Class 9 Tamil · Chapter 8

Samacheer Class 9 Tamil - இயல் 8 - அறம், தத்துவம், சிந்தனை

24 textbook Q&A12 verified12 guide-sourcedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 8 - அறம், தத்துவம், சிந்தனை with validation-aware solutions.

The questions on this page were matched against the printed textbook. The answers were taken from a third-party study guide and have not been independently checked — treat them as a starting point, not a marking key, and use “Report an issue” on any answer that looks wrong.
Sections in this chapter
Exercise 2வினாக்கள் 3குறுவினாக்கள் 3மதிப்பீடு 3குறுவினாா 2சிறுவினாா 4நெடுவினாா 2சொற்றொடர் மாற்றம் 5
📝 Don't just read — test yourselfFree flashcards + scored self-test · no sign-in
Your Progress - Chapter 80% complete
1Exercise2 questions
Q.1முத்துக்குமார் தம் மகனுக்கு எழுதிய கடிதத்தைப் போல நீங்கள் யாருக்குக் கடிதம் எழுத விரும்புகிறீர்கள்? அப்படியொரு கடிதம் எழுதுக.
Answer:

தங்கைக்கு…..
அன்புள்ள தங்கைக்கு அண்ணா எழுதுவது,
நலமா? பதின்பருவத்தில் இருக்கும் உனக்கு இக்கடிதம் மூலம் சில கருத்துகளை தெரிவிக்கவும், சிலவற்றை உன்னுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
நாம் சிறு வயதில் இருக்கும் போது பல கஷ்டங்களை அனுபவித்தது உண்டு. துன்பங்களிலும், வறுமையிலும், துவண்டு போகாத நம் தந்தை கண்ணெனத் தகும் கல்வியை எனக்குத் தடையின்றி தந்தார். நீயும் இன்று படித்துக் கொண்டிருக்கிறாய். நானும் பணியில் சேர்ந்து விட்டேன். நான் உழைக்கிறேன் ஓய்வெடுங்களென்றால் நம் தந்தை அதற்கு உடன்படுவதில்லை.
நம் பெற்றோரின் உழைப்பின் பயனாகிய நல்வாழ்வை நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அன்புத் தங்கையே நீ பத்திரமாகவும், பக்குவமாகவும் இருக்க வேண்டிய தருணம் இது. கல்வியிலும் நம் குடும்ப நிலையிலும் மட்டுமே உன் கவனம் இருத்தல் வேண்டும்.
கவனச் சிதறல்கள் ஏற்படா வண்ணம் நல்ல புத்தகங்களை வாசி, பெற்றோரை நேசி, இறைவனை மறவாது வழிபடு. நற்பண்புகளை வளர்த்துக்கொள். பெண்ணிற்கு எதற்குப் பணி? என்று வீட்டிலே இருந்து விடாதே. அடுத்த ஆண்டு உன் பட்டப்படிப்பு முடிந்து விடும் அல்லவா! உனக்கு பிடித்தமான பணியைச் செய்ய உன்னை ஆயத்தப்படுத்திக் கொள். பொருளாதார சுதந்திரமும், சமூக பாதுகாப்பு வழங்குவதும் கல்வியும், பணியுமே. நாளை உன் பிறந்த நாள் அல்லவா? அன்புத் தங்கையே வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் அண்ணன்
இரகு. இரா

Q.2பாடல்களில் பயின்றுவரும் தொடைநயங்களை எடுத்து எழுதுக.
Answer:

இப்பாடலில் பயின்று வரும் தொடை நயங்கள் .
மோனை நயம்
எதுகை நயம்
இயைபுத் தொடை நயம்
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை எனப்படும்.
சான்று:
கொ ண்டல் – கொ டிகள்
க ண்ட – க னக
அண்டர் – அழகர்
செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகையாகும்.
சான்று:
கொ ண் டல் – க ண் ட
வி ண் ட – அ ண் டர்
சான்று:
அண்டையில் கூடும்
படி தர மூடும்

2வினாக்கள்3 questions
Q.1உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களைப் நேர் - நிரை அசைகளாகப் பிரித்துப் பார்க்க.
Solution

நெறிமுறை: ஒவ்வொரு பெயரையும் தமிழில் எழுதி ஒலித்துப் பிரிவுகளை குறிப்பிடு. மேற்கொண்டு பயிற்சிக்கு உங்கள் குடும்பப் பெயர்களை பயன்படுத்தவும்.

