற்றலின் இயல்பாகும்.
8. சொல்லுக சொல்லைப் பிறர்ஓர்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.
தெளிவுரை : நாம் சொல்லும் சொல்லை வேறு சொல்லால் வெல்ல இயலாதவாறு சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும்.
அவையறிதல்
9. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.
தெளிவுரை : சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.
10. கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
தெளிவுரை : சொற்களை ஆராயும் அறிஞர் நிறைந்த அவையில் பேசும்போதுதான் பல நூல்களைக் கற்றவரின் கல்வி பெருமையடையும்.நூல் வெளி
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.
பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது, அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆன புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
கண்களுக்கு இனிய குளிர்ச்சிதரும் ஒளியை உடைய பொன் வண்ண நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த் திவலைகளை வாரி இறைக்கும்.
நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது தோன்றும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.
இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறார்.
என எழுதுக.
திருவிழாக் கூட்டத்தில் இரைச்சலைக் குறைக்கவும், திருவிழா நிகழ்வு நடக்கப் போகிறது என்பதை அறிவிக்கவும், இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அந்த உயிர்களைப் படைத்த இறைவன் இசையை விரும்புவான். அதனால் விழாக்களின்போது இசைக்கருவிகள் இசைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
இசைக்கருவிகளை இசைக்கும் போது உணர்ச்சிப் பெருக்கும், பக்திப்பெருக்கும் ஏற்படுவதாலும் விழாக்களின் போது இசைக் கருவிகளை இசைக்கும் வழக்கம் தோன்றியிருக்கும்.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புநலன்கள் :
(i) பிறரிடம் அன்பு காட்டுதல்.
(ii) இனிமையாகப் பழகுதல்.
(iii) மறந்தும் கூட பிறருக்குக் கேடு நினையாமை
(iv) பெற்றோரை மதித்தல், பேணுதல்.
(v) தெய்வத்தை வழிபடுதல்.
(vi) ஒழுக்கத்துடன் வாழ்தல்.
(vii) பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்காமை.
(i) தமிழகக் கைவினைப் பொருட்கள் அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்டவை.
(ii) பயன்பாட்டிற்குப் பின்னர் இவற்றை மண்ணில் போட்டாலும் நிலவளம் பாதிக்காது. . ஏனெனில் இவை மட்கும் தன்மையுடையவை.
(iii) இப்பொருட்களை செய்வதற்கு எவ்வித இரசாயனப் பொருள்களையும் * பயன்படுத்துவில்லை. ஆகையால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. .
நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்கள்:
(i) இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
(ii) பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.
(iii) பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
(iv) அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
(v) அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
(vi) செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
(vii) நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.
(viii) நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
(ix) பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.
தொகைநிலைத் தொடர் ஆறுவகைப்படும். அவை
(i) வேற்றுமைத்தொகை
(ii) வினைத்தொகை
(iii) பண்புத்தொகை
(iv) உவமைத்தொகை .
(v) உம்மைத்தொகை
(vi) அன்மொழித்தொகை
(i) இரவுபகல் – உம்மைத்தொகை
(ii) இத்தொடர் இரவும் பகலும் என விரிந்து பொருள் தருகின்றது.
(iii) இதில் சொற்களின் இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதால் உம்மைத்தொகை ஆயிற்று.
மாணவர்கள் தாங்களாகவே கைவினைக் கலைகளின் சிறப்புகள் குறித்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ வேண்டும்.கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக.
அவையோர்க்கு வணக்கம்!
நான் இதயம் கவரும் இசை என்ற தலைப்பில் பேசவிருக்கின்றேன். இசைக்கு மயங்காதவர் உண்டோ ? ஏன்? பாம்புகூட மகுடி இசைக்கு ஆடும் அல்லவா? அப்படி இருக்க நாம் மட்டும் விதிவிலக்கா?
