Class 8 Tamil · Chapter 9

Samacheer Class 8 Tamil - இயல் 9

42 textbook Q&A42 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 9 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 7சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 18குறுவினா 6சிறுவினா 6சிந்தனை வினா 3நெடுவினா 1மதிப்பீடு 1
Your Progress - Chapter 90% complete
1கற்பவை கற்றபின்7 questions
Q.1பின்வரும் திருப்பாவைப் பாடலைப் படித்து மகிழ்க. உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர். தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். பாடல் – 14v
Solution

தெரிந்து தெளிவோம்
(i) பாவை நூல்கள் : மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர். அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை.
இதேபோலச் சிவபெருமானை வழிபடச்செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை. இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

Answer:

Q.1‘தன்னம்பிக்கை’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி வகுப்பில் பகிர்க.v
Solution

தன்னம்பிக்கை :
மனிதனின் வெற்றிக்கு
மூலதனம் தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை இல்லையேல்
தடம்புரள்வான் மனிதனே!
மூடனையும் அறிவாளியாக்கி
முன்னேறச் செய்யும்.
கோழையையும் வீரனாக்கி
கோபுரத்தில் அமர்த்தும்.

Answer:

தன்னம்பிக்கை :
மனிதனின் வெற்றிக்கு
மூலதனம் தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை இல்லையேல்
தடம்புரள்வான் மனிதனே!
மூடனையும் அறிவாளியாக்கி
முன்னேறச் செய்யும்.
கோழையையும் வீரனாக்கி
கோபுரத்தில் அமர்த்தும்.

Q.2‘நம்பிக்கையே வெற்றி’ – என்பதை உணர்த்தும் கதை ஒன்றனைத் தேடி எழுதி வருக.v
Solution

ஓர் ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். வயதான கழுதை ஒன்று இருந்தது. அக்கழுதை ஒருநாள் தோட்டத்தில் இருந்த கிணற்றில் தெரியாமல் விழுந்துவிட்டது. விவசாயிக்கு எப்படி கழுதையை வெளியே கொண்டு வருவது எனத் தெரியவில்லை.
அக்கழுதையை வெளியே கொண்டு வருவதற்குச் செலவு அதிகமாகும் என்றனர் ஊர் மக்கள். அக்கழுதைக்கோ வயதாகிவிட்டது. அதனை விற்றால் கூட சிறுதொகைதான் கிடைக்கும். அதனால் பணத்தை வீணாகச் செலவு செய்ய வேண்டாம் என எண்ணினான். ஊர் மக்களிடம் பேசி ஒரு முடிவெடுத்தான். அது என்னவெனில் ‘ஆளுக்குக் கொஞ்சம் மண்ணை எடுத்துக் கிணற்றில் போட வேண்டும். அப்போது கிணற்றில் விழுந்த கழுதை மண் மூடி இறந்துவிடும்’ என்பதுதான் அவன் எடுத்த முடிவு.
எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை எடுத்துப் போட்டனர். கொஞ்ச நேரம் கழுதையின் அலறல் சத்தம் கேட்டது. அதற்குப் பின் அலறல் சத்தம் கேட்கவில்லை . விவசாயி எட்டிப் பார்த்தான். கழுதை ஊரார் கொட்டிய மண்ணைத் தனக்குச் சாதகமாய் மாற்றிக் கொண்டது. ஒவ்வொருமுறை மண் அதன்மேல் விழும் போதும் அதனை உதறி விட்டுவிட்டு மேலே வந்தது. இதனைக் கண்ட விவசாயி மீண்டும் மீண்டும் மண்ணைக் கொட்டி கழுதையை ஆபத்திலிருந்து காப்பாற்றினான்.
கழுதை எப்படியும் உயிர் பிழைப்போம் என்று நம்பிக்கையுடன் முயற்சி செய்ததால் காப்பாற்றப்பட்டது. இக்கதை மூலம் நாம் உணர்வது கழுதையின் நம்பிக்கை நிறைந்த செயல் ஆகும்.

