Class 7 Tamil · Chapter 5

Samacheer Class 7 Tamil - இயல் 5

28 textbook Q&A28 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 5 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 7சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 11சிறு வினா 5சிந்தனை வினா 2குறுவினா 1சிறுவினா 1குறு வினா 1
Your Progress - Chapter 50% complete
1கற்பவை கற்றபின்7 questions
Q.1இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.v
Answer:

“பூமித் தாயே! பசுமை போர்த்தியவளே!
நீலக் கடலாய் அலங்கரித்தவளே!
கதிரவன் காட்சியில் …. பொன் தகடானவளே!
உன்னரும் வளத்தால் இன்னுயிர்கள் வாழ்கின்றனவே!”

Q.2‘தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது’ என்பதை வகுப்பில் கலந்துரையாடுக.v
Answer:

ஆங்கல வழிக்கல்வி படித்தால் மட்டுமே உயர முடியும் என்றெண்ணிக் கொண்டிருப்போரே! கவனியுங்கள். வாழ வந்த ஆங்கிலேயரைக்கூட விரட்டினோம். ஆனால், ஆங்கில மொழியை விரட்டாமல் அதன் மீது மோகம் கொண்டு அதன் வழியில் கற்க அலைகின்றோம். இது எப்படி இருக்கின்றது தெரியுமா?
தன் தாயைப் புறந்தள்ளிவிட்டு, அயலாம் தாயைப் போற்றுவது போலத்தான். எல்லா வளமும் புதைந்துள்ள மொழி நம் தாய்மொழி. அதன் வழியிலேயே நாம் கல்வி பெறுவது சிறப்பு.ஔவையாரும் கம்பரும் சேக்ஸ்பியரும் காந்தியடிகளும் தாகூரும் எப்படிச் சிறந்தனர் தெரியுமா? அனைவரும் அவரவர் தாய்மொழியால் தான் சிறந்தனர். எனவே, சிறந்த நம் தாய்மொழியிலேயே கல்வி பெறுவோம்.

Q.1கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டி எழுதுக.v
Answer:

ஓதுவது ஒழியேல்! – ஔவையார்
கல்விக்கு அழகு கசடற மொழிதல் – அதிவீரராம பாண்டியன்
உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக் கடலின் பெருமை கடவார். – நன்னெறி
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. – திருக்குறள்

Q.1கல்வி தொடர்பான பாடல் வரிகளைத் தொகுத்து எழுதுக. (எ.கா.) கல்வி கரையில, கற்பவர் நாள் சில.v
Answer:

இளமையில் கல்.
கேடில் விழுச்செல்வம் கல்வி.
கற்க கசடற.
ஓதுவது ஒழியேல்!
கல்விக்கு அழகு கசடற மொழிதல்
உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார்.

Q.11. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக. 2. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள் ? வகுப்பில் கலந்துரையாடுக.v
Answer:

எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்கச் சொல்லித் தருவேன்.
எழுதப்படிக்கத் தெரியாத ஒரே காரணத்திற்காக, தன்மானம் இழந்த நிலை போக்க அவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுத் தருவேன்.

Q.1பாடப்பகுதியில் இடம் பெற்ற சொற்களில் பகுபதம் பகாப்பதம் ஆகியவற்றைத் தனித்தனியே தொகுக்க.v
Answer:

Q.2உங்கள் வகுப்பு மாணவ – மாணவிகளின் பெயர்களைப் பகுபதம் , பகாப்பதம் என வகைப்படுத்துக.v
Answer:

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.11 questions
Q.3‘ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது, ………………. அ) ஏடே + தேன் ஆ) ஏட்டு + எடுத்தேன் இ) ஏடு + எடுத்தேன் ஈ) ஏ + டெடுத்தேன்v
Answer:

இ) ஏடு + எடுத்தேன்

Q.4‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………… அ) துயின்று + இருந்தார் ஆ) துயில் + இருந்தார் இ) துயின்றி + இருந்தார் ஈ) துயின் + இருந்தார்v
Answer:

அ) துயின்று + இருந்தார்

Q.1ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் ………………….. அ) வீடு ஆ) கல்வி இ) பொருள் ஈ) அணிகலன்v
Answer:

ஆ) கல்வி

Q.3‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ……………. அ) வாய்த்து + ஈயின் ஆ) வாய் + தீயின் இ) வாய்த்து + தீயின் ஈ) வாய் + ஈயீன்v
Answer:

அ) வாய்த்து + ஈயின்

Q.4‘கேடில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….. அ) கேடி + இல்லை ஆ) கே + இல்லை இ) கேள்வி + இல்லை ஈ) கேடு + இல்லைv
Answer:

ஈ) கேடு + இல்லை

Q.5எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………. அ) எவன் ஒருவன் ஆ) எவன்னொருவன் இ) எவனொருவன் ஈ) ஏன்னொருவன்v
Answer:

இ) எவனொருவன்

Q.1காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ……………… அ) கல்வி ஆ) காலம் அறிதல் இ) வினையறிதல் ஈ) மடியின்மைv
Answer:

ஆ) காலம் அறிதல்

Q.3‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர் ……………… அ) திருக்குறளார் ஆ) திருவள்ளுவர் இ) பாரதியார் ஈ) பாரதிதாசன்v
Answer:

இ) பாரதியார்

Q.4‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………… அ) உயர் + வடைவோம் ஆ) உயர் + அடைவோம் இ) உயர்வு + வடைவோம் ஈ) உயர்வு + அடைவோம்v
Answer:

ஈ) உயர்வு + அடைவோம்

Q.1நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ……………… அ) 40 ஆ) 42 இ) 44 ஈ) 46v
Answer:

ஆ) 42

Q.3பெயர்ப் பகுபதம் ………………… வகைப்படும். அ) நான்கு ஆ) ஐந்து இ) ஆறு ஈ) ஏழுv
Answer:

இ) ஆறு

3சிறு வினா5 questions
Q.1‘இன்பத்தமிழ்க் கல்வி’ – பாடலின் மையக்கருத்தை நும் சொந்த நடையில் எழுதுக.v
Answer:

பாரதிதாசன் கவிதை எழுத ஏட்டினை எடுத்தார். வானம் தன்னைக் கவிதையாக எழுதும்படிக் கூறியது. நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம் ஆகியன அவரைக் கவர்ந்து தங்களைக் கவிதை எழுதும்படி அவரிடம் வேண்டியது.மயில் போன்ற பெண்கள் அன்பைக் கவிதையாக எழுதும்படிக் கூறினர். தென்றல், மயில், அன்னம், கதிரவன். வீரர்கள் ஆகியனவும் அவரிடம் கவிதை எழுத வேண்டின.ஆனால் துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அதனை நீங்க இன்பத்தமிழ்க் கல்வி கற்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பம் நீங்கும். மனதில் தூய்மை உண்டாகும். வீரம் வரும்.

Q.1கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.v
Answer:

உலகில் எல்லாச் செல்வங்களும் அழிந்துவிடும்.
இருபது இருபத்தைந்தாண்டுக்கு முன் இங்கு இருந்த ஆலமரம் எங்கே என்றால் புயலில் விழுந்துவிட்டது என்போம்.
இங்கிருந்த பெரிய கட்டடம் எங்கே என்றால், மழையால் இடிந்து விட்டது என்பர்.
10 ஆண்டுக்கு முன் 2 இலட்சம் ரூபாய் வைத்திருந்தவர். இன்று இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்போம்.
எல்லாம் அழியும். ஆனால் கல்வி அப்படியன்று. 10 ஆண்டுக்கு முன்னர் பட்டம் பெற்றவர் இன்று 10ம் வகுப்பு ஆகிவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கல்வி அழியாதது. வள்ளுவரும் ”கேடில் விழுச்செல்வம் கல்வி …..” என்கின்றார்.

Q.2கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?v
Answer:

கல்வி ஓர் ஒளிவிளக்கு. இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாதவீடு. விளக்கில்லாதவீட்டில் யார்குடியிருப்பார்கள்? வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள்.

Q.2விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.v
Answer:

பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
(எ.கா.) வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் +அன் +அன்
வா – பகுதி, இது ‘வ’ எனக் குறுகி இருப்பது விகாரம்.
த் – சந்தி, இது ‘ந்’ எனத் திரிந்து இருப்பது விகாரம்.
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

Q.3தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது படர்க்கை.v
Answer:

சான்று : அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், அவள், இவை.
சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.
(அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், என், உன்)
1. உன் பெயர் என்ன?
2. நாம் ஏழாம் வகுப்பு மாணவர்கள்.
3. அவை எப்படி ஓடும்.
4. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.
5. அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
பின்வரும் தொடர்களில் மூவிடப்பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.
1. எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.
2. இவர் தான் உங்கள் ஆசிரியர்.
3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை .
4. எனக்கு , அது வந்ததா என்று தெரியவில்லை . நீயே கூறு.
5. உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?கடிதம் எழுதுக.
உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி நூலக ஆணையாளருக்குக் கடிதம் எழுதுக.
நூலகம் அமைத்துத் தர வேண்டி மடல்
அனுப்புநர்
ச.முகிலன்,
பாரதிநகர்,
ஈரோடு.
பெறுநர்
ஆணையர் அவர்கள்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டுதல்.
வணக்கம். எங்கள் பாரதி நகர் ஈரோட்டின் மையப் பகுதியை ஒட்டியே உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. 3000 மக்கள் வாழ்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் 1000 பேர் உள்ளனர். பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க எங்கள் பகுதியில் நூலகம் இல்லை . அறிவை வளர்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை அறியவும் எங்களால் இயலவில்லை .எனவே எங்கள் அறிவுக் கண்களைத் திறக்க எங்கள் பகுதியில் நூலகம் அமைத்துத் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம். நன்றி பல.
இப்படிக்குத் தங்கள் உண்மையுள்ள,
ச.முகிலன்.
நாள் : 03.5.2019
இடம் : ஈரோடு.உறைமேல் முகவரி
பெறுநர்
ஆணையர் அவர்கள்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.
மொழியோடு விளையாடு1. காலையில் பள்ளி மணி ……………..
2. திரைப்படங்களில் விலங்குகள் ……………….. காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
3. கதிரவன் காலையில் கிழக்கே …………………
4. நாள்தோறும் செய்தித்தாள் ……………… வழக்கம் இருக்க வேண்டும்.
1. ஒலிக்கும்
2. நடிக்கும்
3. உதிக்கும்
4. வாசிக்கும்
ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக.
1. ……………. புல் மேயும்.
2. …………..சுடும்.
3. ……………பேசும்.
4. …………. பறக்கும்.
5. …………. மணம் வீசும்.
1. ஆ
2. தீ
3. கை
4. ஈ
5. பூ
பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.
(எ.கா) தா – கொடு
1. தீ ……………….
2. பா …………..
3. கை ……………..
4. வை ……………
5. மை ……………
1. நெருப்பு
2. பாடல்
3. தைத்தல்
4. புல்
5. அஞ்சனம்பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.
ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி
(எ.கா.)ஆறு – ஈ ஆறு கால்களை உடையது.
தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது.
1. விளக்கு – பாடலின் பொருள் விளங்கியது.
அகல் விளக்கைக் கோவிலில் ஏற்றுவர்.
2. படி – வாயிற் படியில் அமராதே!
இளமையிலேயே படிக்க வேண்டும்.
3. சொல் – மூத்தோர் சொல் அமுதம்.
தஞ்சை சொல் (நெல்) வளம் மிகுந்தது.
4. கல் – காய்த்த மரம் கல் அடிபடும்.
இளமையில் கல்.
5. மாலை – மாலைநேரத்தில் விளையாட வேண்டும்.
பூமாலை தொடுத்தாள்.
6. இடி – இடி மின்னலுடன் மழை பெய்தது.
மரத்தின் மீது வண்டி இடித்துவிட்டது.
நிற்க அதற்குத் தக……
கலைச்சொல் அறிவோம்
1. கோடை விடுமுறை – Summer vacation
2. குழந்தைத் தொழிலாளர் – Child Labour
3. பட்டம் – Degree
4. கல்வியறிவு – Literacy
5. நீதி – Morall
6. சீருடை – Uniform
7. வழிகாட்டுதல் – Guidence
8. ஒழுக்க ம் – Dicipline

4சிந்தனை வினா2 questions
Q.1தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.v
Answer:

எளிதில் பொருள் விளங்கி நன்கு பாடப்புரிதல் ஏற்படும்.
பழந்தமிழ் கலை, பண்பாடு, மரபு ஆகியன காக்கப்படும்.
தொன்மையையும் வரலாற்றையும் நன்கு உணரலாம்.
விழுமிய தமிழ்ச்சிந்தனைகளை அறியலாம்.

Q.1கல்விச்செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்? – சிந்தித்து எழுதுக.v
Answer:

நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது.
திருடர்களால் கல்வியைத் திருடமுடியாது.
கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் குறையாது.
– எனவே, பிற செல்வங்கள் அழியும். ஆனால் கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.

5குறுவினா1 questions
Q.1கல்விச் செல்வத்தின் இயல்புகளாகி நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.v
Answer:

கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் பிறரால் கொள்ளப்படாது. கொடுத்தாலும் குறையாது, அரசரால் கவர முடியாது.

6சிறுவினா1 questions
Q.1கல்விச்செல்வம் குறித்த நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.v
Answer:

கல்வியைப் பொருள் போலக் குவித்து வைத்தாலும் பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்குக் கொடுத்ததலும் குறையாது. அரசராலும் கவர முடியாது.ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கவேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது.

7குறு வினா1 questions
Q.2கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?v
Answer:

கல்வி அறிவு இல்லாதவர்கள் விலங்குகள் என்று வள்ளுவர் கூறுகின்றார்.