Class 8 Tamil · Chapter 6

Samacheer Class 8 Tamil - இயல் 6

40 textbook Q&A40 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 6 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 7சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 15குறுவினா 5சிறுவினா 8சிந்தனை வினா 3நெடுவினா 1மதிப்பீடு 1
Your Progress - Chapter 60% complete
1கற்பவை கற்றபின்7 questions
Q.1உமது பகுதியில் நடைபெறும் ஏதேனும் ஒரு தொழிலின் பல செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.v
Solution

நெசவுத்தொழிலின் பல செயல்கள் :
(i) சாயம் போடுதல்.
(ii) பாவு சரி செய்தல்.
(iii) இழைச் சிக்கெடுத்தல்.
(iv) கஞ்சி போடுதல்.
(v) மழைக்காலமாயின் அனல் காட்டுதல்.
(vi) தறியேற்றுதல்.
(vii) சரிகை வடிவமைப்புச் செய்தல்.
(viii) நெய்தல்.
(ix) மடித்தல்.

Answer:

நெசவுத்தொழிலின் பல செயல்கள் :
(i) சாயம் போடுதல்.
(ii) பாவு சரி செய்தல்.
(iii) இழைச் சிக்கெடுத்தல்.
(iv) கஞ்சி போடுதல்.
(v) மழைக்காலமாயின் அனல் காட்டுதல்.
(vi) தறியேற்றுதல்.
(vii) சரிகை வடிவமைப்புச் செய்தல்.
(viii) நெய்தல்.
(ix) மடித்தல்.

Q.1உங்கள் பகுதியில் பாடப்படும் மழை தொடர்பான நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து எழுதுக.v
Solution

(i) மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா
இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா
பழத்தை நம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா
உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்க ஐலசா
என்னை நம்பி ஏலேலோ எமன் இருக்க ஐலசா
எமனை நம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா
காட்டை நம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா.
(ii) நாடு செழித்திடவே
நல்ல மழை பெய்ய வேணும்
தேசம் செழித்திடவே
செல்ல மழை பெய்ய வேணும்.
(iii) பட்டி பெருகவேணும்
தம்பிரானே
பால்பானை பொங்க வேணும்
தம்பிரானே
மேழி பெருகவேணும்
தம்பிரானே
மாரிமழை பெய்ய வேணும்
தம்பிரானே.
(iv) வானத்து ராசாவே! மழை வழங்கும் இன்னுயிரே!
கூழு குடிச்சறியோம்! கூப்பிட்டா சத்தமில்லே!
சட்டியிலே மாவரைத்துச் சந்தியெல்லாம் கோலமிட்டு
கோலம் அழியுமுன்னே ஒருகொள்ளை மழை பெய்யாதோ!
நாடு செழிக்க நல்ல மழை பெய்யாதோ!
காடு செழிக்க கனத்த மழை பெய்யாதோ!
ஏத்து மீனும் ஏறாதோ?
எங்க பஞ்சம் தீராதோ?

Q.1உங்கள் மாவட்டம் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதுக.v
Solution

