Ch 1இயல் 1
5-Mark Questions
“எங்கள் தமிழ்” – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும் பொருள்பெற யாரையும் புகழாது போற்றா தாரையும் இகழாது கொல்லா விரதம் குறியாகக் கொள்கை பொய்யா நெறியாக எல்லா மனிதரும் இன்புறவே என்றும் இசைந்திடும் அன்பறமே அன்பும் அறமும் ஊக்கிவிடும் அச்சம் என்பதைப் போக்கிவிடும் இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
பின்வரும் நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க.
கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தியத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்!… (கத்தியின்றி …) கண்ட தில்லை கேட்ட தில்லை சண்டை யிந்த மாதிரி பண்டு செய்த புண்ணி யந்தான் பலித்த தேநாம் பார்த்திட… (கத்தியின்றி….)
2-Mark Questions
பேசும் போது சிலநேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவது உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்த வழக்குச் சொற்களையும் எழுதுக.
(எ.கா) சொல்லு – சொல், நில்லு – நில், வந்தியா – வந்தாயா?, சாப்டியா – சாப்பிட்டாயா?
ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள், அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்தெழுதுங்கள்.
எண்ணுப்பெயர்கள் : ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. குற்றியலுகரச் சொற்கள் : ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து.
குற்றியலுகர எண்ணுப்பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
வன்தொடர் குற்றியலுகரம் – மூன்று, எட்டு, பத்து மென் தொடர் குற்றியலுகரம் – ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஒன்பது உயிர்த் தொடர் குற்றியலுகரம் – ஆறு
Ch 2இயல் 2
5-Mark Questions
நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
நண்பனுக்குக் கடிதம் 23, பெரியார் வீதி, சேலம் – 3. 10.6.2019. ஆருயிர் நண்பா ! உன் அன்பு நண்பன் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த நலத்துடன் இருக்கின்றோம். நீயும் உன் குடும்பத்தாரும் நலமா?எங்கள் பள்ளியில் கடந்த வாரம் மதுரைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். அங்குச் சென்ற அனுபவத்தை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். மதுரை என்றால் இனிமை என்பதைப் பாடநூலில் தான் படித்திருக்கின்றேன். அங்குச் சென்றபோது தான் அந்த இனிமையை உணர்ந்தேன். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றேன். …
உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?
உள்ளத்தில் பொய்யில்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவர். கீழ்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க.1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. 2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க. அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் ‘பொய் பேசாமை’ என்னும் அறத்தை எத்தகை சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். …
2-Mark Questions
காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
காட்டுப்பூக்களுக்குக் கார்த்திகை விளக்கை உவமையாகக்கவிஞர் சுரதாகுறிப்பிடுகிறார்.
காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?
காட்டிலுள்ள மலர்களைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல வகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும். எல்லோரும் சேர்ந்துமகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும். காட்டு விலங்குகளுக்கு உணவாகக் கனி தரும்.
கரடி ‘அனைத்துண்ணி ‘ என அழைக்கப்படுவது ஏன்?
பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் என அனைத்தையும் உண்பதால் கரடி அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகின்றது.
Ch 3இயல் 3
5-Mark Questions
தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் ……………….. அ) இராஜாஜி ஆ) பெரியார் இ) திரு.வி.க ஈ) நேதாஜி
அ) இராஜாஜிகோடிட்ட இடத்தை நிரப்புக. 1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ என்று அழைக்கப்படும் விலங்கு ………………… 2. யானைக் கூட்டத்திற்கு ஒரு ………………….. யானைதான் தலைமை தாங்கும். 3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ………………………… 1. புலி 2. பெண் 3. அடர்ந்த முடிகள்
தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?
(i) புலி மிகுந்த வலிமையானது, சுறுசுறுப்பானது, தன்னம்பிக்கை மிக்கது, வீரம் மிகுந்தது. (ii) அதைப் போல வீரம் மிக்கவன் மகன். (iii) இருள் நிறைந்த குகையில் புலி இருப்பது போல், இருள் நிறைந்த வீரம் மிக்க கருவறையில் தன் மகன் உறங்கி வளர்ந்தான். (iv) புலி குகையை விட்டு வேட்டைக்குச் செல்வது போல பகைவர்களை வேட்டையாடுவதற்கு மகன் போர்க்களம் சென்று இருக்கின்றான். (v) அதனால் தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுகிறார்.
2-Mark Questions
சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றின் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக.
பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.