Q.1சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுகv
Solution

சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்கள் :
1. பெரியார்
2. காந்தியடிகள்
3. நெல்சன் மண்டேலா
4. அம்பேத்கர்
5. முத்துலெட்சுமி ரெட்டி
6. மூவலூர் இராமாமிர்தம்
7. பாரதியார்
8. பாரதிதாசன்
9. அயோத்திதாசர்

Q.2அம்பேத்கரின் பண்புகளாக நீங்கள் உணர்ந்தவற்றை எழுதுக.v
Solution

இளமையில், இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப்பருவத்தில் பல அவமதிப்புகளுக்கு ஆளானவர். அதனால் அவர் பள்ளியையோ கல்வியையோ வெறுக்காமல் தொடர்ந்து படித்து இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம், பாரிஸ்டர் பட்டம் என்று முன்னேறி மிகச்சிறந்த சான்றோனாக உயர்ந்தார்.
இதில் அவருடைய கடுமையான உழைப்பு தெரிகிறது. ‘நூலகத்திற்கு முதல் ஆளாய்ச் சென்று இறுதி ஆளாய் வருவார்’ என்று கூறும்போது அவருடைய உயர்வுக்கு இந்த நூலகமே தூணாக இருந்துள்ளது. தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார்.
அம்பேத்கர் “நான்வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெயவம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை” என்று கூறியுள்ளார். அதன்படியே அவர் நல்லறிவு பெற்றும், சுயமரியாதையுடனும் நன்னடத்தையுடனும் வாழ்ந்து காட்டினார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார். அப்போராட்டத்தோடு அவர் நிற்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகவும் பாடுபட்டார்.
அம்பேத்கரின் கருத்துகள் :
(i) கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து. அது உனக்கு பயன் தரும்.
(ii) கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்.
(iii) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.
அம்பேத்கர் கல்வியாளராக பொருளாதார நிபுணராக, தத்துவவாதியாக, வரலாற்றாளராக, அரசியல் செயற்பாட்டாளராக, சட்ட அமைச்சராக இருந்து தன் பன்முக ஆற்றலால் மக்களுக்குத் தொண்டாற்றியவர்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்
தெரிந்து தெளிவோம் :
(i) இரட்டைமலை சீனிவாசன் : இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார்.
(ii) அரசியல் அமைப்புச்சட்டம் : உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியாவிளங்குகிறது. இந்நாட்டில் பல்வேறுபட்ட இன, மொழி, சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்க, ஆட்சி நடத்த அடிப்படையான சட்டம் தேவைப்படுகிறது.
இச்சட்டத்தினையே அரசியலமைப்புச் சட்டம் என்பர். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அந்தந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டே இயங்குகின்றன. அஃது எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாததாகவோ இருக்கக்கூடும்.

Q.1குழந்தைகளின் நற்பண்புகளாகப் ‘பால் மனம்’ கதையின் வழி நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.v
Solution

(i) குழந்தைக்கு வீட்டு நாய், தெருநாய் வேறுபாடு தெரியாது. இரண்டையும் ஒன்றாகவே பார்க்கும்.
(ii) கீரை விற்கும் கிழவியைக் கூட தன் வீட்டில் ஒருவராகப் பார்க்கும் பரந்த குணம்.
(iii) கூலித்தொழிலாளி வெயிலில் காலில் செருப்பில்லாமல் சுமை நிறைந்த வண்டியை இழுப்பதைப் பார்க்கும் போது அத்தொழிலாளியின் துன்பதைக் கண்டு பொறுக்காத மனம்.
(iv) ஆட்டுக்குட்டியின் பசியைப் போக்க, குழந்தைக்கு வைத்திருந்த புட்டிப்பாலைக் கொடுக்கும் கருணைப் பரிவு. இவையே பால் மனம் கதையின் வழி நான் அறிந்த குழந்தைகளின் நற்பண்புகள்.

Q.1திருக்குறளில் அணிகள் இடம்பெற்றுள்ள குறட்பாக்களுள் ஐந்தனைக் கண்டறிந்துv
Solution

அவற்றில் இடம்பெற்றுள்ள அணிகளின் பெயர்களை எழுதுக.
(i) பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
அணி : எடுத்துக்காட்டு உவமையணி
(ii) தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்
அணி : வஞ்சப்புகழ்ச்சி அணி
(iii) இன்மையின் இன்னாத தியாதெனின்
இன்மையின் இன்மையே இன்னா தது.
அணி : சொற்பொருள் பின்வருநிலை அணி
(iv) பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம் தீமை யால்திரிந்து அற்று.
அணி : உவமையணி.
(v) கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
அணி : பிறிதுமொழிதல் அணி

