Samacheer Kalvi · Class 8 · Important Questions

Class 8 Tamil Important Questions (Chapter-wise)

Chapter-wise important questions for Samacheer Kalvi Class 8 Tamil — the most useful 5-mark, 2-mark and 1-mark questions with answers for fast exam revision, selected from the textbook book-back exercises. Each chapter links to its full step-by-step solutions.

All chapters & full answers →
Jump to a chapter
1. இயல் 12. இயல் 23. இயல் 34. இயல் 45. இயல் 56. இயல் 67. இயல் 78. இயல் 89. இயல் 9
Ch 1இயல் 1
5-Mark Questions
பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
(எ.கா) காகம் கரையும். (i) ஆந்தை : அலறும் (ii) கிளி : பேசும் (iii) குயில் : கூவும் (iv) புறா : குனுகும் (v) மயில் : அகவும் (vi) குருவி : கீச்சிடும் (vii) கோழி : கொக்கரிக்கும் (viii) சேவல் : கூவும் (ix) வண்டு : முரலும் (x) கூகை : குழறும்
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள பழைய வரிவடிவச் சொற்களை எடுத்து எழுதி, அவற்றை இன்றைய வரிவடிவில் மாற்றி எழுதுக.
சுற்றுப்புறச் சூழ்நிலைப் பிரச்னைகள் பற்றிய இந்தியாவின் கவலை பல்லாண்டு காலமாக வளர்ந்தே வருகிறது. ‘மனிதன் ஏழ்மையிலே இருக்கும்போது சத்தற்ற உணவினாலும், நோயினாலும் அச்சுறுத்தப்படுகிறான்; பலவீனனாக இருப்பவன் போருக்கு அஞ்சுகிறான்; செல்வந்தனாக இருப்பவனோ தன் கொழுத்த செல்வத்தால் உண்டான அசுத்தத்திற்கு அஞ்சுகிறான்’ என்றெல்லாம் திருமதி இந்திராகாந்தி அன்றைக்கு ஆற்றிய உரை நாம் நினைவுகூரத் தக்கது.
2-Mark Questions
‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
இப்பாடலை இசையுடன் பாடி பழக வேண்டும்.
ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.
(i) நிலம் – பூமி, தரை, புவி (ii) நீர் – புனல், தண்ணீர் (iii) தீ – அனல், நெருப்பு, கனல் (iv) காற்று – வளி, கால் (v) வானம் – ஆகாயம், விண்
ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Full solutions: இயல் 1 →
Ch 2இயல் 2
5-Mark Questions
மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி எழுதுக.
சூறாவளி : சூறாவளி என்பது கடலில் ஏற்படுகின்ற குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அல்லது குறைந்த அழுத்த மண்டலமாகும். புயலின் மத்தியில் குறைந்த அழுத்தமும் அதனைச் சுற்றி அதிக அழுத்தமும் உருவாகியிருந்தாலோ, புயலின் மத்தியில் அதிக 15 அழுத்தமும் அதனைச் சுற்றிலும் குறைந்த அழுத்தமும் உருவாகியிருந்தாலோ சூறாவளி உண்டாகும். இது கடற்பகுதியிலிருந்து நிலப்பகுதியைக் கடக்கும். சுனாமி : கடலுக்கு அடியில் ஏற்படுகின்ற நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால், திடீரென கடல்நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்து கரையைச் சேர்ந்து அங்கே பேரழிவுகளை ஏற்படுத்தும். இதனைக் கடற்கோள் என்றும் ஆழிப் பேரலை என்றும் கூறுவர். …
நில வளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்து எழுதுக.
நிலவளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகள் : (i) நம்மைச் சுற்றியுள்ள இடங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். (ii) காடுகள், மலைகள் அழிக்கப்படக்கூடாது. (iii) வனவிலங்குகள், பறவைகளைப் பாதுகாத்தல். (iv) உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளதால் அவை அனைத்தையும் பாதுகாத்தல். (v) நீர்நிலைகளை கோடைக்காலத்தில் தூரெடுத்து வைத்து மழைக் காலத்தில் நீரைத் தேக்கி வைத்தல். அதன் மூலம் நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்த்தல். (vi) நம் தேவைக்கு மரங்களை வெட்டினாலும் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல். (vii) நதிப்படுகைகளில் மரங்களை நடுதல். …
2-Mark Questions
மலை, அருவி, ஓடை, மரங்கள். வயல்கள் இடம் பெறுமாறு ஓர் இயற்கைக் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
இயற்கைச் சீற்றங்கள் பற்றிய புகைப்படங்களை நாளேடுகளிலிருந்து திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்த படத்தொகுப்பு உருவாக்குக.
Full solutions: இயல் 2 →
Ch 3இயல் 3
5-Mark Questions
ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகியவற்றின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
ஐம்பெருங்காப்பியங்கள் : (i) சிலப்பதிகாரம் (ii) மணிமேகலை (iii) வளையாபதி (iv) குண்ட லகேசி (v) சீவகசிந்தாமணி ஐஞ்சிறுகாப்பியங்கள் : (i) உதயண குமார காவியம் (ii) நாக குமார காவியம் (iii) யாசோதர காவியம் (iv) சூளாமணி (v) நீலகேசி.
நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களை எழுதுக.
(i) சிறு வயதிலேயே இரத்த அழுத்தம், தலைவலி போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள். அதற்குக் காரணம் என்ன? (ii) மாணவர்களுள் சிலரால் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்களைச் செய்ய இயலவில்லை. அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்? (iii) நம் உடலிலுள்ள எலும்புகள் வலுவடைய நாம் செய்ய வேண்டுவன யாவை? (iv) நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க யாது செய்ய வேண்டும்? (v) சூரிய ஒளியைப் பெறுவதற்கு உகந்த நேரம் எது?
2-Mark Questions
‘தன் சுத்தம்’ என்னும் தலைப்பில் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
சுகாதாரம் பற்றிய பழமொழிகளைத் தொகுத்து எழுதுக. (எ.கா) சுத்தம் சோறு போடும்.
(i) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். (ii) சுத்தம் சுகம் தரும்; சுகாதாரம் நாட்டைக் காக்கும். (iii) கூழானாலும் குளித்துக்குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
‘வந்த’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக. (எ.கா.) வந்த மாணவன். வந்த மாடு.
(i) வந்த குழந்தை (ii) வந்த சிறுவன் (iii) வந்த தாத்தா (iv) வந்த மாணவர்கள் (v) வந்த மழை (vi) வந்த திரைப்படம் (vii) வந்த அம்மா .
Full solutions: இயல் 3 →
Ch 4இயல் 4
5-Mark Questions
திருக்குறள் கருத்துகளை உணர்த்தும் கதைகளை அறிந்து வந்து வகுப்பில் பகிர்க.
குறள் : உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். உணர்த்தும் கதை : “சின்னச்சாமி… யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க… யாராய் இருக்கும்…. மாட்டு வண்டியை ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார். “தெரியலப்பா…” “இறங்கி யாருன்னு பாரு…” “வாட்ட சாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார். “ஐயா… நீங்க…” “வெளியூருப்பா… வண்டி நின்னு போச்சு….!” “அப்படியா…. வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க மழை வர்ற மாதிரியிருக்கு ஊரு ரொம்ப தூரம்… வேற வண்டியும் வராது…” அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். …
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வேற்றுமை உருபுகளை எடுத்து எழுதி வகைப்படுத்துக.
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி எனப்படும். மனிதர்களது வாழ்வில் உடலோம்பலுடன் அறிவோம்பலும் நிகழ்ந்துவரல் வேண்டும். அறிவோம்பலுக்குக் கல்வி தேவை. அக்கல்விப்பயிற்சிக்கு உரிய பருவம் இளமை என்பதை விளக்க வேண்டியதில்லை. இது பற்றியே இளமையில் கல் என்னும் முதுமொழி பிறந்தது.
2-Mark Questions
கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
(i) அறிய அறியக் கெடுவார் உண்டா ? (ii) இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து. (iii) கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை (iv) கல்லாதவரே கண்ணில்லாதவர். (v) கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம்பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.