எங்கள் மாவட்டம் தூத்துக்குடி. அதன் சிறப்புகள் :
தூத்துக்குடி பல நூற்றாண்டுகளாகக் கடல் வணிகத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தது. முத்துக்குளிப்புச் சிறந்து விளங்குவதால் முத்துநகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டு, 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் காலத்தில் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. வ.உ.சி. இத்துறைமுகத்தில்தான் சுதேசி கப்பலை இயக்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார் போன்ற சிறந்த தலைவர்கள் பலரை நாட்டுக்கு அளித்துள்ளது.
இங்கிருந்து உப்பு, பருத்திநூல், பனை பொருள்கள், நார், கருவாடு போன்றவையும் உள்நாட்டு மருந்துகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் நிலக்கரி, கொப்பரை, பருப்பு வகைகள், தானிய வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
புகழ்பெற்ற முருகர் கோயில் அமைந்துள்ள திருச்செந்தூர் இங்குதான் உள்ளது. எட்டயபுரம், கழுகுமலை, ஒட்டபிடாரம், ஆதிச்சநல்லூர், வாஞ்சி மணியாச்சி, பாஞ்சாலங் குறிச்சி, நவதிருப்பதி, சமணர் படுகை போன்றவை புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் ஆகும்.
துறைமுகக் கடற்கரை, ராஜாஜி பூங்கா, கக்கன் பூங்கா, எம்.ஜி.ஆர். பூங்கா, முயல் தீவு, தெப்பக்குளம் போன்றவை பொழுதுபோக்கு இடங்களாகும்.
திருச்செந்தூரில் சூரசம்காரத் திருவிழா, வெள்ளப்பட்டி அதிசய கடல் மாதா கோவில் திருவிழா, தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா, வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, பாரதியார் விழா, கைலாசநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் ஆகியவை எங்கள் மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாக்களாகும்.
உப்புக் காய்ச்சுதல், கைத்தறி நெசவு, பாய் பின்னுதல், மட்பாண்டங்கள் செய்தல், முத்துக் குளித்தல், சங்கு எடுத்தல் ஆகியவை இங்கு வழிவழியாக நடந்து வரும் தொழில்கள் ஆகும்.
ஜிப்சம், அல்லனைட், கார்னர்டு மணல், கிராபைட், மோனசைட், சுண்ணாம்புக்கல், நுரைக்கல், பாஸ்டேட், கெட்டி மண் போன்ற கனிமங்கள் நிறைந்தது தூத்துக்குடி மாவட்டம்.
இவ்வளவு சிறப்புகளைப் பெற்றுள்ள தூத்துக்குடி அனைவராலும் விரும்பப்படும் மாவட்டமாக விளங்குகின்றது என்பதைக் கூறுவதில் பெருமிதமடைகிறேன்.

Q.2பல்வகைத் தொழில்கள் என்னும் தலைப்பில் படத்தொகுப்பு உருவாக்குக.v
Solution

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Answer:

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Q.1காலம் உடன் வரும் – கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.v
Solution

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Answer:

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Q.2காலம் உடன் வரும் கதையில் இடம்பெற்றுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.v
Solution

(i) லாரி – சரக்குந்து
(ii) போன் – தொலைபேசி
(iii) கார் – மகிழுந்து
(iv) டீ – தேநீர்
(v) டெக்ஸ்ட் – ஜவுளி
(vi) நம்ப ர் – எண்
(vi) ஷிஃப்ட் – பணிவேளை
(viii) பீம் – தூலம்
(ix) டேப் – ஒலி நாடா
(x) டிஸைன் – வடிவமைப்பு
(xi) கார்டு – அட்டை
(xii) பெட்ஷீ ட் – படுக்கை விரிப்பு
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.4 காலம் உடன் வரும்

Q.1இயல்பு, தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய புணர்ச்சிகளுக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் ஒன்று உருவாக்குக.v
Solution

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி 1

Answer:

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி 1

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.15 questions
Q.1தோட்டத்தில் தம்பி ஊன்றிய ……………… எல்லாம் முளைத்தன. அ) சத்துகள் ஆ) பித்துகள் இ) முத்துகள் ஈ) வித்துகள்v
Solution

ஈ) வித்துகள்

Answer:

ஈ) வித்துகள்

Q.2என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ………………….. பெருகிற்று. அ) காரி ஆ) ஓரி இ) வாரி ஈ) பாரிv
Solution

இ) வாரி

Answer:

இ) வாரி

Q.3‘அக்களத்து’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) அ + களத்து ஆ) அக் + களத்து இ) அக்க + அளத்து ஈ) அம் + களத்துv
Solution

அ) அ + களத்து

Answer:

அ) அ + களத்து

Q.4கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….. அ) கதிரென ஆ) கதியீன இ) கதிரீன ஈ) கதிரின்னv
Solution

இ) கதிரீன
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.1 வளம் பெருகுக

Q.1கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் ………………. அ) பெருமழை ஆ) சிறு மழை இ) எடைமிகுந்த மழை ஈ) எடை குறைந்த மழைv
Solution

அ) பெருமழை

Answer:

அ) பெருமழை

Q.2‘வாசலெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………. அ) வாசல் + எல்லாம் ஆ) வாசல் + எலாம் இ) வாசம் + எல்லாம் ஈ) வாசு + எல்லாம்v
Solution

அ) வாசல் + எல்லாம்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.2 மழைச்சோறு

Q.3‘பெற்றெடுத்தோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………… அ) பெறு + எடுத்தோம் ஆ) பேறு + எடுத்தோம் இ) பெற்ற + எடுத்தோம் ஈ) பெற்று + எடுத்தோம்v
Solution

ஈ) பெற்று + எடுத்தோம்.