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.18 questions
Q.1அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது. அ) உவகை ஆ) நிறை இ) அழுக்காறு ஈ) இன்பம்v
Solution

இ) அழுக்காறு

Answer:

இ) அழுக்காறு

Q.2நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று …………….. அ) பொச்சாப்பு ஆ) துணிவு இ) மானம் ஈ) எளிமைv
Solution

அ) பொச்சாப்பு

Answer:

அ) பொச்சாப்பு

Q.3‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………. அ) இன் துன்பு ஆ) இன்பம் + துன்பம் இ) இன்ப + அன்பம் ஈ) இன்ப + அன்புv
Solution

ஆ) இன்பம் + துன்பம்

Answer:

ஆ) இன்பம் + துன்பம்

Q.4குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………. அ) குணங்கள் எல்லாம் ஆ) குணமெல்லாம் இ) குணங்களில்லாம் ஈ) குணங்களெல்லாம்v
Solution

ஈ) குணங்களெல்லாம்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்
பொருத்துக
1. நிறை – பொறுமை
2. பொறை – விருப்பம்
3. மதம் – மேன்மை
4. மையல் – கொள்கை
1. நிறை – மேன்மை
2. பொறை – பொறுமை
3. மதம் – கொள்கை
4. மையல் – விருப்பம்

Q.1உன்னுடன் நீயே ………………… கொள். அ) சேர்ந்து ஆ) பகை இ) கைகுலுக்கிக் ஈ) நட்புv
Solution

இ) கைகுலுக்கிக்

Answer:

இ) கைகுலுக்கிக்

Q.2கவலைகள் …………………. அல்ல. அ) சுமைகள் ஆ) சுவைகள் இ) துன்பங்கள் ஈ) கைக்குழந்தைகள்v
Solution

ஈ) கைக்குழந்தைகள்!
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 இளைய தோழனுக்கு

Q.3‘விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) விழி + எழும் ஆ) விழித்து + எழும் இ) விழி + தெழும் ஈ) விழித் + தெழும்v
Solution

ஆ) விழித்து + எழும்

Answer:

ஆ) விழித்து + எழும்

Q.4போவதில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….. அ) போவது + இல்லை ஆ) போ + இல்லை இ) போவது + தில்லை ஈ) போவது + தில்லைv
Solution

அ) போவது + இல்லை

Answer:

அ) போவது + இல்லை

Q.6தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………. அ) தூக்கிகொண்டு ஆ) தூக்குக்கொண்டு இ) தூக்கிக்கொண்டு ஈ) தூக்குகொண்டுv
Solution

இ) தூக்கிக்கொண்டு

Answer:

இ) தூக்கிக்கொண்டு

Q.7விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………… அ) விழியெழும் ஆ) விழித்தெழும் இ) விழித்தழும் ஈ) விழித்து எழும்v
Solution

ஆ) விழித்தெழும்

Answer:

ஆ) விழித்தெழும்

Q.1இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ……………. அ) இராதாகிருட்டிணன் ஆ) அம்பேத்கர் இ) நௌரோஜி ஈ) ஜவஹர்லால் நேருv
Solution

ஆ) அம்பேத்கர்

Answer:

ஆ) அம்பேத்கர்

Q.2பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது. அ) சொத்துரிமையை ஆ) பேச்சுரிமையை இ) எழுத்துரிமையை ஈ) இரட்டை வாக்குரிமையைv
Solution

ஈ) இரட்டை வாக்குரிமையை

Answer:

ஈ) இரட்டை வாக்குரிமையை

Q.3சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ……………. அ) சமாஜ் சமாத சங்கம் ஆ) சமாத சமாஜ பேரவை இ) தீண்டாமை ஒழிப்புப் பேரவை ஈ) மக்கள் நல இயக்கம்v
Solution

அ) சமாஜ் சமாத சங்கம்

Answer:

அ) சமாஜ் சமாத சங்கம்

Q.4அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ……….. விருது வழங்கியது. அ) பத்மஸ்ரீ ஆ) பாரத ரத்னா இ) பத்மவிபூசண் ஈ) பத்மபூசன்v
Solution

ஆ) பாரத ரத்னா
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் …………………..
2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் ………………….
3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ……………… சென்றார்.
1. புத்தரும் அவரின் தம்மமும்.
2. சுதந்திரத் தொழிலாளர் கட்சி
3. இலண்டன்

Q.1பிறிதுமொழிதல் அணியில் ………….. மட்டும் இடம்பெறும். அ) உவமை ஆ) உவமேயம் இ) தொடை ஈ) சந்தம்v
Solution

அ) உவமை

Answer:

அ) உவமை

Q.2இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது ………………… அணி. அ) ஒற்றுமை ஆ) வேற்றுமை இ) சிலேடை ஈ) இரட்டுற மொழிதல்v
Solution

ஆ) வேற்றுமை

Answer:

ஆ) வேற்றுமை

Q.3ஒரே செய்யுளை இருபொருள் படும்படி பாடுவது ………….. அணி. அ) பிறிதுமொழிதல் ஆ) இரட்டுறமொழிதல் இ) இயல்பு நவிற்சி ஈ) உயர்வு நவிற்சிv
Solution

ஆ) இரட்டுறமொழிதல்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 அணி இலக்கணம்

Q.4இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ……………… அணி. அ) பிறிதுமொழிதல் ஆ) வேற்றுமை இ) உவமை ஈ) சிலேடைv
Solution

ஈ) சிலேடை

Answer:

ஈ) சிலேடை

3குறுவினா6 questions
Q.1மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?v
Solution

மனிதரின் பொது இயல்புகள் :
அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல்.

Q.2மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?v
Solution

நற்பண்புகள் :
அறிவு, கருணை, அன்பு, இரக்கம், நாணம், மேன்மை , எளிமை, நினைவு, துணிவு, இன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், மானம், அறம், மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, இளமை, ஆராய்ந்து தெளிதல்.

Q.1கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?v
Solution

கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தைகளோடு உருவகப் படுத்துகிறார்.

Answer:

கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தைகளோடு உருவகப் படுத்துகிறார்.

Q.1அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக்கொண்டார்?v
Solution

அம்பேத்கர் சதாராவில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார். இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப்பருவத்திலேயே பல அவமதிப்புகளுக்கு ஆளானார். மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார்.

Q.2தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்ட பணிகள் இரண்டினை எழுதுக.v
Solution

தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கண்ட பணிகள் :
(i) அம்பேத்கர் இந்தியச் சமூக அமைப்பில் நிலவிய சாதியமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்.
(ii) ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை 1927ஆம் ஆண்டு துவங்கினார். சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
(iii) 1930ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

Answer:

தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கண்ட பணிகள் :
(i) அம்பேத்கர் இந்தியச் சமூக அமைப்பில் நிலவிய சாதியமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்.
(ii) ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை 1927ஆம் ஆண்டு துவங்கினார். சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
(iii) 1930ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

Q.3வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?v
Solution

வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது: ‘என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்’ என்று அம்பேத்கர் கூறினார்.

4சிறுவினா6 questions
Q.1மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?v
Solution

மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன :
அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

Answer:

மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன :
அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

Q.1இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?v
Solution

இந்திய அரசியல் அமைபச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் :
(i) 15-08-1947 அன்று இந்தியா விடுதலை பெற்றது. ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
(ii) 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.
(iii) இக்குழுவில் கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி. கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் ஒப்படைத்தது.
(iv) அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு, அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்குப் பொருந்தும் சட்டக்கூறுகளை. இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது.
(v) அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்தது. இது மிகச்சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது.

Q.1பிறிதுமொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.v
Solution

அணி விளக்கம் :
உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூற வந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.
எ.கா. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
இத்திருக்குறள், “நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது என்று உவமையை மட்டும் கூறுகிறது.
இதன் மூலம் ‘ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெற முடியும். தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றி பெறுதல் இயலாது’ என்னும் கருத்து விளக்கப்படுகிறது. எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம் பெற்றுள்ளது.

Q.3இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்?v
Solution

இரட்டுறமொழிதல் அணியில் ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமையும்.
மொழியை ஆள்வோம்
கேட்க

Q.1தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகளைப் பெரியவர்களிடம் கேட்டு மகிழ்க.v
Solution

மாணவர்கள் தாங்களாகவே தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகளைப் பெரியோர்களிடம் கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

