Class 8 Tamil · Chapter 1

Samacheer Class 8 Tamil - இயல் 1

49 textbook Q&A49 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 1 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 7சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 17குறுவினா 7சிறுவினா 13சிந்தனை வினா 3நெடுவினா 1மதிப்பீடு 1
Your Progress - Chapter 10% complete
1கற்பவை கற்றபின்7 questions
Q.1‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.v
Solution

இப்பாடலை இசையுடன் பாடி பழக வேண்டும்.

Answer:

இப்பாடலை இசையுடன் பாடி பழக வேண்டும்.

Q.1பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.v
Solution

(எ.கா) காகம் கரையும்.
(i) ஆந்தை : அலறும்
(ii) கிளி : பேசும்
(iii) குயில் : கூவும்
(iv) புறா : குனுகும்
(v) மயில் : அகவும்
(vi) குருவி : கீச்சிடும்
(vii) கோழி : கொக்கரிக்கும்
(viii) சேவல் : கூவும்
(ix) வண்டு : முரலும்
(x) கூகை : குழறும்

Answer:

(எ.கா) காகம் கரையும்.
(i) ஆந்தை : அலறும்
(ii) கிளி : பேசும்
(iii) குயில் : கூவும்
(iv) புறா : குனுகும்
(v) மயில் : அகவும்
(vi) குருவி : கீச்சிடும்
(vii) கோழி : கொக்கரிக்கும்
(viii) சேவல் : கூவும்
(ix) வண்டு : முரலும்
(x) கூகை : குழறும்

Q.2ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.v
Solution

(i) நிலம் – பூமி, தரை, புவி
(ii) நீர் – புனல், தண்ணீர்
(iii) தீ – அனல், நெருப்பு, கனல்
(iv) காற்று – வளி, கால்
(v) வானம் – ஆகாயம், விண்

Answer:

(i) நிலம் – பூமி, தரை, புவி
(ii) நீர் – புனல், தண்ணீர்
(iii) தீ – அனல், நெருப்பு, கனல்
(iv) காற்று – வளி, கால்
(v) வானம் – ஆகாயம், விண்

Q.3ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.v
Solution

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு 1

Answer:

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு 1

Q.1கீழ்க்காணும் பத்தியைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள பழைய வரிவடிவச் சொற்களை எடுத்து எழுதி, அவற்றை இன்றைய வரிவடிவில் மாற்றி எழுதுக.v
Solution

சுற்றுப்புறச் சூழ்நிலைப் பிரச்னைகள் பற்றிய இந்தியாவின் கவலை பல்லாண்டு காலமாக வளர்ந்தே வருகிறது.
‘மனிதன் ஏழ்மையிலே இருக்கும்போது சத்தற்ற உணவினாலும், நோயினாலும் அச்சுறுத்தப்படுகிறான்; பலவீனனாக இருப்பவன் போருக்கு அஞ்சுகிறான்; செல்வந்தனாக இருப்பவனோ தன் கொழுத்த செல்வத்தால் உண்டான அசுத்தத்திற்கு அஞ்சுகிறான்’ என்றெல்லாம் திருமதி இந்திராகாந்தி அன்றைக்கு ஆற்றிய உரை நாம் நினைவுகூரத் தக்கது.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 1

Q.1ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.v
Solution

(i) பழங்காலத்தில் போர் தொடங்கும் முன் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். (ஆ- பசு)
(ii) “கனமான பொருளைத் தூக்காதே, வை” என்று தாய் மகனிடம் கூறினார்.
(iii) கந்தனுக்கு முருகன் கை கொடுத்து உதவி செய்தான்.
(iv) தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படும்.
(v) “நீ எங்கே சென்றாய்?” என்று சீதா ராணியிடம் கேட்டாள்.