இசை என்றாலே இசைய வைப்பது என்பது பொருள். அதனால்தான் நாம் அனைவருக்கும் இசைக்கு இசைந்து விட்டோம். இசை பல்வேறு பயன்களைத் தருகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சியின் மூலம் இசையானது அனைவரையும் சென்றடைகின்றது. வானொலி, தொலைக்காட்சி, இசைத்தட்டுகள், செல்பேசி என அனைத்து ஊடகங்களின் வாயிலாக இசை நம்மை மகிழ்விக்கிறது.
தாய், குழந்தையைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுப் பாடிய காலம் போய் செல்பேசியில் அதற்கென்று ஒரு செயலி. அதனைப் போட்டுவிட்டால் குழந்தை தூங்கும். பல வீட்டில் குழந்தைகளை உண்ணச் செய்வதற்கே செல்பேசி பாட்டுதான் பயன்படுகிறது. அப்பாடலில் இசையோ, குரலொலியோ குழந்தைகளை மயங்கச் செய்கிறது.
இசையானது நோய் தீர்க்கும் ஒரு மருந்து என்று கூறினால் அது மிகையாகாது. ஓர் ஆராய்ச்சியாளர் தனது ஆராய்ச்சியின் முடிவாக – இசை உறவுகளை மேம்படுத்தும், மகிழ்ச்சியைத் தரும், நோய்களைக் குணப்படுத்தும், படைப்பாற்றலை ஊக்குவிக்கும், உடலுக்கு வலிமையையும் ஆற்றலையும் தரும் என்று விவரித்துள்ளார்.
வாழ்க்கைச் சுழற்சியில் நாம் அனைவரும் மன அழுத்தம் மிக்கவர்களாக இருக்கிறோம். இதனைப் போக்க நமக்கு இசை உதவும். இந்த இசைக்கு மொழி தேவையில்லை. இசையை நாம் உணர்ந்தால் அது நமக்கு இன்பத்தைத் தரும். ‘இசை கேட்பது நல்லது. அதனை வாசிப்பது அதைவிட நல்லது’ என்பது உளவியல் நிபுணர்களின் கூற்று.
இசை மனிதனின் ஆன்மா, மனம், உடல் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. இசையால் கோபம், சோகம், வீரம், நம்பிக்கை, நகைச்சுவை போன்ற உணர்வுகளை உருவாக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மனமும் உடலும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். இந்நிலை பாதிக்கப்படும் போதுதான் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இசை கேட்பவரின் மனதை ஈர்ந்து அவரை – தன்வயப்படுத்துகிறது. இதுவே இசையின் இயல்பாகும்.
இசைக்கு வசமாகாத இதயம் இல்லை. இசை, மனத்தொய்வு ஏற்படும்போது நமக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மென்மையான இசைநம்மனதுக்கு அமைதியைத் தருகிறது. – இசை மனக்கட்டுப்பாட்டைத் தரவல்லது. விலங்குகளும் பறவைகளும் கூட இசையால் கவரப்படுகின்றன. கிருஷ்ண பரமாத்மாவின் குழலோசைக்குப் பறவைகளும் பசுக்களும் கட்டுண்டு கிடந்ததைப் புராணங்கள் கூறுகின்றன. ஆகையால் இசை நம் அனைவரின் இதயங்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை என்று கூறி விடை பெறுகிறேன்.
சொல்லக் கேட்டு எழுதுக
முல்லை நில மக்களாகிய ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள். இதனைச் சம்பந்தர் திருப்பதிகத்தில் அமைந்த நிகழ்ச்சி ஒன்று விளங்குகிறது. திருவண்ணாமலைச் சாரலில் ஆயர் ஒருவர் ஆநிரைகளையும் எருமையினங்களையும் மேய்த்துக் கொண்டிருந்தார். மாலையில் அவற்றையெல்லாம் ஒன்று திரட்டினார்.