அறிவுடையார் தாமே உணர்வர் பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா, விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு. – காரியாசான்
பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.
கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின் ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து.
Full solutions: இயல் 4 →
Ch 5இயல் 5
5-Mark Questions
தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
திருஞானசம்பந்தர் : இயற்பெயர் – ஆளுடைய பிள்ளை பெற்றோர் – சிவபாத இருதயர், பகவதி அம்மையார். ஊர் – சீர்காழி தேவாரத்தின் முதல் நூலைப் பாடியவர். பன்னிரு திருமுறைகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறை இவர் பாடியவை. சிறு வயதில் மூன்று வயதுவரை பேசாதிருந்தார். உமையம்மை கொடுத்த ஞானப்பாலை உண்ணும்போது தோடுடைய செவியன் எனும் முதல் பாடலைப் பாடினார். திருநாவுக்கரசர் : இயற்பெயர் – மருள்நீக்கியார் சிறப்புப் பெயர்கள் – திருநாவுக்கரசர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர் பெற்றோர் – புகழனார், மாதினியார். …
இக்கால இசைக்கருவிகள் குறித்துக் கலைக்களஞ்சிய வடிவில் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
கித்தார் அல்லது கிட்டார் : இது அதிர்கம்பிகள் கொண்ட ஒரு , நரம்பு இசைக்கருவி ஆகும். கித்தார் மிகவும் பிரபலமான இசைக்கருவி. இதில் உள்ள வெவ்வேறான தடிமன் கொண்ட நரம்புகளை மீட்டுவதன் மூலம் இசை பிறக்கும். பொதுவான கித்தார் ஆறு தந்திகள் உடையது. அடித்தொனிக் கித்தார்கள் நான்கு தந்திகளைக் கொண்டவை. பியானோ – கின்னரப்பெட்டி : பியானோ என்பது வதிப்பலகையால் வாசிக்கப்படும் இசைக்கருவி. பெரிதாக மேற்கத்திய இசையில் தனித்து வாசிப்பதற்கும் அறையிசையில் வாசிப்பதற்கும், துணைக் கருவியாக வாசிப்பதற்குமே பயன்படுத்தப்படுகிறது.தபேலா (கைம்முரசு இணை) : இது இந்துஸ்தானி இசையில் மிக முக்கியமான தாள வாத்தியம். …
2-Mark Questions
அன்பு, வாய்மை, நேர்மை போன்ற நற்பண்புகளின் பெயர்களைத் தொகுத்து பட்டியல் ஒன்று உருவாக்குக.
உங்கள் பகுதியில் கிடைக்கும் களிமண், பனையோலை போன்ற பொருள்களைப் பயன்படுத்திக் கைவினைப்பொருள்களைச் செய்து காட்சிப்படுத்துக.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
பனையோலையால், செய்யப்படும் பல்வேறு கைவினைப்பொருள்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Full solutions: இயல் 5 →
Ch 6இயல் 6
5-Mark Questions
உமது பகுதியில் நடைபெறும் ஏதேனும் ஒரு தொழிலின் பல செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.
நெசவுத்தொழிலின் பல செயல்கள் : (i) சாயம் போடுதல். (ii) பாவு சரி செய்தல். (iii) இழைச் சிக்கெடுத்தல். (iv) கஞ்சி போடுதல். (v) மழைக்காலமாயின் அனல் காட்டுதல். (vi) தறியேற்றுதல். (vii) சரிகை வடிவமைப்புச் செய்தல். (viii) நெய்தல். (ix) மடித்தல்.
உங்கள் பகுதியில் பாடப்படும் மழை தொடர்பான நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து எழுதுக.
(i) மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா பழத்தை நம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா மகனை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்க ஐலசா என்னை நம்பி ஏலேலோ எமன் இருக்க ஐலசா எமனை நம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா காட்டை நம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா. (ii) நாடு செழித்திடவே நல்ல மழை பெய்ய வேணும் தேசம் செழித்திடவே செல்ல மழை பெய்ய வேணும். …
2-Mark Questions
பல்வகைத் தொழில்கள் என்னும் தலைப்பில் படத்தொகுப்பு உருவாக்குக.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
காலம் உடன் வரும் – கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
இயல்பு, தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய புணர்ச்சிகளுக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் ஒன்று உருவாக்குக.