Answer:

ஈ) பெற்று + எடுத்தோம்.

Q.4கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….. அ) கால்லிறங்கி ஆ) காலிறங்கி இ) கால் இறங்கி ஈ) கால்றங்கிv
Solution

ஆ) காலிறங்கி

Answer:

ஆ) காலிறங்கி

Q.1‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் ……………… அ) தொல்காப்பியம் ஆ) அகநானூறு இ) புறநானூறு ஈ) சிலப்பதிகாரம்v
Solution

அ) தொல்காப்பியம்

Answer:

அ) தொல்காப்பியம்

Q.2சேரர்களின் தலைநகரம் ……………. அ) காஞ்சி ஆ) வஞ்சி இ) தொண்டி ஈ) முசிறிv
Solution

ஆ) வஞ்சி

Answer:

ஆ) வஞ்சி

Q.3பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ………… அ) புல் நெல் இ) உப்பு ஈ) மிளகுv
Solution

ஆ) நெல்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்

Q.4ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு …………….. அ)’ காவிரி ஆ) பவானி இ) நொய்யல் ஈ) அமராவதிv
Solution

ஈ) அமராவதி

Answer:

ஈ) அமராவதி

Q.5வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ……………….. அ) நீலகிரி ஆ) கரூர் இ) கோயம்புத்தூர் ஈ) திண்டுக்கல்v
Solution

இ) கோயம்புத்தூர்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம்.
2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் …………………
3. சேரர்களின் நாடு …………… எனப்பட்டது.
4. பின்ன லாடை நகரமாக ………… விளங்குகிறது.
1. சேலம்
2. சின்னாளபட்டி
3. குடகு
4. திருப்பூர்

Q.1விகாரப் புணர்ச்சி …………. வகைப்படும். அ) ஐந்து ஆ) நான்கு இ) மூன்று ஈ) இரண்டுv
Solution

இ) மூன்ற

Answer:

இ) மூன்ற

Q.2‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி ………………….. அ) இயல்பு ஆ) தோன்றல் இ) திரிதல் ஈ) கெடுதல்v
Solution

அ) இயல்பு
பொருத்துக
1. மட்பாண்டம் – தோன்றல் விகாரம்
2. மரவேர் – இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி – கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு – திரிதல் விகாரம்
1. மட்பாண்டம் – திரிதல் விகாரம்
2. மரவேர் – கெடுதல் விகாரம்
3. மணிமுடி – இயல்புப் புணர்ச்சி
4. கடைத்தெரு – தோன்றல் விகாரம்

Answer:

அ) இயல்பு
பொருத்துக
1. மட்பாண்டம் – தோன்றல் விகாரம்
2. மரவேர் – இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி – கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு – திரிதல் விகாரம்
1. மட்பாண்டம் – திரிதல் விகாரம்
2. மரவேர் – கெடுதல் விகாரம்
3. மணிமுடி – இயல்புப் புணர்ச்சி
4. கடைத்தெரு – தோன்றல் விகாரம்

3குறுவினா5 questions
Q.1பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது யாது?v
Solution

பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது தகுந்த காலத்தில் பொழியும் மழை ஆகும்.

Q.2உழவர்கள் எப்போது ஆர்வார ஒலி எழுப்புவர்?v
Solution

நெற்போரினை அடித்து நெல்லினைத் கொள்ளும் காலத்தில் உழவர்கள் ஆரவார ஒலி எழுப்புவர்.

Q.1மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?v
Solution

மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை :
மழை பெய்யாததால் செடி, கொடிகள் வளரவில்லை. உழவர்களின் பசி தீரவில்லை. மழை இல்லாததால் கலப்பையைப் பிடிக்க இயலவில்லை. ஏற்றம் இறைக்க இயலவில்லை. இவற்றையெண்ணி உழவர்கள் மனம் சோர்ந்து மனம் ஏங்கி வேதனையுற்றனர்.