Q.2நல்வாழ்விற்குத் தேவையான நற்பண்புகள்v
Solution

அவையோர்க்கு வணக்கம்!
நான் இப்போது நல்வாழ்விற்குத் தேவையான நற்பண்புகள் பற்றிப் பேச வந்துள்ளேன்.
நற்பண்புகளுக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கம். ஒழுக்கப் பண்புகளால் தொகுக்கப்பட்ட நூலான ஆசாரக்கோவை நல்லொழுக்கங்கட்கு வித்தாக, காரணமாக விளங்குவன எவை. என்று வரையறை செய்து எட்டு நற்குணங்களைக் கூறுகிறது. அவை நன்றியறிதல், பொறுமை, இன்சொல், எவருக்கும் இன்னாதன செய்யாமை, கல்வி, ஒப்புரவறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு சேர்தல் என்ற இந்த எட்டு வகைப் பண்புகளும் நல்லோரால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களுக்குக் காரணம் ஆகும் என்கிறது ஆசாரக்கோவை.
நம்மை விடப் பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுவதே உயர்ந்த பண்பு. சிறுவயதிலிருந்த அதைப் பழகிக் கொள்ள வேண்டும். பிறருக்கு உதவி செய்தல், நேர்மையாக நடந்து கொள்ளுதல், ஐம்புலன்களை அடக்குதல், நம்மைவிடச் சிறியவர் என்றாலும் அவர்களுடைய கருத்துகளையும் ஏற்றுக் கொள்ளுதல். வறுமை நம்மைச் சூழ்ந்தாலும் தீய செயல்களைச் செய்யாதிருத்தல் இவற்றை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தல் வேண்டும்.
நற்பண்புகளின் ஒட்டுமொத்த உருவமே ஒழுக்கம்தான். அதில் முதலிடம் பெறுவது வாய்மை. நாம் பொய் பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு பொய் பேசினால் அதனை மறைக்க மீண்டும் மீண்டும் பல பொய்களைப் பேச வேண்டியிருக்கும். அவ்வாறு பொய் பேசும்போது பல அவமானங்களைச் சந்திக்க நேரும். பொய்பேசி வெல்வதைவிட மெய்பேசி தோற்பது சிறந்தது.
அடுத்தது, காலமறிதல்’ காலத்தை அறிந்து செயல்பட வேண்டும். காலந்தவறாமல் நேரத்திற்குச் செயல்களைச் செய்ய வேண்டும். பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. காலம் நமக்காகக் காத்திருக்காது. நாம்தான் காலத்திற்காகக் காத்திருந்து செயல்பட வேண்டும். மழையில் உப்பு விற்பதும், காற்றில் மாவு விற்பதும் முட்டாள்தனம். அதனால், வள்ளுவர், காலம் அறிதல் பற்றிக் கூறியதை நாம் பின்பற்ற வேண்டும்.
அடுத்தது சேவை மனப்பான்மை. நாம் இருக்கும் இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், நம் வீடு, நம் வீட்டு வாசல், நம் தெரு இவற்றை சுத்தம் செய்தல். இதனை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் வீடும் நாடும் சுத்தமாகும்.
மருத்துவ உதவி பெறுவதற்கு வழிகாட்டுதல், விழாக்காலங்களில் பொது இடங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அங்குள்ள கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவைக் கற்றுக் கொடுத்தல், செய்தித்தாள்களை வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் இவற்றையெல்லாம் நாம் நம் வாழ்வில் செயல்படுத்தினால் நாமே நற்பண்புகளில் சிறந்தவர் என்ற பெயர் பெற்று அனைவராலும் பாராட்டப்படுவோம்.
சொல்லக் கேட்டு எழுதுக
அம்பேத்கர் தமது வாழ்க்கையில் புதிய திருப்பம் காண வழி ஒன்றைக் கண்டறிந்தார். அது ‘படிப்பு, படிப்பு, படிப்பே’ ஆகும். அதை அடையும் முயற்சியில் அயராது உழைக்கத் தொடங்கினார். எப்போதும் புத்தகமும் கையுமாகவே திகழ்ந்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை வேறு செலவுகளைக் குறைத்துக் கொண்டும் கடன் வாங்கியும் புத்தகங்களை வாங்கித் தந்தார்.
புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை அம்பேத்கர் கடைசிவரை கடைப்பிடித்தார். வட்டமேசை மாநாட்டிற்காக அம்பேத்கர் இங்கிலாந்து சென்றார். மாநாடு முடிந்த பிறகு அமெரிக்கா சென்ற அவர் தம் பழைய நண்பர்களையும் பேராசிரியர்களையும் கண்டு மகிழ்ந்தார். தாய்நாடு திரும்பிய போது பதினான்கு பெட்டிகள் நிறையப் புத்தகங்களைக் கொண்டு வந்தார்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 அணி இலக்கணம்
அறிந்து பயன்படுத்துவோம்
தான், தாம் என்னும் சொற்கள்
தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும். இவ்வேறுபாட்டினை அறிந்து தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
தான், தன்னை , தன்னால், தனக்கு , தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
(எ.கா.) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.
மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.
(இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும்.) (எ.கா.) மாடுகள் தமது தலையை ஆட்டின.
கன்று தனது தலையை ஆட்டியது.
இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.
1. சிறுமி ……………… (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.
2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ……………… (தனது தமது) உழைப்பை நல்கினார்.
3. உயர்ந்தோர் …………… (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ளமாட்டார்கள்.
4. இவை ………………. (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.
5. குழந்தைகள்……………. (தன்னால் தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.
1. தனது
2. தமது
3. தம்மைத்தாமே
4. தாம்
5. தம்மால்
தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.
முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.
கட்டுரை எழுதுக
உழைப்பே உயர்வு
முன்னுரை:
உழைப்பு என்பது தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சீரும் சிறப்புடன் செய்வதாகும். நாம் மேற்கொண்ட செயலில் வெற்றி பெறுவதற்கு உழைப்பதைத் தவிர வேறுவழியில்லை. அத்தகைய உழைப்பைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மாணவர்களின் உழைப்பு :
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது சான்றோர் வாக்கு. இது அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். ஒரு தேர்வில் மட்டும் முதல் மாணவனாக இருந்தால் போதாது. எல்லாத் தேர்வுகளிலும் முதல் மாணவனாகத் திகழ முயற்சியும் பயிற்சியும் தேவை. இம்முயற்சியும் பயிற்சியுமே உழைப்பு. மாணவர்கள் ஒவ்வொருவரும் ஓர் உயர்ந்த குறிக்கோளை மனதில் நிறுத்தி அக்குறிக்கோளில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.
ஊக்கமில்லா உழைப்பு :
சோம்பல், விரைந்து செய்ய வேண்டியவற்றை தாமதித்துச் செய்யும் இயல்பு, மறதி, தூக்கம் ஆகியன ஊக்கத்தை அறவே ஒழிக்கும் திறமுடையன. ஊக்கமில்லாதவர் மக்களாகார்; மரங்களாவர்’ என்பது வள்ளுவர் மொழி. காட்டில் நிற்கும் மரங்கள் காய்கனிகளைத் தரும். இறைவன் உறையும் திருக்கோயில், இல்லம், தேர், மரக்கலம் ஆகியன செய்வதற்கு மரம் பயன்படுகிறது. ஆனால், ஊக்கமற்ற மக்களாகிய மரங்களோ எதற்கும் பயன்படுவதில்லை. ஊக்கமில்லா உழைப்பு வீணானது.
உழைப்பின் பயன் :
நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவது பெரிதல்ல. அதனைச் செயல்படுத்தி அதற்கேற்ப உழைக்க வேண்டும். அவ்வாறு ஓயாமல் உழைப்பவர்கள் விதியைக்கூட தூர விரட்டிவிடுவார்கள். கடுமையான உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமேயில்லை. பொறுமையாகவும் இடைவிடாமலும் உழைத்தால் வெற்றி நிச்சயம். வெற்றியை உருவாக்குவதில் உழைப்பு மிகப்பெரிய மூலதனம். கடின உழைப்பு ஒருவனை வெற்றியை நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