Q.1‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.v
Solution

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 1

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.17 questions
Q.1மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ……… அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழிv
Solution

அ) வைப்பு
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Q.2‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………… அ) என் + றென்றும் ஆ) என்று + என்றும் இ) என்றும் + என்றும் ஈ) என் + என்றும்v
Solution

ஆ) என்று + என்றும்

Answer:

ஆ) என்று + என்றும்

Q.3‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …. அ) வான + மளந்தது ஆ) வான் + அளந்தது இ) வானம் + அளந்தது ஈ) வான் + மளந்ததுv
Solution

இ) வானம் + அளந்தது

Answer:

இ) வானம் + அளந்தது

Q.4அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்………………. அ) அறிந்தது அனைத்தும் ஆ) அறிந்தனைத்தும் இ) அறிந்ததனைத்தும் ஈ) அறிந்துனைத்தும்v
Solution

இ) அறிந்ததனைத்தும்

Answer:

இ) அறிந்ததனைத்தும்

Q.5வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….. அ) வானம் அறிந்து ஆ) வான் அறிந்த இ) வானமறிந்த ஈ) வான்மறிந்தv
Solution

இ) வானமறிந்த
தமிழ்மொழி வாழ்த்து – இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
மோனைச் சொற்கள் :
வாழ்க – வாழிய
வான மளந்தது – வண்மொழி
எங்கள் – என்றென்றும்
வாழ்க – வாழ்க
வானம் – வளர்மொழி

Q.1பறவைகள் ………… பறந்து செல்கின்றன. அ) நிலத்தில் ஆ) விசும்பில் இ) மரத்தில் ஈ) நீரில்v
Solution

ஆ) விசும்பில்

Answer:

ஆ) விசும்பில்

Q.2இயற்கையைப் போற்றுதல் தமிழர் ……………… – அ) மரபு ஆ) பொழுது இ) வரவு ஈ) தகவுv
Solution

அ) மரபு
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Q.3‘இருதிணை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………. அ) இரண்டு + திணை ஆ) இரு + திணை இ) இருவர் + திணை ஈ) இருந்து + திணைv
Solution

அ) இரண்டு + திணை

Answer:

அ) இரண்டு + திணை

Q.4‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….. அ) ஐம் + பால் ஆ) ஐந்து + பால் இ) ஐம்பது + பால் ஈ) ஐ + பால்v
Solution

ஆ) ஐந்து + பால்

Answer:

ஆ) ஐந்து + பால்

Q.1தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ……………… காரணமாக அமைந்தது. அ) ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை ஈ) நுண்கலைv
Solution

இ) அச்சுக்கலை

Answer:

இ) அச்சுக்கலை

Q.2வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ………………….. என அழைக்கப்படுகிறது. அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்துv
Solution

ஆ) வட்டெழுத்து

Answer:

ஆ) வட்டெழுத்து

Q.3தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் …………………. அ) பாரதிதாசன் ஆ) தந்தை பெரியார் இ) வ.உ.சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்v
Solution

ஆ) தந்தை பெரியார்
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் …………… என அழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் …………..
1. கண்ணெழுத்துகள்)
2. வீரமாமுனிவர்)

Q.1இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ………………. அ) இ, ஈ ஆ) உ, ஊ இ) எ, ஏ ஈ) அ, ஆv
Solution

ஆ) உ, ஊ

Answer:

ஆ) உ, ஊ

Q.2ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ………….. அ) மார்பு ஆ) கழுத்து இ) தலை ஈ) மூக்குv
Solution

இ) தலை

Answer:

இ) தலை

Q.3வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் …………… அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்துv
Solution

ஆ) மார்பு

Answer:

ஆ) மார்பு

Q.4நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள். ……………….. அ) க், ங் ஆ) ச், ஞ் இ) ட், ண் ஈ) ப், ம்v
Solution

இ) ட், ண்

Answer:

இ) ட், ண்

Q.5கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து ………… அ) ம் ஆ) ப் இ) ய் ஈ) வ்v
Solution

ஈ) வ்
பொருத்துக
1. க், ங் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
2. ச், ஞ் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
3. ட், ண் – நாவின் முதல், அண்ண த்தின் அடி
4. த், ந் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
1. க், ங் – நாவின் முதல், அண்ண த்தின் அடி
2. ச், ஞ் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
3. ட், ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
4. த்,ந் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

3குறுவினா7 questions
Q.1தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?v
Solution

தமிழ் புகழ் கொண்டு வாழுமிடம் : ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்டு வாழ்கிறது.

