Chapter-wise textbook exercise answers for இயல் 7 with validation-aware solutions.
The questions on this page were matched against the printed textbook. The answers were taken from a third-party study guide and have not been independently checked — treat them as a starting point, not a marking key, and use “Report an issue” on any answer that looks wrong.
Q.2இளங்கோவடிகள் …………………. மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார். அ) இமய ஆ) கொல்லி இ) பொதிகை ஈ) விந்திய
Answer:
இ) பொதிகை
2குறுவினா3 questions
Q.1உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
Answer:
நாற்றுப் பறிக்கும்போது உழவர்கள் வயல் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர்.
Q.1பனை மரம் தரும உணவுப் பொருள்கள் யாவை?
Answer:
பதனி, நுங்கு,
Q.4பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.
Answer:
பதனி, நுங்கு, ஓலை. கிலுகிலுப்பை , கயிறு, தும்பு.
3சிறுவினா1 questions
Q.1உழவுத்தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.
Answer:
ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.
4சிந்தனை வினா1 questions
Q.1உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.
Answer:
ஆற்றங்கரையில் நாகரிகம் உருவாகக் காரணமானது உழவுத்தொழில்.
விதைகளை விதைப்பதும், அவற்றுக்கு நீர்பாய்ச்சி வளர்ப்பது மட்டுமே பழங்காலத்தில் நடைபெற்றது. பின்னர், மனிதன் தன் சுய அறிவால் உழவுத்தொழிலுக்கு உதவியாக மாடுகளைப் பயன்படுத்தி இயற்கை எருக்களைக் கொண்டு பயிரிட்டான். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, உழுகருவிகளையும் விதைத்தல் கருவிகளையும், பூச்சிக்கொல்லி, செயற்கை உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினான்.
5கற்பவை கற்றபின்3 questions
Q.1உங்களுடைய மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள் பற்றிய செய்திகளைத் தேடித் தொகுக்க.
Answer:
கொடிவேரி அணை, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், பெரியார் – அண்ணா நினைவகம், பவானி சங்கமேஸ்வரர் கோயில், ஜவுளிச் சந்தை, அந்தியூர் குருநாத சாமி கோயில், பண்ணாரி அம்மன் கோயில், பவானி சாகர் ஆகியன ஈரோடு மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள்.
Q.1உங்களுக்கு பிடித்த கவிதை ஒன்றைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வாழ்க்கை “பெட்டி படுக்கைகளை சுமந்தபடி ஒரு பிரயாணம் எப்போது சுமைகளை இறக்கி வைக்கிறோமோ அப்போது சுற்றி இருப்பவர்கள் நம்மைச் சுமக்க தொடங்குகிறார்கள்”. – மு. மேத்தா
Q.1பின்வரும் தொடர்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக.
Answer:
6குறு வினா1 questions
Q.1தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
Answer:
பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி ஆகியவை தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் ஆகும்.