Q.2மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?v
Solution

உழவர்கள் மழையை வேண்டி வழிபாடு செய்கின்றனர். அதன் பிறகும் மழைபெய்யாததால் ஊரைவிட்டுச் செல்ல முடிவெடுக்கின்றனர்.

Q.3‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?v
Solution

தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல்.
காரணம் : இங்கு நெல், சோளம், தினை வகைகள், வாழைப்பழம், காய்கறிகள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது.

4சிறுவினா8 questions
Q.1உழவுத்தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?v
Solution

(i) சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்கியது.
(ii) அகன்ற நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளைவிட்டன.
(iii) முளைத்த விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிந்தது.
(iv) தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்ந்தன.
(v) கிளைத்துச் செழித்த பயிர்கள் பால்முற்றிக் கதிர்களை ஈன்றன.
(vi) அக்கதிர்கள் அறுவடை செய்யப்பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைந்தன.
(vi) அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குகிறது.
(vii) போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் உழவர்கள் ஆரவார ஒலி எழுப்புவர். இவையே உழவுத்தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவனவாகும்.

Q.1கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?v
Solution

கோலம் கரையாத நிலை:
(i) வாளியில் பச்சரிசி மாவைக் கரைத்து வாசல் முழுவதும் கோலம் போட்டனர். கொள்ளை மழை பெய்யாததால் கோலம் கரையவில்லை.
(ii) பானையில் மாவைக் கரைத்து பாதையெல்லாம் கோலம் போட்டனர். கொள்ளை மழை பெய்யாததால் கோலம் கரையவில்லை.

Q.3மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?v
Solution

மழைச்சோறு எடுத்தபின் பேய்மழை பெய்தது. ஊசிபோல நிலத்தில் இறங்கி உலகம் முழுவதிலும் மழை பெய்தது. சிட்டுபோல் மின்னல் மின்னி உலகெங்கும் பொழிந்தது. உலகெங்கும் செல்ல மழை பெய்தது. .

Q.1கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?v
Solution

கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் :
(i) கொங்கு மண்டலச் சதகம், கார்மேகக் கவிஞரால் இயற்றப்பட்டது.
(ii) அந்நூலில் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்கு மண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.
(iii) இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களையும் சேலம், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகக் கொங்கு மண்டலம் விளங்கியது என்பர்.
இங்கு பாயும் ஆறுகள் : காவிரி, பவானி, நொய்யல், அமராவதி

Q.2கரூர் மாவட்டம் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.v
Solution

கரூர் மாவட்டச் செய்திகள் :
(i) கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இப்பகுதிக்கு ‘வஞ்சி மாநகரம்’ என்னும் பெயரும் உண்டு.
(ii) கிரேக்க அறிஞர் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
(iii) நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன.
(iv) கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது.
(v) தோல் பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்ப வேலைகள் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன.
(vi) பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.

Q.1இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.v
Solution

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.
எ.கா. தாய் + மொழி = தாய்மொழி
உடல் + ஓம்பல் = உடலோம்பல்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Q.2மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.v
Solution

மரக்கட்டில் = மரம் + கட்டில்
நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்து மர + கட்டில் என்றானது. தோன்றல் விகாரத்தின் படி ‘க்’ தோன்றி மரக்கட்டில் என்றானது.
மொழியை ஆள்வோம்
கேட்க

Q.1நெசவுத்தொழில் குறித்த நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு மகிழ்க.v
Solution