Q.2தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?v
Solution

தமிழின் வளர்ச்சி : தமிழ் மொழி, வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Answer:

தமிழின் வளர்ச்சி : தமிழ் மொழி, வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Q.1உலகம் எவற்றால் ஆனது?v
Solution

உலகம் ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகியவற்றால் ஆனது.

Q.2செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?v
Solution

செய்யுளில் திணை, பால், வேறுபாடறிந்து மரபான சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும். மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்.

Q.1ஓவிய எழுத்து என்றால் என்ன?v
Solution

தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவம் ஓவிய எழுத்து எனப்படும்.

Q.3ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?v
Solution

(i) ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளைப் பயன்படுத்தினர்.
(ii) புள்ளிகளைப் பயன்படுத்தினால் ஓலைகள் சிதைந்து விடும் என்பதால் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலவில்லை.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Q.4வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.v
Solution

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 2

4சிறுவினா13 questions
Q.1தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.v
Solution

தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகள்:
(i) தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்கிறது.
(ii) ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான மொழி.
(iii) ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்ட மொழி.
(iv) எங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழும்.
(v) எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும். அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படையும்.
(vi) பொருந்தாத பழைய கருத்துக்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிரவேண்டும்.
(vii) வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழியைப் பாரதியார், என்றென்றும் வாழ்க ! வாழ்க! என்று வாழ்த்துகிறார்.

Q.1எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.v
Solution

(i) ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
(ii) ஓலைச்சுவடிகளில் நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.
(iii) புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா, உயிர்மெய்யா, குறிலா, நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
(iv) இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

Q.2தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.v
Solution

தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றம் :
(i) தமிழ் எழுத்துகளில் நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் ரு பயன்படுகின்றது.
(ii) ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக் கொம்புடை பயன்படுகின்றது.
(iii) ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால்ள பயன்படுகின்றது.
(iv) குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது.

Q.1எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?v
Solution

உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.

Q.2மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?v
Solution

மெய் எழுத்துகளின் இடப்பிறப்பு :
(i) வல்லின மெய்கள் க் ச்ட்த்ப்ற் ) – மார்பு
(ii) மெல்லின மெய்கள் (ங் ஞ் ண் ந்ம்ன் ) – மூக்கு
(iii) இடையின மெய்கள் (யார் ல் வ் ழ் ள்) – கழுத்து
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு

Q.3ழகர, லகர, ளகர மெய்களின் பிறப்பு முயற்சி பற்றி எழுதுக.v
Solution

(i) ழகரம் – மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும்.
(ii) லகரம் – மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும்.
(iii) ளகரம் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கும்.
மொழியை ஆள்வோம்
கேட்க :

Q.1தமிழ்மொழியை வாழ்த்திப் பாடிய வேறு கவிஞர்களின் பாடல்களைக் கேட்டு மகிழ்க.v
Solution

மாணவர்கள் தாங்களாகவே தமிழ்மொழியை வாழ்த்தி பாடிய வேறு கவிஞர்களின் பாடல்களை கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

