ஆ) பொறுமை
இ) உலகம்
இ) தன் + நாடு
அ) இவையில்லாது
பொருத்துக.
1. சாந்தம் – சிறப்பு
2. மகத்துவம் – உலகம்
3. தாரணி – கருணை
4. இரக்கம் – அமைதி
1. சாந்தம் – அமைதி
2. மகத்துவம் – சிறப்பு
3. தாரணி – உலகம்
4. இரக்கம் – கருணை
இ) எதிர் + ஒலித்தது
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ மதம், சாதி, இனம், மொழி, ஏழை, பணக்காரன் ஆகியன ஒழிய வேண்டும். பொறாமை, வன்முறை, அறியாமை ஆகியன அழிந்து மனிதநேயம் மலர வேண்டும். அனைவரும் ஒன்றெனக் கருத வேண்டும்.
அனைவரிடமும் அன்பாகப் பழகுவது,
உண்மை பேசுவது,
தன்னம்பிக்கையுடன் இருப்பது,
மனம் தளராமை
– ஆகியவை என்னிடம் உள்ள தனித்தன்மைகள் ஆகும்.
தமிழை உலகமொழி ஆக்குவேன்.
ஏழ்மை நிலையை ஒழித்து, அனைத்தும் அனைவருக்கும் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வருவேன்.
சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை நீக்குவேன்.
இந்திய நதிகளை இணைப்பேன்.
ஆகியவற்றை நான் தலைவராக இருந்தால், மக்களுக்குச் செய்வேன்.
காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.
(i) காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.
(ii) அதனால் தாய் காக்கையைவிட்டுச் செல்ல முடியவில்லை. அந்த மரத்திலேயே வாழ ஆரம்பித்தது. ‘கா’ என்று கத்த முயற்சித்தது, அதனால் முடியவில்லை .
(iii) அதற்குக் கூடுகட்டத் தெரியாது. அம்மா, அப்பா, தோழர் யாரும் இல்லை குளிர், மழை, வெயில் ஆகியவற்றைக் கடந்தது. தானே இரை தேடத் தொடங்கியது.
(iv) வாழ்கையை வாழப் பழகிவிட்டது. ஒரு விடியலில் குயில் குஞ்சு “கூ” என்று கூவியது, அன்று தான் ஒரு ‘குயில்’ என உணர்ந்தது.
மொழியை ஆள்வோம்
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.
உண்மை
வணக்கம். உண்மை என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். வாய்மையே வெல்லும் என்பது நம் நீதித் துறையின் அடிப்படைக் கொள்கை. உண்மையை மட்டுமே இந்த உலகம் ஏற்கும். உண்மை பேசுபவனுக்குத் தான் நாளை சொர்க்கம் கிடைக்கும். வள்ளுவர் கூட உண்மைக்கு என்றே வாய்மை என்ற அதிகாரத்தையே வகுத்துள்ளார்.பத்துக் குறளில் உண்மையை அழகாக வள்ளுவர் விளக்குவின்றார். உண்மை பேசி உயர்ந்தவன் மன்னன் அரிச்சந்திரன். உண்மை பேசி உலக உத்தமர் ஆனார் காந்தியடிகள். எனவே நாமும் உண்மை பேசுவோம்! வாழ்வில் உயர்வோம்! நன்றி.
சொல்லக் கேட்டு எழுதுக.
1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை.
2. குயில் குளிரில் நடுங்கியது , மழையில் ஒடுங்கியது, வெயிலில் காய்ந்தது.
3. இரக்கம் உடையோர் அருள் பெற்றவர் ஆவர்.
4. காயிதே மில்லத் என்னும் சொல்லுக்குச் “சமுதாய வழிகாட்டி” என்று பொருள்.
5. விடியும் போது குளிரத் தொடங்கியது.
கீழ்க்காணும் தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கவிதை எழுதுக.சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
(எனவே , ஏனெனில், அதனால், ஆகையால், அது போல, இல்லையென்றால், மேலும் )
(எ.கா.) காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்ய விரும்பாதவர். ஏனெனில் அவர் எளிமையை விரும்பியவர்.
1. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். ……………….. துன்பப்பட நேரிடும்.
2. குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. ………………. காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
3. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ……………. மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
4. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். ……………. பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
5. தமிழகத்தில் மழை பெய்து வருகின்றது. ……………. இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
1. இல்லையென்றால்
2. ஆகையால்
3. ஏனெனில்
4. எனவே
5. மேலும்கடிதம் எழுதுக.
உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
54, குறிஞ்சி வீதி,
தமிழ்நகர்,
மதுரை – 2.
03.6.2019.
அன்புள்ள அத்தைக்கு,
உங்கள் அன்பு அண்ணன் மகன் எழுதும் கடிதம். நானும் என் அப்பா, அம்மா ஆகியோரும் நலமாக இருக்கின்றோம். அதுபோல தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும் அறிய ஆவலாக இருக்கின்றேன். அடுத்த மாதம் முதல் வாரம் முதல் எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கின்றது. ஒரு வாரம் இத்திருவிழா நடைபெறும்.
ஊரே அலங்காரமாக இருக்கும். பூச்சாட்டல், காப்புக்கட்டல் ,பூமிதித்தல், அலகு குத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். அத்தனை நிகழ்வுகளில் தாங்களும் மாமாவும் அவசியம் கலந்துகொள்ள எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும். அப்பாவும் அம்மாவும் நேரில் வந்தும் அழைப்பார்கள். அன்புடன் முடிக்கின்றேன். உடன் பதில் எழுதுங்கள்.
இப்படிக்கு,
அன்புள்ள அண்ணன் மகன்,
அ. முரளி.
உறைமேல் முகவரி
ச. தமிழரசி,
12,திரு.வி.க. நகர்,
சென்னை – 5.
மொழியோடு விளையாடு
குறிப்புகளைக் கொண்டு இடமிருந்து வலமாகக் கட்டங்களை நிரப்புக.1. நூலகத்தில் இருப்பவை ………………… நூல்கள் நிறைந்துள்ள இடம் ………………….
2. உலகப்பொது மறை ……………….. புரட்சிக்கவிஞர் …………………
3. முனைப்பாடியார் இயற்றியது ………………… நீதி நெறி விளக்கம் பாடியவர் …………………
4. குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் …………………….. சுரதா என்பதன் விரிவாக்கம் …………………..
5. குற்றாலக்குறவஞ்சியைப் பாடியவர் …………………….1. நூல்கள், நூலகம்
2. திருக்குறள், பாரதிதாசன்
3. அறநெறிச்சாரம், குமரகுருபரர்
4. குற்றாலக்குறவஞ்சி, சுப்புரத்தினதாசன்
5. திரிகூடராசப்பக்கவிராயர்
கீழ்க்காணும் படங்களைப் பார்த்து இரட்டைக் கிளவி அமையுமாறு தொடர் உருவாக்குக.(எ.கா.) மழை சடசட வெனப் பெய்தது.
பறவை படபட வெனப் பறந்தது.
புகைவண்டி சடசட வெனச் சென்றது.
மரக் கிளை சடசட வென முரிந்தது.
கீழ்க்காணும் அறிவிப்பைப் படித்து அதன்பின் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க.
தீ விபத்தும் பாதுகாப்பு முறைகளும்
வினாக்கள் மற்றும் விடைகள்
வீடு மற்றும் பொது இடங்களில் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு, எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். தரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.சமையல் செய்யும் போது இருக்கமான உடைகளை அணிய வேண்டும். பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில், பெரியவர் பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும். பணியாளார்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.
மின் தூக்கியைப் பயன்படுத்தக் கூடாது. எண்ணெய்த் தீயில் நீரை ஊற்றக் கூடாது. தீக்காயம் பட்ட இடத்தில் எண்ணெய், பேனா மை ஆகியவற்றைத் தடவக் கூடாது.
காயிதேமில்லத் அவர்கள் தன் மகனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தார். பெரிய தலைவர் என்பதால் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடக்கும் என அனைவரும் நினைத்தனர்.பெண்வீட்டாரிடம் மணக்கொடை வாங்காமல் மிக எளிமையாக மகன் திருமணத்தை நடத்தினார்.
வணக்கம், சென்னைக்குச் சுற்றுலா செல்ல முடிவு எடுத்தோம். உடைகள், உணவுகள், நொறுக்குத் தீனிகள், மருந்துகள், போர்வை, துண்டு, பற்பசை. சோப்பு ஆகியவற்றைப் பையில் எடுத்து வைத்தோம். முன்பதிவு செய்த பயணச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டோம். அலைபேசி, மின்னேற்றி ஆகியவற்றையும் ஆயத்தப்படுத்தி வைத்தோம்.
இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி ஆகும்.
சான்று : விறுவிறு, மளமள.