அப்போது எருமை ஒன்று காணாமல் ‘ போனதை அறிந்தார். தம் கையிலிருந்த குழலை எடுத்து இனிய இசையை எழுப்பினார். இன்னிசை கேட்ட எருமை அவரை வந்தடைந்தது. இவ்வாறு ஆயர்களின் இசைத் திறத்தைத் திருப்பதிகம் விளக்குகிறது.
கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக
(கொண்டு, இருந்து, உடைய, காட்டிலும், ஆக, நின்று, உடன், விட, பொருட்டு)
1. இடி ………….. மழை வந்தது.
2. மலர்விழி தேர்வின் …………….. ஆயத்தமானாள்.
3. அருவி மலையில் …………… வீழ்ந்தது.
4. தமிழைக் ……………. சுவையான மொழியுண்டோ!
5. யாழ், தமிழர் …………….. இசைக் கருவிகளுள் ஒன்று.
1. உடன்
2. பொருட்டு
3. இருந்து
4. காட்டிலும்
5. உடையபின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக
படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை , பிடில், நாகசுரம், மகுடி.
அகரவரிசை :
1. உடுக்கை
2. உறுமி
3. கணப்பாறை
4. தவண்டை
5. தவில்
6. நாகசுரம் .
7. படகம்
8. பிடில்
9. பேரியாழ்
10. மகுடி
அறிந்து பயன்படுத்துவோம்
இணைச்சொற்கள்
தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். அவற்றை இணைச்சொற்கள் என்கிறோம்.
(எ.கா.) தாய் குழந்தையைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தாள்.
இணைச் சொற்கள் மூன்று வகைப்படும். அவை,
1. நேரிணை, 2. எதிரிணை, 3. செறியிணை
அ) ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை எனப்படும்.
(எ.கா.) சீரும் சிறப்பும், பேரும் புகழும்.
ஆ) எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணை எதிரிணை எனப்படும்.
(எ.கா.) இரவுபகல், உயர்வுதாழ்வு
இ) பொருளின் செறிவைக் குறித்து வருவன செறியிணை எனப்படும்.
(எ.கா.) பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்.
பின்வரும் இணைச் சொற்களை வகைப்படுத்துக.சரியான இணைச் சொற்களை இட்டு நிரப்புக
(மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடி அசைந்து)
1. சான்றோர் எனப்படுபவர் …………….. களில் சிறந்தவர் ஆவர்.
2. ஆற்று வெள்ளம் ……………… பாராமல் ஓடியது.
3. இசைக்கலைஞர்கள் ……………… வேண்டியவர்கள்.
4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ………………. இல்லை.
5.. திருவிழாவில் யானை வந்தது.
1. கல்விகேள்வி
2. மேடுபள்ளம்
3. போற்றிப்புகழப்பட
4. வாழ்வுதாழ்வு
5. ஆடி அசைந்து
இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.
விடுநர் :
கவிதா ம.
எண். 15, முத்தம்மன் கோவில் தெரு,
சாய்நாதபுரம்,
வேலூர்.
பெறுநர் :
உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
வேலூர்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : இருப்பிடச் சான்று வேண்டி.
வணக்கம். நான் மேலே குறிப்பிட்ட முகவரியில் பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் இருக்கிறேன். நான் படிக்கும் பள்ளியில் என் இருப்பிடம் பற்றிய விவரத்தைக் கேட்கின்றனர். ஆதலால் நான் இம்முகவரியில்தான் வசிக்கிறேன் என்பதற்கான இருப்பிடச் சான்றிதழ் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
இணைப்பு :
1. ‘குடும்ப அட்டை நகல்
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
கவிதா ம.
உறைமேல் முகவரி
அஞ்சல் தலை
பெறுநர்
உயர்திரு வட்டாட்சியர் அலுவலகம்,
வட்டாட்சியர் அலுவலகம்,
வேலூர்.
மொழியோடு விளையாடு
குறுக்கெழுத்துப் புதிர்.இடமிருந்து வலம்
1. முதற்கருவி எனப் பெயர் பெற்றது.