Q.1தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்v
Solution

அவையோர்க்கு வணக்கம்!
நாம் செந்தமிழில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறோம். இதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்த எழுத்துகள் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதனைப் பார்ப்போம்.
மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான். மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துகளை உருவாக்கினான். மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். காலப்போக்கில் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான். பிறகு அவை பண்பட்டு பேச்சுமொழி உருவானது.
மனிதன் வருங்காலத் தலைமுறையினருக்குக் கருத்துகளைத் தெரிவிக்க பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். அங்குத் தோன்றியது எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை. பின்பு ‘ஓவிய எழுத்து’ என்றும் ‘ஒலி எழுத்து நிலை’ என்றும் பெயர் பெற்றது.
காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகு எழுத்துகள் நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன. பழைய வரிவடிவங்களான வட்டெழுத்து, தமிழெழுத்துகளைக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணலாம்.
சேர, பாண்டிய மண்டலங்களில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே காணப்படுகின்றன. பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்றழைக்கப்பட்டன.
எழுத்துகள் காலத்திற்கேற்பப் பல உருவ மாற்றங்களைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன. எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.
ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். சில எழுத்துகளுக்கு மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவை நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன.
எழுத்துகளை வேறுபடுத்திக்காட்ட எழுத்துகளின் மேலும் எழுத்துகளுக்கு பக்கத்திலும் புள்ளிகளைப் பயன்படுத்தினர். நெடிலைக் குறிக்க துணைக்கால், ஐகார உயிர்மெய்யைக் குறிக்க இணைக்கொம்பு, ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க கொம்புக்கால் ஆகியவை புள்ளிகளுக்குப் பதிலாக தற்காலப் பயன்பாட்டில் உள்ளன.
ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். இதனால் எழுத்துகளை அறிவதில் சிக்கல் இருந்தது. இவ்விடர்பாட்டைக் குறைக்க எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தார். எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு, இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து புதிய வரி வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.
இவரைத்தொடர்ந்து ஈ.வெ.ரா. பெரியார் அவர்களால்ணா , றா, னா ஆகிய எழுத்துகளும் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளும் உருவாயின. அச்சுக் கோப்பதில் இருந்த இடர்களைக் களைந்தார்.
காலந்தோறும் ஏற்பட்ட இவ்வாறான வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ்மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் உருவாகியுள்ளது.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு
இன்னும் பல மாற்றங்களைப் பெற்று தமிழ்மொழி. நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும் எனக் கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
நன்றி!
சொல்லக்கேட்டு எழுதுக
உலக மொழிகளின் எழுத்து வரலாற்றை உற்று நோக்கினால் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அறியலாம். அவை ஒரு வரிவடிவத்தை விட்டு மற்றொரு வரிவடிவத்தை ஏற்றுக் கொள்ளுதல்; இருக்கின்ற வரிவடிவத்தில் திருத்தம் செய்து கொள்ளுதல்; எழுத்து எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுதல் ஆகியனவாகும். வரிவடிவ மாற்றம், வரிவடிவத் திருத்தம், எழுத்துகளின் எண்ணிக்கை மாற்றம் ஆகியவற்றை எழுத்துச் சீர்திருத்தம் என்று குறிப்பிடுகிறோம்.
அகரவரிசைப்படுத்துக
எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஔகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.
1. அழகுணர்ச்சி
2. ஆரம்நீ
3. இரண்டல்ல
4. ஈசன்
5. உரைநடை
6. ஊழி
7. எழுத்து
8. ஏழ்கடல்
9. ஐயம்
10. ஒலிவடிவம்
11. ஓலைச்சுவடிகள்
12. ஔகாரம்
அறிந்து பயன்படுத்துவோம்
மரபுத் தொடர்கள்
தமிழ் மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.
பறவைகளின் ஒலிமரபு
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 2
தொகை மரபு
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 3
வினை மரபு
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 4
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கோழி கொக்கரிக்கும் . (கூவும்/கொக்கரிக்கும்)
2. பால் பருகு . (குடி/பருகு)
3. சோறு உண் . (தின்/உண்)
4. பூ கொய் . (கொய்/பறி)
5. ஆ நிரை . (நிரை/மந்தை )
மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
சேவல் கூவும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூக் கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்தவுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக் கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகி விட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
கட்டுரை எழுதுக

Q.1வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து.v
Solution

வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்.

Answer:

வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்.

Q.2உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.v
Solution

உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.

Answer:

உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.

Q.3வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.v
Solution

பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

Answer:

பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

Q.4கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.v
Solution

உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு

Answer:

உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு

Q.5ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.v
Solution

அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்…
1. எழுத்துகளைச் சரியான வரிவடிவத்தில் எழுதுவேன்.
2. அறிவிப்புப் பலகைகளில் உள்ள பிழைகளை உரியவரிடம் கூறித் திருத்தச் செய்வேன்.
கலைச்சொல் அறிவோம்
1. ஒலிப்பிறப்பியல் – Articulatory Phonetics
2. மெய்யொலி – Consonant
3. மூக்கொலி – Nasal consonant sound
4. கல்வெட்டு – Epigraph
5. உயிரொலி – Vowel
6. அகராதியியல் – Lexicography
7. ஒலியன் – Phoneme
8. சித்திர எழுத்து – Pictograph

5சிந்தனை வினா3 questions
Q.1பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?v
Solution

பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் :
(i) தமிழ் மொழி, தமிழ் பேசும் பலருடைய தாய்மொழி. திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழி. எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது.
(ii) தமிழ், அறிவியல், மருத்துவம், கணிதம் எனப் பலவற்றையும் கூறுகிறது. தமிழர்
வானியல் அறிவிலும் சிறந்து விளங்கியுள்ளனர். வான் பற்றிய செய்திகளைக் கூறும் நூல்கள் தமிழில் உள்ளன. ஞாயிறு, திங்கள், விண்மீன் மற்றும் வானில் வலம் வரும் கோள்கள் பற்றியும் ஆராய்ந்து கூறியுள்ளனர் தமிழர்.
(iii) இலக்கிய வளம், இலக்கணவளம், சொல்வளம் என எல்லா வளங்களையும் தமிழ்மொழி பெற்றுள்ளதால் பாரதியார் தமிழ்மொழியை வண்மொழி என்று அழைக்கிறார்.

Q.1நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?v
Solution

(i) உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் இருதிணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறியுள்ளது தமிழ்மொழி. இது இம்மொழியின் மரபு.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு
(ii) நம் முன்னோர் ஒழுக்கத்தின் அடிப்படையில் உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துள்ளனர்.
(iii) உயர்திணைக்குரிய பால்களாக ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவற்றையும் அஃறிணைக்குரிய பால்களாக ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றையும் வகைப்படுத்திப் பயன்படுத்தியுள்ளனர்.
(iv) இம்மரபினை மாற்றாமல் பயன்படுத்தினால் மட்டுமே பொருள் மாறாமல் இருக்கும். இதனையறிந்த நம் முன்னோர் மரபு மாறாமல் பின்பற்றியுள்ளனர்.

Q.1தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.v
Solution

(i) பள்ளிகளில் தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும். பிறமொழிகளையும் அறிந்து கொள்ளுதல் நன்மை பயக்கும் என்பதால் அவற்றைக் கூடுதலாக கற்க
வழிவகை செய்யலாம்.
(ii) தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
(iii) கன்னித் தமிழைக் கணினித் தமிழில் ஏற்றி உலகெங்கும் பரப்ப வேண்டும்.
(iv) புதியதாகக் கண்டறியப்பட்ட அறிவியல் சாதனங்களுக்கும், பிற துறையில் கண்டறியப்படும் சொற்களுக்கும் கலைச்சொற்களைக் கண்டறிய வேண்டும்.
(v) பிறமொழியில் உள்ள நூல்களைத் தமிழில் எளிமையான முறையில் மொழிபெயர்க்க வேண்டும்.
(vi) சிறந்த தமிழ் நூல்கள் நிறைந்த, இலவச நூலகங்களை நாடெங்கிலும் அமைக்க வேண்டும்.
(vii) ஒவ்வொரு துறைக்கும் எளிமையான தமிழில் நூல்கள் வெளியிடப்பட வேண்டும்.

6நெடுவினா1 questions
Q.1எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.v
Solution

முன்னுரை :
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். பிறகு ஒலிகள் மூலம் வெளிப்படுத்தினான். அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக் கொண்டான். காலப் போக்கில் அவை பேச்சு மொழியாக உருவானது.
வரிவடிவத்தின் தொடக்க நிலை :
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலையாகும்.
ஓவிய எழுத்து :
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
ஒலி எழுத்து நிலை :
அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்துநிலை என்பர். இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.
தமிழ் எழுத்துகள் :
காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.
முடிவுரை :
பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். பிறகு அச்சில் ஏற்றப்பட்டது. காலந்தோறும் வளர்ந்து வரிவடிவத்தில் பல மாற்றங்களை ஏற்று, தற்காலத்தில் கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாக வளர்ந்துள்ளது தமிழ் எழுத்துகள்.