Answer:

விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டு:

இந்த பணியில் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை தமிழ் எழுத்து/சொற்பிரிவின்மையாக பிரிக்க வேண்டும். உதாரணம்:
- அப்பா → அப்-பா (அப்பு-பா என்று எளிதாக பிரிக்கலாம்)
- அம்மா → அம்-மா
- அண்ணன் → அண்-ன்-ன் (அண-ன் அல்லது அண்-ன் எனப் பிரிக்கலாம்)
- சித்ரா → சித்-த்ரா அல்லது சி-த்ரா

உங்கள் வீட்டின் நிஜப் பெயர்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பெயரையும் ஒலி/அசைபிரிவாக பிரித்து எழுதுங்கள். (குறிப்பு: தமிழ் மொழியியல் விதிகளின்படி பொருத்தமான ஸ்லேஷ்/ஓசை அடிப்படையில் பிரிக்கவும்.)

Q.2மூவசைச் சீரில் அமைந்த பெயர்கள் நான்கைக் குறிப்பிடுக.
Answer:

இரா / சரா / சன்
மணி / மா / றன்
மதி / மா / றன்
மணி / கண் | டன்

Q.4தளையினின் வகைகள் எழுதுக.
Answer:

தளை ஏழு வகைப்படும்: நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை.

3குறுவினாக்கள்3 questions
Q.1'பகுத்தறிவு' என்றால் என்ன?
Solution

சுருக்கமாக: பகுத்தறிவு = உண்மை மற்றும் பொய்யை பிரித்து, காரணங்களைக் கருத்தில் கொண்டு தெளிவான முடிவெடுப்பதே. (விவேகம், தீர்மானம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு.)

Answer:

பகுத்தறிவு என்பது விவேகம் மற்றும் பகுத்தறிந்துக் கொண்டு தீர்மானம் செய்வது; உண்மையை வேறுபடுத்து அறிந்து சிந்திக்கும் திறனே பகுத்தறிவு.

Q.3கமுகுமரம் எதைத் தேடியது?
Answer:

பெருமரங்களுக்கு இடையே தோன்றிய கமுகு மரமானது, தான் வளர்ந்து வளம் பெறுவதற்கு, விண்ணிலிருந்து வரும் கதிரவன் ஒளியாகிய உயிர்ப்பைத் (ஒளியமுதை) தேடியது.

Q.4யசோதர காகாவியத்தின் பாத்துடைத் தலைவன் யார்?
Answer:

யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன், அவந்தி நாட்டு மன்னனாகிய “யசோதரன்” ஆவார்.

4மதிப்பீடு3 questions
Q.2"காலத்தினால் செய்யப்பட்ட நன்றி சிறிதெனினும் நாலத்தின் மாணப் பெரிது" - இக்குறளின் ஈற்றுச் சீர் வாய்்ப்பாடு எது?
  1. அ. நாள்
  2. ஆ. மலர்
  3. இ. காகாசு
  4. ஈ. பிறப்பு
Answer:

ஈ) பிறப்பு

Q.2காலத்தினால் செய்்த நன்றி சிறிதெனினும் ஞானத்தின் மாண்பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு யாது?
  1. அ. நாள்
  2. ஆ. மலர்
  3. இ. காகாசு
  4. ஈ. பிறப்பு
Answer:

ஈ) பிறப்பு

Q.4விடைக்கேற்ற வினாவைத் தேர்க. விடை - பானையின் வெற்றிடமே நமக்குப் பயன் படுகிறது.
  1. அ. பானையின் எத் பகுதி நமக்குப் பயன் படுகிறது?
  2. ஆ. பானை எப்படி நமக்குப் பயன் படுகிறது?
  3. இ. பானை எதனால் நமக்குப் பயன் படுகிறது?
  4. ஈ. பானை எங்கு நமக்குப் பயன் படுகிறது?
Answer:

அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

5குறுவினாா2 questions
Q.4யசோதர காகாவியத்தின் பாத்துண்டைத் தலைவர் யார்?
Answer:

யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன், அவந்தி நாட்டு மன்னனாகிய “யசோதரன்” ஆவார்.

Q.5அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

அசை இரு வகைப்படும். அவை நேரசை, நிரையசை ஆகும்.

6சிறுவினாா4 questions
Q.1சிக்கனம் குறித்து பெரியாரின் கருத்துகளை இந்த உரையாடை நடைமுறையோடும் தொடர்புபடுத்தி எழுதுக.
Answer:

விழாக்கள் மற்றும் சடங்குகளால் மூடப்பழக்கம் வளர்வதோடு, வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற விழாக்கள் மற்றும் சடங்குளைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
திருமணத்தை எளிமையாக சீர்திருத்த முறையில் நடத்த வேண்டும் என்றார்.
விழாக்கள், திருமணங்கள் மற்றும் சடங்குகள் நடத்த கடன் வாங்கி செலவு செய்து கடன்காரர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
பெரியார் சொன்னதைக் கடைபிடித்திருந்தால் இந்நிலை வரா து.