2. யாழிலிருந்து உருவான பிற்காலக் கருவி
7. இயற்கைக் கருவி
12. விலங்கின் உறுப்பைப் பெயராகக் கொண்ட
வலமிருந்து இடம்
4. வட்டமான மணி போன்ற கருவி
8. ஐந்து வாய்களைக் கொண்ட கருவி
9. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர்
மேலிருந்து கீழ்
1. 19 நரம்புகளைக் கொண்ட யாழ்
3. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை …………க் கருவி
5. சிறியவகை உடுக்கை.
6. பறை ஒரு ……………. கருவி
கீழிருந்து மேல்
8. மூங்கிலால் செய்யப்படும் காற்றுக் கருவி
10. வீணையில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை.
11. திருமணத்தின் போது கொட்டும் முரசு.
விடைகள்நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்…
1. கைவினைக்கலைகளுள் ஒன்றைக் கற்றுக் கொள்வேன்.
2. இசைக் கலையை வளர்த்த சான்றார்களைப் பற்றி அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. கைவினைப் பொருள்கள் – Crafts
2. புல்லாங்குழல் Flute
3. முரசு – Drum
4. கூடைமுடைதல் – Basketry
5. பின்னுதல் – Knitting
6. கொம்பு – Horn
7. கைவினைஞர் – Artisan
8. சடங்கு – Rite
முன்னுரை :
அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலை எனலாம். மண்பாண்டம்
செய்தல் :
குளங்கள், ஆற்றங்கரை, வயல்வெளிகள் ஆகிய இடங்களில் கிடைக்கும் களிமண்ணைப் பயன்படுத்தி மண்பாண்டங்கள் செய்யப்படுகின்றன. இப்பாண்டங்கள் சமையல் செய்வதற்கும், தண்ணீர் வைப்பதற்கும் பயன்படுகின்றன.
சுடுமண் சிற்பங்கள் :
மண்பாண்டங்களைப் போன்றே களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும். இதில் விலங்குகள், பறவைகள், பொம்மைகள், அலங்கார வடிவங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் செய்யப்படுகின்றன.
மூங்கில்கலை :
மூங்கிலைக் கொண்டு மட்டக்கூட்டை, தட்டுக் கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத் தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய் எனப் பல பொருள்கள் செய்யப்படுகின்றன.
கோரைப்பாய் :
கோரைப்புல்லைப் பயன்படுத்தி பந்திப்பாய், தடுக்குப்பாய், திண்ணைப்பாய், பட்டுப்பாய், தொழுகைப்பாய் எனப் பலவகையான பாய்கள் செய்யப்படுகின்றன. பாய்களில் மயில், பூக்கள், குத்துவிளக்கு, வழிபாட்டுச் சின்னங்கள் போன்றவையும் இடம் பெறுகின்றன.
பனையோலை :
பனையோலைகளைப் பயன்படுத்திக் கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக் கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய் போன்றவை செய்யப்படுகின்றன. பனைமட்டை நாரிலிருந்து கயிறு, கட்டில், கூடை போன்றவை செய்யப்படுகின்றன. பிரம்புக்கலை :
கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத்தட்டு, அருச்சனைத்தட்டு, வெற்றிலைப் பெட்டி எனப் பல பொருள்கள் பிரம்பினால் செய்யப்படுகின்றன.
பலவகைப் பொருள்கள் :
மண் பொம்மைகள், மரப்பொம்மைகள் செய்தல், காகிதப் பொம்மைகள் செய்தல், தஞ்சாவூர்த்தட்டு செய்தல், சந்தனமாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல், மாட்டுக் கொம்பினால் கலைப் பொருள்கள் செய்தல், சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்களை உருவாக்குதல்.முடிவுரை :
கைவினைக் கலை அழியாமல் இருக்க நாம் அப்பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை உருவாக்கும் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இ) குற்றமற்ற ஆட்சி
ஆ) அவையின்
அ) கண் + ஓடாது
ஈ) கசடு + அற
அ) என்றாய்ந்து