முடிவுரை :
‘கையும் காலும் தான் உதவி – கொண்ட கடமைதான் நமக்குப் பதவி’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பாடல் வரிகளை நினைவில் வைத்து உழைப்போம்; உயர்வோம்.
மொழியோடு விளையாடு
பின்வரும் வினாக்களைப் படித்து இருவினாக்களுக்கு ஒரு விடை தருக.
(எ.கா.) குழம்பும் கூட்டும் மணப்பது ஏன்?
குருதி மிகுதியாய்க் கொட்டுவது ஏன்? பெருங்காயத்தால்
1. ஆடை நெய்வது எதனாலே? அறிவைப் பெறுவது எதனாலே?
2. மாடுகள் வைக்கோல் தின்பது எங்கே? மன்னர்கள் பலரும் இறந்தது எங்கே?
3. கதிரவன் மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய்ச் சூடுவது எது?
4. வானில் தேய்ந்து வளர்வது எது? வாரம் நான்கு கொண்டது எது?
1. நாலால்
2. போரில்
3. மாலை
4. திங்கள்
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்…
1. வாழ்வுக்கு வெற்றிதரும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வேன்.
2. சமுதாய விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. குறிக்கோள் – Objective
2. நம்பிக்கை – Confidence
3. முனைவர் பட்டம் – Doctorate
4. வட்ட மேசை மாநாடு – Round Table Conference
5. இரட்டை வாக்குரிமை – Double voting
6. பல்கலைக்கழகம் – University
7. ஒப்பந்தம் – Agreement
8. அரசியலமைப்பு – Constitution

5சிந்தனை வினா3 questions
Q.1மனிதர்கள் வளர்க்கவேண்டிய பண்புகளாகவும் விலக்க வேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?v
Solution

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள் 1

Answer:

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள் 1

Q.1வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?v
Solution

வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு பண்புகள் :
1. இடைவிடா முயற்சி
2. திட்டமிட்ட உழைப்பு
3. காலமறிந்து செயல்படுதல்
4. கடின உழைப்பு
5. சோர்வில்லாப் பண்பு
6. தோல்வியைக் கண்டு மனம் தளராமை
7. பதற்றமின்றி செயல்களைச் செய்தல்
8. மிகுதியான தன்னம்பிக்கை
9. பிறரை எதிர்பார்க்காமல் செயல்களை மேற்கொள்ளுதல்
10. விட்டுக்கொடுத்து வாழும் பண்பு
11. சினமின்மை

Q.1பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?v
Solution

பாகுபாடில்லாத க கள் சமூகம் உருவாக நமது கடமைகள் :
நாம் வாழும் சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்குண்டு. நாம் பேசும் சொற்கள், செய்யும் செயல்கள் மற்றவரைப் பாதிக்காமலும், துன்புறுத்தாமலும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு பெயர்களுடனும் வெவ்வேறு கடமைகளுடன்தான் வாழ்கிறோம். வீட்டில் மகன் அல்லது மகள், பள்ளியில் மாணவன், அலுவலகத்தில் தொழிலாளி அல்லது முதலாளி, சமுதாயத்தில் குடிமகன் எனப் பல்வேறு வேடங்களைத் த தரித்துக் கொண்டுள்ளோம். தரித்துள்ள வேடத்தில் தவறின்றி நடந்துகொள்ள வேண்டும்.
தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், தன்னோடு வாழ்பவர்களுக்கும் உண்டான உரிமைகளைப் பேணி வாழ்வதற்கு அவன் முன் வர வேண்டும். அவ்வாறு வாழும்போது சமுதாயத்தில் மனித நேயம் தழைத்துவிடும். மனித நேயம் பேணப்பட்டால் உரிமைகள் பேணப்படும். சமூகச் சீர்குலைவு இருக்காது. ஒழுக்கக்கேடு, அச்சம் நிறைந்த சூழ்நிலை இவையெல்லாம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
ஆண், பெண் வேறுபாடுகளும், உயர்ந்தவர். தாழ்ந்தவர் என்று பாகுபாடின்றி இருக்க வேண்டும். இரு பாலரும் சம உரிமை பெற்று வாழ்ந்தால், பாகுபாடில்லாத மக்கள் சமூகம் நீ உருவாகும்.

6நெடுவினா1 questions
Q.1பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக.v
Solution

பூனா ஒப்பந்தம் :
(i) ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.
(ii) இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
(iii) இதன் விளைவாக 1931ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபத்து நான்காம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
(iv) அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

7மதிப்பீடு1 questions
Q.1குழந்தை கிருஷ்ணாவின் பண்புநலன்ளைப் பற்றித் தொகுத்து எழுதுக.v
Solution