Full solutions: இயல் 6 →
Ch 7இயல் 7
5-Mark Questions
உங்களுக்குத் தெரிந்த சிற்றிலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
சிற்றிலக்கிய வகைகளின் பெயர்கள் : சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும். அவற்றுள் எனக்குத் தெரிந்தவை. 1. உலா 2. ஊசல் 3. ஒருபா ஒருபது 4. குறவஞ்சி 5. சதகம் 6. தாண்டகம் 7. தூது 8. நவமணிமாலை 9. நான்மணிமாலை 10. பதிகம் 11. அந்தாதி 12. பரணி 13. கலம்பகம் 14. பள்ளு 15. குறம்
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் உள்ள சமூகநலன் சார்ந்த பாடல்களைத் தொகுத்து எழுதுக.
சமூக நலன் சார்ந்த பாடல்கள் : 1. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம். – கண்ணதாசன் 2. கொடுத்த தெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான். – வாலி 3. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில் உயரும் உன் மதிப்ப அயல் நாட்டில் 4. “போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான். உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான். கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான். …
2-Mark Questions
போர்க்கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
தமிழக முதலமைச்சர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
அறிவுசால் ஒளவையார் – என்னும் நாடகத்தை வகுப்பில் நடித்துக்காட்டுக.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய செயல்பாடு.
Full solutions: இயல் 7 →
Ch 8இயல் 8
5-Mark Questions
கண்ணி வகையில் பாடப்பட்ட வேறு பாடல்களைத் தொகுத்து எழுதுக.
(i) தாயுமானவர் பாடல் – பராபரக் கண்ணி : முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே! கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால் தாக்காதே தாக்குந் தனியே பராபரமே பார்த்த இட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே. அன்பைப் பெருக்கி என தாருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே! (ii) தமிழ்விடு தூது : தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே – புத்திக்குள் உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில் குறம் என்று …
சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்ட சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.
சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்டவர்கள் : 1. மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி 2. எஸ். தர்மாம்பாள் 3. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 4. ஈ.வே.ரா. பெரியார் 5. பாரதியார் 6. நிவேதிதா தேவி 7. பாரதிதாசன். 8. அம்பேத்கர் தெரிந்து தெளிவோம் (i) அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் : போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பாலவாகடம். (ii) என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள். …
2-Mark Questions
பிறர் துன்பம் கண்டு வருந்தி அவர்களுக்குத் தொண்டு செய்த சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.
1. வள்ளலார் 2. புத்தர் 3. விவேகானந்தர் 4. அன்னை தெரசா 5. திரு.வி.க. 6. பண்டித ரமாபாய் 7. நாராயண குரு 8. ரமணமகரிஷி 9. குருநானக்
எழுத்து இலக்கணத்தின்படியும் யாப்பு இலக்கணத்தின்படியும் எழுத்துகளின் வகைகளை வேறுபடுத்தி ஓர் அட்டவணை உருவாக்குக.
எழுத்து இலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை :யாப்பு இலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை :
யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?
மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை .
Full solutions: இயல் 8 →
Ch 9இயல் 9
5-Mark Questions
பின்வரும் திருப்பாவைப் பாடலைப் படித்து மகிழ்க. உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர். தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். பாடல் – 14
தெரிந்து தெளிவோம் (i) பாவை நூல்கள் : மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர். அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை. இதேபோலச் சிவபெருமானை வழிபடச்செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை. இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
‘நம்பிக்கையே வெற்றி’ – என்பதை உணர்த்தும் கதை ஒன்றனைத் தேடி எழுதி வருக.