Ch 4இயல் 4
5-Mark Questions
கடற்பயணம் பற்றிய சிறுகதை ஒன்றனை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
கடல் – எஸ்.கண்ண ன் அவன் ஒரு இளைஞன். அவனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். கள்ளச்சாரயம் குடித்து அவன் அப்பா இறந்துவிட்டார். அம்மா மற்றும் திருமண வயதில் தங்கை அவனுக்கு. அவனுக்குக் கிடைத்த வேலையில் குடும்பத்தை நடத்தவே பணம் போதவில்லை. தங்கையின் திருமணத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்ற கவலையே அவனுக்குப் பெரிதாக இருந்தது. மனதின் நிம்மதிக்காக அனைவரும் கடற்கரை நோக்கிச் செல்வர். அவனும் அப்படியும் சில நாட்கள் சென்றான். கை நிறைய எப்போது சம்பாதிப்பது? எப்போது தங்கைக்குத் திருமணம் செய்வது? இவை அவன் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. …
நீர்மூழ்கிக் கப்பல் இயங்கும் முறைபற்றிய செய்திகளைத் திரட்டி தொகுத்து எழுதுக.
தண்ணீரில் ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுள்ள நீரை வெளியேற்றினால் மட்டுமே அப்பொருள் மிதக்கும் என்பது ஆர்க்கிமிடிஸ் தத்துவம். அதன் அடிப்டையில் தான் நீர் மூழ்கிக்கப்பல்கள் இயங்குகின்றன. சரளைத் தொட்டிகள் நீர் மூழ்கிக் கப்பல்களைச் சுற்றி வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது காற்றால் நிரப்பப்பட்டு இருக்கும். சுற்றிக் காற்று இருப்பதால், நீரில் இருக்கும் காற்றை வெளியேற்றினால் இந்த இடத்தில் நீரானது நிரம்பும். இப்படி நிரம்பினால் எடை அதிகரிக்கும் கப்பல் நீரில் மூழ்கும்.
2-Mark Questions
‘கலங்கரை விளக்கம்’ – மாதிரி ஒன்று செய்து வருக.
மாணவர் செயல்பாடு
கடலும், கலங்கரை விளக்கமும் – ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுக.
பல்வகையான கப்பல்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.
Ch 5இயல் 5
5-Mark Questions
‘தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது’ என்பதை வகுப்பில் கலந்துரையாடுக.
ஆங்கல வழிக்கல்வி படித்தால் மட்டுமே உயர முடியும் என்றெண்ணிக் கொண்டிருப்போரே! கவனியுங்கள். வாழ வந்த ஆங்கிலேயரைக்கூட விரட்டினோம். ஆனால், ஆங்கில மொழியை விரட்டாமல் அதன் மீது மோகம் கொண்டு அதன் வழியில் கற்க அலைகின்றோம். இது எப்படி இருக்கின்றது தெரியுமா? தன் தாயைப் புறந்தள்ளிவிட்டு, அயலாம் தாயைப் போற்றுவது போலத்தான். எல்லா வளமும் புதைந்துள்ள மொழி நம் தாய்மொழி. அதன் வழியிலேயே நாம் கல்வி பெறுவது சிறப்பு.ஔவையாரும் கம்பரும் சேக்ஸ்பியரும் காந்தியடிகளும் தாகூரும் எப்படிச் சிறந்தனர் தெரியுமா? அனைவரும் அவரவர் தாய்மொழியால் தான் சிறந்தனர். எனவே, சிறந்த நம் தாய்மொழியிலேயே கல்வி பெறுவோம்.
கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டி எழுதுக.
ஓதுவது ஒழியேல்! – ஔவையார் கல்விக்கு அழகு கசடற மொழிதல் – அதிவீரராம பாண்டியன் உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக் கடலின் பெருமை கடவார். – நன்னெறி கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. – திருக்குறள்
2-Mark Questions
இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.
“பூமித் தாயே! பசுமை போர்த்தியவளே! நீலக் கடலாய் அலங்கரித்தவளே! கதிரவன் காட்சியில் …. பொன் தகடானவளே! உன்னரும் வளத்தால் இன்னுயிர்கள் வாழ்கின்றனவே!”
கல்வி தொடர்பான பாடல் வரிகளைத் தொகுத்து எழுதுக. (எ.கா.) கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
இளமையில் கல். கேடில் விழுச்செல்வம் கல்வி. கற்க கசடற. ஓதுவது ஒழியேல்! கல்விக்கு அழகு கசடற மொழிதல் உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக் கடலின் பெருமை கடவார்.
1. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக. 2. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள் ? வகுப்பில் கலந்துரையாடுக.
எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்கச் சொல்லித் தருவேன். எழுதப்படிக்கத் தெரியாத ஒரே காரணத்திற்காக, தன்மானம் இழந்த நிலை போக்க அவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுத் தருவேன்.
Ch 6இயல் 6
5-Mark Questions
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவல்களைத் திரட்டுக.
எனக்குப் பிடித்த கலை சிலம்பாட்டக் கலை. இது தமிழரின் தற்காப்புக் கலை. இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்பர். இது தடியைக் கையாளும் முறை. கால அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக்கொண்டது. சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடவில் சிலம்புக் கம்பியினால் தொடுதல் போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.
இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக. (எ.கா) மாலை – மலர் மாலை, அந்திப்பொழுது.
ஆறு – எண் , நதி அன்னம் – சோறு, பறவை மதி – அறிவு, நிலவு நகை – புன்னகை, அணிகலன் மெய் – உடல், உண்மை திங்கள் – மாதம், நிலவு மாடு – விலங்கு, செல்வம் தை – மாதம், தைத்தல் பார் – உலகம், பார்த்ல் திரை – கடல் அலை, திரைச்சீலை படி – படித்தல், படிக்கட்டு இசை – புகழ், சங்கீதம் வேங்கை – மரம், விலங்கு கிளை – மரக்கிளை, உறவு மா – மாமரம், பெரிய மறை – மறைத்தல், வேதம்
2-Mark Questions
நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.
நான் கண்டுகளித்த இடம் குற்றாலம். வேனிற் காலத்தில் குற்றாலத்தில் வீசும் காற்று, மூலிகைகளின் அருங்குணங்களை இழுத்து வரும் காட்டாற்று நீர் அருவியாக மூலிகை நீராகப் பொழியும். தீராத நோய் கூட குற்றால அருவியில் குளித்தால் நீங்குமாம். மதிப்பீட்டு
பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள தொழில் பெயர்களைக் கண்டறிந்து தொகுக்க.
பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தொழில் பெயர்கள்: வேட்டைக்குச் செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்.
ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.
ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாக வரைவர். இவை பெரும்பாலும் புராண, இதிகாசக் காட்சிகளைக் கொண்டு இருக்கும். இவை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.
Ch 7இயல் 7
5-Mark Questions
உழவுத்தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.
ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.
உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.
ஆற்றங்கரையில் நாகரிகம் உருவாகக் காரணமானது உழவுத்தொழில். விதைகளை விதைப்பதும், அவற்றுக்கு நீர்பாய்ச்சி வளர்ப்பது மட்டுமே பழங்காலத்தில் நடைபெற்றது. பின்னர், மனிதன் தன் சுய அறிவால் உழவுத்தொழிலுக்கு உதவியாக மாடுகளைப் பயன்படுத்தி இயற்கை எருக்களைக் கொண்டு பயிரிட்டான். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, உழுகருவிகளையும் விதைத்தல் கருவிகளையும், பூச்சிக்கொல்லி, செயற்கை உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினான்.
2-Mark Questions
உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
நாற்றுப் பறிக்கும்போது உழவர்கள் வயல் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர்.
பனை மரம் தரும உணவுப் பொருள்கள் யாவை?
பதனி, நுங்கு,
பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.
பதனி, நுங்கு, ஓலை. கிலுகிலுப்பை , கயிறு, தும்பு.
Ch 8இயல் 8
5-Mark Questions
உன் அன்னை பயன்படுத்திய இன்சொல்லால் நீ மகிழ்ந்த நிகழ்வு ஒன்றைக் கூறுக.
ஒரு முறை நான் தேர்வில் தோல்வி அடைந்து விட்டேன். என் நண்பர்கள், அப்பா, ஆசிரியர் எனப் பலரும் என்னைத் திட்டினார்கள். ஆனால் என் அன்னை மட்டும், தோல்வியே வெற்றியின் முதல் படி. இப்போது நீ பெற்றிருப்பது தோல்வியன்று, வெற்றியின் முதல் படி கவலைப்படாதே என்றார். அவ்வினிமைச் சொல் என்னை ஊக்கப்படுத்தியது.
பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி வந்து வகுப்பறையில் பகிர்க.
பாரி, திருமுடிக்காரி, வல்வில் ஓரி, ஆய் அண்டிரன், பேகன், நள்ளி, அதியமான் நெடுமானஞ்சி ஆகிய கடை எழுவள்ளல்கள் பிறருக்காவே தம் வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவர்கள். சீதக்காதி ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர். காந்தியடிகள் நம் நாட்டு மக்களுக்காவே வாழ்ந்தவர். அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசப் பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காகவே வாழந்தவர். அன்னை தெரஸா தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்காகவே வாழ்ந்தவர்.
2-Mark Questions
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக.
பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் மதுரக்கி ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள் திருமங்கை ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பாணாழ்வார் குலசேகர ஆழ்வார்.
பிறருடன் பேசும் போது நீங்கள் பயன்படுத்தும் இன்சொற்களைத் தொகுத்துக் கூறுக.
வாழ்க வளமுடன், வணக்கம், நலமா, அன்புடையவரே, சகோதரரே, நன்று, அருமை, இனிமை, பாராட்டு, வாழ்த்துகள், வெற்றி உமதே, முயற்சி திருவினையாக்கும் ஆகியன பிறருடன் பேசும் போது நான் பயன்படுத்தும் இன்சொற்கள்.
பொய்கையாழ்வாரும்பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?
பொய்கையாழ்வார் அகல்விளக்காகப் பூமியையும், பூதத்தாழ்வார் அகல்விளக்காக அன்பையும் உருவகப்படுத்துகின்றனர்.
Ch 9இயல் 9
5-Mark Questions
இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………. அ) இவையில்லாது ஆ) இவை இல்லாது இ) இவயில்லாது ஈ) இவஇல்லாது
அ) இவையில்லாது பொருத்துக. 1. சாந்தம் – சிறப்பு 2. மகத்துவம் – உலகம் 3. தாரணி – கருணை 4. இரக்கம் – அமைதி 1. சாந்தம் – அமைதி 2. மகத்துவம் – சிறப்பு 3. தாரணி – உலகம் 4. இரக்கம் – கருணை
குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக.
(i) காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது. (ii) அதனால் தாய் காக்கையைவிட்டுச் செல்ல முடியவில்லை. அந்த மரத்திலேயே வாழ ஆரம்பித்தது. ‘கா’ என்று கத்த முயற்சித்தது, அதனால் முடியவில்லை . (iii) அதற்குக் கூடுகட்டத் தெரியாது. அம்மா, அப்பா, தோழர் யாரும் இல்லை குளிர், மழை, வெயில் ஆகியவற்றைக் கடந்தது. தானே இரை தேடத் தொடங்கியது. (iv) வாழ்கையை வாழப் பழகிவிட்டது. ஒரு விடியலில் குயில் குஞ்சு “கூ” என்று கூவியது, அன்று தான் ஒரு ‘குயில்’ என உணர்ந்தது.
2-Mark Questions
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ மதம், சாதி, இனம், மொழி, ஏழை, பணக்காரன் ஆகியன ஒழிய வேண்டும். பொறாமை, வன்முறை, அறியாமை ஆகியன அழிந்து மனிதநேயம் மலர வேண்டும். அனைவரும் ஒன்றெனக் கருத வேண்டும்.
உங்களிடம் உள்ள தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவன யாவை?
அனைவரிடமும் அன்பாகப் பழகுவது, உண்மை பேசுவது, தன்னம்பிக்கையுடன் இருப்பது, மனம் தளராமை – ஆகியவை என்னிடம் உள்ள தனித்தன்மைகள் ஆகும்.
நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணியைச் செய்வீர்கள்?
தமிழை உலகமொழி ஆக்குவேன். ஏழ்மை நிலையை ஒழித்து, அனைத்தும் அனைவருக்கும் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வருவேன். சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை நீக்குவேன். இந்திய நதிகளை இணைப்பேன். ஆகியவற்றை நான் தலைவராக இருந்தால், மக்களுக்குச் செய்வேன்.
Frequently asked questions
- “எங்கள் தமிழ்” – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
- அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும் பொருள்பெற யாரையும் புகழாது போற்றா தாரையும் இகழாது கொல்லா விரதம் குறியாகக் கொள்கை பொய்யா நெறியாக எல்லா மனிதரும் இன்புறவே என்றும் இசைந்திடும் அன்பறமே அன்பும் அறமும் ஊக்கிவிடும் அச்சம் என்பதைப் போக்கிவிடும் இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
- பின்வரும் நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க.
- கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தியத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்!… (கத்தியின்றி …) கண்ட தில்லை கேட்ட தில்லை சண்டை யிந்த மாதிரி பண்டு செய்த புண்ணி யந்தான் பலித்த தேநாம் பார்த்திட… (கத்தியின்றி….)
- பேசும் போது சிலநேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவது உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்த வழக்குச் சொற்களையும் எழுதுக.
- (எ.கா) சொல்லு – சொல், நில்லு – நில், வந்தியா – வந்தாயா?, சாப்டியா – சாப்பிட்டாயா?
- ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள், அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்தெழுதுங்கள்.
- எண்ணுப்பெயர்கள் : ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. குற்றியலுகரச் சொற்கள் : ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து.
These important questions are selected from the Samacheer Kalvi Class 7 Tamil textbook book-back exercises to help you revise the most useful questions. Mark weightage (5/2/1) follows the usual exam pattern and may vary by exam — always check your latest syllabus and question pattern. Open each chapter for the complete set of questions and answers.