Class 7 Tamil · Chapter 1

Samacheer Class 7 Tamil - இயல் 1

27 textbook Q&A27 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 1 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 8சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5குறு வினா 6சிறு வினா 2சிந்தனை வினா 3குறுவினா 2சிறுவினா 1
📝 Don't just read — test yourselfFree flashcards + scored self-test · no sign-in
Your Progress - Chapter 10% complete
1கற்பவை கற்றபின்8 questions
Q.1“எங்கள் தமிழ்” – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.v
Answer:

அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

Q.2பின்வரும் நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க.v
Answer:

கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!… (கத்தியின்றி …)
கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட… (கத்தியின்றி….)

Q.2பேசும் போது சிலநேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவது உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்த வழக்குச் சொற்களையும் எழுதுக.v
Answer:

(எ.கா) சொல்லு – சொல், நில்லு – நில், வந்தியா – வந்தாயா?, சாப்டியா – சாப்பிட்டாயா?

Q.1உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.v
Answer:

1. வீட்டுக்கு வீடு வாசற் படி.
2. வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்.
3. அடிச்சு வளக்காத புள்ளயும் ஒடிச்சு வளக்காத முருங்கையும் உருப்படாது.
4. எறச்ச கிணறு ஊறும்.
5. நாய் வித்த காசு கொலக்கவா செய்யும்.
6. ஊராரு புள்ளய ஊட்டி வளத்தா தன்புள்ள தன்னால வளரும்.
7. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
8. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
9. காணி சோம்பல் , கோடி கேடு.
10. மானேண்ணா புள்ளி கொறயுமா? மயிலேண்ணா எறகு உதிறுமா?

Q.1ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள், அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்தெழுதுங்கள்.v
Answer:

எண்ணுப்பெயர்கள் :
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து.
குற்றியலுகரச் சொற்கள் :
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து.

Q.2குற்றியலுகர எண்ணுப்பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.v
Answer:

வன்தொடர் குற்றியலுகரம் – மூன்று, எட்டு, பத்து
மென் தொடர் குற்றியலுகரம் – ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஒன்பது
உயிர்த் தொடர் குற்றியலுகரம் – ஆறு

Q.3குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள். (எ.கா) ஒன்று – 1 + 1/2 + 1/2 = 2v
Answer:

இரண்டு – 1 + 1 + 1/2 + 1/2 = 3
மூன்று – 2 + 1/2 + 1/2 = 3
நான்கு – 2 + 1/2 + 1/2 = 3
ஐந்து – 2 + 1/2 + 1/2 = 3
ஆறு – 2 + 1/2 = 2 1/2
ஏழு – 2 + 1 = 3
எட்டு – 1 + 1/2 + 1/2 = 2
ஒன்ப து – 1 + 1/2 + 1 + 1/2 = 3
பத்து – 1 + 1/2 + 1/2 = 2

Q.4கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.v
Answer:

பாகு, வாகு,
பாடு, சாடு, ஓடு, விடு,
காசு, வீசு, பேசு,
வாது, கேது, சாது, மாது,
வறு, சேறு, செறு,
வது,வடு, பொது.

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.5 questions
Q.2‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………… அ) குரல் + யாகும் ஆ) குரல் + ஆகும் இ) குர + லாகும் ஈ) குர + ஆகும்v
Answer:

ஆ) குரல் + ஆகும்

Q.2வானில் ……………….._கூட்டம் திரண்டால் மழை பொழியும் அ) அகில் ஆ) முகில் இ) துகில் ஈ) துயில்v
Answer:

ஆ) முகில்

Q.2ஒலியின் வரிவடிவம் …………… ஆகும். அ) பேச்சு ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டுv
Answer:

ஆ) எழுத்து

Q.3தமிழின் கிளைமொழிகளில் ஒன்று ………………… அ) உருது ஆ) இந்தி இ) தெலுங்கு ஈ) ஆங்கிலம்v
Answer:

இ) தெலுங்கு

Q.4பேச்சுமொழியை …………………… என்றும் கூறுவர் அ) இலக்கிய ஆ) உலக இ) நூல் ஈ) மொழிv
Answer:

ஆ) உலக
சரியா தவறா என எழுதுக.
1. மொழி காலத்திற்கேற்ப மாறுகிறது.
2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
4. எழுத்துமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத் தாழ்வு அவசியம்.
1. சரி
2. சரி
3. சரி
4. தவறு
5. சரி
ஊடகங்களை வகைப்படுத்துக.
வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்

3குறு வினா6 questions
Q.1தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?v
Answer:

(i) நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும்
(ii) கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
(iii) நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்.

Q.2தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.v
Answer:

(i) தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
(ii) தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.

Q.1மொழின் இருவடிவங்கள் யாவை?v
Answer:

பேச்சுமொழி
எழுத்துமொழி

Q.3வட்டாரமொழி எனப்படுவது யாது?v
Answer:

இடத்திற்கு இடம் பேச்சுமொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

Q.1‘குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.v
Answer:

குற்றியலுகரம் – குறுமை + இயல் + உகரம்
தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

Q.2குற்றியலிகரம் என்றால் என்ன?v
Answer:

முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.
மொழியை ஆழ்வோம்
கேட்க

4சிறு வினா2 questions
Q.1எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.v
Answer:

(i) நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தருகின்றது. அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
(ii) தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.
(iii) கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
(iv) நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும்.

Q.2கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?v
Answer:

(i) ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர்.
(ii) வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.
(iii) அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறையும் போது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அதுவே ‘கிளைமொழி’ என்பர்.
(iv) கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழி ஆகும்.

5சிந்தனை வினா3 questions
Q.1கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?v
Answer:

தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையானது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ். எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

Q.1தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகக் காரணம் யாது?v
Answer:

சங்ககாலத்தின் இறுதிப்பகுதி ஆடம்பரமும் ஆரவாரமும் மிக்கது.
கலை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் தலைதூக்கின.
தமிழகத்தின் அகப்புற ஒழுக்கங்கள் பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டன.
குழப்பமான அச்சூழலில் நீதியும் அறமும் தேவைப்பட்டது.
எனவே, தமிழில் அறஇலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின.

Q.1இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?v
Answer:

(i) இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். இலக்கியங்கள் தாம் தோன்றிய காலச் சூழலைக் காட்டுவதாலும் பண்பாடு, நாகரிகம், சமூக வாழ்க்கை ஆகியவற்றைக் காட்டுவதாலும் அவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
(ii) வாழ்வோடு இணைந்த சுவை கொண்டு இலக்கியங்கள் படைக்கப்படுவதாலும் நீதிநெறிகளை முன்வைப்பதாலும் இன்றும் இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதாலும் இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்கின்றன.

6குறுவினா2 questions
Q.1தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?v
Answer:

தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும்.
சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.
தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

Q.2‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.v
Answer:

(i) முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
(ii) புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

7சிறுவினா1 questions
Q.1தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?v
Answer:

(i) பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
(ii) பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்.