மாணவர்கள் தாங்களாகவே நெசவுத்தொழில் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.
1. உழவும் நெசவும்
அவையோர்க்கு வணக்கம்!
நமக்கெல்லாம் இன்றியமையாத தேவைகளான உணவும், உடையும் பற்றிப் பேச வந்துள்ளேன். முதலில் உழவுத்தொழில் பற்றிக் கூறுகிறேன். ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். உலகமே உழவர்களின் பின்தான் செல்கிறது. உலகில் ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் பசி என்ற ஒன்று உள்ளது.
‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்றெல்லாம் கூறுகிறோம். அப்பசியைப் ‘பசிப்பிணி’ என்று இலக்கியம் கூறுகிறது. அப்பசிப் பிணியைப் போக்கும் மருத்துவர்கள் யார்? வேளாண்மை செய்யும் உழவர்கள்தானே!
உழவர்கள் நிலத்தை உழுது, பயிர்செய்து, விளைகின்ற பொருளால்தான் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் தாம் வாழ்வதோடு உலகையே வாழ வைக்கின்றனர். உலக மக்களுக்கு உணவாகிய அமுதத்தையே அளிக்கின்றனர். இதனையே வள்ளுவப் பெருந்தகை “உழுது உண்டு வாழ்வார்” என்று கூறியுள்ளார்.
இத்தகு பெருமையுடைய வேளாண்மை தமிழரின் முதன்மையான தொழிலாகவும் மிகுந்த மதிப்பிற்குரிய தொழிலாகவும் இருந்தது. நம் முன்னோர்கள் மண் வகைகளைப் பற்றியும் வெவ்வேறு நிலப்பகுதியில் விளையக்கூடிய பயிர்களைப் பற்றியும் நீர் பாய்ச்சும் முறைகளைப் பற்றியும் அறிந்திருந்தனர். ஐவகை நிலங்களில் மருத நிலமே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் கருதப்பட்டது.
வேளாண்மைக்குத் தேவையான நீரை கிணறுகளில் ஏற்றம் அமைத்து இறைத்தனர். கண்மாய்கள், குளங்கள், அணைகள் ஆகியவற்றில் தேக்கி வாய்க்கால் வழியாகப் பாய்ச்சிப் பயிர்களை வளர்த்தனர். இவ்வளவு தொன்மை வாய்ந்ததும் மக்களுக்கு உயிராய் விளங்குவதுமான உழவுத்தொழில் தற்போது நலிவுறுவது மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது.
அடுத்த அடிப்படைத் தேவை உடை. இவ்வுடையை நமக்களிப்பது நெசவுத்தொழில். ‘ஆடைபாதி ஆள்பாதி”, “ஆடையில்லா மனிதன் அரைமனிதன்” என்ற பழமொழிகள் ஆடையின் அவசியத்தை உணர்த்துகின்றன. நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டவன் மனிதன். மனித இனத்தின் வாழ்வுக்கு உணவு துணை புரிகிறது என்றால் நாகரிக நடமாட்டத்திற்கு உடை துணை புரிகிறது.
நம் பழந்தமிழர்கள் பண்டைக்காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைத்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். ஆடை நெசவுக்கலை 5000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்பது வரலாற்று உண்மை.
இலை தழைகளையும் மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோல்களையும், பறவைகளின் இறகுகளையும் ஆடையாக உடுத்திய மனிதன் நாகரிக வளர்ச்சியில் பல வகையான ஆடைகளை உற்பத்தி செய்து நெசவுத்தொழிலில் புதுமைப் படைத்துள்ளான்.
நம் நாட்டில் உழவுத்தொழிலுக்கு அடுத்ததாகச் செய்யப்பட்ட தொழில் நெசவுத்தொழில் என்பது அனைவரும் அறிந்ததே. நம் நாட்டு பருத்தி ஆடைக்கும் பட்டாடைக்கும் வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உண்டு. கடல் கடந்து வணிகம் செய்த தமிழர்களும் ஆடைகளையும், தானியங்களையும் ஏற்றுமதி செய்துள்ளனர்.
நெசவுத் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருளை உற்பத்திச் செய்வது உழவுத்தொழிலே.
உழவும் நெசவும் இருகண்கள் போன்றவை. இவற்றை அழியாமல் பாதுகாத்து மேலும் மேலும் வளரச் செய்து நாட்டின் பொருளாதார நிலையில் நாம் முன்னேறுவோம் என்று கூறிப்பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி நவின்று விடைபெறுகிறேன்.
2. தொழில்கள் பலவிதம்
அவையோர்க்கு வணக்கம்!
நான் பலவகையான தொழில்கள் பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றியும் பேச வந்துள்ளேன். மனிதன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தேவையான பொருள்களை உற்பத்தி செய்யவும் முனைகின்றான். இதுவே தொழில் எனப்படுகிறது. இத்தொழிலானது மக்கள் வாழும் புவியியல் அமைப்பிற்கு ஏற்றபடியே அமைகிறது.
