Class 7 Tamil · Chapter 3

Samacheer Class 7 Tamil - இயல் 3

13 textbook Q&A13 guide-sourcedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 3 with validation-aware solutions.

The questions on this page were matched against the printed textbook. The answers were taken from a third-party study guide and have not been independently checked — treat them as a starting point, not a marking key, and use “Report an issue” on any answer that looks wrong.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 4சிந்தனை வினா 2குறுவினா 1சிறுவினா 1சிறு வினா 1Book Back Questions 2
📝 Don't just read — test yourselfFree flashcards + scored self-test · no sign-in
Your Progress - Chapter 30% complete
1கற்பவை கற்றபின்2 questions
Q.1சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
Answer:

Q.2பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றின் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.4 questions
Q.1‘யாண்டு’ என்ற சொல்லின் பொருள் ……………….. அ) எனது ஆ) எங்கு இ) எவ்வளவு ஈ) எது
Answer:

ஆ) எங்கு

Q.1ஊர்வலத்தின் முன்னால் ………….. அசைந்து வந்தது. அ) தோரணம் ஆ) வானரம் இ) வாரணம் ஈ) சந்தனம்
Answer:

இ) வாரணம்

Q.2பாஞ்சாலங்குறிச்சியில் ……………… நாயை விரட்டிடும். அ) முயல் ஆ) நரி இ) பரி ஈ) புலி
Answer:

அ) முயல்

Q.3தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் ……………….. அ) இராஜாஜி ஆ) பெரியார் இ) திரு.வி.க ஈ) நேதாஜி
Answer:

அ) இராஜாஜிகோடிட்ட இடத்தை நிரப்புக.
1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ என்று அழைக்கப்படும் விலங்கு …………………
2. யானைக் கூட்டத்திற்கு ஒரு ………………….. யானைதான் தலைமை தாங்கும்.
3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் …………………………
1. புலி
2. பெண்
3. அடர்ந்த முடிகள்

3சிந்தனை வினா2 questions
Q.1தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?
Answer:

(i) புலி மிகுந்த வலிமையானது, சுறுசுறுப்பானது, தன்னம்பிக்கை மிக்கது, வீரம் மிகுந்தது.
(ii) அதைப் போல வீரம் மிக்கவன் மகன்.
(iii) இருள் நிறைந்த குகையில் புலி இருப்பது போல், இருள் நிறைந்த வீரம் மிக்க கருவறையில் தன் மகன் உறங்கி வளர்ந்தான்.
(iv) புலி குகையை விட்டு வேட்டைக்குச் செல்வது போல பகைவர்களை வேட்டையாடுவதற்கு மகன் போர்க்களம் சென்று இருக்கின்றான்.
(v) அதனால் தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுகிறார்.

Q.1நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் யாது?
Answer:

1. மாவீரன் கட்டபொம்மன் வீரம் நிறைந்தவர்.
2. அஞ்சா நெஞ்சினர்.
3. ஆங்கிலேய உயர் அதிகாரிகளை நேருக்கு நேராகவே தன் நாட்டு உரிமைக்காக எதிர்த்தவர். ஆகிய காரணத்தினாலும், மக்கள் மனதில் வீரம் நிறைந்தவராக இடம் பிடித்திருப்பதாலும் நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படுகின்றார்.

4குறுவினா1 questions
Q.2பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
Answer:

பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

5சிறுவினா1 questions
Q.1பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
Answer:

பாஞ்சாலங்குறிச்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
வீடுகளெல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும்.
வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்ததாகவும் இருக்கும்.

6சிறு வினா1 questions
Q.2தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?
Answer:

(i) 1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்.
(ii) மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.
(iii) உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.
(iv) பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்.

7Book Back Questions2 questions
Q.1பாரதியார், கொடிகாத்த குமரன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவராக உங்களைக் கற்பனை செய்து கொண்டு வகுப்பறையில் உரையாற்றுக.
Answer:

பாரதியார்
வணக்கம். நான் தான் உங்கள் முறுக்கு மீசை பாரதி பேசுகின்றேன். மாணவர்களே நலமா? ஒருமுறை எனக்குப் பிடித்த பலகாரம் பற்றி ஒருவர் கேட்டார். நான் சற்றும் தயங்காமல் முறுக்கு என்றேன். அது குறித்த காரணம் இவர் கேட்டார்.முறுக்கு என்றுச் சொல்லும் போது நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறி வெள்ளையர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்ற உணர்ச்சி பெருக்கேற்படுகின்றது.
அதனால் நான் முறுக்கை வீரப்பலகாரம் என்றே அழைக்கின்றேன். இப்போதும் முறுக்கேறி இலஞ்சம், ஊழல் செய்பவரை அடக்க முறுக்கு மீசை துடிக்கின்றது .சரி ! நேரம் ஆகிவிட்டது இற்றொரு நாள் வருகின்றென்.

Q.1மூவகைப் போலிகளிலும் எந்தெந்த எழுத்துகள் எந்தெந்த எழுத்துகளாக மாறுகின்றன என்பதை அறிந்து எழுதுக.
Answer: