Class 7 Tamil · Chapter 6

Samacheer Class 7 Tamil - இயல் 6

27 textbook Q&A27 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 6 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 5சிறு வினா 6சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 10சிந்தனை வினா 2குறு வினா 3குறுவினா 1
Your Progress - Chapter 60% complete
1கற்பவை கற்றபின்5 questions
Q.1உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவல்களைத் திரட்டுக.v
Answer:

எனக்குப் பிடித்த கலை சிலம்பாட்டக் கலை. இது தமிழரின் தற்காப்புக் கலை. இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்பர். இது தடியைக் கையாளும் முறை. கால அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக்கொண்டது. சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடவில் சிலம்புக் கம்பியினால் தொடுதல் போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.

Q.1இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக. (எ.கா) மாலை – மலர் மாலை, அந்திப்பொழுது.v
Answer:

ஆறு – எண் , நதி
அன்னம் – சோறு, பறவை
மதி – அறிவு, நிலவு
நகை – புன்னகை, அணிகலன்
மெய் – உடல், உண்மை
திங்கள் – மாதம், நிலவு
மாடு – விலங்கு, செல்வம்
தை – மாதம், தைத்தல்
பார் – உலகம், பார்த்ல்
திரை – கடல் அலை, திரைச்சீலை
படி – படித்தல், படிக்கட்டு
இசை – புகழ், சங்கீதம்
வேங்கை – மரம், விலங்கு
கிளை – மரக்கிளை, உறவு
மா – மாமரம், பெரிய
மறை – மறைத்தல், வேதம்

Q.1உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதி வருக.v
Answer:

எங்கள் ஈரோட்டில் பெரியார் – அண்ணா நினைவகம், தொல்லாய்வுக் கூடம், பவானி சாகர் அணை, கொடிவேரி அணை, மிகப்பெரிய ஜவுளிச் சந்தை ஆகியவை உள்ளன. தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்திய அனைத்துப்பொருட்களும் நூல்களும் புகைப்படங்களும் நினைவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பழமையைப் பறைசாற்றும் கல்வெட்டுகள், தொல்பொருட்கள் பாதுகாப்பிடமாக வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள தொல்லாய்வுக் கூடத்தில் உள்ளன. பழமைமிக்க நீர்த்தேக்கம் பவானிசாகர்.

Q.2நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.v
Answer:

நான் கண்டுகளித்த இடம் குற்றாலம். வேனிற் காலத்தில் குற்றாலத்தில் வீசும் காற்று, மூலிகைகளின் அருங்குணங்களை இழுத்து வரும் காட்டாற்று நீர் அருவியாக மூலிகை நீராகப் பொழியும். தீராத நோய் கூட குற்றால அருவியில் குளித்தால் நீங்குமாம்.
மதிப்பீட்டு

Q.1பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள தொழில் பெயர்களைக் கண்டறிந்து தொகுக்க.v
Answer:

பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தொழில் பெயர்கள்: வேட்டைக்குச் செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்.

2சிறு வினா6 questions
Q.1சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?v
Answer:

(i) நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.
(ii) உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.
(iii) தாயின் மகிழ்ச்சியான ஓவியத்தை வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்து இருக்க வேண்டும்.
(iv) சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் பால் மணம் கமழ வேண்டும்.
(v) ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள் உள்ளிட்ட இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை .

Q.2ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.v
Answer:

ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாக வரைவர்.
இவை பெரும்பாலும் புராண, இதிகாசக் காட்சிகளைக் கொண்டு இருக்கும்.
இவை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.

Q.1வளர்தல், பேசுதல் – இவை எவ்வகைப் பெயர்கள்? விளக்கம் தருக.v
Answer:

வளர்தல், பேசுதல் – இவை விகுதி பெற்ற தொழிற் பெயர்கள். ‘தல்’ என்ற தொழிற்பெயர் விகுதி பெற்று வருவதால் இஃது விகுதி பெற்ற தொழிற் பெயர்கள் ஆயிற்று.

Q.1நீங்கள் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றி வகுப்பறையில் பேசுக.v
Answer:

வணக்கம். நான் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றிப் பேசுகின்றேன். சித்தன்னவாசல் ஓவியங்களையும் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. சித்தன்னவாசல் ஓவியங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவையாக, உண்மையான காட்சிகள் போல காட்சி அளிக்கின்றன.
ஓவியங்களா உயிருள்ள பொருளா என்று வியக்கும் வகையில் உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக் கல்சிற்பங்கள் அருமையானது. பஞ்சபாண்டவர் ரதம், நந்தி ஆகியன கலை நயத்துடனும் நவீன வேலைப்பாடுகள் அமைந்து காணப்படுகின்றது. நம் கலையறிவுக்குச் சான்றாக இது உள்ளது. அனைவரும் அதனைக் கண்டு களிப்போம். நன்றி.
கவிதையை நிறைவு செய்க.
வானும் நிலவும் அழகு
வயலும் பயிரும் அழகு
கடலும் அலையும் அழகு
காற்றும் குளிரும் அழகு.
படம் உணர்த்தும் கருத்தை ஐந்து வரிகளில் எழுதுக.ஒன்று கூடுவோம் நாம் ஒன்று கூடுவோம்
பச்சை மரங்களைக் காப்போம்
பசுமையை நேசிப்போம்! சுவாசிப்போம்!
இனியொரு விதி செய்வோம்
இயற்கையைப் போற்றவே!
கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒரு தொடரில் முதல் மற்றும் இறுதிச்சொல்லாகக் கொண்டு சொற்றொடர் உருவாக்குக.
(ஓவியக்கலை, இசை, கட்டடக்கலை, வண்ணங்கள்)
(எ.கா.) : ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.
நுண்கலைகளுள் ஒன்று ஓவியக்கலை .
1. இசை க்கு மயங்காத உயிர்கள் இல்லை .
எங்கும் தமிழ் இசை
2. கட்டடக்கலையில் தமிழர் சிறந்திருந்தனர்.
சிறந்த கலை கட்டடக்கலை .
3. வண்ணங்கள் தீட்டி ஓவியம் வரைவோம்.
மயில் தோகையில் எண்ணற்ற வண்ணங்கள் .
இடைச்சொல் ‘ஐ’ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
தலைப்பு : எங்கள் ஊர்
முன்னுரை – அமைவிடம் – பெயர்க்காரணம் – தொழில்கள் – சிறப்பு மிகு இடங்கள் – திருவிழாக்கள் – மக்கள் ஒற்றுமை – முடிவுரை
முன்னுரை :
அழகான நகரம், அமைதியான நகரம் எங்கள் ஈரோடு ஆகும். எண்ணற்ற வளங்கள் பொங்கும் இடம் ஈரோடு. மனிதநேயம் தவழும் நகர் எங்கள் ஈரோடு. அச்சிறப்புமிகு நகர் பற்றிக் காண்போம்.அமைவிடம் :
கரூர், சேலம், கோவை ஆகியற்றுக் கிடையே ஈரோடு நகர் அமைந்துள்ளது. காடுகளும் வயல்களும் சூழ்ந்து நடுவினில் இயற்கை அழகு தவழும் வண்ணம் ஈரோடு அமைந்துள்ளது. காவிரி ஆறு பாயும் புண்ணிய பூமி ஈரோடு ஆகும்.
பெயர்க்காரணம் :
இரண்டு ஓடைகள் ஓடுவதால் ஈரோடை எனப்பெயர் பெற்றது. இதுவே காலப்போக்கில் மருவி ஈரோடு என்று ஆனது. பிரம்மா ஐந்தாவது தலையைத் துண்டித்த போது அந்த மண்டையோடு சிவபெருமானோடு ஒட்டிக்கொண்டு பிரம்ம தோசம் பிடித்தது. அவர் தோசம் போக இந்தியா முழுவதும் நீராடினார். ஈரோட்டில் வந்து நீராடிய போது மண்டை ஓடு மூன்றாகப் பிரிந்து மூன்று இடத்தில் விழுந்தது. ஈர் (இறுதி) ஓடு விழுந்த இடம் ஈரோடு ஆயிற்று என்பர்.
தொழில்கள் :
வேளாண்மை, கைத்தறி, ஜமக்காளம், ஆடை ஆயத்தம் ஆகிய தொழில்கள் ஈரோட்டில் சிறந்து விளங்கிவருகின்றது.
சிறப்புமிகு இடங்கள் :
பெரியார் – அண்ணா நினைவகம், திண்டல் முருகன் கோயில், பிரப் தேவாலயம், பள்ளிபாளையம் தர்கா, பண்ணாரி அம்மன் கோவில், வ.உ.சி.பூங்கா ஆகியன ஈரேட்டில் சிறப்புமிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள் :
மாரியம்மன், பண்ணாரி அம்மன், பாரியூர் அம்மன், அறச்சாலை அம்மன் ஆகிய கோயில்களின் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். திரளான பக்தர்கள் இதில் – கலந்து கொள்வர்.
மக்கள் ஒற்றுமை :
இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய சமயங்கள் எங்கள் நகரில் இருந்த போதும் மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல ஒற்றுமையாகவே இருந்துவருகின்றோம். ஒரே பகுதியில் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் ஆகிய மூன்றும் அமைந்து எங்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றது.
முடிவுரை :
நம் நகரின் அருமை பெருமைகளை அறிந்து, நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் புதிரைப்படித்து விடையைக் கண்டறிக.