Q.2நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கைக் நெறிகளாக யசோதர காகாவியம் குறிப்பிடுவவன யாவை?
Answer:

நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்.
நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
ஆராய வேண்டுமானல் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
இடை விடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைக் காக்க வேண்டும்.

Q.3பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை குறிப்பிடுக.
Answer:

வான்மீகி வடமொழியில் எழுதிய இராமகாதையைத் தழுவி கம்பர் “கம்பராமாயணம்” எழுதினார்.
வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரதத்தைத் தழுவி, ‘வில்லிபாரதம்’, ‘பாஞ்சாலி சபதம் எழுதப்பட்டது.
ஷத்ரிய சூடாமணி, ஸ்ரீபுராணம், சத்ய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி “சீவகசிந்தாமணி” எழுதப்பட்டது.
Pilgrims progress நூலைத் தழுவி “இரட்சண்ய யாத்திரிகம் எழுதப்பட்டது.
The secret way – என்னும் நூலைத் தழுவி” மனோன்மணியம்” எழுதப்பட்டது.
புட்பந்தர் எழுதிய யசோதர சரிதம் என்னும் நூலைத் தழுவி “யசோதர காவியம்” எழுதப்பட்டது.

Q.4யசோதர காகாவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கைக் நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிட்டு எழுதுக.
Answer:

அறத்தை ஆக்குக:
பின்னாளில் செய்யலாம் என்று எண்ணாது அறஞ் செய்க என்று (36வது) குறள் கூறுகிறது.
“அன்றறிவாம் எண்ணாது அறஞ்செய்து மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
வெகுளி போக்குக:
யாரிடத்தும் கோபம் கொள்ளாமல் சினத்தை மறந்துவிட வேண்டும் என்று (குறள் 303) கூறுகிறது.
“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்”.
ஞானம் நோக்குக:
குற்றமில்லாத அறிவைக் கண்டவர்க்கு அறியாமை நீங்கி இன்பம் கிட்டும் என்று (குறள் 352) கூறுகிறது.
“இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு”.
விரதம் காக்க:
விரதம் என்றால் நன்னெறி. தீய செயல்கள் தீயைப் போல் தீமைதரும், எனவே கொடிதான தீமையை விட்டு விலகி நன்னெறி பற்றுக என்று (202) குறள் கூறுகிறது.
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”.
இவையே யசோதர காவியமும் திருக்குறளும் குறிப்பிடும் வாழ்க்கை நெறிகள் ஆகும்.

7நெடுவினாா2 questions
Q.1மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக.
Answer:

முன்னுரை:
தமிழக மக்களைப் பகுத்தறிவு பாதைக்கு அழைத்துச் சென்றவர் பெரியார். இந்தியாவின் பழமையான மொழி தமிழ். பழமையான இலக்கியமும் தமிழிலே உள்ளன. இலக்கியத்திலும், மொழியிலும் பெரியார் செய்த சீரமைப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.
மொழி, இலக்கியம் பற்றிய பெரியாரின் கருத்து:
மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும், மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவராய் இருந்தார் தந்தை பெரியார்.
இலக்கிய சீர்திருத்தம்:
அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப்பட வேண்டும். மதம் கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற, யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியமே அதிகளவில் வேண்டும். திருக்குறளில் அறிவியல் கருத்துக்களும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால், அதை மதிப்புமிக்க நூலாகக் கருதியதோடு, திருக்குறளைப் போன்ற இலக்கியம் உருவாக வேண்டும் என்ற சீர்திருத்தத்தை உருவாக்க முனைந்தார்.
இலக்கியமானது அரசியல், சமூகம், பொருளாதாரம், சுயமரியாதை உள்ளிட்ட அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என விரும்பினார்.
மொழியில் சீர்திருத்தம்:
ஒரு மொழியின் பெருமையும், மேன்மையும், அவை எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன. எனவே கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் எழுத்துக்களைச் சீரமைக்க தயங்கக் கூடாது என்று கருதினார் பெரியார்.
மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்றார். அதற்கேற்ப, உயிர் எழுத்துக்களில் ‘ஐ’ என்பதை ‘அய்’ எனவும் ‘ஔ’ என்பதை ‘அவ்’ எனவும் சீரமைத்தார். மேலும் மெய்யெழுத்துகளில் சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்.
கால வளர்ச்சிக்கு மொழி சீரமைப்புகள் தேவை என்று கருதினார். அவரது சீரமைப்புக் கருத்தின் சில கூறுகளை 1978ம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.
முடிவுரை:
மொழி, இலக்கியம் பற்றிய பெரியாரின் சிந்தனைகள், அறிவுலகின் திறவுகோலாய்த் திகழ்ந்தது எனில் மிகையாகாது.