மனிதனின் படைப்பு விசித்திரமானது. அதிலும் குழந்தை பிராயம் மிகவும் அழகானது. குழந்தை கிருஷ்ணாவின் உள்ள அழகு பற்றி இக்கதையின் மூலம் பார்க்கலாம்.
குழந்தை கிருஷ்ணா பிஞ்சுவிரல், வெள்ளரிப் பிஞ்சாக முகம், சிறகு போன்ற இமைகள், கண்ணாடி போன்ற விழிகள், பூ போல் உதடுகள், ஒளியரும்புகளான பற்கள், நுங்கு நீரின் குளிர்ச்சியான குரல், தெய்வ வடிவான அழகு, முகம் உலகைப் புரிந்து கொள்ள முயலும் மனவளர்ச்சிக்கான சிந்தனைச் சாயல். இந்த ஒட்டு மொத்த இணைப்புதான் கிருஷ்ணா.
சன்னலைப் பிடித்தவாறு தெருவில் பார்த்த கிருஷ்ணா தன் அம்மாவிடம் குப்பைத் தொட்டியோரம் இருந்த சொறிநாயைக் காட்டினாள். அம்மா அது அசிங்கம் என்றும் தன் வீட்டில் இருக்கும் டாமி அழகானது, சுத்தமானது’ என்றும் கூறினாள். மேலும் ‘அதனைத் தொடக்கூடாது, அப்பா திட்டுவார்’ என்றும் கூறினாள். கிருஷ்ணா , “திட்டவில்லையென்றால் தொடலாமா?” என்று கேட்டாள். கிருஷ்ணாவிற்குத் தெரு நாயும், வீட்டு நாயும் வேறில்லை.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.4 பால் மனம்
வீட்டுவாசலில் கீரைவிற்கும் கிழவியைப் பார்த்ததும் உற்சாகமாக சென்ற கிருஷ்ணாவை அம்மா “அவளைத் தொடாதே உடம்பு சரியில்லாதவள்” என்று கூவினாள். அக்கண்டிப்பில் 3 திகைத்த கிருஷ்ணா “அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ நீ தொடவில்லையா சித்தப்பா?” என்று கேட்டாள்.
கிருஷ்ணா சித்தப்பாவுடன் காந்தி மண்டபத்துக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும் 5 போது ஒருவர் காலில் செருப்பில்லாமல் நிறைந்த பாரத்துடன் கைவண்டியை இழுத்துச் செல்வதைப் பார்த்தாள். அவருக்குக் கல்குத்தும், வெயில் சுடும் எனக் கவலைப்பட்டாள். தன் சித்தப்பாவிடம் “உன் செருப்பைக் கொடுத்து விடு, நீதான் பூட்ஸ் வச்சிருக்கியே” என்றாள்.
அடுத்த நாள் காலையில் தெருவை ஒட்டிய வராந்தாவில் மழையின் குளிர் தாங்காமல் இரண்டு சிறு ஆட்டுக்குட்டிகள் நிற்பதைக் கண்டாள். உடனே கிருஷ்ணா, கைக்குழந்தையின் அருகில் வைத்திருந்த பால் புட்டியை எடுத்து வந்து ஒரு குட்டியின் வாயில் வைத்து அதற்குப் பால் ஊட்டினாள். அதைக் கண்ட அம்மாவும், அப்பாவும், சித்தப்பாவும் வியப்புடன் நின்ற னர்.
தெருநாயும் வீட்டு நாயும் வேறில்லை என்ற சமரச நோக்கம், கீரை விற்கும் பாட்டியிடம் காட்டிய பாசம், வண்டி இழுக்கும் மனிதரின் துன்பதைக் கண்டு பொறுக்காத மனம், ஆட்டுக்குட்டியிடம் காட்டிய கருணைப் பரிவு இவையெல்லாம் குழந்தை கிருஷ்ணாவின் சிறப்பு பண்புநலன்கள்.
ஆனால் அவள் எட்டு வயதில் தன் தம்பி தெருநாய்க்குப் பால் சாதம் பேடுவதைத் தவறு எனக் கூறுகிறாள். கல்லடிப்பட்ட ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கைகொட்டி நகைக்கிறாள். கூலியாள் குடிக்கத் தண்ணீர் கேட்டால், “எப்பவும் இங்கேதான் வருவாயா? நான் தரமாட்டேன்” என்று கூறுகிறாள். இதையெல்லாம் கிருஷ்ணாவின் அம்மா ஏற்றுக் கொள்கிறார்.
உலகச்சூழல் ஒவ்வொரு குழந்தையையும் மாற்றிவிடுகிறது.

ஆசிரியர் குறிப்பு
கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி; சிறுகதைகள், புதினங்கள், குறும் புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார். இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார். உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள்,
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.4 பால் மனம் 1
அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பால் மனம் எனும் இக்கதை அ.வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
Posted in Class 8 on July 5, 2024 July 5, 2024
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Facebook
Twitter
Instagram
Pinterest
Copyright © 2026 Samacheer Kalvi