Q.1நான் இனிமை தரும் இசைக் கருவி. எனது பெயர் ஆறு எழுத்துகளை உடையது. அதில் இறுதி நான்கு எழுத்துகள் விலை உயர்ந்த ஒரு உலோகத்தைக் குறிக்கும். முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் விலங்கின் வேறு பெயர் கிடைக்கும். நான் யார்?v
Answer:

மிருதங்கம்

Q.2நான் ஒரு காற்றுக் கருவி. நான் புல் வகையைச் சேர்ந்த தாவரத்திலிருந்து உருவாக்கப்படுகிறேன். எனது பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டது. முதல் இரண்டு எழுத்துகள் ஒரு தாவர வகையைக் குறிக்கும். நான் யார்?v
Answer:

புல்லாங்குழல்
பின்வரும் பத்திகளைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.
சாலை விபத்துகளைத் தவிர்க்கச் சாலைவிதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.
சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். வாகனங்களை முந்துவதற்குக் கோட்டுக்கு வலது பக்கம் உள்ள சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது.
ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக்கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக்கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.வினாக்கள்:

3சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.10 questions
Q.3‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….. அ) வண் + கீரை ஆ) வண்ண ம் + கீரை இ) வளம் + கீரை ஈ) வண்மை + கீரைv
Answer:

ஈ) வண்மை + கீரை

Q.4கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………. அ) கட்டியிடித்தல் ஆ) கட்டியடித்தல் இ) கட்டி அடித்தல் ஈ) கட்டு அடித்தல்v
Answer:

ஆ) கட்டியடித்தல்

Q.1குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று ………………. அ) மண்துகள் ஆ) நீர் வண்ண ம் இ) எண்ணெய் வண்ணம் ஈ) கரிக்கோல்v
Answer:

அ) மண்துகள்

Q.2நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் …………. அ) குகை ஓவியம் ஆ) சுவர் ஓவியம் இ) கண்ணாடி ஓவியம் ஈ) கேலிச்சித்திரம்v
Answer:

ஈ) கேலிச்சித்திரம்

Q.3‘கோட்டோவியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………. அ) கோடு + ஓவியம் ஆ) கோட்டு + ஓவியம் இ) கோட் + டோவியம் ஈ) கோடி + ஓவியம்v
Answer:

ஆ) கோட்டு + ஓவியம்

Q.4‘செப்பேடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………… அ) செப்பு + ஈடு ஆ) செப்பு + ஓடு இ) செப்பு + ஏடு ஈ) செப்பு + யேடுv
Answer:

இ) செப்பு + ஏடு

Q.2பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற் பெயர் எது? அ) ஊறு ஆ) நடு இ) விழு ஈ) எழுதல்v
Answer:

ஆ) நடு
பொருத்துக.
1. ஒட்டகம் – முதனிலைத் தொழிற்பெயர்
2. பிடி – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
3. சூடு – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
1. ஒட்டகம் – விகுதி பெற்ற தொழிற்பெயர்
2. பிடி – முதனிலைத் தொழிற்பெயர்
3. சூடு – விகுதி பெற்ற தொழிற்பெயர்

Q.2தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ……………… இருக்கக் கூடாது. அ) சோம்பல் ஆ) சுறுசுறுப்பு இ) ஏழ்மை ஈ) செல்வம்v
Answer:

அ) சோம்பல்

Q.3‘எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) எழுத்து + தென்ப ஆ) எழுத்து + என்ப இ) எழுத்து + இன்ப ஈ) எழுத் + தென்பv
Answer:

ஆ) எழுத்து + என்ப

Q.4‘கரைந்துண்ணும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….. அ) கரைந்து + இன்னும் ஆ) கரை + துண்ணும் இ) கரைந்து + உண்ணும் ஈ) கரை + உண்ணும்v
Answer:

இ) கரைந்து + உண்ணும்

4சிந்தனை வினா2 questions
Q.1நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?v
Answer:

நான் குதிரையையும் ஆற்றையும் ஒப்பிடுவேன். குதிரை மற்றும் ஆறு ஆகிய இரண்டும் ஓடும், சுழி இருக்கும். தாக்கும்.

Q.1தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?v
Answer:

யானையின் தந்தங்கள் மீது வரையப்படும் ஓவியங்கள் தந்த ஓவியங்கள் ஆகும். இவ்வகை ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன. கேரளாவில் யானைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. வயது முதிர்ந்த யானைகளும், தந்தங்களும் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது. எனவே, தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது.

5குறு வினா3 questions
Q.2குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?v
Answer:

குகை ஓவியங்களில் இருந்து செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக குகைகளில் ஓவியம் வரைந்ததையும் பழந்தமிழர் வாழ்க்கை முறைகளையும் அறியலாம்.

Q.4சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.v
Answer:

அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் ஆகியவற்றின் மேற்கூரைகளிலும் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களாகும்.

Q.5செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?v
Answer:

நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் ஆகியன செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் ஆகும்.

6குறுவினா1 questions
Q.3துன்பத்தில் துன்பம் உண்டாக்குபவர் யார்?v
Answer:

துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.
பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 102 38 கண்ணென்ப வாழும் உயிர்க்கு.