அகப்பொருளில் ஐவகை நிலங்களுக்கான தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிட நான் கடமைப்பட்டிருக்கிறேன். உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், நிரை மேய்த்தல், உழவுத்தொழில் போன்றவைகளாகும்.
நாம் நாகரிக வளர்ச்சி பெற்றது போலவே தொழில்களும் பல புதிய புதிய பெயர்களில் வகைகளில் வடிவம் பெற்றுள்ளன. தொன்மையான தொழில்கள் உழவுத்தொழில், நெசவுத்தொழில். இவை தற்காலத்தில் நவீன மயமாக்கப்பட்டு உற்பத்தியைப் பல மடங்காகப் பெருக்கியுள்ளன.
காகிதம் தயாரித்தல், சோப்பு மற்றும் சலவைப் பொருள்கள் தயாரிப்பு, எண்ணெய் தயாரிப்பு, விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பு, பிஸ்கட் தயாரிப்பு, மெழுகுவர்த்தித் தயாரிப்பு, பந்துமுனைப் பேனா, மைக்குழாய் தயாரிப்பு, தேன் தயாரிப்பு, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு எனப் பல வகையான சுய தொழில்கள் உள்ளன.
மின்சாரத்தையும் இயந்திரங்களையும் பயன்படுத்தாமல் வீட்டிலேயே செய்யப்படும். சிறுதொழில் குடிசைத்தொழில் எனப்படுகிறது. இதில் முதலிடத்தில் இருப்பது ஊறுகாய் – தயாரித்தல், ஜாம் தயாரித்தல், மூலிகைப் பொருட்களைவைத்து குளியல் பொடி தயாரித்தல், கற்பூரம், ஊதுபத்தி தயாரித்தல் போன்ற பல தொழில்கள் குடிசைத் தொழில்களாக நடைபெறுகின்றன.
‘உள்ளங்கையில் உலகம்’ என்ற தொடருக்கு ஏற்ப இணைய வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. இல்லை என்று சொல்ல இயலாத அளவிற்குப் பல வகையான விற்பனை பொருள்கள் இணைய வணிகத்தில் விற்கப்படுகின்றன.
குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பள்ளிகள், குழந்தைகளுக்கான சாகச விளையாட்டு மையம். இவை பெற்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ரெடிமேட் பொருட்கள் தயாரித்தல், பரிசுப் பொருள்கள் விற்பனை செய்தல் போன்றவை முன்னிலையில் உள்ளன.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி
இயந்திர உலகில் பணத்தைத் தேடி அலையும் மக்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலும் நல்ல இலாபத்தை ஈட்டிக் கொடுக்கின்றது. சிறிய அளவில் செய்தாலும் போதுமான வருவாயை ஈட்ட முடியும்.
இவ்வாறு நம் நாட்டில் பல வகையான தொழில்கள் உள்ளன. ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் தொழிலில் நேர்மையைக் கடைபிடித்து முன்னேற வேண்டும்.
பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
சொல்லக் கேட்டு எழுதுக
பூமிக்குள் புதைந்த தாவர இனங்களும் விலங்கினங்களும் அழுகி, மட்கிப் பழுப்பு நிலக்கரியாக மாறுகின்றன. இது மின் உலைகளிலும் ஊது உலைகளிலும் எரிபொருளாகப் பயன்படுகின்றது. உலோக உருக்குத் தொழிலிலும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டில் கடலூர் – மாவட்டம் நெய்வேலியிலும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது.
இது தஞ்சை, பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குறைந்த அளவு காணப்படுகிறது. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் a சுரங்கம் உள்ளது. இங்குக் கிடைக்கும் நிலக்கரி அனல்மின்சாரம் தயாரிக்க உதவுகின்றது.
அறிந்து பயன்படுத்துவோம்
மரபுத்தொடர்கள்
நாம் பேச்சிலும் எழுத்திலும் சில மரபுத்தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அத்தொடர்கள் நம்முடைய கருத்துகளுக்கு வலுசேர்கின்றன. சில மரபுத்தொடர்களுக்கு நேரடிப் பொருள்கொள்ளாமல், அவற்றின் உட்பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.
(எ.கா.)
1. திண்டுக்கல், பூக்கள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நகரமாக விளங்குகிறது.
கொடிகட்டிப் பறத்தல் – புகழ்பெற்று விளங்குதல்
2. அவர் ஓர் அவசரக்குடுக்கை
அவசரக்குடுக்கை – எண்ணிச் செயல்படாமை
பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி 6
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி 7
பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