ஓர் ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். வயதான கழுதை ஒன்று இருந்தது. அக்கழுதை ஒருநாள் தோட்டத்தில் இருந்த கிணற்றில் தெரியாமல் விழுந்துவிட்டது. விவசாயிக்கு எப்படி கழுதையை வெளியே கொண்டு வருவது எனத் தெரியவில்லை. அக்கழுதையை வெளியே கொண்டு வருவதற்குச் செலவு அதிகமாகும் என்றனர் ஊர் மக்கள். அக்கழுதைக்கோ வயதாகிவிட்டது. அதனை விற்றால் கூட சிறுதொகைதான் கிடைக்கும். அதனால் பணத்தை வீணாகச் செலவு செய்ய வேண்டாம் என எண்ணினான். ஊர் மக்களிடம் பேசி ஒரு முடிவெடுத்தான். அது என்னவெனில் ‘ஆளுக்குக் கொஞ்சம் மண்ணை எடுத்துக் கிணற்றில் போட வேண்டும். …
2-Mark Questions
‘தன்னம்பிக்கை’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி வகுப்பில் பகிர்க.
தன்னம்பிக்கை : மனிதனின் வெற்றிக்கு மூலதனம் தன்னம்பிக்கை தன்னம்பிக்கை இல்லையேல் தடம்புரள்வான் மனிதனே! மூடனையும் அறிவாளியாக்கி முன்னேறச் செய்யும். கோழையையும் வீரனாக்கி கோபுரத்தில் அமர்த்தும்.
சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக
சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்கள் : 1. பெரியார் 2. காந்தியடிகள் 3. நெல்சன் மண்டேலா 4. அம்பேத்கர் 5. முத்துலெட்சுமி ரெட்டி 6. மூவலூர் இராமாமிர்தம் 7. பாரதியார் 8. பாரதிதாசன் 9. அயோத்திதாசர்
மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?
நற்பண்புகள் : அறிவு, கருணை, அன்பு, இரக்கம், நாணம், மேன்மை , எளிமை, நினைவு, துணிவு, இன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், மானம், அறம், மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, இளமை, ஆராய்ந்து தெளிதல்.
Full solutions: இயல் 9 →

Frequently asked questions

பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
(எ.கா) காகம் கரையும். (i) ஆந்தை : அலறும் (ii) கிளி : பேசும் (iii) குயில் : கூவும் (iv) புறா : குனுகும் (v) மயில் : அகவும் (vi) குருவி : கீச்சிடும் (vii) கோழி : கொக்கரிக்கும் (viii) சேவல் : கூவும் (ix) வண்டு : முரலும் (x) கூகை : குழறும்
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள பழைய வரிவடிவச் சொற்களை எடுத்து எழுதி, அவற்றை இன்றைய வரிவடிவில் மாற்றி எழுதுக.
சுற்றுப்புறச் சூழ்நிலைப் பிரச்னைகள் பற்றிய இந்தியாவின் கவலை பல்லாண்டு காலமாக வளர்ந்தே வருகிறது. ‘மனிதன் ஏழ்மையிலே இருக்கும்போது சத்தற்ற உணவினாலும், நோயினாலும் அச்சுறுத்தப்படுகிறான்; பலவீனனாக இருப்பவன் போருக்கு அஞ்சுகிறான்; செல்வந்தனாக இருப்பவனோ தன் கொழுத்த செல்வத்தால் உண்டான அசுத்தத்திற்கு அஞ்சுகிறான்’ என்றெல்லாம் திருமதி இந்திராகாந்தி அன்றைக்கு ஆற்றிய உரை நாம் நினைவுகூரத் தக்கது.
‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
இப்பாடலை இசையுடன் பாடி பழக வேண்டும்.
ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.
(i) நிலம் – பூமி, தரை, புவி (ii) நீர் – புனல், தண்ணீர் (iii) தீ – அனல், நெருப்பு, கனல் (iv) காற்று – வளி, கால் (v) வானம் – ஆகாயம், விண்
These important questions are selected from the Samacheer Kalvi Class 8 Tamil textbook book-back exercises to help you revise the most useful questions. Mark weightage (5/2/1) follows the usual exam pattern and may vary by exam — always check your latest syllabus and question pattern. Open each chapter for the complete set of questions and answers.