7மதிப்பீடு1 questions
Q.1தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.v
Solution

முன்னுரை :
தமிழ்மொழி பழங்காலம் தொட்டு இயங்கி வருதல் அதன் பெருஞ்சிறப்பு. தமிழ்மொழி செந்தமிழாகவும் செழுந்தமிழாகவும் உயிரோட்டத் தமிழாகவும் இருந்து வருகிறது. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கத்தை இக்கட்டுரையில் காண்போம்.
தொல்காப்பியம் :
சொல் என்பதற்கு நெல் என்பது பொருள். நெல்லில் பதர் உண்டு. சொல்லில் பதர் இருந்தலாகாது. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது தொல்காப்பியர்மொழி. மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியானது ஓர் எழுத்துமொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூவகைப்படும். ‘நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி’ என்றும் ‘குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே’ என்றும் தொல்காப்பியர் கூறுகிறார்.
ஓரெழுத்து ஒரு மொழிகள் :
உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, நம் என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
‘ பூ’ மற்றும் ‘யா’ :
‘பூ’ என்பதும் ‘கா’ என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்துப் பூங்கா எனக் கலைச்சொல் உருவாயிற்று. ‘யா’ என்பது வினா. யாது, யாவர், யாவன், யாவள், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் ‘யா’ என்ற எழுத்து முதலில் நிற்கிறது.
‘ஆ’ மற்றும் ‘மா’ :
ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இவை ஓரெழுத்து ஒரு மொழிகள். ஆ, மா என்பவை இணைந்து ஆமா எனக் கலைச்சொல் வடிவம் பெற்றுள்ளது. காட்டுப் பசுவுக்கு ‘ஆமா’ என்று பெயர். மா என்பது மாநாடு, மாநிலம், மாஞாலம் என்ற சொற்களில் பெரிய’ என்னும் பொருளில் அமைந்துள்ளது. ‘மா’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழி இயல்பு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் திகழ்கின்றது. மாந்தளிர் நிறத்தை மாநிறம் என்றனர். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்று வந்து விலங்கினப் பெயராகிறது.
பிற எழுத்துகள் :
ஈ என்னும் எழுத்து ஒலிக்குறிப்பைக் காட்டுகிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்தும் வழங்கப்படும். ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை ஆகும். ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறவும் பயன்படும். போ, வா, நீ, சூ, சே, சை, சோ என்பவை இன்று அனைவராலும் வழங்கப்படுகின்றன. நன்னூலார் கூறிய ஓரெழுத்து ஒரு மொழிகளில் சில இன்று வழக்கில் இல்லை. இன்று வழக்கில் உள்ளவை நன்னூலார் கூறிய பட்டியலில் இல்லை என்று தெளியலாம்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.4 சொற்பூங்க
மாற்றம் பெற்றவை :
ஆன் என்பது ஆ என்றும், மான் என்பது மா என்றும் கோன் என்பது கோ என்றும், தேன் என்பது தே என்றும், பேய் என்பது பே என்றும் மாறி காலவெள்ளத்தில் கரைந்தன. எட்டத்தில் போகிறவனை ஏய் என்றனர். ஏய் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏவுதல் என்பது அம்புவிடுதல், ஏவும் அம்பு ‘ஏ’ என்றாகியது. அம்பு போல விரைந்து கடமை செய்பவன் ஏவலன் எனப்பட்டான். அம்பு விடும் கலை ஏகலை, அதில் வல்லவன் ஏகலைவன் எனப் பாராட்டப்பட்டான்.
ஏவு – ஏ – எய் என ஆயிற்று, ஏவுகின்ற அம்பைப் போல் கூர்முள்ளை உடைய முள்ளம் பன்றியின் பழம்பெயர் எய்ப்பன்றி, அம்பை எய்பவர் எயினர். அவர்தம் மகளிர் எயினியர். சங்கப் புலவர்களுள் எயினனாரும் உளர். எயினியாரும் உளர்.
முடிவுரை :
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பவனவற்றைக் கையில் கனியாகக் காட்டும். இத்தகைய தமிழ்மொழியின் சொற்களை, மொழிப்பற்றை மீட்டெடுத்தலே வழிகாட்டிகளுக்கு முதல் கடமையாய் நிற்கிறது. மொழிப்பற்றுள்ள ஒருவனே மொழியை வளர்ப்பான்; அதன் இனத்தை, பண்பாட்டைக் காப்பான்.
Posted in Class 8 on June 22, 2024 June 22, 2024
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Facebook
Twitter
Instagram
Pinterest
Copyright © 2026 Samacheer Kalvi