5சிந்தனை வினா3 questions
Q.1உழவுத்தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?v
Solution

உழவுத்தொழில் சிறக்க இன்றியமையாதன :
(i) மாறும் சூழலுக்கு ஏற்ப விவசாய முறையை மாற்றுதல்.
(ii) இயற்கை வேளாண்மையில் கிடைக்கும் பொருள்களுக்கு ஏற்ற விலையை நிர்ணயித்தல்.
(iii) விளைநிலங்களை வீடுகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது.
(iv) உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் நேரடித் தொடர்பு இருந்தால் உழவர்களின் பொருளுக்கேற்ற விலை அவர்களுக்குக் கிடைக்கும்.
(v) இளைஞர்கள் விவசாயத்திற்கு வந்து, புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வர வேண்டும்.
(vi) இதற்கும் மேலாக சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாத்து மழையின் அளவு பெருகுவதற்கு வழி வகை செய்ய வேண்டும். பொழிகின்ற மழைநீரைச் சேமித்து நிலத்தடிநீர் உயர்வதற்கான பணியைச் செய்ய வேண்டும்.

Q.1மழை வளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை?v
Solution

மழை வளம் பெருக நாம் செய்ய வேண்டுவன :
(i) மரங்கள் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
(ii) வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நட வேண்டும்.
(iii) ஆற்று மணலை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(iv) நிலத்தடி நீரைத் தேக்கி வைக்க வேண்டும்.
(v) குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகிய நீர்நிலைகளைக் கோடைக் காலங்களில் தூர்வாரி வைத்து மழைக் காலங்களில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும்.
(vi) சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Q.1நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?v
Solution

நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு உதவி செய்வன :
(i) வேளாண்மை முன்னேற்றம்
(ii) அறிவியல் வளர்ச்சி
(iii) தொழில் வளர்ச்சி
(iv) தொலைதொடர்பு வசதி
(v) சமூக ஒற்றுமை
(vi) நாட்டின் உற்பத்தியைப் பெருக்குதல்
(vii) கல்வி முன்னேற்றம்
(viii) போக்குவரத்து வசதிகள்
(ix) பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாத்தல் போன்றவை நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு உதவி புரிகின்றன.

6நெடுவினா1 questions
Q.1கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக.v
Solution

கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் :
உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும் என்பர். உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர்.
வெளிநாட்டு வணிகம் :
(i) கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.
(ii) முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது.
(iii) இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
(iv) பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்
இச்செய்தியை,
மீனோடு நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குந்து
…………..
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குந்து (புறநானூறு)
என்னும் பாடல் விளக்குகிறது.
உள்நாட்டு வணிகம் :
சேரநாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர். உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை,
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும்
என்னும் அகப்பாடல் மூலம் அறியலாம்.
கொங்கு மண்டலப் பகுதியில் இன்றைய வணிகம் :
நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு தொழில்களும் வணிகமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