Q.2மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமாரர் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

முன்னுரை:
கடித செய்தி என்பது உயிர்ப்புள்ள மொழி. செய்தியை அளிப்பவருக்கும், பெறுபவருக்குமான உறவுப் பாலத்தை உறுதியாக்குகிறது. தாயுமானவனாகத் திகழ்ந்த முத்துக்குமார் அவர்கள் தம் மகனுக்கு எழுதிய கடிதத்தில் அமைந்துள்ள செய்திகளை அறிவோம்.
குழந்தைப் பருவமும் – உலக வாழ்வும்:
என் செல்லப் பூங்குட்டியே! நீ குழந்தையாய் இருந்தாய்; அழுதாய்; சிரித்தாய்; குப்புறக்கவிழ்ந்து தலைநிமிர்ந்து, சாகசம் கொண்டாடினாய். தரையெல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய்; எழுந்தாய்; விழுந்தாய்; நடந்தாய்; ஓடினாய்.
இந்த உலக வாழ்வும் இப்படித்தான். சிரிக்க வேண்டும், சிணுங்க வேண்டும், குப்புறக்கவிழ்ந்தும், தலைநிமிர்ந்தும் சாகசம் செய்தல் வேண்டும். தவழ வேண்டும், எழவேண்டும், விழவேண்டும், மீண்டும் எழ வேண்டும், இந்த நாடகத்தை நீ வெவ்வேறு வடிவங்களில் உலக வாழ்வில் நடிக்கத்தான் வேண்டும்.
அனுபவமே கல்வி:
கல்வியில் தேர்ச்சி கொள்ள வேண்டும், அதே நேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவக் கல்வியே இவ்வுலகில் வெற்றியுடன் வாழ பயன்படும் சூத்திரம் ஆகும்.
அன்பாக இரு:
எங்கும், எதிலும் எப்போதும் அன்பாய் இரு. அன்பை விட உயர்ந்தது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு. உறவுகளை விட மேன்மையானது நட்பு மட்டுமே, உன் அன்பால் நல்ல நண்பர்களைச் சேர்த்துக் கொள். உன் வாழ்வு அன்பாலும், நட்பாலும் நேராகும்.
உனக்கான காற்றை நீயே உருவாக்கு:

8சொற்றொடர் மாற்றம்5 questions
Q.1சொற்றொடர்/அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக: மறுநாளோடு வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார். (நேர்க்குறிப்பாக மாற்றுக)
Solution

செயல்முறை: மறுநாளோடு வீட்டுக்கு வருவதாக (ஒன்றரை சித்தாந்த வாக்கியம்) -> நேர்க்குறிப்பாக (நேரடி உரையாக்கம்): முரளி கூறினார், "நான் மறுநாளே வீட்டுக்கு வருவேன்." (தயவுசெய்து பாடநூலில் இருந்த சொற்பயன்பாட்டுக்கேற்ப 'மறுநாளோடு' அல்லது 'மறுநாளே' என்பதை மாற்றிக் கொள்ளலாம்.)

Answer:

முரளி: "நான் மறுநாளே வீட்டுக்கு வருவேன்."

Q.2"தென்னாட்டு பென்றநாட்ஷ்ஷாா என்று அறிஞர் அண்ணணாவைப் புகழ்கிறோம" என்று ஆசிரியர் கூறினார். (அயர்க்குறிப்பாக மாற்றுக)
Answer:

“தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்

Q.3மார்னிங் நாஸ்டடாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான். (பிறமொழிச் சொற்களை தமிழாக்குக)
Answer:

காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்).

Q.4அலரும் மயிலும் கூவும் ஆந்தையும் அகவும் சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்கவேண்டும். (ஒலிமரபுப் பிழைகளைத் திருத்துக)
Answer:

அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும், போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.

Q.5கோழிக்குட்டிகளைப் பிடிக்கப் பூனைக்குஞ்சுகள் ஓடின. (பெயர்மரபுப் பிழைகளைத் திருத்துக)
Answer:

கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க பூனைக்குட்டிகள் ஓடின.