7மதிப்பீடு1 questions
Q.1‘காலம் உடன் வரும்’ – கதையைச் சுருக்கி எழுதுக.v
Solution

முன்னுரை :
துணிகளை நெய்து துறைமுகத்தில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அனந்திகா நிறுவனம் சிக்கிக் கொண்டது. இச்சிக்கலை சுப்பிரமணி எவ்வாறு தீர்த்து வைத்தான் என்பதனையும் அதற்கு உதவிய நெசவுத் தொழிலாளரின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதையைப் பார்க்கலாம்.
சுப்பிரமணியனின் கவலை :
தறியில் பாவு தீர்ந்துவிட்டால், அடுத்த பாவு பிணைக்க ஆளில்லை. ரங்கன் என்பவர் ஊரில் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் சுப்பிரமணி நண்பன் ரகுவைப் பார்க்கச் சென்றார். அவருடைய தறியில் வேலை செய்கிறவர்களை உதவிக்கு அனுப்புமாறு கேட்டார். அங்கும் ஆள் இல்லை என அறிந்ததும் கவலை அதிகமானது.
ரகுவின் ஆலோசனை :
சுப்பிரமணியின் கவலையை உணர்ந்த ரகு, மாயழகு என்பவரைப் போய்ப் பார்த்து, அவரது மனைவியை அழைத்துப் போகச் சொன்னார். இரவு நேரத்தில் செல்வதற்குத் தி தயங்கியவன் பிறகு வேறுவழியின்றி அப்பெண்மணியை அழைத்துச் சென்றார்.
ஒச்சம்மா :
சுப்பிரமணி பாவு பிணைக்க ஒச்சம்மாவைப் பட்டறைக்குக் காரில் அழைத்துச் சென்றார். குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு பாவு பிணைக்கத் தொடங்கினாள். அவள் உசிலம்பட்டி பக்கமுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சார்ந்தவள். மாயழகு கோம்பைத்தொழுவு என்ற ஊரைச் சார்ந்தவன். எதிர்கால நலன் கருதி வெள்ளக்கோயிலில் குடியேறினர். புதிய இடத்தில் அவளுக்கு உணவு, காற்று, நீர், ஒப்பனை எல்லாமும் மாற வேண்டியிருந்தது.
நெசவுத் தொழிலில் ஓச்சம்மா :
இயந்திர நேர்த்தி அதிகம் கொண்ட தறித்தொழிலில் பாவு பிணைத்தல், ஒடி எடுத்தல், கோன் போடுதல், எல்லாவற்றையும் சில மாதங்களில் கற்றுக்கொண்டாள். தன் குழந்தையின் கல்வியைப் பற்றி சிந்தித்து இடம் விட்டு இடம் எங்கும் மாறக்கூடாது என்று தீர்மானித்தாள்.
பாவு பிணைத்தல் :
மனதில் பலவற்றை எண்ணியபடியே பாவு பிணைந்து கொண்டிருந்தாள். இடையில் அழுத குழந்தைக்குப் பாலூட்டித் தூங்க வைத்தாள். பாவு பிணைப்பின் வேகம் குறைந்ததைப் பார்த்த சுப்பிரமணி தேநீர் வாங்கிவரச் சொல்லிக் கொடுத்தார். தறியில் பணி செய்ய மாணிக்கத்தையும் துரிதப்படுத்தினார் சுப்பிரமணி. ஒச்சம்மாவும் தேநீர் அருந்திவிட்டு சுறுசுறுப்பாக பாவு பிணைந்து முடிந்தாள்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.4 காலம் உடன் வரும்
வீட்டிற்குத் திரும்பினாள் ஓச்சம்மா :
வேலை முடிந்ததும் ஒச்சம்மாவிற்கு இரட்டைச் சம்பளம் வழங்கப்பட்டது. அவளது கண்கள் திளைப்பிலும் திகைப்பிலும் ஒரு கணம் ஒளிர்ந்தன. தனது எதிர்காலம் போல் அந்த ரூபாய்த் தாள்களை வலது கையில் இறுக்கிக் கொண்டாள். சுப்பிரமணி அவளை வீட்டில் கொண்டுபோய் விட்டான். மாயழகு வெளியே வந்து பார்த்தான். சுப்பிரமணியைத் தேநீர் குடித்துவிட்டுப் போகுமாறு கூறிவிட்டு, கடையில் வாங்கி வந்த தேநீரைக் கொடுத்தான்.
முடிவுரை :
தேநீர் குடித்துக் கொண்டே “ரொம்ப கஷ்டந்தான் நம் தொழிலு” என்றான். மாயழகு “அப்படித்தாண்ணே இருக்கும் எல்லாமும் …… உங்கள நம்பித்தான் இருக்கோம். இப்படி ஏதும் அவசரம்னா சொல்லுங்கண்ணே …… எங்களால முடிஞ்சதச் செய்யறம்” என்று கூறினான். சுப்பிரமணியும் விடை பெற்றுச் சென்றார்.
Posted in Class 8 on June 29, 2024 June 29, 2024
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Facebook
Twitter
Instagram
Pinterest
Copyright © 2026 Samacheer Kalvi